என் மலர்
நீங்கள் தேடியது "tag 96604"
ஆய்வின்படி, இந்தியாவில் 10-14 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு 83 சதவீதமாக உள்ளது. இது சர்வதேச சராசரியான 76 சதவீதத்தை விட 7 சதவீதம் ஆகும் அதிகம்.
இது இந்தியாவில் குழந்தைகளை ஆன்லைன் ஆபாயங்களுக்கு அதிகமாக உட்படுத்த வழிவகுத்தது.மேலும், சில 22 சதவீத இந்திய குழந்தைகள் இணைய அபாயத்தை அனுபவித்துள்ளனர், இது உலகளாவிய சராசரியான 17 சதவீதத்தை விட 5 சதவீதம் அதிகம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகளவில் 90 சத்வீத பெற்றோர்கள் ஆன்லைனில் பாதுகாவலர்களாக தங்கள் பங்கை ஒப்புகொண்டு உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களில் 56 சதவீதம் பேர் தங்கள் சொந்த ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பார்ஸ்வேர்டையும் 42 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளின் ஸ்மார்ட்போன்களைப் பாதுகாக்க பாஸ்வேர்டையும் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியப் பெற்றோர்களிடையே இணைய அச்சுறுத்தல் மற்றும் சமூக ஊடகங்களில் துஷ்பிரயோகம் பற்றிய கவலை 47 சதவீதமாக உள்ளது, இது உலகளாவிய சராசரியான 57 சதவீதத்தை விட 10 சத்வீதம் குறைவாகும்.
மேலும், ஒரு நபரின் உண்மையான அடையாளம் தெரியாமல் தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை, உலகெங்கிலும் உள்ள மற்ற குழந்தைகளைக் காட்டிலும் 11 சதவீதம் அதிகம்
என ஆய்வில் தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து மெக்காஃபி மார்க்கெட்டிங் துணைத் தலைவர் சச்சின் பூரி கூறியதாவது:-
இந்தியாவில் உள்ள குழந்தைகள் மொபைல் முதிர்ச்சியை அடையும் இளையவர்களில் ஒன்றாகவும், ஆன்லைன் அபாயங்களை அதிகம் வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த ஆராய்ச்சியின் மூலம், அவர்களது இணைக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயனுள்ள ஆன்லைன் பாதுகாவலர்களாக வெற்றி பெறுவதற்குத் தேவையான அறிவை பெற்றோருக்கு வழங்க முயற்சிக்கிறோம்" என்று கூறினார்.
வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதால் குறிப்பாக செல்போனில் தான் அதிகளவு நேரத்தை செலவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களின் கண்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
அதிக வெயில் காரணமாக வீட்டில் முடங்கிக்கிடக்கும் மாணவர்கள் அதிகநேரம் செல்போன் பார்ப்பதால் அவர்களுக்கு கண்களில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது கண்களை கசக்கினால் கண் எரிச்சல் வர வாய்ப்பு உள்ளது. மேலும் கண்களில் நீர்சத்து குறைவதால் அலர்ஜி ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளது. செல்போனை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்.
அத்துடன் கண்ணில் கட்டி உருவாகும். கண்களில் நீர்சத்து பிரச்சினையை சரிசெய்ய கண் சிமிட்டலை அதிகப்படுத்த வேண்டும். தண்ணீர் அதிகளவில் குடிக்கவேண்டும். கீரை, காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் மற்றும் மீன் போன்றவைகளை உணவில் சேர்த்து வரவேண்டும். முக்கியமாக கேரட், பப்பாளி, இனிப்பு பூசணிக்காய் போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல் டி.வி. அதிகநேரம் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மேலும் தற்போது பள்ளி மாணவர்கள் 4 முதல் 6 மணி நேரம் வரை கணினி முன்பு அமர்ந்து ஆன்லைன் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து கணினி பயன்படுத்துவதால் கண் வலி, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்க கணினி பயன்படுத்தும் பள்ளி மாணவர்கள் இருக்கையின் உயரமும், கணினியின் உயரமும் சமமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதேபோல் ஆன்லைன் வகுப்பை செல்போனில் பார்க்கும்போது சரியாக அமர்ந்து கொண்டு செல்போனை கையில் வைத்து கொண்டு பார்க்கலாம். படுத்துக்கொண்டு செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் செல்போன் பார்ப்பதை தவிப்பது நல்லது.
- வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்.
- வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போரூர்:
வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். அதே பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 3 வாலிபர்கள் திடீரென சந்தோஷின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக சுற்றிய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிச்சா என்கிற கிருஷ்ணகுமார் என்பதும் கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கி மேலாளர் சந்தோஷிடம் செல்போன் பறித்து இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து கிச்சாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவனது கூட்டாளிகள் 2 பேரை தேடி வருகின்றனர்.
மதுக்கூர்:
அதிராம்பட்டினம் பிலால் நகரை சேர்ந்தவர் முகமது ஹாரிஸ் (வயது 21). இவர் வாட்டாகுடி ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் அங்கு வந்து தூங்கி கொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை திருட முயற்சி செய்தபோது அவரை பிடித்து மதுக்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.
முகமது ஹாரிஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுரபீக் ராவுத்தரை கைது செய்தனர்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பிரிவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 35). தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று பெங்களூரில் இருந்து ரெயில் மூலம் கோவை வந்தார். ரெயில் போத்தனூர் வந்ததும் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை பார்த்தார்.
அப்போது செல்போன் மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ரெயிலில் இருந்து இறங்கி போத்தனூர் ரெயில்வே போலீசில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இதையடுத்து போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும் திருட்டு போன செல்போன் எண்ணை வைத்து கொள்ளையனை தேடி வந்தார். அப்போது செல்போன் எண் சிக்னலை வைத்து கொள்ளையனை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் விசாரணையில் அவர் திருப்பத்தூரை சேர்ந்த லோகேஷ் (45) என்பதும் சந்தோஷ்குமாரிடம் ரெயிலில் செல்போனை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லோகேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாகப்பட்டினம்:
நாகை சமத்துவபுரம் பாப்பாத் தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 43). இவரது மனைவி வெண்ணிலா (37). இவர்களது மகன் பரத் (20). கூலித் தொழிலாளி.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பரத், வீட்டுக்கு வந்தார். அப்போது தாய் வெண்ணிலா , செல்போனில் பேசி கொண்டிருந்தார். இதை பார்த்த பரத், இரவு நேரத்தில் யாரிடம் பேசி கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இதனால் தாய்- மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து வெண்ணிலா வாக்குவாதம் செய்து பேசிக்கொண்டே இருந்ததால் பரத் கடும் ஆத்திரம் அடைந்தார். இதனால் திடீரென வெண்ணிலாவை தாக்கினார். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகன் பரத்தை கைது செய்தனர்.
செல்போனில் பேசிய தாயை பெற்ற மகனே தாக்கி கொன்ற சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம், சாந்தி நகரை சேர்ந்தவர் லாவண்யா. தனியார் இணைய தள நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர், இரவு பணிக்கு செல்வதற்காக ஆதம்பாக்கம், மோகனபுரி தெருவில் காருக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென லாவண்யா வைத்திருந்த செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர்.
இதில் லாவண்யாவிடம் செல்போன் பறித்தது ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகரை சேர்ந்த சஞ்சய், பாலாஜி, விக்னேஷ் என்பது தெரிய வந்தது.
அவர்கள் 3 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். பிடிபட்டவர்களில் சஞ்சய் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்.
பாலாஜி கிண்டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். விக்னேஷ் என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக காத்திருக்கிறார்.
உல்லாச செலவு செய்ய அவர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதே போல் அவர்கள் வேறு எந்த இடங்களிலும் கைவரிசை காட்டி உள்ளனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதானவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி டிரைவர் செல்போன் பேசிக் கொண்டு இயக்கி வரப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர். அதேபோல் டிரைவர் செல்போன் பேசிக் கொண்டும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு வந்த சரக்கு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2 வாகனங்களுக்கும் தலா ரூ. 5,500 அபாரதம் விதிக்கப்பட்டது.
மேலும் அந்த வாகனங்களை இயக்கி கொண்டு செல்போன் பேசி வந்த 2 டிரைவர்களின் லைசென்ஸ் உரிமம் தற்காலிமாக 3 மாதத்திற்கு ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறுகையில், வாகன ஓட்டுநர்கள் கண்டிப்பாக போக்குவரத்து விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதனை மீறும் போது தான் விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டு டிரைவர்கள் வாகனங்களை இயக்ககூடாது. அவ்வாறு மீறி இயக்கினால் அவர்களது லைசென்ஸ் உரிமம் ரத்து செய்யப்படும். தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என்றார்.