என் மலர்
நீங்கள் தேடியது "கோரிக்கை"
- மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது.
- பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் அடையாளமாக அமைந்துள்ள மணிக்கூண்டு மற்றும் தம்பிதுரை பூங்கா சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென்பது மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
இது தொடர்பாக நாகை எம்.எல்.ஏ ஷாநவாஸ் அங்கு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விரைவில் மணிக்கூண்டு மற்றும் பூங்கா சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார்.
ஆய்வின் போது, நாகை நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி, விடுதலை சிறுத்தை கட்சி மாவட்டப் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- நெடுஞ்சாலை பணியாளர்கள் மணல் துகள்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
- மண் துகள்கள் திரும்பவும் சென்டர் மீடியன் பகுதியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.
தருமபுரி,
தருமபுரியில் முக்கிய சாலைகளில் ஒன்றாக தருமபுரி- சேலம் நேதாஜி பைபாஸ் சாலை உள்ளது. இந்த முக்கிய சாலையில் மழைக்காலத்தில் அடித்து வரப்பட்ட மண் துகள்கள் தருமபுரி 4 ரோட்டில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை சென்ட்ரல் மீடியன் இரு புறங்களிலும் குவிந்துள்ளது.
இந்த துகள்கள் ஈரப்பதத்தில் இருந்து காய்ந்து, பிறகு கனரக வாகனங்கள் செல்லும்போது எதிர் திசையில் வேகமாக வரும் காற்றில் கலந்து இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கண்களில் விழுவதால் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் வகையில் போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர் மீடியன் ஓரத்தில் உள்ள மணல் துகள்களை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதை அடுத்து பணிகள் தொடங்கப்பட்டு நெடுஞ்சாலை பணியாளர்கள் மணல் துகள்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த மண் துகள்களை எடுத்து அங்கிருந்து அகற்றாமல் மீண்டும் ரோட்டின் ஓரத்திலேயே கொட்டுவதால் அந்த மண் துகள்கள் திரும்பவும் சென்டர் மீடியன் பகுதியில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் பணியை துரிதப்படுத்தி மண் துகள்களை வேறு இடத்தில் கொண்டு போய் கொட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.
- குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள
கரூர்:
கரூர், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல முடியவில்லை. மேலும், தினமும், குப்பைகள் தேங்கி வருவதால், அவை அழுகி துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தினமும் குப்பை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அனைத்து வார்டுகளிலும் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர்மன்ற அலுவலகத்தில் நகர மன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை வகித்தார்.
நகராட்சி ஆணையர் மூர்த்தி வரவேற்றார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் நகராட்சியில் ஒவ்வொரு வார்டு களையும் நான்கு பகுதியாக பிரித்து ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு சபை குழுவினர், மற்றும் நான்கு வார்டுகளுக்கும் ஒரு செயலாளர் அமைக்க வேண்டுமென்று ஜெயங்கொண்டம் நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி உறுப்பினர்கள் செல்வராஜ், அம்பிகாபதி, ரெங்கநாதன், ஜோதிலட்சுமி, மனோன்மணி, பூபதி, சுப்ரமணியன், சேகர், கிருபாநிதி, வெற்றி வேல், பாண்டியன், துர்கா, ஆனந்த், சமந்தா, பாய், மீனாட்சி, நடராஜன் மற்றும் நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உறுப்பினர் ரங்கநாதன் பேசும் போது, பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் தூய்மைப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளில் உள்ள வார்டுகளில் சாலைகள் மிக மோசமாக உள்ளது அதை உடனடியாக செப்பனிட வேண்டும் எனக் கூறினார்.
மற்ற உறுப்பினர்களும் அவரவர் வார்டுகளில் உள்ள அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கூறினர்.
கூட்டத்தின் இறுதியில் நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி நன்றி கூறினார்.
- சாலைகளை சீர்ப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- அரியலூர் நகர் மன்ற கூட்டம்
அரியலூர்,
அரியலூர் நகராட்சி 18-வது வார்டில் கட்டி முடிக்கப்பட்டு கிடப்பில் உள்ள சாண எரிவாயு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அரியலூர் நகராட்சி அலுவலலக கூட்டரங்கில், நகர் மன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர் மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கலியமூர்த்தி, ஆணையர் சித்ராசோனியா, பொறியாளர் தமயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதில் வார்டு உறுப்பினர்கள் செல்வராணி, புகழேந்தி, கண்ணன், வெங்கடாசலபதி உள்ளிட்டோர் பேசுகையில், வ.உசி நகர் பகுதியில் சாக்கடை கால்வாயில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்புதர்களை அகற்ற வேண்டும். 1 -வது வார்டில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். நகராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கென தனி கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும். 18-வது வார்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட சாண எரிவாயு திட்டம் கிடப்பில் உள்ளது. இதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதைசாக்கடைக்காக சாலையில் தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி சாலைகளை சீர்ப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் கொள்ளிடம் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.தொடர்ந்து கூட்டத்தில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
- ராஜபாளையம் தொகுதியில் நடந்த கிராமசபை கூட்டங்களில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பங்கேற்றனர்.
- பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி யில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு செட்டியார்பட்டி பேரூராட்சி 9-வது வார்டு பிள்ளைமார் சமூக மண்டபத்திலும், சேத்தூர் பேரூராட்சி கோட்டைவிநாயகர் கோவில் அருகிலுள்ள மண்டபத்திலும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் கிராமசபை கூட்டங்கள் நடந்தது.
இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் மக்களின் குறைகளை கண்டறிய முதல்வர் சென்னையில் பகுதி சபை கூட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
இன்று கிராமங்களில் நடப்பது போல் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பகுதி சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் நகர் பகுதிகளில் நடைபெறும் இந்த கூட்டம் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து குறைகளை தீர்க்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றார்.
புத்தூர் ஊராட்சியிலும் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அடிப்படை வசதி வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதற்கு எம்.எல்.ஏ. பதிலளிக்கையில், பி.டி.ஓ. மூலம் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த நிகழ்வில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியன், ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார், செயல் அலுவலர்கள் சந்திரகலா, வெங்கிடகோபு, பேரூர் செயலாளர் இளங்கோவன், பேரூராட்சி துணை தலைவர் விநாயகமூர்த்தி, காளீஸ்வரி, ஒன்றிய துணை செயலாளர் குமார், புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், கிளார்க் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம்.
- தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட அரசாணை வெளியிட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் இரவு நேர கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் கணேசன், பல்லடம் சங்க செயலாளா் அண்ணாதுரை ஆகியோா் திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை மட்டுமே வணிக நிறுவன கடைகள் திறந்திருக்க வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புக்கு பிறகு தற்போதுதான் அதிலிருந்து மீண்டு வருகிறோம். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் கடையை திறக்கக்கூடாது என்பதால் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். வியாபாரிகள் நலன் கருதி தமிழக அரசு தமிழகம் முழுவதும் இரவு நேரத்தில் வணிக நிறுவனங்கள் திறந்து செயல்பட கடந்த ஜூன் மாதம் 2-ந் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. அதனால் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணிக்கு மேலும் கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.
- வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
- குடிநீர், தெருவிளக்கு போன்ற பிரச்சினைக்கு தீர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை அளித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி, நகராட்சி 19 வது வார்டில் பகுதி சபை கூட்டம் நகர மன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது
இதில் நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், நகராட்சி ஆணையர் அப்துல் ஹாரிஸ்நகர மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர்கள், வார்டு பொறுப்பாளர்கள் அனைத்து கட்சியை சேர்ந்த வார்டு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 19-வது வார்டு இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் கூறுகையில் சாலைகளில் பொதும க்களுக்கும்,வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக எந்நேரமும் ஆடுகள்மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இதனை பிடித்து அப்புறப்படுத்துவதோடு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் 19-வது வார்டில் அனைத்து அடிப்படை வசதிகளையும் முறையாக, உடனடியாக செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் ஜவுளி கடை தெரு, பாரதியார் தெரு, வேதை தெருவில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கைகளை தெரிவித்தனர்
அப்போது நகரசபை தலைவர் கவிதா பாண்டியன் பொதுமக்களின் கோரிக்கையை மனுக்களாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மற்றும் பிடாரி குளம், தச்சங்குளத்சுதை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொ ள்ளப்பட்டது. இதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
- பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- விஷ பூச்சிகள் சுற்றி திரிவதால் அச்சம்
கரூர்:
கரூரில் பெய்த கனமழை காரணமாக அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் குளம் போல் தேங்கி இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்ல அவதி படுகின்றனர்.
கரூரில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரம் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கனமழை காரணமாக, மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
தேங்கியுள்ள மழை நீரால் விஷ பூச்சிகளும் இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்வதற்கு மிகவும் சிரமம்படுகின்றனர்.
மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதுவரை தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தேங்கியுள்ள மழை நீரில் அட்டை மற்றும் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை சுற்றி திரிவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
தேங்கியுள்ள மழை நீரை விரைவில் மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இப்பள்ளியில் பயிலக்கூடிய ஆசிரியர்கள் அச்சத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
- மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள்.
வீரபாண்டி:
திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 10க்கு விற்கப்பட்டது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால்விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்தார்கள். இனிமேலும் இருப்பு வைக்க முடியாத காரணத்தால்தற்பொழுது இருப்பு வைத்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய துவங்கி உள்ளார்கள். தற்பொழுது ஒரு கிலோ சின்ன வெங்காயம் 40 ரூபாய் முதல் ரூ.50 வரை வியாபாரிகளால் வாங்கப்படுகிறது. உரங்களின் விலை உயர்வு, கூலி உயர்வு மற்றும் உற்பத்தி குறைவு ஆகிய காரணங்களால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ. 60 க்கு மேல் விற்றால் ஒரு அளவு லாபம் பெற முடியும். மத்திய மாநில அரசுகள் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் 32-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுக்கப்பட்டது.
- சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி 32-வது வார்டு மடவார் வளாகம் பகுதிக்குட்பட்ட தன்யா நகர்பகுதியில் மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மற்றும் சாலை வசதிகள் பிரதான குறைகளாக உள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் 500 குடியிருப்புகள் இருக்கும் தன்யா நகருக்கு செல்வதற்கும் தன்யா நகரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்ப்பகுதிக்கு செல்வதற்கும் ஒரே ஒரு பாதை வசதி மட்டுமே உள்ளது. தன்யா நகரில் சில இடங்களில் 20 அடி ரோடு வசதியும், பல தெருக்களில் 16 அடி அகலம் கொண்ட ரோடு வசதியும் மட்டுமே உள்ளது.
குறிப்பாக தன்யாநகர் உள்ளே நுழையும் சுமார் 50 அடி நீளமுள்ள பாதையில் அகலமானது 10 அடிக்கும் குறைவாக உள்ளதால் இந்த பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே தன்யா நகருக்கு இப்பாதையை தவிர்த்து வேறு ஒரு மாற்றுப் பாதை வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தன்யா நகர் உட்புறம் உள்ள பாரதி நகர் மற்றும் குறிஞ்சி நகர் தெருக்களுக்கு பேவர் பிளாக், மின்கம்பம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவைப்படுகிறது. 500 குடியிருப்பு உள்ள இப்பகுதிக்கு தனியாக ரேஷன் கடை கோரிக்கையும் பொதுமக்கள் விடுத்துள்ளனர்.
பூங்கா மற்றும் உடற்பயிற்சி மைதானம் தேவை என்ற கோரிக்கையும், தன்யா நகர் பகுதி முழுவதிலும் சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாதபடி சிக்கலான சூழ்நிலை உள்ளதால் அதையும் சரி செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளனர்.
- மதுரையில் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
- புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.
மதுரை
வீரமாமுனிவரின் 343-வது பிறந்த நாளையொட்டி மதுரை பாத்திமா கல்லூரி ரவுண்டானாவில் உள்ள அவரது சிலைக்கு புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி தாளாளர் சேவியர், உதவி தலைமை ஆசிரியர் மரிய அருள்செல்வம், தலைமை ஆசிரியர் ஜோசப், தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வளாக அதிபர் மரியநாதன், தாளாளர் ஸ்டீபன் லூர்து பிரகாசம், தலைமை ஆசிரியர் சேவியர் ராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அறக்கட்டளை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி மாணவர் சுபநிதி சுப்பிரமணியன், வீரமாமுனிவரின் தமிழ் தொண்டை எடுத்துரைத்தார்.
மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீரமாமுனிவருக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும். சிலை வளாகத்தை சீர்மிகு வளாகமாக மாற்றி அமைக்கவும், அறக்கட்டளை சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.