என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eye treatment"

    • கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது.
    • கண் சிகிச்சை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    தென்காசி:

    வீரகேரளம் புதூர் அருகே உள்ள கருவந்தா ஊராட்சியில் நெல்லை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து கருவந்தா ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் டி.டி.டி.ஏ. பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு கருவந்தா ஊராட்சி மன்ற தலைவர் தானியேல் தலைமை தாங்கினார். ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.

    100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் மூலம் பயனடைந்தனர். முகாம் ஏற்பாடுகளை யேசுராஜா, யேசுதாசன் மற்றும் சவுந்தர் , முகாம் ஒருங்கினப்பாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருவந்தா ஊராட்சி உடன் இணைந்து செய்து இருந்தனர்.

    • சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    • முகாமை சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் செங்குந்தர் நடுநிலைப் பள்ளியில் வைத்து கிராம உதயம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியோர் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கரசுப்பையா தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான டாக்டர் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் ஜெயராணி வரவேற்புரை நிகழ்த்தினார்.

    சமூக ஆர்வலரும் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான அழகை கண்ணன், மகாத்மா காந்தி சேவா மன்ற தலைவர் மனோகரன், சமூக ஆர்வலர்கள் சங்கரன்கோவில் பரமசிவன், பாட்டத்தூர் பால்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் லிவா தலைமையிலான மருத்துவ குழுவினர் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை செய்தனர்.

    இதில் 92 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 58 பேர் இலவச கண் மருத்துவ அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கிராம உதயம் களப்பணியாளர் ஜெயராணி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை கிராம உதயம் மருத்துவதுறையினர் செய்திருந்தனர்.

    • பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார்.
    • மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.பி.இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கம், கண் தான விழிப்புணர்வு குழு இணைந்து புனித அருளப்பர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் முன்னாள் செயலாளர் ரஜினி முன்னிலை வகித்தார். ஆவுடையனூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரதீப் வரவேற்று பேசினார்.

    பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் தலைவரும், கண் தான விழிப்புணர்வினுடைய நிறுவனரும், 324-ஏ மாவட்ட கண் தான ஒருங்கிணைப்பாளருமாகிய கே.ஆர்.பி.இளங்கோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் அபர்ணா 2,546 மாணவ, மாணவிகளுக்கு கண் பரிசோதனை செய்தார். இதில் 116 மாணவர்களுக்கு கண் குறைபாடு உள்ளது கண்டறியப்பட்டது. மாண வர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்பட்டது. அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மரிய கிளிண்டன் ஏற்பாடுகளை செய்திருந்தார். பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் பரமசிவன் நன்றி கூறினார்.

    • ஏரல் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 9 பேரை சிகிச்கைக்காக அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாயர்புரம்:

    ஏரல் அருகே உள்ள சிறுத்தொண்ட நல்லூர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம் ஏரலில் தூய தெரசாள் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது

    டி.எம்.பி. பவுன்டேசன் சவுந்திர பாண்டியன் தலைமை தாங்கினார். தெரசாள் ஆலய பங்கு தந்தை ராஜா முன்னிலை வகித்தார். முகாமில் 193 பயனாளிகள் கலந்து கொண்டனர். இதில் 9 பேரை சிகிச்கைக்காக தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    டி.எம்.பி. வங்கி மேலாளர் பால்ராஜ் , பாக்கர் அலி, பேரூராட்சி தலைவர் சர்மிளா மணிவண்ணன், பள்ளி ஆசிரியர் வின்சென்ட் வெள்ளையா, ஏரல் உதவும் கரங்கள் தலைவர் அருணாசலம், அரவிந்த் கண் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டி.எம்.பி. வங்கி ஊழியர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் ‌கலந்து கொண்டனர்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
    • அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் தேதிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், கிருஷ்ணன் கோவில் தனியார் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புசங்கம் உதவியுடன் ராமச்சந்திர ராஜா, சுப்பிரமணியராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தியது. ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள

    ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க அலுவலகத்தில் முகாம் நடந்தது. ஜானகிராம் மில்ஸ் இயக்குநர் என்.எஸ். சஞ்சய்குமார் ராஜா தொடங்கி வைத்தார். ஐ.என்.டி.யு.சி. மாநில பொருளாளர் பிரபாகரன், விருதுநகர் மாவட்ட தலைவர் கண்ணன், வட்டார பொருளாளர் கிருஷ்ணன்குட்டி, ஜானகிராம் மில்ஸ்

    ஐ.என்.டி.யு.சி தலைவர் சுகுமாரன், இணை செயலாளர் கணபதியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கண் மருத்துவ மனை மருத்துவர் விக்னேசுவரி தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 45 பேர் கிருஷ்ணன்கோவில் தனியார் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு வீடு திரும்பும் வரை போக்குவரத்து, தங்குமிடம், உணவு இலவசமாக செய்து தரப்பட்டது.

    பேட்டை கோடீஸ்வரன்நகரில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    நெல்லை:

    பேட்டை ரூரல் ஊராட்சி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் கோடீஸ்வரன் நகர் சமுதாய நலக் கூடத்தில் நடந்தது.

    இம்முகாமிற்கு பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் தலைமை தாங்கினார்.

    நெல்லை மத்திய மாவட்ட வர்த்தக அணி தி.மு.க. அமைப்பாளர் அவதார் ஷாஜகான், துுணை அமைப்பாளர் சுரேஷ் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஊராட்சி தலைவர் சின்னதுரை வரவேற்றார்.

    அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தார்.  

    நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள் கண் சிகிச்சை அளித்தனர். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×