என் மலர்
நீங்கள் தேடியது "overturned"
- தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர்.
- பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
வல்லம்:
திருச்செந்தூரில் இருந்து கும்பகோணத்திற்கு நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
பஸ்சை அம்மாபேட்டையை சேர்ந்த பாலமுருகன் (வயது 40) என்பவர் ஒட்டி வந்தார். நன்னிலத்தை சேர்ந்த சிவா(வயது 38) கண்டக்டராக இருந்தனர்.
தொலை தூர பஸ் என்பதால் இருவரும் மாறி மாறி பஸ்சை ஓட்டிக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அரசு பஸ்சை புதுக்கோட்டையில் இருந்து சிவா ஒட்டிக்கொண்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் உள்ள வல்லம் அற்புதாபுரம் சோதனைச்சாவடி அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் லாரி ஒன்று டீசல் போட்டு கொண்டு சாலையை கடந்துள்ளது.
அப்போது தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் லாரி மீது மோதாமல் இருக்க திடிரென பிரேக் போட்டுள்ளார். இதில் பஸ் நிலைதடுமாறி சாலையில் தாறுமாற ஓடி அருகில் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.
அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்கள் விரைந்து சென்று பஸ்சில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.
இதில் காயம் அடைந்த வெங்கடேஷ், மாலா, சுப்ரமணியன், பிருத்திகா, சாந்தி உள்ளிட்ட 11 ேபர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.
- மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த 15 பெண்களும் காயம் அடைந்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிபேட்டை மெட்டாலா அருேக உள்ள குட்டைகாடு பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த 15 பெண்கள் வழக்கம்போல் இன்று காலை கோரைக்காடு பகுதியில் வெங்காயம் அறுவடை செய்வதற்காக மினிடெம்போவில் புறப்பட்டனர்.
மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்றபோது, மினிடெம்போ திடீரென கட்டுப்பாடை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மினிடெம்போவில் இருந்த மல்லிகா (40), லாவண்யா (19), சத்யா (30), ஜீவா (30) உள்பட 15 பெண்களும் காயம் அடைந்தனர். குறிப்பாக முகம், கை, கால், உள்ளிட்ட இடங்களில் அவர்கள் அடிபட்டது. அக்கம் , பக்கத்தினர், அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது.
- . இந்த மினி லாரி இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.
விழுப்புரம்:
கேரளாவில் இருந்து சென்னைக்கு வாழைத்தார் ஏற்றிக்கொண்டு மினி லாரி வந்தது. இதனை டிரைவர் ரவி (20) ஓட்டி வந்தார். அவருடன் வடிவேல் (23), துமேஷ் (24) ஆகியோர் வந்தனர். இந்த மினி லாரி இன்று அதிகாலை விழுப்புரம் அருகே உள்ள அரசூர் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் அருகே வந்த போது கட்டுபாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் மினி லாரி டிரைவர் உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதை கேட்ட இருவேல் பட்டு கிராம மக்கள் அங்கு விரைந்து சென்றனர்.பின்னர் பொக்லைன் எந்திரம் மற்றும் போலீசார் உதவியுடன் விபத்தில் சிக்கிய துமேசை மீட்டனர். பின்பு 3 பேரும் சிகிச்சைக்காக முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
- டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.
கடலூர்:
கடலூர் முதுநகரில் இருந்து மீன் ஏற்றிக் கொண்டு லாரி கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. கடலூர் முதுநகர் அருகே சின்னகாரைக்காடு பகுதியில் விருத்தாசலம்-கடலூர் சாலையில் இன்று அதிகாலை வந்தது. அப்போது திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி நடு ரோட்டிலேயே பயங்கர சத்தத்துடன் கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இது பற்றி அறிந்த கடலூர் முதுநகர் போலீ சார் விரைந்து சென்று நடுரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை அப்புறப் படுத்தும் முயற்சியில் ஈடு பட்டனர். மேலும் மீன்களும் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதியும், மின்கம்பமும் சேதமடைந்தது. லாரி டிரைவர் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்ப வத்தால் கடலூர்-விருத்தா சலம் சாலையில் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.
- லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.
கூடலூர்
பந்தலூர் அருகே உள்ள எருமாடு பஜாரில் இருந்து கறிக்கோழிகளை ஏற்றி லாரி ஒன்று பந்தலூர் பஜாருக்கு வந்து கொண்டு இருந்தது.
நேற்று காலை 5.30 மணி அளவில் பந்தலூர் பஸ்நிலையம் பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே வந்தபோது திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அதேப்பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் வீட்டின் மீது கவிழ்ந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை. மேலும் லாரி டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். லாரி கவிழ்ந்ததில் வீடு பலத்த சேதமடைந்தது. இதுபற்றி அறிந்ததும் பந்தலூர் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். மேலும் கிரேன் வரவழைக்கப்பட்டு வீட்டின் மீது விழுந்து கிடந்த லாரி மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் நேற்று காலை சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி பந்தலூர் போலீசார் விசாரணை நடத்தினார்கள்