என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு விழா"

    • ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் 22-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை. ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் 22-ம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. நெல்லை ஆக்கி பிரிவு தலைவரும், தமிழ்நாடு ஆக்கி பிரிவு நிர்வாக குழு உறுப்பினருமான சேவியர் ஜோதி சற்குணம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

    முன்னதாக 11-ம் வகுப்பு மாணவர் பாலகுமார் வரவேற்றார். பள்ளி தாளாளர் அனந்தராமன் சிறப்பு விருந்தினரை கவுரவித்தார். நிர்வாக இயக்குநர் ராஜ்குமார், மேனஜிங் டைரக்டர் சுரேஷ்குமார், லெட்சுமி ராமன் அறக்கட்டளை உறுப்பினர்கள் தீபா ராஜ்குமார், ராஜேஸ்வரி சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி விளையாட்டு அறிக்கையினை உடற்கல்வி ஆசிரியர் சங்கர் வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பாட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிரியர்கள் செண்பகம், சபரிநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பள்ளி முதல்வர் இந்துமதி, தலைமை ஆசிரியை சூரியகலா, உடற்கல்வி ஆசிரியை அன்னை செல்பினா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிளஸ்-2 மாணவி தர்ஷனா நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு விழா நடந்தது.
    • இந்த பள்ளி நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்டிற்க்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. உறவின்முறை தலைவர் காமராஜன் தலைமை தாங்கினார். கவுரவ ஆலோசகர் ரவீந்திரன், பள்ளி தலைவர் பாபு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் ஆனந்த ராஜன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் கலந்து கொண்டு மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசினார். விழாவில் அருப்புக்கோட்டை உட்கோட்டஉதவி காவல் கண்காணிப்பாளர் கரன்காரட் சமாதான புறாவை பறக்க விட்டார். எஸ்.பி.கே. கல்வி நிறுவன குழு தலைவர் ஜெயக்குமார் ஒலிம்பிக் கொடியேற்றினார். கவுரவ ஆலோசகர் மனோகரன், உறவின்முறை செயலாளர் முத்துசாமி, கோவில் டிரஸ்டி ராஜேந்திரன், உறவின்முறை துணைச் செயலாளர் முத்துக்குமார், துணைத்தலைவர் சிவக்குமார் உள்பட உறவின்முறை நிர்வாகிகள், பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்-ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளிச்செயலாளர் மணிமுருகன் நன்றி கூறினார்.

    • குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.
    • கையிறு இழுத்தல் போட்டி, தேடிப்பார் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    மொரப்பூர், 

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளியில் மழலையர் குழந்தைகளுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வேடியப்பன், சாந்தி வேடியப்பன் தலைமை தாங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர்கள் தமிழ்மணி மற்றும் பவானி, தமிழ்மணி, சன்மதி ராஜாராம் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விளையாட்டு விழாவில் பள்ளி மழலையர் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அவற்றில் சில நடன நிகழ்ச்சி, இசைநாற்காலி, 50 மீட்டர் ஓட்டப்பந்தயம், பலூன் ஓட்டப்பந்தயம், சங்கிலித்தொடர் ஓட்டப்பந்தயம், உருட்டுப் பந்தாட்டம், வட்டத்தில் வைத்தாடுதல், தறி ஓட்டம், தொடர் பந்தாட்டம், பந்தை பிடி, கையிறு இழுத்தல் போட்டி, தேடிப்பார் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டியில் பங்குபெற்று, வெற்றிபெற்ற குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பள்ளி முதல்வர்கள் சாரதி மகாலிங்கம், ஜான் இருதயராஜ், வெற்றிவேல் ஆகியோர் வழங்கினர்.

    விழா சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஷ்வரி, குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீனா மற்றும் அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.

    • மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது
    • புறாக்கள் பறக்கவிடப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி அடுத்த துடையூர் மகாலெட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளி மாணவன் அக்‌ஷய் வரவேற்று பேசினார். புறாக்கள் பறக்கவிடப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. போட்டியினை மகாலெட்சுமி கல்வி குழும தாளாளர் ரவி கொடியசைக்க, மகாலெட்சுமி கல்வி குழும ஆலோசகர் ரோட்ே்டரியன் சீனிவாசன், துளசி பாலசுப்பிரமணியன், ராஜா ராம், ரூபினி, பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி முதல்வர் ெஜயசீலன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.விழாவில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. மாணவர்களுக்கு 20 மீட்டர் ஓட்டபந்தயமும், 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டபந்தயமும், 3 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு 60 மீட்டர் ஓட்டபந்தயமும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டபந்தயமும் நடைபெற்றது. பின்பு தடகள போட்டிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. எல்.கே.ஜி. முதல் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு பாராசூட் ட்ரில் நடைபெற்றது.3 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரமிடு மற்றும் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. விழாவில் வெற்றி பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஒட்டுதொத்த சாம்பியன் கோப்பையினை பள்ளி எம்ரால்டு அணி ெவன்றது. முடிவில் மாணவன் தரணிதரன் நன்றி கூறினார். மகாலெட்சுமி குழும ஆலோசகர் ரோட்டேரியன் கே.சீனிவாசன் விழாவில் சிறப்பாக செயல்பட்ட அனைவரையும் வாழ்த்தி மாணவர்கள், பெற்றோர்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்.


    • வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு விழா நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்து, பள்ளியின் விளையாட்டு கொடியினை ஏற்றி வைத்தார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பங்கேற்று, ஒலிம்பிக் ஜோதியினை ஏற்றி வைத்து, போட்டிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை அவர் ஏற்று கொண்டார்.

    இதில் மாணவ, மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது.

    6 முதல் 8 வயது, 9 மற்றும் 10 வயது, 11 முதல் 13 வயது, 14 முதல் 16 வயது என ஆனந்த், தீரஜ், பிரேம், சாந்தி என 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்ற சாந்தி குழுவிற்கு கோப்பை வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு விழாவினையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அசோக் தலைமையில் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    இதில், அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் தனபால், ஓசூர், பர்கூர், வேப்பனஹள்ளி, சூளகிரி வேளாங்கண்ணி பள்ளிகளின் முதல்வர்கள், இன்ஜினியர் சரவணன், தொழிலதிபர்கள் ரகுராமன், வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளி மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு பள்ளி மைதானத்தில் ஏற்றப்பட்டது.
    • விளையாட்டுக்குழு செயலர் கவிதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இச்சிப்பட்டியில் அமைந்துள்ள யங் இண்டியா பப்ளிக் ஸ்கூல் மைதானத்தில் வருடாந்திர விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் எம்.என்.பொன்னுசாமி தலைமை வகித்தார்.

    பள்ளி தலைவர் சி.பழனிச்சாமி,பள்ளிச்செயலர் டாக்டர். சிவசண்முகம் , ஏனைய பள்ளி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தொழில் முறை துப்பாக்கி சுடும் வீராங்கனை மற்றும் சர்வதேச பதக்கம் வென்ற ஸ்ரீநிதி அபிராமி கலந்துகொண்டார்.

    கவுரவ விருந்தினராக சாரண, சாரணியர் இயக்கத்தின் பல்லடம் மாவட்ட ஆணையர் பழனிசாமி பங்கேற்றார். 

    பள்ளி முதல்வர் அண்ணாமலை ,துணை முதல்வர்கள் நிஜிலா பானு, சசிகலா முன்னிலை வகித்தனர்.விழாவில் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் இருந்து பள்ளி மாணவர்களால் ஒலிம்பிக் தீபம் கொண்டு வரப்பட்டு பள்ளி மைதானத்தில் ஏற்றப்பட்டது. அறிவியல் விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின், ஐசக் நியூட்டன், மைக்கேல் பாரடே அணிகளை சார்ந்த சாரண, சாரணியர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. உடற்கல்வி ஆசிரியர் யேசுராஜ் விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார்.

    பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சாம்பியன் கோப்பையும் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டது. விளையாட்டுக்குழு செயலர் கவிதா நன்றி கூறினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர். 

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
    • மாணவர்களுக்கு பள்ளி பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்னர்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 32-வது விளையாட்டு விழாப்போட்டிகள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றுப் பேசினார். ஊத்துக்குளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மாணவ-மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    ஊத்துக்குளி சபரி இன்டேன் நிறுவனர் சாவித்தரி பெரியசாமி ஒலிம்பிக் சுடரை ஏற்றி சிறப்பித்தார். விளையாட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட இறகுப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளரும் இந்திய இறகுப்பந்து அணியின் பயிற்சியாளருமான மோகன்குமார் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.

    பள்ளி உபதலைவர் கருப்புசாமி, தாளாளர் பாலசுப்பிரமணியம், செயலாளர் செநதில்நாதன், பெரியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி பொருளாளர் சந்திரசேகர் மற்றும் பள்ளி உறுப்பினர் துரைராஜ் பரிசுகள் வழங்கி சிறப்பித்னர். முடிவில் தமிழாசிரியர் ராஜகுமார் நன்றி கூறினார்.

    • முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
    • ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.

    ஓசூர்,

    ஓசூர் டி.வி.எஸ். சாலையில் கொத்தூரில் உள்ள அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்.சி பள்ளியின் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தாளாளர் எம்.நடராஜன் தலைமை தாங்கினார். முதன்மை விருந்தினராக, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.

    அதனைத் தொடர்ந்து பள்ளித் தாளாளர் நடராஜன், ஒலிம்பிக் கொடியையும், பள்ளி முதல்வர் எஸ்.உத்தரியம்மாள், பள்ளிக் கொடியையும் ஏற்றி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

    பின்னர், சப்- கலெக்டர் சரண்யா விழாவில் சிறப்புரையாற்றி, பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    மேலும் விழாவில், பள்ளித் துணைத் தாளாளர் சிவானந்தா, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலாளர்களான ஜி. லோகநாதன், ஜெ. வெங்கட்ரமணா மற்றும் பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    • கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் 22-வது விளையாட்டு விழா நடந்தது. முதல்வர் பால முருகன் வரவேற்றார். தேசியக் கொடியை சிறப்பு விருந்தினர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவும், ஒலிம்பிக் கொடியை மற்றொரு சிறப்பு விருந்தினர்-விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறனும், கல்லூரிக் கொடியை கல்லூரிச் செயலர் அ.பா.செல்வராசனும் ஏற்றினர்.

    தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களின் அணி வகுப்பு நடந்தது. இளநிலை தகவல் தொழில்நுட்பவியல் துறை 3-ம் ஆண்டு மாணவர் அபிஷேக் விளையாட்டு விழாவுக்கான உறுதிமொழி வாசித்தார்.

    100மீட்டர், 400மீட்டர் ஓட்டம், மாணவர் நடனம். மாணவிகளின் சிலம்பம். பிரமிடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் யோகசுவரன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் முத்துலட்சுமி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சென்னையை சேர்ந்த சர்வதேச 2-வது கிராண்ட் மாஸ்டர் குகேசின் பயிற்றுநர் கிராண்ட் மாஸ்டர் விஷ்ணு பிரசன்னா விளையாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.அவர் ேபசுகையில், ஒழுக்கம், காலம் தவறாமை ஆகிய 2-ம் வெற்றி பெறுவதற்கான வழிகள். மனதை எப்பொ ழுதும் அமைதியான சூழலில் வைத்திருக்க வேண்டும். எதற்கும் பதற்றப்படக் கூடாது.

    நம்முடைய எதிரிகள் மூலமே நமக்கு வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். ஆகவே அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள் என்றார்.மற்றொரு சிறப்பு விருந்தினரான விருதுநகர் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள் பிரிவில் ராஜேந்திரன் மணி அணியும் பெண்கள் பிரிவில் ஸ்மிரிதி மந்தனா அணியும் ஒட்டு மொத்த புள்ளிகளை பெற்று முதல் இடத்தைப் பிடித்தன.

    உடற்கல்வித்துறை உதவி இயக்குநர் புனிதவதி நன்றி கூறினார்.

    • ரூபி மெட்ரிக் பள்ளியில் வருகிற 4-ந்தேதி விளையாட்டு விழா நடக்கிறது.
    • மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    மதுரை

    மதுரை பழங்காநத்தத்தில் ரூபி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி மற்றும் மாடக்குளத்தில் ரூபி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளிகளின் விளையாட்டு விழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) மதுரா கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திருமங்கலம் டி.எஸ்.பி. வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

    போட்டியில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு பரிசு வழங்கி டி.எஸ்.பி. பேசுகிறார். இந்த விழாவில் பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்று கின்றனர்.

    விளையாட்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி சாந்தா தேவி, முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டில் 6400-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.
    • இதுபோன்ற முன்முயற்சிகள் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு உதவுகின்றன என்று பிரதமர் கூறினார்.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 'ஜெய்ப்பூர் மகாகேல்' என்ற விளையாட்டு விழா, 2017ஆம் ஆண்டு முதல் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதி மக்களவை உறுப்பினர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோரால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் இந்த ஆண்டு மகாகேல் விளையாட்டு விழா, கபடிப் போட்டியில் கவனம் செலுத்தி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினமான ஜனவரி 12ம் தேதி போட்டி தொடங்கியது. இதில் 450-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள், நகராட்சிகள் மற்றும் ஜெய்ப்பூர் ஊரக மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 சட்டபேரவைத் தொகுதிகளின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 6400- க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

    இந்நிலையில் ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டு போட்டியில் பங்கேற்றவர்களிடையே பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.

    விளையாட்டு போட்டி விளையாட்டுப் போட்டி நிறைவு விழாவின் ஒரு பகுதியாக வைஷாலி நகர் சித்ரகூடம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    விழாவில் பேசிய பிரதமர் மோடி, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இளைஞர்களை அரசு ஊக்குவிப்பதாக கூறினார்.

    மேலும், 'ஜெய்ப்பூர் மகாகேல் விளையாட்டுத் திறமையின் கொண்டாட்டம். இத்தகைய முயற்சிகள் விளையாட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றன. இந்த நிகழ்வில் பங்கேற்ற வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற முன்முயற்சிகள் விளையாட்டுத் திறன்களைக் கண்டறிந்து வளர்ப்பதற்கு உதவுகின்றன என்றும் பிரதமர் கூறினார்.

    • அரசன் கணேசன் பாலிடெக்னிக் விளையாட்டு விழா நடந்தது.
    • விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியின் 41-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. தாளாளர் கணேஷ்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர் கிரிதரன் ஆகியோர் பேசினர். முதல்வர் நந்தகுமார் வரவேற்றார். விளையாட்டு வீரரும், ஹர்ப்ஸ் இந்தியா மற்றும் ட்ரக்ஸ் இந்தியா நிர்வாக இயக்குநருமான ராஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். 2022-23-ம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது மற்றும் கேடயத்தை மின்னியல்துறை மாணவர் முகேஷ்பாண்டியனும், தனி நபர் கோப்பைக்கான பரிசை அச்சுத்துறை மாணவர் அகமத் பிலாலும் பெற்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை 77 புள்ளிகள் பெற்று "டைகர் அணி" வீரர்கள் பெற்றனர். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் மதனகோபால் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். அமைப்பியல் துறை விரிவுரையாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

    ×