search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bicycle"

    சேலம் குரங்கு சாவடியில் சைக்கிளில் சென்றவர் கிரேன் மோதி பலியானார்.
    சேலம்:

    சேலம் சாமிநாதபுரம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 62).  இவர் இன்று காலை சேலம் குரங்குசாவடி தனியார் ஓட்டல் முன்பு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

    அப்போது அந்த வழியாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் .

    தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    மேலும் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். 
    சிவகங்கை அருகே உலக சைக்கிள் தின பேரணியை போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை அருகே இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நேரு யுவ கேந்திரா சார்பில் இன்று 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா உலக சைக்கிள் தின பேரணி நடந்தது.

    கல்லல் ஒன்றியத்தில் உள்ள செவரக்கோட்டை விலக்கில் இந்த பேரணி தொடங்கியது.இதில்  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இளையோர் மன்றங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.   

    ராஜேஸ்வரி வரவேற்றார். மாவட்ட இளையோர் அலுவலர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்ததுடன் அதில் பங்கேற்றவர்களுக்கு   சான்றிதழ்களை வழங்கினார். 

    இதில் கல்லல் ஒன்றியகுழு தலைவர் சொர்ணம் அசோகன், காவல் ஆய்வாளர் பாஸ்கரன், மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் (ஒய்வு) ஜவகர், மாவட்ட சிறப்பு அலுவலர் (திறன் வளர்ச்சி அலகு) சுதர்சன், காரைக்குடி அழகப்பா கலைக்கல்லூரி முனைவர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

    இந்த பேரணி 7.50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மருதுபாண்டியர் கோட்டை அரண்மனை சிறுவயலில் நிறைவடைந்தது.
    ×