search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி திருவிழா"

    விவசாய நிலங்களில் விவசாய பணிகள் முடிவடைந்த பின் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா இங்கு நடத்துவது வழக்கம்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இங்குள்ள மலை மீது கருப்பு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் அடிவாரத்தில் பரம்பு கண்மாய் உள்ளது.

    இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாய பணிகள் முடிவடைந்த பின் ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா இங்கு நடத்துவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. மேலூர், மேலவளவு, கொட்டாம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமான கிராம மக்கள் நேற்று நள்ளிரவு முதலே கண்மாய் கரையில் கூடினர்.

    இன்று அதிகாலை 6 மணி அளவில் கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளைத்துண்டு வீசியவுடன் கரையில் திரண்டிருந்த இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் போட்டி போட்டுக்கொன்று கண்மாயில் இறங்கி ஆர்வத்துடன் மீன்பிடித்தனர்.

    இதில் கெண்டை, கெளுத்தி, விறால், கட்லா உட்பட சிறியரகத்தில் இருந்து 3 கிலோ எடை வரையிலான மீன்கள் பிடிபட்டது. இதனை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
    ×