என் மலர்
நீங்கள் தேடியது "கோழி"
- தீயணைப்பு துறையினர் மீட்டனர்
- வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பத்மனாபபுரம் செக்கால தெருவை சேர்ந்தவர் நடராஜபிள்ளை. இவரது வீட்டுக்கு பின்புறம் கோழி கூடு உள்ளது. இன்று காலை கோழி கூட்டை திறக்க சென்ற போது ஒரு கோழி செத்து கிடந்தது. கூண்டு வழியாக பார்த்த போது ஒரு பாம்பு நெளிந்த படி இருந்தது.
உடனே தக்கலை தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். தீயணைப்பு அலுவலர்ஜீவன்ஸ் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு சென்று பார்த்த போது விஷம் கூடிய 6 அடி நல்ல பாம்பு என தெரியவந்தது. உடனே பாம்பு பிடிக்கும் கருவி மூலம் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
- பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
- காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.
சேலம்:
பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.
- கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
- 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டத்தில், கிராம பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டுக்கோழிகள், பிற வகை கோழிகளுக்கு, கோடைக் காலங்களில் ஏற்படும் வெள்ளைக்கழிச்சல் நோய், பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தில் நாளை 1-ந் தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 2 லட்சத்து 63 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்
- குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே மங்கலம் சந்திப்பு பகுதியில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. அதன் அருகில் அரசு பள்ளிகூடம், கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
எப்போதும் பரப்பரப் பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டணம் பேச்சிப்பாறை பட்டணம் கால்வாய் பாய்கிறது. இங்கு அடிக்கடி இரவு நேரங்களில் கோழி கழிவுகளை மர்ம நபர்கள் சானல் கரை யோரம் கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது.
இதனால் சுகாதாரகேடு ஏற்பட்டு வந்தது.
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குலசேகரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்த னர். போலீசார் வந்து பார்வை யிட்டு அந்த பகுதியில் இருக்கும் கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்து வந்தார்கள். நேற்று வழக்கம்போல் இரவில் அந்த பகுதியில் மினி டெம்போவில் ஒரு பேரல் நிறைய கோழி கழிவு களை கொண்டுவந்து சாலை யோரம் கொட்டிவிட்டு பேரல்நிறைய சானலில் இருந்து தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார்கள்.
இதுபற்றிய தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பொன்மனை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுசேர்ந்து மினி டெம்போவை சுற்றி வளைத்து பிடித்தார்கள்.
இது பற்றி குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மினி டெம்போ டிரைவரிடம் விசாரித்து வருகிறார்கள்.
- விருதுநகர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்கள் வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது.
- இதில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு இலவசமாக காலத்திற்கு ஏற்றவாறு முகாம்கள் நடத்தி தடுப்பூசிப் பணியை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்திற்கு முன்னர் பிப்ரவரி மாதத்தில் வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
எனவே கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்கு மேல் உள்ள கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கு இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம். வருடத்திற்கு இருமுறை தடுப்பூசி செலுத்தி வந்தால் நோயை முற்றிலும் அகற்றி விடலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருத்துவ நிலையங்களிலும் மற்றும் துறை சார்பில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசிப்பணி நடைபெறுகிறது. தகுந்த முன்னறிவிப்போடு ஊராட்சி மன்றங்களின் ஒத்துழைப்போடு இந்த முகாமை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்பு இலவச வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்களில் பங்கேற்று கோழிகளுக்கு தடுப்பூசியினை செலுத்திக்கொள்ளுமாறு கால்நடை வளர்ப்போர்களை கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின.
- விவசாயி திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் பகுதியில், விவசாயி ஒருவர் கால்நடை மற்றும் கோழிகள் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 கோழிகள் காணாமல் போயின. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மர்மநபர்கள், அவரது தோட்டத்தில் கோழிகளை திருட முயன்றுள்ளனர். கோழிகள் மற்றும் கால்நடைகளின் சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி, இவர்களைப் பார்த்து திருடன், திருடன் என கூச்சலிட்டு உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி அந்த மர்ம நபர்களை பிடிக்க முயன்ற போது, அரிவாளை காட்டி அவர்கள் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லாவகமாக அவர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், தர்ம அடி கொடுத்து, பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது அவர்கள் தென்காசியை சேர்ந்த காளிதாஸ், பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் என்பது தெரிய வந்தது. 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
- கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .
நாமக்கல்:
நாமக்கல் ,சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை உள்ளன. இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கறிக்கோழி விலையை கிலோவுக்கு மேலும் மூன்று ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .
அதன்படி 102 ரூபாயாக இருந்தால் கறிக்கோழி விலை 105 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதே போல நாமக்கலில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையை எழுபது ரூபாயில் இருந்து 72 ரூபாயாக உயர்த்தப்பட்டது .ஆனால் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 410 காசுகளாக நீடிக்கிறது.
- நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பல்லடத்தில் நடந்தது. இதில் கறி கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 6 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 129 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை கிலோ 135 ஆக உயர்ந்தது.
இதேபோல முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. இதில் முட்டை கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் முட்டை கோழி விலை கிலோவுக்கு 3 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 97 ரூபாயாக இருந்த முட்டை கோழி விலை 94 ரூபாயாக சரிந்தது.
நாமக்கல்லில் நடந்த முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், முட்டை உற்பத்தி மற்றும் முட்டைகளின் தேவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. பின்னர் முட்டை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 515 காசுகளாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
- விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
- 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது.
உலகில் முதலில் வந்த கோழியா அல்லது முட்டையா...
சிறுவயதில் இருந்தே நாம் ஒருவருக்கொருவர் வேடிக்கையாக கேட்டுக்கொண்ட கேள்விதான் இது.
சில சமயங்களில் நமக்குள் எழும் இதுபோன்ற இயல்பான கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய கேள்விகளில் ஒன்றுதான் இது.
பல ஆண்டுகளாக மக்களிடையே ஏற்பட்டு வரும் குழப்பனா கேள்வி. நம்மில் பலருக்கு மணிக்கணக்கில் விவாதம் செய்தும் பதில் கிடைக்கவில்லை. எது முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா என்ற இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் எனக்கு தெரியாது என்னும் வகையில் ஏதாவது பதில் சொல்லி சமாளித்து விடுவார்கள்.
நமக்கே இந்த குழப்பம் நீடித்து வந்த நிலையில் அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள், விஞ்ஞானிகளுக்கு இந்த குழப்பம் இருக்காதா என்ன?
தற்போது அதற்கு விடை காண முயன்று வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
ஏற்கனவே லண்டனின் ஷெபீல்ட் மற்றும் வார்விக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் கோழி மற்றும் முட்டை பற்றிய இந்த கேள்வியை ஆழமாக ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் படி உலகில் முதலில் வந்தது முட்டை அல்ல கோழிதான் என்று கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கேள்விக்கான காரணத்தை அவர்கள் கூறியுள்ளனர்.
விஞ்ஞானிகள் இது குறித்து கூறுகையில், ஓவோக்லிடின் என்ற புரதம் கோழி முட்டையின் ஓட்டில் காணப்படுகிறது. இந்த புரதம் இல்லாமல் முட்டைகளை உற்பத்தி செய்ய முடியாது. இது மட்டுமின்றி, கோழியின் கருப்பையில் மட்டுமே இந்த புரதம் உற்பத்தியாகிறது.
இந்த வகையில் கோழிதான் உலகிலேயே முதலில் வந்திருக்கும். ஓவோக்லிடின் கோழியின் கருப்பையில் தயாரிக்கப்படும் ஒரு புரதம். பின்னர் இந்த புரதம் முட்டையின் ஓட்டை அடைகிறது என கூறியுள்ளனர்.
விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு மற்றும் ஆராய்ச்சியில் உலகில் முட்டைக்கு முன் கோழி வந்தது என்று தெரிய வந்தது.
செல்லின் மூலக்கூறு அமைப்பைப் பார்க்க, ஹெக்டோஆர் எனப்படும் ஹைடெக் கணினியை விஞ்ஞானிகள் குழு பயன்படுத்தியது. கோழியின் உடலில் உள்ள கால்சியம் கார்பனேட்டை கால்சைட் படிகங்களாக மாற்றுவதைத் தொடங்கி, ஓ.சி.-17 ஒரு வினையூக்கியாக செயல்படுவதை அவர்கள் கண்டுபிடித்தனர். இவைதான் குஞ்சு வளரும் போது மஞ்சள் கரு மற்றும் அதன் பாதுகாப்பு திரவங்களை வைத்திருக்கும் கடினமான செல் ஆகும்.
இந்த சூழ்நிலையில் தற்போது லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள், பல ஆண்டுகளாக நம்மைத் குழப்பிய இந்தக் கேள்விக்கான விடை கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த முடிவு 51 புதைபடிவ இனங்கள் மற்றும் 29 உயிரினங்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் அமைந்துள்ளது, அவை முட்டையிடும் உயிரினங்கள் அல்லது விவிபாரஸ் (குட்டி போடும் உயிரினங்கள்) என வகைப்படுத்தலாம். முட்டையிடும் உயிரினங்கள் கடினமான அல்லது மென்மையான ஓடுகள் கொண்ட முட்டைகளை இடுவதற்குப் பெயர் பெற்றவை என்றாலும், விவிபாரஸ் இனங்கள் குட்டிகளாகவே பிறக்கின்றன.
இது இரண்டும் சேர்ந்த கலவைப்போல, அம்னியோட்கள் எனும் முட்டை இடகூடிய முதுகெலும்பு கொண்ட உயிரிங்கள் உயிர்வாழ்வதற்கு கடினமான ஓடுகள் கொண்ட முட்டைகள் முக்கியமானவை என்று தற்போதுள்ள கண்டுபிடிப்பை கேள்விக் குள்ளாக்குகிறது. பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி, இப்போது இருக்கும் ஊர்வன, பரப்பன மற்றும் பாலூட்டிகளின் ஆரம்பகால மூதாதையர்கள் முட்டையிடுவதற்குப் பதிலாக குட்டிகளைப் பெற்றெடுத்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் எர்த் சயின்சஸ் பேராசிரியர் மைக்கில் பெண்டன் தலைமையிலான குழுவினர் ஆராய்ச்சியானது, 51 வகையான கடினமான மற்றும் மென்மையான முட்டை அடுக்குகள் மற்றும் 29 உயிரினங்களின் புதைபடிவங்களை ஆய்வு செய்தது. ஆய்வின்படி, பாலூட்டிகள், லெபிடோசவுரியா (பல்லிகள் மற்றும் பிற ஊர்வன) மற்றும் ஆர்க்கோசௌரியா (டைனோசர்கள், முதலைகள், பறவைகள்) உட்பட அம்னியோட்டாவின் அனைத்து வகுப்புகளும் விவிபாரஸ் மற்றும் அவற்றின் உடலில் கருவைத் தக்கவைத்துக் கொள்வதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. கடின ஓடு கொண்ட முட்டையானது பெரும்பாலும் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான படியாகும் மற்றும் இறுதியில் கருவைப் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
குட்டிகளை ஈன்று கொண்டிருந்த சில விலங்குகள் பரிணாம வளர்ச்சியில், முட்டைகளை போடும் உயிரினங்களாக பல மில்லியன் ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. எனவே, முதலில் கோழி வரவில்லை, முட்டை தான் வந்துள்ளது.
முதலில் குட்டிகளை போட்டுக்கொண்டிருந்த கோழியின் மூதாதைய உயிரினம் பரிணாம வளர்ச்சியில் முட்டை போடும் கோழைகளாக மாறின. அவை இப்போது முட்டை போட்டு குஞ்சு பொரிக்கின்றன. முதலில் மென்மையாக இருந்த முட்டை ஓடுகள் பரிணாம வளர்ச்சியில் கடினமான ஓடுகளாக மாறியுள்ளன என்கின்றனர் விஞ்ஞானிகள்...அது சரி...முட்டைதான் முதலில் வந்தது என நிரூபணமாகிவிட்டது...கோழி உலகில் உருவானது எப்படி? ....சினிமாப்பட 2-ம் பாகம் போல அடுத்த விவாதத்துக்கு தயாராவோமா....
- கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.
- கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாட்டில் நடைபெறும் அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் அதை தவறுதலாக சித்தரித்து தங்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதாகவும் ஆதங்கப்பட்டுள்ளார்.
இதை கோழி- பருந்து இடையே நடக்கும் சண்டையை மேற்கொள்காட்டி ருசிகரமாக விளக்கம் அளித்தார்.
தனது குஞ்சுகளை பாதுகாக்க தாய்க்கோழி பருந்துடன் சண்டை போடுகிறது. குஞ்சை தூக்கி செல்வதற்காக பருந்து தாய் கோழியுடன் சண்டை போடுகிறது. இதில் வன்முறை செய்வது கோழியா? பருந்தா? பருந்துதானே!
ஆனால் கோழி வன்முறை செய்வதாக சமூகம் சொல்கிறது. இது ஆச்சரியமாக இருக்கிறது.
- முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது.
- முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.
சாதாரணமாக ஒரு கோழி முட்டையின் எடை 50 கிராம் முதல் 70 கிராம் வரை இருக்கும். ஆனால் கனடா நாட்டில் ஒரு கோழி 202 கிராம் எடையில் முட்டையிட்டுள்ளது. அங்குள்ள மணிடோபா பகுதியை சேர்ந்த ஆஷாபார்டெல் என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் 2 வயது நிரம்பிய கோழி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிடும் பருவத்தை எட்டிய நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காலையில் ஒரு சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஷா அங்கு சென்ற போது தரையில் ராட்சத முட்டை ஒன்று கிடந்தது. அதை பார்த்ததும் ஆஷா ஆச்சரியம் அடைந்தார்.
ஏனென்றால் அந்த முட்டை சராசரியான முட்டைகளின் அளவை காட்டிலும் 2 மடங்குக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த முட்டை சிறிய மாம்பழம் அளவில் இருந்ததை என்னால் நம்பவே முடியவில்லை என ஆஷா கூறினார். இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியதும் முட்டை விவசாயிகளின் தகவல் தொடர்பு நிபுணர் மற்றும் முட்டை விவசாயிகள் அவரது பண்ணையில் திரண்டு ராட்சத முட்டையை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். அதே நேரம் உலகிலேயே அதிக எடை கொண்ட கோழி முட்டை என கின்னஸ் சாதனை படைத்த முட்டை என்றால் அது 1956-ம் ஆண்டு நியூஜெர்சியில் ஒரு கோழியால் இடப்பட்ட 454 கிராம் எடை கொண்ட கோழி முட்டை ஆகும்.
கன்னியாகுமரி :
சுசீந்திரம் அருகே உள்ள வழக்கம்பாறை சகாயபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது60). இவரது வீட்டில் மலை பாம்பு ஒன்று கோழி கூட்டினுள் புகுந்து கோழியை விழுங்கி கொண்டு வெளியே செல்ல முடியாமல் கோழிக்கூட்டினுள் பதுங்கி இருந்தது. இது குறித்து ராஜன் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட் தம்பி தலைமையில் சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் தீயணைக்கும் படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று அந்த ராட்சத மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்த ராட்சத மலைப்பாம்பு 10 அடி நீளம் கொண்டதாக இருந்தது. பின்னர் அந்த மலைப்பாம்பை தீயணைக்கும் படை வீரர்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு அந்த ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு விட்டனர்.