என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tractor"

    • கருப்பன் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தை சேர்ந்தவர் கருப்பன் (வயது 68) தொழிலாளி. இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கரும்பு லோடு ஏற்றி கொண்டு வேகமாக வந்த டிராக்டர் கருப்பன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் விபத்து தொடர்பாக டிராக்டர் டிரைவரான புதுப்பட்டையை சேர்ந்த வேலு என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார்.
    • வேளாண் துறை ஊழியர் மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த டிராக்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் மேலக்கரை பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 50). இவர் டிராக்டர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரிடம் சேரன்மகாதேவி வேளாண்மை துறையில் வேலை செய்து வரும் ஒருவர் மானியத்தில் டிராக்டர் வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

    இதற்காக முத்துராமன் ரூ.4 லட்சத்தை பாளையில் உள்ள தனியார் டிராக்டர் நிறுவனத்தில் கட்டி யுள்ளார். ஆனால் வெகு நாட்களாகியும் வேளாண் ஊழியர் டிராக்டர் வாங்கி கொடுக்கவில்லை.

    மேலும் இது குறித்து வேளாண் ஊழியரிடம் முத்துராமன் பலமுறை கேட்டும் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து முத்துராமன் பாளை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் வேளாண் துறை ஊழியர் மற்றும் குலவணிகர்புரத்தை சேர்ந்த டிராக்டர் நிறுவன உரிமையாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாளை மண்டலத்துக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மூட்டைகளில் கொண்டு வந்தனர்
    • உடனே டிராக்டரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்குட்பட்ட சாந்தி நகர் பகுதியில் நேற்று மர்ம நபர்கள் டிராக்டரில் பிளாஸ்டிக், பாட்டில்கள் மற்றும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்காக மூட்டைகளில் கொண்டு வந்தனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று டிராக்டரை சிறை பிடித்தனர். உடனே டிராக்டரில் வந்த டிரைவர் உள்பட 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் பாளை சுகாதார ஆய்வாளர் சங்கரலிங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர் அளித்த புகாரின் பேரில் பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மருத்துவ கழிவுகளை கொட்டி சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அதனை கொண்டு வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். அதில் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்தது நாங்குநேரி அருகே உள்ள ஆழ்வாநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தளவாய் (வயது 35)மற்றும் அம்பை அருகே உள்ள வெள்ளாங்குழி முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த கைலாசம் (37)என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.

    • இவரும் இவரது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (18), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் இருந்து வானூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்
    • எதிரே வந்த ட்ராக்டரில் மோதி இரண்டு பேரும் பலத்த காயமடைந்தன ர்

    விழுப்புரம்:

    புதுச்சேரி மாநிலம் சந்தை புது குப்பத்தை சேர்ந்த பாவாடை ராயன் (வயது 27) இவரும் இவரது நண்பர் வானூரை சேர்ந்த வேல்முருகன் (18), இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டிவனத்தில் இருந்து வானூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுச்சேரி திண்டிவனம் நான்கு வழி சாலை தென்கோடி பாக்கம் மெயின் ரோட்டில் வரும்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த ட்ராக்டரில் மோதி இரண்டு பேரும் பலத்த காயமடைந்தன ர். காயம் அடைந்தவர்களை கிளியனூர் போலீசார் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பலனிக்காமல் பாவாடைராயன் இறந்தார் .மேலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வேல்முருகன் சிகிச்சை பலனிக்காமல் நேற்று இறந்தார். இது குறித்து கிளியனூர் சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது.
    • 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம்,பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் ஏக்கர்களில் தக்காளி பயிரிடப்படுகிறது. கடந்த கார்த்திகை மாதத்தில் விதைக்கப்பட்ட தக்கா ளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகையால், தேவைக்கு அதிகமான உற்பத்தி ஏற்பட்டு தக்காளி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் தக்காளிகளை விளை நிலத்திலேயே டிராக்டர்கள் மூலம் தக்காளி செடிகளை அழித்து வருகின்றனர்.

    இதற்கிடையே பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி குப்புச்சிபா ளையம் பகுதியை சேர்ந்த சேகர் என்ற விவசாயி இவரது தோட்டத்தில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால், தக்காளி செடிகளை டிராக்டர் மூலம் அழித்து வருகிறார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:- பரம்பரை பரம்பரையாக விவசாயம்செய்து வருகிறோம்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தக்காளி நல்ல விலைக்கு விற்பனையானதால் தக்காளி பயிர் சாகுபடி செய்தோம்.கார்த்திகை பட்டத்தில்விதைத்த தக்காளிகள் விளைந்து தற்போது அறுவடை செய்யப்படுகிறது.இந்த நிலையில்வெளி மாவட்டங்களில் இருந்து அதிக அளவு தக்காளி வருகையால் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநிலையில் 3 ஏக்கரில் தக்காளி பயிரிட்டு இருந்தேன். தக்காளி பயிரிட உழுவதற்கு ரூ.13 ஆயிரமும், நாற்றுக்கு ரூ.26 ஆயிரமும், நாற்று நடுவதற்கு ரூ.22 ஆயிரமும், மருந்து மற்றும் உரத்திற்கு ரூ.40 ஆயிரமும் செலவாகிறது. தக்காளி பறிப்பதற்கு கிலோவுக்கு 3 ரூபாயும் செலவு ஆகிறது. ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    இதனால் தக்காளி விவசாயத்தில் உற்பத்தி செலவைக் கூட திரும்ப எடுக்க முடியாமல் போனது. தக்காளி ஒரு கிலோ ரூ.22க்கு விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் பெற முடியும். உரிய விலை கிடைக்காததால் தக்காளி செடிகளை நிலத்திலேயே அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

    • மின்கம்பி உரசியதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந் திரன் (வயது 60). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பாலு என்பவ ரின் நிலத்தில் இருந்து டிராக்டர் மூலம் வைக்கோலை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பி உரசியதால் வைக்கோல் தீடீரென தீப்பிடித்து எரியத்தொ டங்கி, சில நிமிடங்களில் வைக்கோல் முழுவதும் எரிந்து நாச மானது. அப்போது எரிந்து கொண்டிருந்த ஒரு கட்டு வைக் கோல் ராஜேந்திரன் மீது விழுந்து தீக்காயம் ஏற்பட்டது.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்த னர்.

    தீவிபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக் கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

    மேலும் தீவிபத்து குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டிராக்டர்களை பஞ்சாயத்து தலைவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 38 டிராக்டர்களை பஞ்சாயத்து தலைவர்களிடம் வழங்கினார்.

    தூத்துக்குடி:

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் தூய்மை பாரத இயக்க திட்டத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், கடைகள் மூலம் உருவாக்கப்படும் கழிவுகள், மண்டபங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்களில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து குப்பைகள் தரம் பிரிக்கும் கூடத்துக்கு கொண்டு செல்வதற்கு டிராக்டர்கள் வாங்க தமிழக அரசு அறிவுறுத்தியது.

    அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள ஊராட்சிகளுக்கு 35 எச்.பி. திறன் கொண்ட 27 டிராக்டர்களும், 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு மேல் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு 42 எச்.பி. திறன் கொண்ட 11 டிராக்டர்களும் ஆக மொத்தம் 38 டிராக்டர்கள் வாங்கப்பட்டன.

    டிராக்டர்கள்

    இந்த டிராக்டர்களை பஞ்சாயத்து தலைவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு 32 பஞ்சாயத்துக் களுக்கு 38 டிராக்டர்களை பஞ்சாயத்து தலை வர்களிடம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பஞ்சாயத்து தலை வர் பிரம்மசக்தி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே டிராக்டர்களில் மணல் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் மறியல் செய்தனர்.
    • பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லம் கொண்டான் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு உரிய வயல்வெளிகள் மற்றும் இதர காடுகளுக்கு குமிட்டி குளம் கண்மாய் பிரதானமாகும்.

    இங்கு தேங்கும் தண்ணீர் பாசனத்திற்கும், இந்த பகுதியில் உள்ள கிணறு மற்றும் இதர குடிநீர் ஆதாரங்களுக்கும் இந்த குளத்தை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த கண்மாயில் ஒரு கும்பல் 5 ஜே.சி.பி. எந்திரங்கள், 20 டிராக்டர்களை வைத்து 10 அடி ஆழம் வரை தோண்டி மணல் கடத்தி வருகின்றனர்.

    ஒரு நாளைக்கு 100 முதல் 150 டிராக்டர்களில் மணல் கடத்தப்படுகிறது. ஒரு டிராக்டர் மணல் ரூ.1,600- க்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்து வருகின்றனர்.

    அந்த பகுதி வழியாக அதி வேகமாக மணல் கடத்தல் வாகனங்கள் இயக்கப் படுவதை கண்டித்து பொது மக்கள் பலமுறை எச்சரிக்கை செய்தும் எந்த பலனும் இல்லை.

    இதை கண்டித்து பொதுமக்கள் வாக னங்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதையறிந்த மணல் கடத்தல் காரர்கள் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி வாகனங்களை எடுத்து சென்று விட்டனர்.

    அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி கோரி ஜமீன் கொல்லங் கொண்டான் பிரதான சாலையில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தளவாய்புரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • நெய்விளக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்தர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் (பொ) பசுபதி, சப்- இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெய்விளக்கு பகுதியில் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியில்லாமல் சவுடு மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து இரண்டு டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்தும், டிராக்டர் டிரைவா் அகஸ்தியன்பள்ளி தாமரைசெல்வன் (வயது 28), கைலவனம்பேட்டை வீரமணி (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். டிராக்டா் உரிமையா ளா்களை தேடி வருகின்றனர். 

    • என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது.
    • ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.

    ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் நடந்த திருமண விழாவில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

    குடமலானி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் சவுத்ரி என்பவருக்கும், ரோலி கிராமத்தைச் சேர்ந்த மம்தா என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து 51 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோலி கிராமத்திற்கு திருமண ஊர்வலம் புறப்பட்டது. இதில் 51 டிராக்டர்களுடன் மணமகன் ஊர்வலம் வந்து அசத்தினார். ஒரு டிராக்டரை மணமகனே ஓட்டினார். மொத்தமுள்ள 51 டிராக்டர்களில் 200க்கும் மேற்பட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பயணித்தனர்.

    இதுகுறித்து மணமகன் கூறுகையில், "தனது குடும்பத்தின் பிரதான தொழில் விவசாயம். ஒரு விவசாயியின் அங்கீகாரமாக டிராக்டர் கருதப்படுகிறது. அவரது தந்தையின் திருமண ஊர்வலம் ஒரு டிராக்டரில் புறப்பட்டது. எனவே, எனக்கு ஏன் 51 டிராக்டர்கள் ஊர்வலத்தில் இருக்கக்கூடாது என்று அனைவரும் நினைத்தனர்" என்றார்.

    மேலும், மணமகனின் தந்தை, ஜெதாராம் கூறுகையில் "ஒரு டிராக்டர் 'பூமியின் மகன்' என்று கருதப்படுகிறது. என் தந்தை மற்றும் தாத்தாவின் ஊர்வலம் ஒட்டகங்களில் சென்றது. எங்கள் குடும்பத்தில் ஏற்கனவே 20-30 டிராக்டர்கள் இருந்தன. என் விவசாய நண்பர்களுடன் சேர்ந்து, அவற்றில் மொத்தம் 51 டிராக்டர்களை நான் பதிவு செய்தேன். காலையில் ஊர்வலம் புறப்பட்டபோது மேலும் 10-12 டிராக்டர்கள் சேர்ந்தன. டிராக்டர்கள் மூலம் விவசாயம் செய்கிறோம். அதற்கு ஏன் ஊர்வலம் செல்ல முடியாது? என்று நினைத்தோம்.

    ஊர்வலம் கிராமத்தை அடைந்ததும், அனைவரும் ஆச்சரியமடைந்தனர்" என்றார்.

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • உரிமையாளர்-டிரைவர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள்சாமி மற்றும் போலீசார் சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த னர். அப்போது அந்த வழி யாக வந்த டிராக்டரை நிறுத்துமாறு சைகை காண் பித்தனர்.

    டிராக்டரை ஓட்டி வந்த நபர், போலீசாரை பார்த்த தும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது, அதில் வண்டல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். டிராக்டரை ஓட்டி வந்த மாரியப்பன் மற்றும் உரிமை யாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

    • ரேஷன் கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
    • ஆலக்குடியில் 3 டிராக்டர்களில் பேட்டரிகள் திருட்டு போயிருப்பது.

    வல்லம்:

    தஞ்சை அருகே உள்ள ஆலக்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலமாக நியாய விலை கடை இயங்கி வருகிறது.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இக்கடை மூலமாக அரிசி, சீனி, மண்ணெண்ணைய் உள்பட பல பொருட்கள் விநியோகப்பட்டு வருகிறது.

    நேற்று நியாய விலை கடையில் பொருட்கள் விற்பனை செய்த பணம் ரூபாய் 18 ஆயிரத்தை கடையில் வைத்துவிட்டு விற்பனையாளர்கள் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை ரேஷன் கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொ ண்டனர்.

    அப்போது கடையில் கல்லாவில் இருந்த பணம் 18 ஆயிரம் திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து நியாய விலை கடை செகரேட்டரி சுரேஷ் என்பவர் கொடுத்துள்ள புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதே போல் ஆலக்குடியில் உள்ள 4 அரசு பள்ளிகளின் அலுவலகத்தின் பூட்டுகளையும் உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கு பணம் இல்லாததால் திரும்பி சென்றுள்ளனர்.

    இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் ஆலக்குடியில் 3 டிராக்டர்களின் பேட்டரிகள் திருட்டு போயிருப்பது குறிப்பிடதக்கது.

    இச்சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×