என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "FESTIVAL"

    • செங்காட்டுப்பட்டியில் நூலக வார விழா நடைபெற்றது
    • வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் செங்காட்டுப்பட்டி கிளை நூலக வாசகர் வட்டம் நடத்திய, 55- வது தேசிய நூலக வார விழா, செங்காட்டுப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் புத்தக கண்காட்சி மற்றும் ஊக்குவிப்பு பயிற்சி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    தமிழ் ஆசிரியர் அனந்தராமன் வரவேற்றார், பள்ளி தலைமை ஆசிரியை கற்பகம் தலைமை ஏற்று புத்தக கண்காட்சி திறந்து வைத்தார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பாஸ்கர் சிறப்புரை வழங்கினார். வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் ஏற்புரை வழங்கினார். கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேராசிரியர் வைரமணி வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் பள்ளியில் இருபால் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர் வாசகர் வட்ட தலைவர் ராமராஜன், பள்ளி மாணவ மாணவிகள், ஊர்முக்கிய பிரமுகர்கள் செல்லமுத்து, பெரியசாமி செல்வராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் செங்காட்டுப்பட்டி கிளை நூலகர் கார்த்திகேயனிடம் ரூ.1000/- வழங்கி புதிய புரவலராக சிலம்பரசன் இணைந்தார். இறுதியாக கீரம்பூர் கிளை நூலகர் நூர் அஹமத் நன்றி கூறினார்.

    • தானியங்களின் முக்கியத்துவம் குறித்து நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
    • 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை, எதிர்வரும் 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்து உள்ளது. இதையடுத்து தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும் பயன்பாட்டினை அதிக ரிக்கவும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கொந்தளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

    தலைமை ஆசிரியர் சந்திரசேகர் விழாவை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு உணவு திருவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட சிறுதானியங்களை பார்த்து அதன் பயன்கள் பற்றி கேட்டறிந்தனர். மேலும் தங்களது அன்றாட வாழ்வில் சிறுதானியங்களை பயன்படுத்துவது என மாணவ, மாணவிகள் உறுதி எடுத்துக் கொண்டனர். விழாவில் அறிவியல் ஆசிரியர்கள் கார்த்திகேயன், பூங்கொடி, சத்துணவு அமைப்பாளர் கலைச்செல்வி, ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாண விகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகை மாத இசை விழா நடைபெற உள்ளது
    • வருகிற 26 ம் தேதி நடக்கிறது

    திருச்சி:

    பாரதிய வித்யா பவன், பெங்களூரு இன்போசிஸ் பவுண்டேஷன் சார்பில் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் கார்த்திகை மாத இசை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

    இதன் முதல் நாள் நிகழ்வாக வருகிற 26 ம் தேதி( சனிக்கிழமை )மாலை 5:30 மணிக்கு ரெங்கவிலாஸ் மண்டபத்தில் புல்லாங்குழல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் புல்லாங்குழ வித்வான் குழல் இசை மாமணி அனிருத்,வயலின் வித்துவான் ஸ்ரீரங்கம் ஜெ.ஆனந்த், மிருதங்க வித்வான் ஜெ. பாலாஜி ஆகியோர் கலந்துகொண்டு இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.

    கார்த்திகை மாதம் தொடங்கி விட்டதால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து விட்டது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து ரங்கநாதர் கோவிலில் கார்த்திகை மாத இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை விழா வருகிற 26 ம் தேதி மற்றும் 27 ம் தேதி ஆகிய விடுமுறை தினங்களில் நடத்தப்படுகிறது. ஆகவே திரளான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க படுகிறது.

    • இந்திய அரசியலமைப்பு தின விழா நடந்தது
    • வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நேருயுவகேந்திரா சார்பில் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் இந்திய அரசிலமைப்பு தினம் 2022 விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் மீனாம்பாள் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்டான்லி செல்லகுமார், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் (பொ) துரைமுருகன், சைபர் கிரைம் (தொழில்நுட்பம்) எஸ்ஐ சிவமீனா. வக்கீல் நிதிகள் அறக்கட்டளை இயக்குநர் ராமச்சந்திரன், மாவட்ட வள அலுவலர் நல்லுசாமி தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜபதி, இயற்கை மருத்துவர் வேல்முருகன் ஆகியோர் பேசினர். பின்னர் அரசியல் அமைப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக நேருயுவகேந்திரா மாவட்ட இளைஞர் அலுவலர் கீர்த்தனா வரவேற்றார். கணக்காளர் தமிழரசன் நன்றி கூறினார்.

    • சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா நடந்தது
    • அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள்

    பெரம்பலூர்:

    மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள்நலத்திட்டங்கள் என்ற தலைப்பில் பெரம்பலூரில் 3 நாட்கள் நடைபெற்ற சிறப்பு புகைப்படக்கண்காட்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. திருச்சி மத்திய மக்கள் தொடர்பக கள விளம்பர அலுவலர் தேவிபத்மநாபன், வக்கீல் காமராஜ் ஆகியோர் பேசினார். பின்னர் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. இக்கண்காட்சியில் அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. மேலும் ஒருங்கிணைந்தகுழந்தைகள் வளர்ச்சித் திட்டம், இந்திய அஞ்சல் துறை, சித்தா, மாவட்ட சமூக நலத்துறை, தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் சார்பில் அரங்கம் அமைக்கப்பட்டு திட்டங்கள், நல திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நாட்டுப்புற இன்னிசை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்த திரைப்படம் ஒளிப்பரப்பட்டது. இதில் இக்கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பார்வையிட்டு பயனடைந்தனர். கள விளம்பர உதவியாளர் அருண்குமார் வரவேற்றார், முடிவில் கள விளம்பர உதவியாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

    • தேசிய மருந்தியல் வார விழா நடந்தது
    • போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் மாவட்ட பார்மசி அன்ட் ஸ்டாகிஸ்ட் அசோசியேஷன் சார்பில் 61-வது தேசிய மருந்தியல் வார விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மருந்து கட்டுப்பாட்டு துறை திருச்சி மண்டல உதவி இயக்குநர் அதியமான், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் ஸ்ரீதேவி ஆகியோர் பேசுகையில், போதை பொருள் ஒழிப்பு மற்றும் புதிய சட்டம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அனைத்தையும் விதிகளுக்கு உட்பட்டு வியாபாரம் செய்ய வேண்டும், மீறினால் கடுமையான தண்டனைக்குள்ளாவீர்கள் என தெரிவித்தனர். இதில் மருந்து வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக செயலாளர் சரவணன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.

    • கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

    திருச்சி:

    திருச்சி பொன்மலையிலுள்ள மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் விளையாட்டு தின விழா நடைபெற்றது.

    பள்ளி முதல்வர் நவல் கிஷோர் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு, விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருச்சி கோட்ட ரயில்வே முதுநிலை அலுவலர் (பர்சனல்) சி.சுதாகரன், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும், அண்மையில் ஆக்ரா மற்றும் பரிதாபாத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் ஜூடோ விளையாட்டில் தங்கம் வென்ற 10-ம் வகுப்பு மாணவர் கனிஷ் கண்ணா, துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்ற 10-ம் வகுப்பு மாணவி பாஸிலா சாரா, வில் வித்தையில் தங்கம் வென்ற 8-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா, 100 மீ தடை தாண்டுதலில் தங்கம் வென்ற 6-ம் வகுப்பு மாணவர் ரிபு தமன், துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற 7-ம் வகுப்பு மாணவர் குரு சபரீஷ் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் ஆன்டோ ஐசக் ஆண்டு விளையாட்டு அறிக்கை வாசித்தார். பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது.
    • அமைச்சர் பெயர் பலகையை திறந்து வைத்தார்

    அரியலூர்:

    அரியலூரில் தமிழ்நாடு நகராட்சிகள் அனைத்து பணியாளர்கள் முன்னேற்ற சங்க தொடக்க விழா நடைபெற்றது. அரியலூர் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சங்க கொடியை ஏற்றி வைத்து, பெயர் பலகையை திறந்து வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் கே.கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சக்திவேல், செயலர் ஆர்.சீனிவாசன், துணைச் செயலர் கே.வில்லவன், பொருளாளர் ஓ.சுகுமாறன், கௌரவத் தலைவர் முருகேசன், சங்க காப்பாளர் கே.அருண்ராஜா, சட்ட ஆலோசகர் எஸ்.விஜி மற்றும் திமுக பொதுக் குழு உறுப்பினர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    • மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
    • வன உயிரின வார விழா போட்டிகளில் வெற்றி பெற்ற

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறையின் சார்பில், வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வழங்கினார்.

    தமிழ்நாடு வனத்துறையின் மூலம் அக்டோபர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும் 'வன உயிரின வார விழா" முன்னிட்டு 2022-ஆம் ஆண்டிற்கான வன உயிரின வார விழா போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் களுக்கு இடையே நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து அதிகளவு மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்டனர். இப்போட்டியானது மாணவர்கள் வனத்துறை தொடர்பான புரிந்துணர் களையும், அவர் களின் பங்கெடுப்புகள் குறித்தும் ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு இன்றையதினம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் பிரபா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட கல்வி ஆய்வாளர்கள் குரு.மாரிமுத்து, சாலைசெந்தில், புதுக்கோட்டை வனக்கோட்ட அனைத்து வனச்சரக அலுவலர்கள், வனவர்கள், வனக்காப்பாளர் கள் மற்றும் வன ஊழியர்கள் கலந்துகொண்டனர். 

    • அன்னவாசல் குறிஞ்சி இல்ல காதணி விழா நடைபெற உள்ளது
    • முன்னாள் அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்பு

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அன்னவாசல் குறிஞ்சி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி ஆர். சாலை மதுரம், அன்னவாசல் பேரூராட்சி தலைவர் சாலை பொன்னம்மா மதுரம் தம்பதியரின் மகன் செல்வன் சாலை கோகுலனின் காதணி விழா அன்னவாசல் அம்மா திடலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறுகிறது.

    விழாவில் அன்னவாசல் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வி.என். முத்தமிழ்செல்வன் வரவேற்று பேசுகிறார். இதில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், மாவட்ட கழக (வடக்கு) செயலாளரும், விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்குகிறார். தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பி.கே. வைரமுத்து, வடக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வி. ராமசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சின்னத்தம்பி, புதுக்கோட்டை கம்பன் கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வி.ஆர். கார்த்திக் தொண்டைமான், ஆர்.நெடுஞ்செழியன், வெங்கடேஸ்வரா கல்வி நிறுவன நிர்வாகி கவிஞர் தங்கம் மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மதர் தெரசா கல்வி நிறுவன தாளாளர் ஆர்.சி.உதயகுமார், அன்னவாசல் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சாம்பசிவம், மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர். சுப்பையா, பாசறை ஒன்றிய செயலாளர் கே. கே. பாலசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வி.டி.ஆர். காந்தி ஆகியோர் முன்னிலை வைக்கிறார்கள்.

    மேலும் பல்வேறு நிலைகளில் உள்ள கட்சியின் நிர்வாகிகள், தொழிலதிபர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை குறிஞ்சி ஆர். சாலை மதுரம், சாலை பொன்னம்மா மதுரம் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.

    • அரசு பள்ளியில் அரசியலமைப்பு வார விழா நடந்தது
    • மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அரியலூர்:

    அரசியலமைப்பு வார விழாவை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார. ஊராட்சித் தலைவர் அம்பிகாமாரிமுத்து துணைத் தலைவர் பழனியம்மாள், மேலாண்மை குழுத் தலைவர் அகிலா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது.
    • இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.2.60 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் சேலம், புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகிறது. இந்த விழா கடந்த நவம்பர் 20-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 11 நாள்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று புத்தகத் திருவிழா வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்புத்தகக் கண்காட்சி தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டார்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

    சேலம் புத்தகத் திருவிழாவினை இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர். இம்மாபெரும் புத்தகத் திருவிழாவில் புத்தக விற்பனை ரூ.2.60 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் படைப்பாளர்களின் புத்தகங்கள் ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    விழாவில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், புத்தகத் திருவிழா நடைபெறும் நாள்களில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மேலும், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. 

    ×