search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நர்சிங் மாணவி"

    • தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    கேரளம் மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் ரெயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் ஏற முயன்று தண்டவாளத்தில் நர்சிங் மாணவி தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கண்ணூரில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

    அதில், நர்சிங் மாணவி நடைமேடையில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அதற்குள் ரெயில் கிளம்பியது. இதை கவனித்த மாணவி சற்றும் பதற்றப்படாமல் நடந்து சென்று ஓடும் ரெயிலில் ஏற முற்பட்டார்.

    ரெயில் பெட்டி கதவின் பிடியை பிடித்து படியில் கால் வைக்க முயன்றபோது கால் இடறி தண்டவாளத்திற்குள் விழுந்தார்.

    இதைக் கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அபாய சங்கிலி இழுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. பின்னர், தண்டவாளத்தில் சிக்கியிருந்த மாணவியை மீட்டனர்.

    இந்த சம்பவத்தில் மாணவி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    • அஸ்வினி அதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார்.
    • சம்பவத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அம்மன் கொள்ளை மேடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர் தியாகதுருகம் செல்வா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் அஸ்வினி (20) இவர் இதே பகுதியில் உள்ள தனியார் நர்சிங் பயிற்சி மையத்தில் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் சம்ப வத்தன்று பயிற்சி மையத்திற்கு சென்ற வர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை அக்கம், பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து இவரது தந்தை நடராஜன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • நர்சிங் மாணவி உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    சாத்தூர் முள்ளிவேல் நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது மகள் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் பாட்டி வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து நர்சிங் மாணவியை தேடி வருகின்றனர்.

    டி.கே.எஸ்.பி. நகரைச் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 45). இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று கோவில்பட்டி சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார் அதன் பின் அவர் எங்கு சென்றார் என்பது குறித்து தெரியவில்லை இது குறித்து அவரது மனைவி மாரியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டியை சேர்ந்தவர் மணி (வயது 60). இவர் அடிக்கடி வெளியூரில் வசிக்கும் தனது மகன், மகள்களை பார்த்து வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் வெளியூரில் வசிக்கும் தனது பிள்ளைகளை பார்த்து வருவதாக கூறிச் சென்ற மணி அதன்பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணியின் மனைவி பேச்சியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் காரியாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி திருநெல்வேலியில் நர்சிங் படித்து வருகிறார்.

    விடுமுறை நாட்களில் அந்த மாணவி மேடைகளில் நடனமாட செல்வது வழக்கம்.இந்த நிலையில் இரணியலை சேர்ந்த ஆபினேஷ் என்ற வாலிபர் மாணவியுடன் நடன கலை நிகழ்ச்சிகளில் செண்டை வாத்தியங்கள் அடிப்பது வழக்கம்.

    அவர் மாணவியிடம் தொடர்ந்து காதல் வசனங்களை பேசி காதலிப்பதாகவும், உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதனை மாணவியும் நம்பி உள்ளார்.

    இதனை சாதகமான பயன்படுத்திக் கொண்ட ஆபினேஷ் குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதிக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதன்பின்னர் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். மாணவி அந்த வாலிபரை தேடி சென்று தன்னிடம் ஏன் பேசவில்லை என காரணம் கேட்டுள்ளார். அதற்கு உன்னை எனக்கு பிடிக்கவில்லை என அந்த ஆபினேஷ் தெரிவித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்து போன மாணவி மார்த்தா ண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×