என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாஜக"
- 2019-லும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர்.
- ஆனால் அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார்.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. மேலும், பல மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் ஏராளமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் இந்திய மக்களும், மகாராஷ்டிரா மக்களும் மீண்டும் பிரதமரின் கொள்கையை அங்கீகரிக்கிறோம் என்ற செய்தியை நாடு முழுதும் அனுப்பி உள்ளனர்.
இதற்காக நான் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்ற மாநில மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
சமூகத்தைப் பிளவுபடுத்தியவர்கள் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற செய்தியையும் இந்த தேர்தல் அளித்துள்ளது.
சாதி, அரசியல் சாசனம், மதம் ஆகியவற்றின் பெயரால் மக்களைப் பிரித்து அதிகாரத்தைப் பெறுவோம் என்ற மாயை இந்தியா கூட்டணிக்கு சில காலமாகவே இருந்தது.
2019-லும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் விரும்பினர். அதிகாரத்திற்காக உத்தவ் தாக்கரே நம்மை ஏமாற்றினார்.
ஆனால் பிரதமர் மோடி, மஹாயுதி, பா.ஜ.க. மற்றும் சிவசேனா ஆகிய கட்சிக்கு ஆதரவாக உள்ளதாக மகாராஷ்டிரா மக்கள் காட்டி உள்ளனர் என தெரிவித்தார்.
- கேப்டன் தமிழ்ச்செல்வன் 7895 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
- தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் தமிழ்ச்செல்வன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 231 இடங்களில் முன்னிலை பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிட்ட சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை விட 7895 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.
சயான் கோலிவாடா தொகுதியில் 2014, 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான கேப்டன் தமிழ்ச்செல்வன் தற்போது தொடர்ந்து 3 ஆவது முறையாக வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ச்செல்வன் மகாராஷ்டிராவில் வார்டு கவுன்சிலராக இருந்து எம்.எல்.ஏ.வானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
- மோடியின் எடிட் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்தின் Tiger Ka Hukum பாடலை பயன்படுத்தி மோடியின் எடிட் வீடியோவை வெளியிட்ட பாஜக
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
288 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவுக்கு கடந்த நவம்பர் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மகாயுதி [பாஜக - ஷிண்டே சிவசேனா - அஜித் பவார் என்சிபி] மற்றும் மகா விகாஸ் அகாதி [ காங்கிரஸ் - உத்தவ் சிவசேனா - சரத் பவார் என்சிபி] இடையே கடுமையான போட்டி நிலவியது.
பெரும்பான்மைக்கு 145 இடங்கள் வேண்டியிருக்கும் நிலையில் தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி பாஜக [ மகாயுதி] கூட்டணி 231 இடங்களில் முன்னிலை பெற்று மகாராஷ்டிராவில் ஆட்சியை தக்கவைத்துள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை ஒட்டி ஜெயிலர் படத்தின் Tiger Ka Hukum இந்தி பாடலை பயன்படுத்தி பிரதமர் மோடியின் எடிட் வீடியோவை பாஜக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
????? ???? मोदी जी... pic.twitter.com/yU026sBxru
— BJP (@BJP4India) November 23, 2024
- ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா செயல்பட்டார்
- மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்
ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி பெரும் வெற்றி முகத்தில் உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் இந்தியா கூட்டணி பெரும்பான்மையைத் தாண்டி விட்டது. இதன்மூம் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்பு முற்றிலும் பொய்துள்ளது.
பாஜக வியூகம்
இந்த தேர்தலில் ஹேமந்த் சோரன் ஆட்சிக்கு எதிராக பாஜக பெரிய அளவிலான தேர்தல் பிரசாரங்களை ஒருங்கிணைத்தது. பாஜகவின் முக்கிய பிரசாரமாக வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத், லேண்ட் ஜிகாத் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹிமந்தா பிஸ்வா
பிரதமர் மோடி முதல் யோகி ஆதித்யநாத் வரை பாதேங்கே தோ கதேங்கே [ஒன்றாக இருந்தால் வாழ்வோம் - பிரித்து இருந்தால் வெட்டப்படுவோம்] என்ற இந்துக்களை முன்னிறுத்தி கோஷம் எழுப்பினர். ஜார்க்கண்ட் தேர்தல் பிரசார பொறுப்பாளராக இருந்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா முஸ்லிகள் எண்ணிக்கை அதிகரிப்பு என்ற ஒற்றை குற்றச்சாட்டை அம்மாநிலத்தில் பாஜகவின் பிரதான தேர்தல் வியூகமாக வகுத்து செயல்பட்டார். ஜேஎம்எம் முக்கிய தலைவர் சம்பாய் சோரன் பாஜக பக்கம் சென்றதும் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
ஹேம்ந்த் சோரன்
ஆனால் பாஜக கட்டமைக்கும் இந்த வியூகத்துக்கு எதிராக ஆளும் ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பிரசாரத்தை மேற்கொண்டது.
நில முறைகேடு தொடர்பான 2 வருட பழைய வழக்கில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் 6 மாதம் கழித்து விடுதலையானார். இடைப்பட்ட காலத்தில் அவரது மனைவி கல்பனா சோரன் கட்சியை வலுவோடு வைத்திருப்பதில் முக்கிய பங்காற்றினார். இந்த தேர்தலில் பாஜக ஜார்கண்ட் மக்களிடையே தனது பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்துவதாகச் சோரன் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாஜகவின் வியூகங்களை உடைத்து ஹேமந்த் சோரனின் கட்சி தேர்தல் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் பாஜக முன்னிலையிலிருந்த நிலையில் சட்டென மாறிய நிலவரம் இந்தியா கூட்டணியை அபார வெற்றியை நோக்கி இட்டுச் சென்றுள்ளது.
How's the josh?
மொத்தம் உள்ள 81 இடங்களில் இந்தியா கூட்டணி 57 இடங்களிலும், என்டிஏ கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மாலை நிலவரம் இந்தியா கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தி உள்ளது.இதை கொண்டாடும் விதமாக ஜேஎம்எம்கட்சி கட்சி "How's the josh?" என்ற கேப்ஷனுடன் ஹேமந்த் சோரன் படத்தை பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளது.
How's the Josh? pic.twitter.com/uwGxOv46NV
— Jharkhand Mukti Morcha (@JmmJharkhand) November 23, 2024
"How's the josh?" என்பது ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வெற்றி சொல்லாகப் பார்க்கப்படுகிறது.கடந்த 2019 ஆம் ஆண்டு பாலிவுட் வெளியான URI படத்தின் மூலம் இந்த சொல் டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. ஜார்க்கண்ட் என்றும் ஜேஎம்எம் கோட்டை என்பதை நிரூபித்ததாக அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
- மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளையும் தாண்டி பாஜக முன்னிலை பெற்றதால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவில் பலம் பொருந்திய மாநிலம் மகாராஷ்டிரா. சின்ன இந்தியா என்றே சொல்லலாம். பலதரப்பட்ட மக்களும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள மக்களும் கணிசமான மக்கள்தொகையோடு வாழக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா. அதனால் பரவலாக பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி சரித்திர வெற்றி.
ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அது நிருபிக்கப்பட்டு உள்ளது. சில நேரங்களில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும்போது கூட அது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிதான் அந்த மக்களிடம் எடுபட்டு இருக்கும்.
ஹேமந்த் சோரன் ஏதோ தேர்தலுக்காக கைது செய்யப்பட்டது போல கூறுவது தவறு. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. குற்றம் நிருபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். குறைத்து மதிப்பிடவில்லை.
உண்மையிலேயே பாஜக கட்சி போன தடவை இருந்ததைவிட தற்போது ஜார்க்கண்டில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது. 2 மாநிலங்களிலுமே மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை.
இன்று யாராலும் வெல்ல முடியாதவராக பாரத பிரதமர் இருக்கிறார் என்பதையும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது என்று கூறினார்.
- காலை 8 மணிக்கு 288 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
- தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
மொத்தம் 9.70 கோடி போ் வாக்களிக்க தகுதி பெற்ற இத்தோ்தலில் 66.05 சதவீத வாக்குகள் பதிவானது. கடந்த 1995, சட்டமன்ற தோ்தலுக்கு பிறகு அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவாகும்.
ஆளும் 'மகாயுதி' கூட்டணியில் பா.ஜ.க. 149, முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 81, துணை முதல்-மந்திரி அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளில் போட்டியிட்டன.
எதிா்க்கட்சிகளின் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ் தாக்கரே) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) 86 தொகுதிகளில் களம்கண்டன. இது தவிர, பகுஜன் சமாஜ் கட்சி 237 தொகுதிகளில் போட்டியிட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் பல அரசியல் மாற்றங்களைக் கண்ட மாநிலம் என்பதால், தற்போதைய சட்டமன்ற தோ்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர் பாா்க்கப்பட்டது. கருத்து கணிப்பு முடிவுகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறி இருந்தது.
அதன்படி, இன்று வாக்கு எண்ணிக்கை கருத்து கணிப்பு முடிவுகளை உறுதிப்படுத்துவது போல் அமைந்தன. காலை 8 மணிக்கு 288 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
தொடக்கத்திலேயே அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வந்தன. தொடர்ந்து பெரும்பாலான தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலை பெற தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 159 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிந்து இருந்தது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலே மிகப்பெரிய சதி என்று உத்தவ் தாக்கரே சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது:- இந்த தேர்தலின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவு மக்களின் தீர்ப்பு அல்ல. ஷிண்டே அணியின் எல்லா எம்.எல்.ஏ.க்களும் வெற்றி பெற்றது எப்படி? ஒட்டு மொத்த அரசு இயந்திரங்களையும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார்கள். மோடி, அமித்ஷா, அதானி கூட்டணி வெற்றி பெற்றதாக சஞ்சய் ராவத் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
#WATCH | As Mahayuti has crossed halfway mark in Maharashtra, Shiv Sena UBT leader Sanjay Raut says, "They have done some 'gadbad', they have stolen some of our seats...This cannot be the public's decision. even the public does not agree with these results. Once the results are… pic.twitter.com/Qxx6a0mKsW
— ANI (@ANI) November 23, 2024
- நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.
- பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிர மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஆளும் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா [ஜேஎம்எம்] மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 81 இடங்களை கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்துக்குக் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து முடிந்தது.
முன்னிலை நிலவரம்
பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில் ஜேஎம்எம் இந்தியா கூட்டணி 51 இடங்களிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி 28 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பிற கட்சிகள் 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
திடீர் மாற்றம்
முன்னதாக பாஜகவின் என்டிஏ 41 இடங்கள், இந்தியா கூட்டணி 32 இடங்கள் முன்னிலை என்று இருந்த நிலையில் திடீரென டிரண்ட் மாறி இந்தியா கூட்டணி பெரும்பாண்மை இடங்களில் முன்னிலைக்கு வந்துள்ளது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கணிப்பு
ஜார்க்கண்டில் நியூஸ்18 வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி பா.ஜ.க. கூட்டணி 47 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களிலும், மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
என்டிடிவி வெளியிட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் பா.ஜ.க. கூட்டணி 44 முதல் 53 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 37 இடங்களிலும், மற்றவை 5 முதல் 9 இடங்களிலும் வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
- பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,02,849 வாக்குகள் பெற்றுள்ளார்.
கேரளாவின் வயநாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தெட் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த செவ்வாய்கிழமை அன்று இடைத்தேர்தல் நடந்தது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா களமிறங்கி உள்ளார். முதல் முறையாக தேர்தல் அரசியலுக்குள் நுழைந்துள்ள அவர் வெற்றிக்கனியை பறிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் நிலவி வருகிறது.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். அவர் காலை 9.45 மணி நிலவரப்படி 51,930 வாக்குகளை பெற்றார். அதன்பின்பு பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியின் விளம்பில் பிரியங்கா காந்தி உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி 5,57,451 வாக்குகளை பிரியங்கா காந்தி பெற்றுளார். அவர் கிட்டத்தட்ட 3,68,319 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சத்யன் மோகேரி 1,89,132 வாக்குகளும், பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் 1,02,849 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
- ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக வினோத் தாவ்டே மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- தன்மீது தவறாக குற்றம்சாட்டியதற்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்களுக்கு பா.ஜ.க. தேசிய பொதுச்செயலர் வினோத் தாவ்டே கடந்த 19-ம் தேதி பண விநியோகம் செய்தார் என பகுஜன் விகாஸ் அகாதி குற்றம்சாட்டியது.
இதுதொடர்பாக அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்த வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. இதனை வைத்து ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து இருந்தார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே ஆகியோருக்கு வினோத் தாவ்டே வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், என் மீதான குற்றச்சாட்டு பொய். ஆதாரமற்றது. தவறான நோக்கத்துடன் சுமத்தப்பட்டது. பணம் கொடுத்த விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது கிரிமினல் நடவடிக்கையை தொடர நேரிடும் என தெரிவித்துள்ளார்.
- ப. சிதம்பரம் கையெழுத்திட்டதை கார்கே மறந்து விட்டார்போலும்.
- இரட்டை என்ஜின் NDA அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்ட பின்னர் அங்கு மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த வாரம் முதலே அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படை திணறி வருகிறது. மத்தியிலிருந்து கூடுதலாக ஆயுதக் காவல் படையினர் மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் பாஜக கலவரத்தையே விரும்புவதாக விமர்சித்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கார்கேவுக்கு பாஜக தலைவர் ஜே.பி. நட்டா மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், 20 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளூர் பிரச்சனைகளை கையாள்வதில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மணிப்பூர் இன்னமும் மீளவில்லை.
ஆனால் மத்திய மாநில பாஜக அரசு மணிப்பூர் வன்முறை தொடங்கியது முதல் நிலைமையை கட்டுப்படுத்தவும், மக்களை பாதுகாக்கவும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு போராளிகளின் சட்டவிரோத குடியேற்றத்தைக் காங்கிரஸ் அரசு சட்டப்பூர்வமாக்கியது. இதற்கான ஒப்பந்தங்களில் அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கையெழுத்திட்டதை கார்கே மறந்து விட்டார்போலும்.
இந்த அறியப்பட்ட போராளித் தலைவர்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாட்டிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். உங்கள் ஆட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக தோல்வியே அமைதியை அழித்து, மணிப்பூரைப் பின்னோக்கி தள்ளியுள்ளது.
அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட வேண்டும் என்று போராளிக் குழுக்கள் முயல்வதற்கு இதுவே காரணம். காங்கிரஸைப் போலல்லாமல், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இதை எந்த வகையிலும் அனுமதிக்காது.
கார்கேவின் குற்றச்சாட்டுத் தவறான, பொய்யான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஒன்றாகும் மோடி அரசாங்கத்தின் கீழ் பொருளாதாரம், பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் வடகிழக்கு பகுதி முழுமையான மாற்றத்தைக் கண்டுள்ளது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பொய்யான வாக்குறுதிகளை புறக்கணித்து இரட்டை என்ஜின் NDA அரசாங்கங்களின் ஸ்திரத்தன்மையின் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர்.
ஆனால் இந்த முன்னேற்றங்களைப் புறக்கணித்து, நீங்களும் உங்கள் கட்சியும் வடக்கு கிழக்கையும் அதன் மக்களையும் அரசியல் லாபம் ஈட்டவும், கேவலமான அரசியலுக்கும் பயன்படுத்துகிறீர்கள் என்று விமர்சித்துள்ளார். இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கார்கே, நட்டாவின் கடிதம் முழுக்க முழுக்க பொய்களில் நிறைந்தது என்று தெரிவித்துள்ளார்.
- நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்து உள்ளார்.
- தேர்தல் வரும்போதுதான் அணிகள் மாறும். முடிவுகளும் மாறும்.
சென்னை:
பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
நாட்டை யார் ஆண்டால் நல்லது. யார் ஆண்டால் நல்லது செய்வார்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதனால் தான் தொடர்ந்து பிரதமர் மோடியை தேர்வு செய்கிறார்கள்.
தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை மனதில் கொண்டு காங்கிரஸ் மேற்கொண்ட தவறான முயற்சிகள் நாட்டில் பிரச்சனைகளுக்குத்தான் காரணமாக அமைந்தது.
மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடியை விமர்சித்தார்கள். ஆனால் அங்கு பிரச்சனைக்கு காரணமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ப.சிதம்பரம் எடுத்த முடிவுகள்தான் என்பதை காங்கிரஸ் கட்சியினரே ஒத்துக்கொண்டுள்ளார்கள். இனி மணிப்பூர் விவகாரம் பற்றி பேசும் தகுதியை காங்கிரஸ் இழந்துவிட்டது.
நாளை வெளிவரப் போகும் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலிலும் பாரதிய ஜனதாவே வெல்லும். 2026-ல் நடைபெற போகும் தமிழக சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி எப்படி அமையும் என்பதை டெல்லி மேலிடம் முடிவு செய்யும்.
எப்படி கூட்டணி அமைய வேண்டும் என்பது எங்களைவிட அவர்களுக்கு நன்றாக தெரியும். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வகுக்கும் வியூகம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுக்கும்.
நடிகர் விஜய் இப்போது தான் அரசியலுக்கு வந்து உள்ளார். தி.மு.க. எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். அப்படியானால் அதற்கான வியூகம் என்ன என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கு மேல் உள்ளன. இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் வரும்போதுதான் அணிகள் மாறும். முடிவுகளும் மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை.
- வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ரமணி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மற்றும் வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தஞ்சையில் இன்று வகுப்பறையில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்டார். ஓசூரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இவை திமுக ஆட்சியில் தமிழகத்தில் நிலவும் பேரழிவு சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை பிரதிபலிக்கிறது.
தமிழகத்தை சட்டமற்ற காடாக மாற்றியதற்கு மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். பிரச்சினைகளைத் திசைதிருப்புவதை விட இந்த அரசு சிறிதளவு முயற்சி செய்தால், இதுபோன்ற சட்டமீறல்களை நாம் காண முடியாது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்