என் மலர்
நீங்கள் தேடியது "மையம்"
- விஜய்வசந்த் எம்.பி. அடிக்கல் நாட்டினார்
- கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விலை அருந்ததியார் காலனியில் விஜய்வசந்த் எம்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டநிதியில் இருந்து ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன் முன்னிலை வகித்தார். விஜய் வசந்த் எம். பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.
- மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் கடந்த 3-ம் தேதி தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மையத்தை நடிகர் சசிகுமார் நேற்று மாலை பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்–களிடம் கூறியதாவது:-
தஞ்சாவூரில் படப்பிடிப்பில் இருந்தேன்.
இங்கு தொடங்கப்பட்டுள்ள இந்த மையத்தை பார்வை–யிட்டேன்.
இந்த திட்டமானது பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். கர்ப்பிணி காலங்களில் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்தினை இந்த திட்டத்தின் மூலம் மாநகராட்சி மேயர் அனைத்து பெண்களுக்கும் வழங்கி வருகிறார்.
தஞ்சாவூரில் மொத்தமாக 1212 கர்ப்பிணி பெண்கள் உள்ளனர்.
அவர்கள் அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் தேவைப்படும் அனைத்து மருத்துவ சேவைகள் மற்றும் ஊட்டச்–சத்துக்கள் அனைத்தும் வீடுகளுக்கு நேரடியாக சென்றும் இங்கு வர வைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.
தஞ்சையில் தொடங்கியது போல அனைத்து மாவட்டங்–களிலும் தாய் சேய் நலம் கண்காணிப்பு மையம் தொடங்க வேண்டும்
கர்ப்பிணி காலங்களில் தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றுவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.
இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணி பெண்ணை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் பேசினேன். இந்த திட்டம் எங்களுக்கு மிக பயனுள்ளதாக உள்ளது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தந்த தஞ்சை மாநகராட்சி மேயருக்கு நன்றி மற்றும் பாராட்டுக்கள் என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது மேயர் சண்.ராமநாதன், பேட்டியின் போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகர நல அலுவலர் சுபாஷ் காந்தி, இளநிலை பொறியாளர் ஜெகதீசன், கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர்.
- பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 3,892 மாணவர்களும், 4,320 மாணவிகளும் என மொத்தம் 8,212 பேர் எழுதுகின்றனர்.
அதேபோல பிளஸ்-1 பொதுத் தேர்வை 3,420 மாணவர்களும், 4,122 மாணவிகளும் என மொத்தம் 7,542 பேர் எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 4,547 மாணவர்களும், 4,277 மாணவிகளும் என மொத்தம் 8,824 பேர் எழுதுகின்றனர்.
பிளஸ்-1, பிளஸ்- 2 பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நாகையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆசீர்வதித்து நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் என அறிவுரை கூறினார்.
இந்த பொதுத்தேர்வுகளுக்காக மாவட்டத்தில் 5 பறக்கும் படை குழுவினர், 56 நிலையான பறக்கும் படை உறுப்பினர்களும் தயாராக உள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேர்வு மையங்களில் தேர்வு எண் எழுதும் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.
- தேர்வு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மேலும், 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட த்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 6528 ஆண்கள் மற்றும் 7502 பெண்கள் உட்பட மொத்தம் 14,030 மாணவ மாணவியர்கள் 69 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
இதில் 116 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின்படி சொல்வதை எழுதுபவர், ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிய சலுகைகள் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான வினாத்தாட்கள் 6 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வுப்பணிக்கு 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
- மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
- தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் -2 பொதுத்தோ்வு இன்று தொடங்கியது.
அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 225 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ- மாணவிகளுக்கு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.
இவா்களில் 14 ஆயிரத்து 641 மாணவா்களும், 15 ஆயிரத்து 247 மாணவிகளும் அடங்கும்.
281 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கு தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
இன்று காலை மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர்.
முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.
மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
செல்போன், கால்கு லேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இது தவிர உடல் ஊனமுற்றோர், கண் பார்வை யற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவர்த்திக்கொன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.
இத்தோ்வில் முறைகே டுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்ப ட்டுள்ளன.
இப்பணிகளில் பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியா்களும், ஆசிரியா் அல்லாத கல்வித் துறைப் பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவர்கள் தேர்வு மையங்களில் சென்று ஆய்வு செய்தனர்.
தேர்வை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மையங்களில் குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
- நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
- சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.
இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
- மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
- லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது.
நாகப்பட்டினம்:
தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சார்பில் நாகப்பட்டினத்தில் கலங்கரை ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., நீட் தேர்வு, டிஎன்பிசி, காவலர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 பின் மேற்பட்ட மாணவர்களுக்கு உண்டு உறைவிட இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், கலங்கரை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது எனவும், சேவை மனப்பா ன்மை உள்ளவர்கள் மட்டுமே அரசு பணிக்கு வர வேண்டும் என்றார்.
- காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
- அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
திருவாரூர்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தவமணி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் பிரேமா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் பொறுப்பா ளர்கள் சித்தரா, மாலதி, திரிபுரசுந்தரி மற்றும் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும்.
குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ 26 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ 9 ஆயிரமும் வழங்கிட வேண்டும்.
மருத்துவ காப்பீடு தொகை மருத்துவ செலவுகளுக்கு ஏற்ப முழுமையாக வழங்கிட வேண்டும்.
அங்கன்வாடி மைய பராமரிப்புக்காக வழங்கப்படும் ரூ 3 ஆயிரம் தொகையினை பணியாளர்க ளுக்கு நேரடியாக வழங்கிட வேண்டும். சிலிண்டர் மற்றும் உணவு செலவுகளுக்கான தொகையை முன்பணமாக வழங்கிட வேண்டும்.
சிலிண்டருக்கு வழங்கப்படும் தொகை பில்லில் உள்ளவாறு முழுமையாக வழங்கிட வேண்டும்.
அங்கன்வாடி மையங்களுக்கான மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும்.
காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கம் கருதி அங்கன்வாடிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்க வேண்டும். விடுமுறை காலத்தில் உலர் உணவு பொருட்களாக வழங்க வேண்டும்.
10 ஆண்டுகள் பணி முடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மகப்பேறு விடுப்பு காலத்தை ஒரு வருடமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
பணியிட மாறுதல் அளித்திட வேண்டும்.
இவைகள் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் கலெக்டர் அலுவலகம் முன்பாக தொடர் காத்திருப்பு போரட்டத்திலும் ஈடுபட போவதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- 5 ஆயிரத்து 440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
- மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
தஞ்சாவூர்:
இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு இன்று ( ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சை தாமரைப் பன்னாட்டு பள்ளி, தஞ்சை பிளாசம் பப்ளிக் பள்ளி, வல்லம் சாஸ்திரா பல்கலைக்கழகம், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி, கும்பகோணம் மகரிஷி வித்யா மந்திர் சீனியர் செகண்டரி பள்ளி, கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி, பட்டுக்கோட்டை பிரில்லியண்ட் பள்ளி ஆகிய 7 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
5440 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்திருந்தனர்.
மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது. மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
முன்னதாக தேர்வு மையத்திற்கு காலையில் வந்த மாணவ- மாணவிகள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- உதவி மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
- மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) குமரேசமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.
இதற்கு பிளஸ்-2 வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேதாரண்யம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான உதவி மையம் அமைக்க ப்பட்டுள்ளது.
இந்த மையம் இன்று (8-ந்தேதி) முதல் 19-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.
பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ஓ.சி, பி.சி, எம்.பி.சி மாணவர்கள் ரூ.50 செலுத்தினால் 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. பிரிவை சேர்ந்த மாணவர்கள் ரூ. 2 பதிவு கட்டணமாக செலுத்தி 5 கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி, எஸ்.டி. மாணவர்கள் பதிவு செய்ய வரும்போது ஜாதி சான்றிதழ் அசலை கொண்டு வர வேண்டும்.
இந்த வாய்ப்பை வேதாரண்யம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ- மாணவி கள் பயன்படுத்திக் கொள்ளு ங்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குப்பை கழிவு மறுசுழற்சி பயன்பாட்டு மையம் தொடங்கி வைக்கப்பட்டது.
- செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை கழிவுகளுக்கான மறுசுழற்சி பயன்பாட்டு மையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் எதிர்புறம் உள்ள நாடக மேடையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தை பேரூராட்சி தலைவர்ஜெயராமன் தொடங்கி வைத்தார். மேலும் அவர், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தேவையற்ற பொருட்களை தேவைப்படுவோர்களுக்கு வழங்கினார்.
சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த மையத்தை தொடர்ந்து பயன்படுத்தி தேவையற்ற பொருட்களை இங்கே ஒப்படைத்து தேவைப்படுவோர்களுக்கு வழங்குவதன் மூலம் பெரும்பாலான கழிவுகளை மறுசுழற்சி செய்வதால் சுற்றுச்சூழல் மாசு குறையும். பொதுமக்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து கழிவுகளை தரம் பிரித்து வழங்கியும், பயன்படாத பொருட்களை இந்த மையத்தில் கொடுத்தும் தூய்மையான நகரமாக பேரூராட்சியை மாற்ற உதவ வேண்டும் என்று செயல் அலுவலர் சகாய அந்தோணியூஜின் பேசினார். துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.
- உலர் கழிவு சேகரிப்பு மையம் தொடக்கப்பட்டுள்ளது.
- துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் உலர் கழிவு சேகரிப்பு மையத்தை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், மானாமதுரை நகராட்சி பொதுமக்கள் தங்கள் பயன்படுத்திய மற்றவருக்கு உபயோகமான துணிகள், செருப்புகள், பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், புத்தகங்கள் போன்றவற்றை உலர் கழிவு சேகரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாம். மானாமதுரை நகரை குப்பை இல்லாத நக ராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுகுறித்த பிரசாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் கண்ணன், நகர் மன்ற துணைத்தலைவர் பாலசுந்தரம், துப்புரவு ஆய்வாளர் பாண்டிச் செல்வம், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.