என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strike"

    • ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    தமிழக அரசின் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு. இணைந்து, மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    மண்டல தலைவர் அழகர்சாமி முன்னிலை யில் நடந்த இந்த போராட்டத்தில், 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நீதிமன்றத் தீர்ப்பு அடிப்படையில் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற- மரணமடைந்த ஊழியர்களுக்கு ஓய்வுகால பலன்கள் தர வேண்டும்.

    ஒப்பந்தப்படி ஓய்வூதி யத்தை உடனடியாக உயர்த்தி வழங்க வேண்டும், ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், கொரோனா நிவாரணம் வழங்க வேண்டும், வேலைநிறுத்தம் செய்த 21 நாட்களை முறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • ஐஜி அலுவலகம் முன்பு மறியல் நடைபெற்றது
    • தற்கொலை வழக்கில் நடவடிக்கை கோரி

    திருச்சி:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சேர்ந்த தமிழழகி (வயது21) என்ற பெண் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான மூன்று பேர் மீது இரண்டு வருடம் ஆகியும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. முறையான விசாரணையை டிஎஸ்பி நடத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தமிழழகியின் உறவினர்கள் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்து. காவல்துறையினர் அவர்களை சட்டையை பிடித்து இழுத்து சாலை விட்டு தள்ளி நிற்க செய்தனர். இதனால் மத்திய மண்டல காவல்துறை அலுவலகம் முன்பு பரபரப்பு நிலவி வருகிறது.

    • சேலத்தில் ஊரக வளர்ச்சி துறையினர் இன்று முதல் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

    சேலம்:

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும், பணி நெருக்கடிகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணிகளை புறக்கணித்து உள்ளனர். இதனால் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகங்கள், பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட் டது. மேலும் அலுவலக பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்க ளின் கோரிக்கைகள் மீது அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வருகிற டிசம்பர் 14-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

    • மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
    • அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்.

    அவினாசி : 

    ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், விடுபட்ட உரிமையான மருத்துவ விடுப்பு ,ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை, தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களில் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவினாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் 31 ஊராட்சிகளில் பணியாற்றும்செயலாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடி ஊழியர்கள் 28 பேர் பணிநீக்கம் செய்ததை கண்டித்து அனைத்து ஊழியர்களும் கடந்த 50 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்தும் எந்த விதமான முடிவும் எட்டப்படவில்லை. ஆகையால் 28 பேரை தவிர மற்ற ஊழியர்கள் குடும்ப சூழ்நிலை கருத்தில் கொண்டு மற்றவர்கள் வேலையில் நேற்று இரவு பணியில் சேர்ந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • பள்ளி மாணவியை அடித்த விவகாரம்

    திருச்சி:

    திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மனைவி ஜெர்மன் மேரி. இவர்களது மகள் பிலோசியா மேரி. இவர் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவதன்று பிலோசியா மேரிக்கு மெட்ராஸ் ஐ காரணமாக 2 நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. இதனை தொடர்ந்து அவர் பள்ளிக்கு சென்ற பொழுது வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று பள்ளி ஆசிரியர் கண்டித்து கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தாய் மேரி கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.

    இந்த நிலையில் புகார் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி மாணவியின் பெற்றோர் இன்று திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திருச்சி- புதுகை சாலையில் திடீரென்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.

    • மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.

    திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கதிராமங்கலம் முதல் மயிலாடுதுறை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

    இதையொட்டி சாலையின் இரு புறங்களிலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியால் சாலை ஓரம் உள்ள குடியிருப்புகள் பாதிக்கப்படுவதாக கூறி பொதுமக்கள் மயிலாடுதுறை சாலை திருநன்றியூர் மாரியம்மன் கோவில் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்துக்கு பா.ம.க. மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி தலைமை தாங்கினார்.

    அப்போது குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அமைக்கப்பட்ட வடிகாலை அப்புறப்படுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    இந்த போராட்டத்தால் சீர்காழி- மயிலாடுதுறை சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது
    • 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் வராமல் உள்ளது.

    உடுமலை : 

    உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவைப்பருவமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலை கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் இங்குள்ள தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக அந்தந்த மாதத்தில் வழங்கப்படவேண்டிய சம்பளம் வழங்கப்படுவதில்லை.

    அதற்கு பதிலாக 3, 4 மாதங்கள் கழித்து ஓரிரு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. அதற்குள் அடுத்த மாதங்களுக்கான சம்பளம் நிலுவையில் சேர்ந்து கொள்கிறது.

    இந்த நிலையில் சர்க்கரை ஆலை மற்றும் வடிப்பாலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கப்படாமல் நிலுவை உள்ளது. அதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

    தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் பி.எப்.தொகை கடந்த 25 மாதங்களாக பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தப்படாமல் உள்ளது. இந்த தொகையை ஆலை நிர்வாகம், பி.எப். அலுவலகத்திற்கு செலுத்தினால்தான், ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வுதியம் (பென்சன்) வரும்.

    ஆனால் ஆலையில் இருந்து பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டிய தொகையை ஆலை நிர்வாகம் செலுத்தாமல் நிலுவை வைத்திருப்பதால், 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி ஓய்வு பெற்று ஒரு ஆண்டுக்கு மேலாகியும் ஓய்வூதியம் வராமல் உள்ளது.

    அதனால் சம்பளத்தில் இருந்து மாதம்தோறும் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப்.தொகையை பி.எப்.அலுவலகத்திற்கு செலுத்தவேண்டும் என்று தொழிலாளர்கள், தொடர்ந்து ஆலை நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல், கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வேலைநிறுத்தம் நடைபெறும் என்று ஆலையின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

    • பெண்கள் முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
    • கல் குவாரியை மூடக்கோரி

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரத்தில் கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் குவாரியால் அந்த பகுதியை சுற்றியுள்ள 8-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதால் உடனடியாக அந்த கல் குவாரியை மூட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் போராடி வருகின்றனர். பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த கல்குவாரி இயங்கி வருவதால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த கிராமத்தின் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று தமிழக முதல்-அமைச்சர் தனி பிரிவிற்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து பதிவு தபாலில் தமிழக முதல்-அமைச்சருக்கு கல்குவாரியை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்குவாரி இயங்குவதால் ஏற்பட்டுள்ள தீமைகள் குறித்தும் அந்த மனுவில் தெரிவித்து உடனடியாக கல்குவாரியை மூட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

    • அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி வேலை நிறுத்தம்.
    • அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு எம்.ஆர்.கே . கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரிவரும் 21ஆம் தேதி வேலை நிறுத்தம் தொடர்பான கூட்டம் சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயின் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு தலைவர் வேலவன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் ஒரு மனதாக வரும் 21-ம் தேதி பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வது என கோஷம் எழுப்பினர்.

    • நேர்காணல் ரத்து செய்யப்பட்டதால் தேர்வாளர்கள் ‘திடீர்’ மறியலில் ஈடுபட்டனர்.
    • தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மதுரை

    மதுரை மண்டலத்தில் 20-க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பருவகால பணியாளர்களை நியமிக்க நுகர்பொருள் வாணிபக் கழகம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

    விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்கா ணல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தற்காலிக பருவகால உதவு பவர் பணியிடங்களுக்கு 16ந் தேதி (இன்று) காலை 10 மணி அளவில் நேர்காணல் நடக்கிறது.

    விண்ணப்பதாரர்கள் மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அடையாள அட்டை, இருப்பிட சான்றுகளுடன் நேர்காணலுக்கு வர வேண்டும். இதில் கலந்து கொள்வதற்கு பயணப்படி வழங்கப்படமாட்டாது. நேர்காணலுக்கான நாளில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். மற்ற நாட்களில் அனுமதிக்க இயலாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதையடுத்து 50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் உள்ள நுகர்பொ ருள் வாணிபக் கழக அலுவலகத்துக்கு காலையிலேயே வந்து விட்டனர்.

    பணியாளர் தேர்வுக்கான நேர்காணல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனை கண்டித்து

    50-க்கும் மேற்பட்டோர் குருவிக்காரன் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    ×