என் மலர்
நீங்கள் தேடியது "goat"
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது.
- மழை கோட்டுகள் குளிரில் இருந்து ஆடுகளை பாதுகாக்கிறது.
தஞ்சாவூர் :
தஞ்சை மாவட்டம் தாந்தோணி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 70). விவசாய கூலி தொழிலாளி. இவர் ஆடு, மாடு, கோழி என கால்நடைகள் வளர்ப்பில் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது இவரிடம் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய ஆடுகள் மழையில் நனைந்து சிரமத்துக்கு ஆளானது. கணேசனுக்கு ஆடுகள் மழையில் நனைந்து குளிரில் நடுங்குவதை பார்க்க மனமில்லை.
மேய்ச்சலுக்கு போகும் ஆடுகள் மழையில் நனையாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்தவருக்கு ஆட்டுக்கு 'ரெயின்கோட்' அணிவிக்கலாம் என யோசனை தோன்றியது. இதையடுத்து கணேசன், அரிசி மூட்டைக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சாக்கினை ரெயின் கோட்டாக்கி ஆடுகளுக்கு அணிவித்தார்.
அந்த மழைகோட்டுடன் ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன. இதனால் ஆடுகள் மழையில் நனையாமல் செல்கின்றன. மேலும் பிளாஸ்டிக் சாக்கால் ஆன மழை கோட்டுகள் குளிரில் இருந்து ஆடுகளை பாதுகாப்பதுடன், கொசுக்கடியில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. ஆடுகள் அனைத்தும் 'ரெயின்கோட்' அணிந்தபடி ஒன்று போல மேய்ச்சலுக்கு சென்று வருகின்றன.
இந்த செயலை பார்த்தவர்கள் அவரை நெகிழ்ந்து பாராட்டி வருகின்றனர். 'ரெயின்கோட்' அணிந்து ஆடுகள் வரிசையாக மேய்ச்சலுக்கு செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
- மீட்பு குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை:
ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் பகுதியில் வசிப்பவர் ஜோதிவேல். இவருக்கு சொந்தமான 80 அடி ஆழம் உள்ள தண்ணீரில்லா கிணற்றில், அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு விழுந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினர், கிணற்றில் இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு, உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் மீட்பு குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்.
- கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.
- சந்தையில் விற்பனைக்காக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கன்னிவாடி மற்றும் மூலனூர் வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இந்த சந்தைக்கு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை போன்ற நகரங்களில் இருந்து ஆடுகளை வாங்க வியாபாரிகள் வருகிறார்கள். கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.
கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் நல்ல மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி இருப்பதால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500-க்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் விற்பனைக்காக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறும்போது " தற்போது கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. என்றார்.
- தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.
- இந்த வாரம் நடந்த சந்தையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
மூலனூர் :
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் பிரதி வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ஆடுகளை வாங்க சென்னை, மதுரை, திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலை, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வருகிறார்கள். இவர்களை தவிர கேரளா, ஆந்திர மாநில வியாபாரிகளும் வருகிறார்கள்.
அதன்படி இந்த வாரம் ஆட்டுச்சந்தை கூடியது. இந்த சந்தைக்கு எதிர்பார்த்த ஆடுகள் விற்பனைக்கு வரவில்லை. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. கடந்த வாரம் 10 கிலோ ஆடு ரூ.6,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் நடந்த சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன.
இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது :- மூலனூர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மழை பெய்துள்ளதால் ஆடுகளுக்கு நல்ல தீனி கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை. எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த 3 வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்றார்.
- பள்ளிக்கூட சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டிருந்தது.
- தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன்அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அரையாண்டு விடுமுறை காரணமாக அப்பள்ளியில் மைதா னத்தில் மாலை நேரத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது பந்து பள்ளிக்கூட கட்டிடம் அருகில் விழுந்தது. பந்தை மாணவர்கள் எடுக்க சென்ற போது பள்ளிக்கூடத்தின் சுவர்களின் இடுக்கில் ஆடு ஒன்று சிக்கி கத்திக் கொண்டு இருந்தது.
இது குறித்து மாணவர்கள் உடனடியாக தங்களது பெற்றோர்களிடம் கூறியு ள்ளனர்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் தீயணைப்பு துறையி னருக்கு தக வல் தெரிவிக்க ப்பட்டது.
உடனடி யாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாரூர் தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி ஆட்டை உயிருடன் மீட்டனர்.
இரவு நேரம் என்பதால் ஒற்றை டார்ச் லைட் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனை அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணைய தளங்க ளில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- கைவரிசை காட்டிய அதே இடத்தில் மீண்டும் ஆடுகளை திருட வந்ததால் போலீசாரின் பொறியில் சிக்கிக் கொண்டனர்.
- கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
தாம்பரம்:
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஆடுகள் தொடர்ந்து திருடு போனது.
இந்நிலையில் சொகுசு காரில் வந்து ஆடு திருடிய பெண் உள்பட 3 பேர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பம்மல் ஆதாம் நகரை சேர்ந்தவர் சின்னப்பொன்னன். இவரது வீட்டில் இருந்த 15 ஆடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருடு போனது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பார்த்த போது சிவப்பு நிற காரில் வரும் பெண் உள்பட 3 பேர் கும்பல் ஆடுகளுக்கு முதலில் பொரியை சாப்பிட வைத்து பின்னர் அதனை நைசாக பிடித்து செல்வது பதிவாகி இருந்தது.
இது குறித்து சங்கர் நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த வாரம் அதே கும்பல் மீண்டும் சின்னப் பொன்னன் வீட்டுக்கு வந்து மீதி இருந்த 5 ஆடுகளையும் திருட முயன்றனர். சத்தம் கேட்டு சின்னப்பொன்னன் எழுந்து வந்ததும் ஆடு திருடும் கும்பல் காரில் தப்பி சென்றுவிட்டனர்.
இதனால் மதுரவாயல் பகுதியில் உள்ள கறிக்கடைகளில் விசாரித்த போது திருட்டு ஆடுகளை அந்த கும்பல் ஒரு கறிக்கடையில் விற்று வந்தது தெரிந்தது.
இதையடுத்து கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர்களது கார் மதுரவாயல் புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடியை கடந்து செல்வது பதிவாகி இருந்தது.
இதையடுத்து சொகுசு காரில் வந்து ஆடு திருட்டில் ஈடுபட்ட முடிச்சூரை சேர்ந்த சரோஜினி, கூட்டாளிகளான அனகாபுத்துரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார், பொரிக்கடை உரிமையாளர் பாரூக் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
3 பேரும் கூட்டு சேர்ந்து முதலில் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஆடுகளை திருடி விற்று வந்து உள்ளன. லட்சக்கணக்கில் பணம் குவிந்ததால் பின்னர் சொகுசு கார் வாங்கி கைவரிசை காட்டி உள்ளனர்.
கைவரிசை காட்டிய அதே இடத்தில் மீண்டும் ஆடுகளை திருட வந்ததால் போலீசாரின் பொறியில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடி இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கைதானவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ஆடுகளை திருடினால் அந்த புகாரின் மீது போலீசார் கவனம் செலுத்தி தேடமாட்டார்கள். மேலும் இந்த திருட்டு குறித்து பெரும்பாலானோர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்யமாட்டார்கள் என்பதால் கைவரிசை காட்டி விற்றதாக தெரிவித்து உள்ளனர்.
- பொங்கல் பண்டிைகயை முன்னிட்டு திருமங்கலம் ஆட்டுச்சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் வர்த்தகமானது.
- கூடுதலாக ரூ. 5 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது.
திருமங்கலம்,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஆட்டுச்சந்தை நடை பெறுவது வழக்கம். தமிழ கத்தில் பொள்ளாட்சிக்கு அடுத்த பெரிய சந்தையாக கருதப்படும் இந்த ஆட்டு சந்தையில் ஒவ்வொரு வாரமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான ஆடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தென்மாவட்டங்களில் மதுரை, விருதுநகர், ராம நாதபுரம், சிவகங்கை, கோவில்பட்டி, திருநெல் வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வியாபாரிகள் ஆடுகள், கோழிகளை வாங்கி செல்வது வழக்கம். ஆட்டுச்சந்தை நடக்கும் நாளன்று அதிகாலை 4 மணியிலிருந்து 9 மணி வரை கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படும்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய ஆட்டு சந்தையில் வழக்கத்தைவிட அதிகளவு கூட்டம் காணப்பட்டது. வழக்கமாக ஆட்டின் விலை ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை விற்கப்படும். ஆனால் தற்போது ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம வரை விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்த னர். இன்று ரூ.5 கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு மாத காலமாக ஆடுகளின் விலை கூடுதலாக விற்பனையாவதாகவும் பொங்கல் பண்டிகை முடிந்த பின் ஆட்டின் விலை கட்டுக்குள் வரும் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர். தற்போது ஆடுகளின் வரத்து கூடுதலாக இருப்பதாலும் ஆடுகள் தொடர்ந்து விலை ஏற்றத்தின் காரணமாக ஆடு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
- காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.
சேலம்:
பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.
இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.
- கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார்.
- இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
கடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த கொங்கரப்பட்டி அம்மனேரி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்தவர் குமார்
(வயது 40). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். சம்பவத்தன்று இவரது ஆட்டை திருடிய மர்மநபர், இரு சக்கர வாகனத்தில் அதை ஏற்றிக்கொண்டு சென்றார்.
அப்போது கொங்கரப்பட்டி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர், இரு சக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி, ஆடு குறித்து விசாரணை செய்தார். இதனால் பயந்துபோன அந்த நபர், ஆட்டையும், இருசக்கர வாகனத்தையும் அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. மர்ம நபர் விட்டு சென்ற இரு சக்கர வாகனத்தை வைத்து போலீசார் விசாரணை செய்ததில், ஆடு திருடியவர் பொம்மியம்பட்டி மேல்கோம்பை பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
- பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
திருச்சி
உப்பிலியபுரம் ஏரிக்காட்டைச் சேர்ந்தவர் வெள்ளையன். விவசாயி. தனக்கு சொந்த தோட்டத்தில் விவசாயத்துடன், ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். நேற்றிரவு தோட்டத்திற்கு வந்த நாய்கள், அங்கிருந்த 8 ஆடுகளை கடித்துக் குதறியதால் அனைத்தும் இறந்து கிடந்தது கண்டு வெள்ளையன் அதிர்ச்சியடைந்தார். இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. வைரிசெட்டி ப்பாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகமுள்ளதாகவும், அவற்றை அப்புறப்படுத்த பல முறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை ஏதுமில்லை எனவும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தெரிவித்தனர்.
- காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஆடு திருடிய வாலிபர்கள்.
- அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார்.
காடையாம்பட்டி:
காடையாம்பட்டி அருகே பொம்மியாம்பட்டி மேல் கோம்பை பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50),இவர், 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று தோட்டம் தார் சாலை அருகே ஆட்டை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 வாலிபர்கள் மேட்டார்சைக்கிளில் ஒரு ஆட்டை திருடி எடுத்து செல்வதை கண்டு சத்தம் போட்டார். அங்கிருந்த பொதுமக்கள் மேட்டார்சைக்கிளை சுமார் 2 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொரு வாலிபரை பிடித்த பொதுமக்கள் தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்து எஸ்.ஐ. கருப்பண்ணனிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் ஆடு திருட்டில் ஈடுப்பட்டவர் காடையாம்பட்டி அருகே கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் சேர்ந்த மெக்கானிக் கோவிந்தராஜ் (25), என்பதும் இவர் ஏற்கனவே கஞ்சநாயக்கன்பட்டி, கருவள்ளி, பூசாரிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் ஆடுகளைத் திருடி விற்பனை செய்து மது குடித்து வந்ததும் தெரிய வந்தது. இவருடன் வந்தவர் பொம்மிடி பகுதியை சேர்ந்த வேடியப்பன் மகன் பாபு என்பதும் தெரிய வந்தது. கோவிந்தராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.