என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quarry"

    • பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது
    • யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை புத்தேரி காட்டுப்பகுதியில் உபயோகத்தில் இல்லாத கல்குவாரி ஒன்று உள்ளது. இதன் கரையில் மிளா ஒன்று இறந்து கிடந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்து கூந்தன்குளம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மிளாவை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மிளாவின் கழுத்து பகுதியில் காயம் இருக்கிறது. இதனால் தெற்கு கருங்குளம் பகுதி மலையில் இருந்து மேய்ச்சலுக்காக அங்குள்ள காட்டுப் பகுதிக்கு சென்றபோது மிளாக்கள் சண்டையிட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அந்த பகுதியில் விவசாய நிலங்களுக்குள் மிளா அடிக்கடி புகுந்து நாசப்படுத்தி வருவதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இதனால் யாரேனும் மிளாவை கொன்றிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • திருவாடானை அருகே குவாரியில் அதிக மணல் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகாம்பையூர் அருகே அரசு மணல் குவாரி அமைத்து அதிக அளவு மணல் எடுத்து வருவதை தடுத்து நிறுத்திடக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு ராமநாதபுரம் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அக்கீம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்தானதாஸ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜீவா, திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தனர். மண்டபம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட அமைப்பு செயலாளர் சதாம் ராஜா, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட தொழிற்சங்க தலைவர் லட்சுமணன், மாவட்ட உழவர் பேரியக்க தலைவர் கணேசன், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோசம், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து, பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் கர்ண மகாராஜா, திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் மக்தும், திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கீழக்கரை நகரத் தலைவர் அப்துல் லத்தீப், ராமநாதபுரம் நகர செயலாளர் இப்ராஹிம், நகர தலைவர் ராஜா ரபிக், மண்டபம் ஒன்றிய மாணவர் சங்க செயலாளர் களஞ்சிய ராஜா, ராமேசுவரம் நகர செயலாளர் முருகன், மாவட்ட விவசாய அணி மாயழகு மற்றும் ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.

    மாவட்ட மாணவர் சங்க தலைவர் பாலகுமார் நன்றி கூறினார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

    • சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.
    • கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், அக்கரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் கடந்த சில நாட்களாக சவுடு மண்குவாரி இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த டிரைவர்களான பிரகாஷ் (வயது31), சூர்யா(வயது29) என்ற டிரைவர்கள் சவுடு எடுக்க குவாரிக்கு வந்தனர்.

    அப்பொழுது மண் ஏற்றுக் கொண்டு இரண்டு லாரிகளும் வெளியே வரும்போது இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவரை, ஒருவர் தள்ளிக் கொண்டனர். இதில், ஆத்திரம் அடைந்த சூர்யா தனது லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வந்து பிரகாஷை கழுத்தில் சரமாரியாக வெட்டினார்.

    இதில், துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரகாஷ் பலியானார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை கண்டு அருகில் இருந்த டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகொலை செய்யப்பட்ட பிரகாஷ் மீது லாரியை வழி மறித்து கொள்ளையடித்த வழக்கு பெரியபாளையம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதாவது பிரச்சனையா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்த கொலை சம்பவம் குறித்து பெரியபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    இதில், சூர்யாவுக்கும் பிரகாசுக்கும் இடையே பணம் மற்றும் நகைகள் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், குற்றவாளி சூர்யாவின் பூர்வீகம் கிருஷ்ணாபுரம் கண்டிகை என்றும் பிரகாசுடன் ஏற்பட்ட பழக்கத்தால் சூர்யா தனது குடும்பத்துடன் ஆத்துப்பாக்கம் கிராமத்துக்கு குடி பெயர்ந்து தெரியவந்துள்ளது. இந்தக் கொலை சம்பவத்தால் அக்கரைப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது பிரச்சினையால் இப்பகுதியில் பதட்டமும், பரபரப்பு நிலவுகிறது.

    • பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    கீழஉப்பிலிக்குண்டு நடந்த குவாரி வெடி விபத்தின் அதிர்வு அருகில் உள்ள கிராமங்களில் உணரப்பட்டது.வெடி விபத்து நடந்தபோது லேசான அதிர்வு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ன நடந்தது? என பொதுமக்களால் உடனடியாக உணர முடியவில்லை. அந்த கிராமத்தில் மட்டும் பல வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.

    மேலும் ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடந்த வெடி விபத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டதில் இருந்து சில நிமிடம் காது கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    வெடி விபத்து நடந்த குவாரியில் தினமும் இரவு பகலாக வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் இதனால் நாங்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே இந்த குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    • படுகாயமடைந்த ஞானசேகரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகிறார்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனுசாமி மகன் ஞானசேகரன் (வயது 32) சமூக ஆர்வலர். இவர் அந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளின் முறைகேடுகள் பற்றி கலெக்டர் மற்றும் ஊடகங்களில் புகார் தெரிவித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பாக ஞானசேகரன் செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ராமையன்பட்டி அயோத்தி என்பவரின் கல்குவாரியில் வேலை பார்க்கும் முருகன் என்பவர் இரும்பு கம்பியால் ஞானசேகரனை சரமரியாக தாக்கியதுடன், ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

    ஞானசேகரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே, முருகன் தப்பி ஓடி விட்டார். தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த ஞானசேகரன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து முருகனை வலைவீசி தேடி வருகிறார்.

    • தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.
    • திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:-

    ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் இயற்கை வளங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தை திமுக அரசு பாலைவனமாக மாற்றி வருகிறது.

    மேலும் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவது தொடர்பான அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நேரத்தில்,13 மணல் குவாரிகளை திறப்பதற்கு திமுக அரசு ஏன் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். இந்த திட்டத்தை கைவிடாவிட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.

    இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவது குறித்து எந்த கவலையும் இல்லாமல், கமிஷன், கலெக்ஷன், கரப்ஷனை மட்டுமே நோக்கமாகக் கொண்டு திமுக அரசு செயல்பட்டுக் வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடையம் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    கடையம்:

    அம்பை அருகே உள்ள அனந்தநாடார்பட்டி, பெரியசாமி பட்டி, இடை கால், பனையன்குறிச்சி, கடையம் அருகே உள்ள நாலாங்கட்டளை பகுதி களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இன்று காலை நாலாங்கட்டளையில் உள்ள கல்குவாரி முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    கடையம் ஒன்றிய ச.ம.க. செயலாளர் பெரியசாமி, ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்து துணைத்தலைவர் சுதன் உள்பட 8-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    கல்குவாரிகளில் வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படுவதால் சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்திற்கு கற்கள் தூக்கி வீசப்படுகிறது. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதிக்கப்படு கிறார்கள்.

    மேலும் குவாரி பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளதால் விவசாயிகளும் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என கூறினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பாக்குடி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
    ×