என் மலர்
நீங்கள் தேடியது "கனரக வாகனங்கள்"
- மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
கோபி:
ஈரோடு மாவட்டத்தில் கட ந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி யில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
நம்பியூரில் கடந்த 4-ந் தேதி இரவு 61 மில்லி மீட்டர், சத்தியமங்கலத்தில் 53 மில்லி மீட்டர் மழை பெய்ததால் நம்பியூர்-அரசூர் சாலையில் தட்டாம்பாளையம் தரைமட்ட பாலம் வெள்ளப்பெருக்கில் மூழ்கி சேதம் அடைந்தது. இத னால் 2 நாட்களாக போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதன் பின் தரைமட்ட பாலம் சீரமைத்து 7-ந் தேதி வாகன போக்குவரத்து தொடங்கியது.
அன்று இரவு சத்தியமங்கலத்தில் 18 மில்லி மீட்டரும், நம்பியூரில் 6 மில்லி மீட்டரும் மழை பெய்ததால் தரைமட்ட பாலம் மீண்டும் மூழ்கி 2-வது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் நம்பியூ ரில் 123 மில்லி மீட்டர் மழை பெய்த தால் 3-வது முறையாக தரை மட்ட பாலம் வெள்ள த்தில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இவ்வாறாக மழை காரணமாக 3 முறை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தரைமட்ட பாலம் வழியாக குறைந்த அளவு நேற்று மதியம் மழை நீர் சென்றதால் நெடு ஞ்சாலை துறை சார்பில் மீண்டும் பாதை சீரமைக்கும் பணி முடிந்து தரைமட்ட பாலம் வழியாக இலகு ரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என நெடுஞ்சாலைத்துறை சார்பாக போர்டு வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து இலகுரக வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்று வருகிறது.
- கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
- கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
ஜி.எஸ்.டி. ரோட்டையும் பழைய மகாபலிபுரம் ரோட்டையும் இணைக்கும் வகையில் வண்டலூர்-கேளம்பாக்கம் மெயின் ரோடு உள்ளது.
19 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த ரோட்டில் பள்ளி, கல்லூரிகள் நிறைய உள்ளன. எனவே காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.

இந்த சாலையில் கனரக வாகனங்களும் எப்போதும் சென்று வருவதால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
வண்டலூர் சந்திப்பில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த சாலையில் தொடங்கும் நெரிசல் பஸ் நிலைய பகுதியிலும் நீடிக்கிறது.
ரத்தினமங்கலம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை பராமரிப்பும் சரி இல்லை. இதனால் மாநில நெடுஞ்சாலைத்துறை கடும் விமர்சனத்துக்குள்ளானது.
அந்த பகுதியில் குடியிருப்பவர்களும் நெரிசல் காரணமாக சாலையை கடக்க 45 நிமிடங்கள் வரை ஆவதாக கூறுகிறார்கள்.
வார இறுதி நாட்களில் கார் மற்றும் இதர வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் நகர பகுதியில் நெரிசல் அதிகம் இருக்கும் என்பதால் கேளம்பாக்கம் சாலை வழியாக வண்டலூர் வருகிறார்கள். இதனால் வார இறுதி நாட்களில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாமல் போலீசாரும் திணறுகிறார்கள்.

போக்குவரத்து நெரி சலை சமாளிக்க வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் கனரக வாகன போக்குவரத்துக்கு போலீசார் கட்டுப்பாடு விதித்து உள்ளார்கள்.
அதன்படி காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றம் நெரிசலை குறைப்பதற்காக மட்டும் அல்ல. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் செய்யப்பட்டு உள்ளதாக தாம்பரம் போக்குவரத்து கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி குறிப்பிட்டார்.
இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் மூலம் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் ஏற்படும் நெரிசலையும் சமாளிக்க முடியும் என்று போலீசார் கூறுகிறார்கள். இந்த போக்கு வரத்து மாற்றம் அடுத்த சில மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்களுக்கு அறிவிப்பு.
- கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு கனரக வாகனங்களுக்கான மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களுக்கு நாளை முதல் வரும் 15ம் தேதி காலை 6 மணி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளனர். ஆகையால் வெளி மாவட்டங்களில் இருந்து வழக்கமாக திருவண்ணாமலை வழியாக வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய கனரக (HMV லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள்) மற்றும் இலகுரக வாகனங்கள் (LMV -கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள்) 12.12.2024 காலை 08.00 மணி முதல் 15.12.2024 காலை 08.00 மணி வரை திருவண்ணாமலை வழியாக வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளதுடன் மாற்றுப்பாதைகளில் செல்வதற்கான கீழ் காணும் வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
* பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான பர்கூர்- வாணியம்பாடி- வேலூர்- ஆற்காடு செய்யாறு - வந்தவாசி வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் வழித்தடங்களிலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், பெங்களூரு மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி- செய்யாறு- ஆற்காடு - வேலூர்-வாணியம்பாடி -பர்கூர் வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து திண்டிவனம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் திருச்சி மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வேலூர் ஆற்காடு செய்யாறு வந்தவாசி வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் கண்ணமங்கலம், போளூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* திண்டிவனம், விழுப்புரம், கடலூர், திருச்சி, புதுச்சேரி, வழித்தடங்களிலிருந்து திருப்பதி, கே.ஜி.எப். வேலூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான வந்தவாசி- செய்யார்- ஆற்காடு- வேலூர் வழியாக செல்லவும்.
*மேற்படி வாகனங்கள் செஞ்சி, கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
* பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் வழித்தடங்களிலிருந்து விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான தர்மபுரி - தொப்பூர் - சேலம்- வாழப்பாடி -ஆத்தூர் வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் ஊத்தங்கரை, செங்கம், திருவண்ணாமலை. திருக்கோவிலூர் வழியாக செல்ல அனுமதி இல்லை.
* விருத்தாசலம், சிதம்பரம், நாகப்பட்டினம், உள்ளிட்ட வழித்தடங்களிலிருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மார்கமாக செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மாற்றுப்பாதையான ஆத்தூர் வாழப்பாடி சேலம் தொப்பூர் -தர்மபுரி வழியாக செல்லவும்.
* மேற்படி வாகனங்கள் திருக்கோவிலூர். மணலூர்பேட்டை சங்கராபுரம், திருவண்ணாமலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- சாலையின் குறுக்கே குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும்பாசன வாய்க்கால்களின் பாலங்களும் அகலப்படுத்தப்பட்டு போக்குவரத்து வசதிக்கு பயன்பட்டு வருகிறது.
- இதனால், காலவிரையம் ஆவதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
திருவையாறு:
கல்லணை-தோகூரி லிருந்து திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி, கண்டியூர் மற்றும் அய்யம்பேட்டை வழியாக கும்பகோணம் செல்லும் மாநில நெடு ஞ்சாலை உள்ளது. எற்கனவே ஒற்றைச் சாலையாக இருந்த இச்சாலை புதுப்பிக்கப்பட்டு, இரட்டைச் சாலையாக அகலப்படுத்தப்பட்டு, மாநில நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேருந்து மற்றும் லாரி முதலிய கனரக வாகனங்களின் அதிகமான போக்குவரத்தை முன்னிட்டும் மாநில நெடுஞ்சாலையின் அகலத்திற்கேற்பவும் இச்சாலையின் குறுக்கே குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும்பாசன வாய்க்கால்களின் பால ங்களும் அகலப்படு த்தப்பட்டு போக்குவரத்து வசதிக்கு பயன்பட்டு வருகிறது.
ஆனால், கண்டியூர்கிழக்கு எல்லையில் அய்ய ம்பே ட்டைச் சாலை கொ ண்டை ஊசி வளைவு திருப்பத்திலேயே பழங்கால பாசன வாய்க்கால் குறுகிய பாலம் உள்ளது. கொண்டை ஊசி வளைவிலும் குறுகிய நிலையிலும் இப்பாலம் உள்ளதால் பஸ், லாரி முதலிய வாகனங்கள் திரும்பும்போது எதிரே வரும் வாகனங்களை பார்க்க முடியாததோடு, நேரெதிரே சந்திக்கும் வாகனத்திற்கு பின்னோக்கி சென்றே வழிவிட்டு கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. இதனால், காலவிரையம் ஆவதோடு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.எனவே, கண்டியூர் கிழக்கு எல்லையிலுள்ள மாநில நெடுஞ்சாலை பழங்கால ஒற்றைப் பாலத்தை அகலப்படுத்தி போக்குவரத்து வசதியை மேம்படுத்திட ஆவன செய்யுமாறு வாகன ஓட்டிகளும் சம்மந்தப்பட்ட துறையினரிடம்சமூக ஆர்வலர்களும் கோருகிறார்கள்.
- அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது.
- மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே கடலூர், அரியலூர் மாவட்டத்தை இனைக்கும் வெள்ளாற்றில் அரியலூர் மாவட்ட நிர்வாகம் சேந்தம ங்கலம் பகுதியில் அரசு மணல் குவாரி அமைக்கும் பணி கடந்தவாரம் துவங்கி யது. இந்நிலையில் வெளி மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்த வண்ணம் உள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்தில் இரண்டு சிமெண்ட் ஆலைகள் செயல்பட்டு வருவதால் அதிக அளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இரண்டு மாவட்டத்திற்கும் பொது மக்களின் போக்குவரத்தும் 2 மாவட்டங்களில் இரு ந்தும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தினந்தோறும் சென்று வருகின்றனர். இன்று வழக்கம்போல் காலை முதலே பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ மாணவிகளை ஏற்றி க்கொண்டு பள்ளிக்கு வாகனங்கள் வந்தன.
அப்போது மணல் ஏற்றி வரும் லாரிகள் வெள்ளாற்றில் தரைப்பாலத்தில் நிறுத்திக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக செல்வது மட்டுமல்லாமல் லாரிகள் சாலையின் குறுக்கே நிறுத்து வதால் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. இதனால் சுமார் 2 மணி நேரம் வாகனங்கள் இருபுறமும் செல்ல முடியாமல் பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் வெகுநேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே இதில் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தலையிட்டு மாணவ மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லும் வேலையில் இந்த கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் செல்ல தடை விதிக்க வேண்டும் எனவும் அரசு மணல் குவாரி இங்கு இயங்க தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
- கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோடைசீசன் தொடங்கிய போது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
ஆனால் வாகனம் இடித்தது போல் எரிச்சாலை யின் இருபுறமும் அந்த தடுப்பு கம்பி வேலிகள் உடைந்து கிடந்தன. தற்போது ஏரிச்சாலை ப்பகுதி யில் பஸ், தண்ணீர் லாரி, அதிக நீளமும் அதிக உயரமும் கொண்ட டெம்போக்கள், வேன் ஆகிய கனரக வாகனங்கள் இரு புறங்களில் இருந்தும் வருவதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.
ஏற்கனவே இருபுறமும் அகற்றப்பட்ட சாலையோர கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்களும் ஏரிச்சாலை பகுதியில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.