என் மலர்
நீங்கள் தேடியது "goat"
- காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.
- வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பங்கேற்று கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை 25-ந்தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவா் ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான பயிற்சி நாளை ( வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது.மாவட்டத்தில் வெள்ளாடு வளா்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்று தங்களது சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கறம்பக்குடி அருகே கிணற்றில் விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டனர்.
கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மைலன்கோன்படி பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மினி. விவசாயியான இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சம்பவத்தன்று ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது அருகில் இருந்த கிணற்றில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. இதனை கண்ட பத்மினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கறம்பக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரி மணிவண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி உயிருடன் ஆட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
- இசக்கியப்பன்,தாயப்பனுக்கு இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
- தாயப்பன், கிருஷ்ணன் என்ற கிட்டு ஆகியோர் ராஜாவை கம்பால் தாக்கினர்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள படலையார்குளம், கீழத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது38). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த தாயப்பனுக்கும் (45) ஆடுகள் மேய்ப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது.
நேற்று மூங்கிலடி பகுதியில் இசக்கியப்பனின் ஆடுகளை அவரிடம் வேலை பார்க்கும் ராஜா (22) மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தாயப்பனும் அங்கு ஆடுகளை மேய்க்க வந்தார். இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த தாயப்பன், அவரது மகன் கிருஷ்ணன் என்ற கிட்டு (18) ஆகியோர் சேர்ந்து ராஜாவை கம்பால் தாக்கினர். இதுபோல இசக்கியப்பன், படலை யார்குளத்தை சேர்ந்த இசக்கி (27), ராஜா (22), மற்றும் 7 பேர் சேர்ந்து தாயப்பனை கம்பால் தாக்கினர். இந்த மோதலில் ராஜா, தாயப்பன் காயமடைந்தனர்.
இது குறித்து இரு தரப்பினரும் தனித்தனியாக களக்காடு போலீசில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் இதுதொடர்பாக இது தரப்பையும் சேர்ந்த 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பூ ராமு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிடா.
- இப்படத்தை அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கியுள்ளார்.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில், பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள படம் கிடா (Goat). மேலும் மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படத்தை ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப் பிணைப்பை சொல்லும் படமாக உருவாகியுள்ள கிடா திரைப்படம் இன்னும் திரைக்கு வராத நிலையில் சர்வதேச விழாக்களில் கவனம் ஈர்த்து வருகிறது,
சமீபத்தில், இந்தியன் பனோரமா மற்றும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் கிடா திரைப்படம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆகஸ்ட் 11ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை நடக்கும் மெல்போர்னின் 14வது இந்திய திரைப்பட விழாவில் (14th Indian film festival of Melbourne) திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கிடா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களை பெற்று வருவது படக்குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
- சேகர் தனது ஆடுகளை வீட்டின் எதிர்ப்புறம் உள்ள செட்டில் கட்டி வைத்துள்ளார். அதில் ஒரு தாய் ஆடு மற்றும் 2 குட்டி ஆடுகள் திருட்டு போய் உள்ளது.
- இதுகுறித்து சேகர் அளித்த புகாரின்பேரில் , சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை போலீசார் கலைவாணர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 61). இவர் தனது ஆடுகளை அவரது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள செட்டில் கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் அதில் ஒரு தாய் ஆடு மற்றும் 2 குட்டி ஆடுகள் திருட்டு போய் உள்ளது.
இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை போலீசார் கலைவாணர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தூத்துக்குடி தேவர் காலனி பகுதியை சேர்ந்த சிவா (20), தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியை சேர்ந்த ஜோசுவா டேனியல் (19) மற்றும் தூத்துக்குடி புதுக்கிராமம் பகுதியை சேர்ந்த ஜெய்சஞ்சய் (19) ஆகியோர் சேகரின் ஆடுகளை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் சிவா, ஜோசுவா டேனியல் மற்றும் ஜெய்சஞ்சய் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள திருடப்பட்ட 3 ஆடுகளையும் பறிமுதல் செய்தனர்.
- சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் காரில் வந்து ஆடு திருடிய 2 பேர் சிக்கினர்
- காரை வழிமறித்து சத்தம் போட்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் பாகனேரியில் பிள்ளை வன ஊரணி அருகே சிவப்பு கலர் காரில் 3பேர் வந்தனர். காரில் இருந்து இறங்கி நோட்டமிட்டபடி இருந்த அவர்கள் அந்தப் பகுதியில் மேய்ச்சலில் இருந்த 2 ஆடுகளை காரில் ஏற்றி கடத்த முயன்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் காரில் ஆடு கத்தும் சத்தம் கேட்டதால் காரை வழிமறித்து சத்தம் போட்டனர். உடனடியாக காரை திருப்பிச் செல்ல முயன்றனர்.
ஆனால் கார் ஸ்டார்ட் ஆகாததால் 3 பேரும் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். அதில் 2 பேர் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கினர். ஊர் மக்கள் காரில் இருந்த ஆட்டை மீட்டு சிக்கிய வாலிபர்களை மரத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதகுபட்டி போலீசார் ஆடு திருடியவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர்கள் திருப்புவனம் பாப்பாகுடியை சேர்ந்த ராமச்சந்திரன், ராஜா என்பதும், தப்பி ஓடியவர் மணி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை.
- கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
மூலனூர்
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் சந்தை நடந்தது. கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது.
இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-
மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
- சம்பவத்தன்று சுடலைமுத்து கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
- திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காணவில்லை. மர்ம நபர்கள் ஆடுகளை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மேலக்கருவேலங்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுடலைமுத்து (வயது63). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று அவர் கீழப்பத்தை வயலில் தனது ஆடுகளை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. மர்ம நபர்கள் ஆடு களை திருடி சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆடு கள் திருடிய மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.
- ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது.
- 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மூலனூர்:
தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை ஆகும். இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெருநகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் கன்னிவாடி ஆட்டுச் சந்தையில் வந்து ஆடுகளை வாங்கி செல்கின்றனர்.கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த சில வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயி ஒருவர் கூறியதாவது:-
கன்னிவாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்ேபாது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கிணறுகளில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தேவையான தீனிகள் போதிய அளவில் இருப்பதால் விவசாயிகள் ஆடுகள் வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ஆடுகளை விற்க விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்வடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது இந்த வாரத்தில் ரூ.100 அதிகரித்து ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஆடு சுமார் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வாரம் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.
- சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர்.
- அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சீரகாபாடி பகுதியில் நேற்று இரவு 2 பேர் மோட்டார்சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஆடு திருட வந்ததாக கூறினர். இதையடுத்து அவர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஆட்டையாம்பட்டி போலீசார் 2 பேரையும் மீட்டு விசாரணை நடத்தினர். அதில் வலசையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் (24), அம்மாப்பேட்டையை சேர்ந்த காஜாமைதீன் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆடு திருட வந்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து மோட் டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பி யோட முயற்சித்தார்.
- மணி கண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பொற்படாகுறிச்சி கிராம த்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 68) விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்ச்சலுக்கு கட்டிபோட்டு விட்டு, நிலத்திற்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர், கட்டியிருந்த ஆட்டை அவிழ்த்து மோட் டார் சைக்கிளில் வைத்துக் கொண்டு தப்பி யோட முயற்சித்தார். ஆடு கூச்சலிட்ட சத்தம் கேட்டு ஓடிவந்த நடராஜன், மர்ம நபரை மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தார். பின்னர், மர்மநபரை சின்னசேலம் போலீசாரிடம் ஓப்படைத்தார். விசாரணை யில் முடியனுர் மேற்கு தெருவை சேர்ந்த மணி கண்டன் (வயது 33) என்பது தெரியவந்தது. மணி கண்டன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறி முதல் செய்தனர்.
- ஆடுகள் பகலில் அந்த பகுதியில் மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார்.
- இதே போல் இவரது பட்டியில் உள்ள ஆடுகள் பலமுறை திருட்டு போய் உள்ளது.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள சோலைகுடியிருப்பை சேர்ந்தவர் ஜெபராஜ் தனசிங் (வயது57). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.
இவருக்கு சொந்தமாக 25ஆடுகள் உள்ளன.இந்த ஆடுகள் பகலில் அந்த பகுதியில் மேய்ச்சல் முடித்து நேற்று முன்தினம் இரவு வீட்டு காம்பவுண்டில் உள்ள பட்டியில் அடைத்திருந்தார். அதிகாலையில் ஜெபராஜ் தனசிங் எழுந்து பட்டியில் உள்ள ஆடுகளை பார்க்க சென்றார்.அப்போது அங்கு பட்டியில் இருந்த 11ஆடுகளை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் மதிப்பு சுமார் ரூ. 70ஆயிரம் இருக்கும். இதே போல் இவரது பட்டியில் உள்ள ஆடுகள் பலமுறை திருட்டு போய் உள்ளது. தொடர்ந்து மர்ம நபர் ஆடுகளை திருடி செல்வதாக புகார் செய்துள்ளார்.
இதே போல் இவரது தோட்டத்தில் நிறுத்தி இருந்த மண்ணை சமப்படுத்தும் கருவி மற்றும் இரும்பு சக்கரம் ஆகியவற்றையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். அதை கண்டுபிடித்து தருமாறும் திருச்செந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.35ஆயிரம் இருக்கும்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் ஆடுகள் மற்றும் மண்ணை சமப்படுத்தும் கருவியை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.