search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "missing"

    • 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
    • தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் வீரக்குமார்(வயது 28). இவரது மனைவி பிரியதர்ஷினி(வயது24). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளதாக தெரிகிறது. வீரக்குமார் திருப்பூரில் சாயப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதனால் பிரியதர்ஷினி, தனது குழந்தைகளுடன் உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளிக்காக தனது ஊருக்கு வீரக்குமார் வந்தார்.

    இந்நிலையில் கடந்த 26-ந் தேதி காலை பிரியதர்ஷினி தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த வீரக்குமார், அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் பிரியதர்ஷினி கிடைக்கவில்லை. இது குறித்து வீரக்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.s

    • வேலைக்கு சென்ற இளம் பெண் மாயமானார்
    • வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை

    கரூர்:

    தோகைமலை அருகே வடசேரி ஊராட்சி காவல்காரன்பட்டி கிழக்கு தெருவில் வசிப்பவர் சின்னையன் மற்றும் அண்ணக்கிளி தம்ப தியினரின் மகள் சவுந்தர்யா (வயது 24). இவர் திருச்சி இனாம்குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு பெயின்ட் கடையில் வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சவுந்தர்யா வேலைக்கு சென்று வருவதாக தனது பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்று உள்ளார். பின்னர் அன்று இரவு முழுவதும் சவுந்தர்யா வீட்டிற்கு வரவில்லை என்பதால் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி 

    • விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார்.
    • தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

    கடலூர் :

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் முத்துமாணிக்கம் நாடார் தெருவை சேர்ந்தவர் சேகர். அவரது மகன் விஷ்வா (வயது 24). என்ஜினீயரிங் முடித்து வீட்டில் உள்ளார். நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சேகர் தனது மகனை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் விஷ்வா கிடைக்கவில்லை. இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசில் சேகர் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விஷ்வா என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நர்சிங் மாணவி மாயமானார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வாணத்திரியான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் இளமதி. இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 19). இவர் ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற பிரியதர்ஷினி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர். இதன்பேரில் மாயமான நர்சிங் மாணவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்."

    • குளித்தலை அருகே சிறுமிகள் மாயம்
    • போலீசார் தேடி வருகின்றனர்

    கரூர்:

    குளித்தலையை அடுத்த, மணவாசி பஞ்சாயத்து கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி மகள் ராஜலட்சுமி. கடந்த மாதம் 23-ந்தேதி முதல் இச்சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்காததால் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்படி மாயனுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

    இதேபோல், குளித்தலை, கடம்பர் கோவில், நமச்சிவாயம் நகரை சேர்ந்த செல்வராணி மகள் அசின், கடந்த மாதம் 13-ந்தேதி காணாமல் போனார். இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீசார் விசாரித்து, மாயமான சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், கடந்த 3-ந்தேதி, கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சிறுமி அசின் மீண்டும் மாயமானார். செல்வராணி மீண்டும் அளித்த புகாரின் படி, குளித்தலை போலீசார் வழக்குப்ப திந்து, சிறுமியை தேடி வருகின்றனர்.

    • கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயமானார்
    • இன்ஸ்டாகிராமில் வாலிபருடன் அரட்டை

    திருச்சி

    திருச்சி மாவட்டம் முசிறி மாணிக்க நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அபிநயா (19) என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு ஒரு குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் அபிநயாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நண்பர் அறிமுகமாகி பழக்கமானார். இருவரும் மிகவும் நெருக்கமானார்கள். நீண்ட நேரம் அவரிடம் அபிநயா அரட்டை அடித்து வந்தார். இதனை அறிந்த ஸ்ரீதரன் மனைவியை கண்டித்தார். இந்த நிலையில் பால் வாங்குவதாக வெளியே புறப்பட்டு சென்ற அபிநயா திடீரென்று மாயமாகி விட்டார்.

    இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபருடன் அவர் ஓட்டம் பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்ரீதரன் முசிறி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.
    • கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார்

    களக்காடு:

    ராதாபுரம் தாலுகா வடக்கன்குளத்தை சேர்ந்த தொழிலாளியின் மகள் 17 வயது சிறுமி 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மாயமானர். இதுபற்றி பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தொழிலாளி தனது மகளை மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள மேல அரியகுளத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் ஒப்படைத்தனர்.

    இதற்கிடையே கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமி மீண்டும் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவர் மூலைக்கரைப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு போலீசார் செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுமியை தேடி வருகின்றனர்.

    • மாணவி காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்
    • வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார்

    உடன்குடி:

    உடன்குடி அருகேயுள்ள கல்லாமொழி அம்மன் கோயில்தெருவை சேர்ந்த வர் இந்திரா (வயது 54) இவரது மகள் மாலதி ( 17). இவர் காயல்பட்டினத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10-ந்தேதி வேலைவாய்ப்பு சம்பந்தமாக பதிவு செய்ய செல்வதாக கூறி பள்ளி சான்றிதழ்களை எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் இதுகுறித்து குலசேகரபட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கல்லூரி மாணவி மாயமானார்
    • ஹால்டிக்கெட் வாங்க சென்றவர்

    திருச்சி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி கீழப்பட்டி மான்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகள் பிரபாவதி (வயது 18). இவர் திருச்சி ஈ.வி.ஆர் கல்லூரியில் பி.எஸ்.சி தாவரவியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 12-ந் தேதி கல்லூரிக்கு ஹால்டிக்கெட் வாங்க சென்ற பிரபாவதி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. உடனே இதுகுறித்து மாரிமுத்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிந்து மாயமான மாணவி பிரபாவதியை தேடி வருகிறார்.

    • பள்ளிக்கு வந்த மாணவி மாயமானதால் பரபரப்பு
    • பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக தகவல் வந்தது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் செந்துறை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் வழக்கம் போல் காலை நேரம் பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளிக்கு வந்தவர் பள்ளியில் தனது புத்தகப் பையை வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். இந்த நிலையில் சந்தேகம் அடைந்த பெற்றோர் பள்ளியை தொடர்பு கொண்டு கேட்டபோது பள்ளிக்கு வந்த மாணவி புத்தக பையை பள்ளிகளில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டதாக தெரிவித்தனர். அதனைத் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் விரைந்து வந்து பள்ளியை முற்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஆங்காங்கே உள்ள செக் போஸ்ட்கள் மற்றும் ரோந்து போலீசாரை முடிகிவிட்டார். மாயமான பள்ளி மாணவி கண்டுபிடிக்கும் பணியில் உறவினர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது அந்த மாணவி செந்துறை பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் பள்ளிக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த மாணவியை அவரது ஆட்டோவில் ஏற்றி வந்து பள்ளியில் ஒப்படைத்தனர். அப்போது அந்த மாணவியிடம் விசாரித்த போது தேர்வில் குறைவான மதிப்பெண் வாங்கியதால் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்பதால் மாயமாகியதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த மாணவிக்கு அறிவுரை வழங்கி பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர். இதனால் செந்துறை பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

    • 10-ம் வகுப்பு மாணவி மாயமானார்
    • வீட்டில் இருந்து வெளியே சென்றவர்

    திருச்சி:

    திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள பாண்டியன் தெருவில் வசித்து வருபவர் ஜமால் முஹம்மது (வயது58). அவரது மகள் மெஹராஜ் பானு (18) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ஜமால் முகமது விமான நிலைய காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்த தொழிலாளி மாயமானார்
    • வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை

    கரூர்

    கரூர் மாவட்டம், வேலாயுதம்பா ளையம், வேலுார் சாலையை சேர்ந் தவர் ரவி (வயது 52), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நட்பு வட்டாரங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி மகேஸ்வரி வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரவியை யாராவது கடத்தியிருப்பார்களா? அல்லது வேறு எங்கும் சென்றிருப்பாரா என  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×