search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கல்"

    • தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல்.
    • தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில 10-ம் ஆண்டு விழா வருகிற 2-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    புதிதாக ஆட்சியில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தெலுங்கானா மாநிலத்திற்கு தனியாக மாநில பாடல் உருவாக்கப்படும்.

    மாநில சின்னம், தெலுங்கானா அன்னை உருவம் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

    பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இசையமைப்பாளர் கீரவாணி இசையில் ஜெய ஜெய ஹே தெலுங்கானா என்ற பாடல் தயாரானது. இந்த பாடல் மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.

    பாடலை தேர்வு செய்யும் கூட்டத்தில் பா.ஜ.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.

    புதிதாக தயாராகும் தெலுங்கானா மாநில சின்னத்தில் சார்மினார் மற்றும் காகதியா வளைவு அகற்ற முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தெலுங்கானா சின்னம் மாற்றி அமைப்பதில் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பான எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. மேலும் தெலுங்கானா அன்னை சிலையை மாற்றியமைப்பது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

    அனைத்து பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும்படி அரசு சின்னம் மற்றும் தெலுங்கானா அன்னை சிலை இருக்கும் வகையில் அரசு முடிவு எடுக்கும் என முதல் மந்திரி ரேவேந்த் ரெட்டி உறுதி அளித்துள்ளார். 

    • பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது.
    • ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார்.

    பெண்ணின் வயிற்றுக்குள் 3 ஆண்டுகளாக இருந்த ஊசியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ள சம்பவம் நிகழ்ந்ததுள்ளது. டெல்லியைச் சேர்ந்த 49 வயதான ரம்பா தேவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஊசியை வைத்து துணி தைத்துக்கொண்டிருந்தபோது ஊசியை படுக்கையில் வைத்திவிட்டு எழுந்துள்ளார். பின் நிலை தடுமாறி படுக்கையில் இருந்த ஊசியில் மீது விழுந்துள்ளார்.

    இதனால் பாதியாக உடைந்த ஊசியின் ஒரு பாகம் அவரின் வயிற்றில் சிக்கியுள்ளது. ஆனால் ஊசி உடைந்து வேறு எங்கோ விழுந்துவிட்டதாக அவர் அலட்சியமாக இருந்துள்ளார். ஊசி உள்ளே இறங்கும்போது அவரின் வயிற்றில் ஏற்பட்ட வலி, தவறி விழுந்ததால் ஏற்பட்டது என்று நினைத்துள்ளார்.

    நாளாக நாளாக அவரின் இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. 3 வருடங்களாக வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் மருத்துவர்கள் அவரின் வயிற்றில் எக்ஸ்ரே எடுத்துப்பார்த்தபோது பாதி உடைந்த ஊசி உள்ளே இருத்தது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறிய பொருள் என்பதால் முதலில் வயிற்றுக்குள் ஊசி எந்த இடத்தில் இருக்கிறது என கண்டுபிடித்து அகற்றுவது சிக்கலான ஒரு வேலையாக இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் மருத்துவர்களுக்கு தயக்கம் இருந்தது.

     

     

    இதன்பின்னர், சி-ஆர்எம் என்ற மேம்பட்ட எக்ஸ்ரே தொழில்நுட்ப இயந்திரம் மூலம் ஊசியை துல்லியமாகக் கண்டறிய பல எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு இறுதியாக, ஊசியைக் கண்டுபிடித்து அதை உடைக்காமல் ஒரே துண்டாகப் பிரித்தெடுத்தது இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். அறுவை சிகிச்சைக்குப் பின் ரம்பா தேவி நலமாக என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

    • கரூரில் லியோ திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது
    • வலைதளத்தை வேண்டுமென்றே முடக்கி வைப்பதாக குற்றச்சாட்டு

    கரூர்,

    கரூர் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள 7 திரையரங்குகளில், 5 திரையரங்கங்களில் விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வருகின்ற 19-ந் தேதி வெளியாக உள்ளது.கரூர் திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் கரூர் சினிமாஸ் என்ற இணையதளம் மூலம் ரசிகர்கள் புதிய திரைப்படங்களுக்கு ஆன்லைன் வழியாக புக்கிங் செய்யும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்படத்திற்கான புக்கிங் நேற்று மாலை சுமார் 6 மணி அளவில் வெளியானது. ஆனால், 10 நிமிடத்திற்குள் வலைத்தளம் முடக்கப்பட்டது. இரவு 10 மணிக்கும், அதைத்தொடர்ந்து 11 மணிக்கும் புக்கிங் ஓபன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை வெப்சைட் இயங்கவில்லை. மேலும், 19-ந் தேதி வரை படத்திற்கான டிக்கெட் திரையரங்குகளில் விற்பனை செய்யப்படாது எனவும் அறிவித்துள்ளனர்.ரசிகர்கள் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும், வேண்டுமென்றே இணையதளத்தை முடக்கி வைத்துவிட்டு, மறைமுகமாக திரையரங்க ஊழியர்கள் டிக்கெட் விற்பனை செய்வதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகார் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த பதிவுகள் வைரலாகி வருகிறது.இது தொடர்பாக திரையரங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டபோது, ஒரே நேரத்தில் ஏராளமான நபர்கள் வலைதளத்தை பயன்படுத்துவதால் இவ்வாறு பிரச்சனை ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.

    • நீர் வரத்து அடியோடு நின்றதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாந–கரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகால–ங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏரியின் நீர்மட்டம் வேக–மாக குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறை–க்கப்ப–ட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தி–ருந்தனர்.

    வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே கடந்த மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும். ஆனால் மேட்டூர் அணை–யில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர்தே–வைக்கு அனுப்ப முடியும். 38 அடிக்கு கீழ் ஏரியில் சேரும், சகதியுமாக காணப்படுவதால் தண்ணீர் எடுக்க முடியாது. இன்று காலை 22 கனஅடி நீர் மட்டுமே சென்னை மாநகருக்கு அனுப்ப–ப்படு–கிறது. தற்போது நிலவர–ப்படி நீர்மட்டம் 39.75 ஆக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் குடிநீர் அனுப்பப்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×