என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 96791"

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தாநாள் விழாவை சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழே வருமாறு:-

    தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டங்களை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தாநாள் விழாவை சிறப்பாக கொண்டாடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளை இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்திட வேண்டும்.

    மதவாத நச்சு விதைகளை தூவிட எத்தனிக்கும், தேச விரோத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை பாதுகாக வேண்டும்.

    சமூக நீதி, மதநல்லிணக்கம் செழித்து சிறந்திருப்பதை பார்த்து பொறுத்துகொள்ள இயலாமல் சிலர் உள்ளனர். அவர்களிடமிருந்து தமிழகத்தை காக்க வேண்டும்.

    இவ்வாறு மாவட்ட பொதுச்செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
    • காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    சென்னை:

    தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பா.ஜனதா தலைவர் அண்ணாமலையை வயதில் இளையவராகவும், முன்னேறிய வகுப்பினரல்லாதவராகவும் இருப்பதால் வழக்குகள் எதுவும் போடாமல் விட்டு வைத்திருப்பதாக விமர்சித்து இருந்தார்.

    இதற்கு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்த வெற்று மிரட்டல்களால் எந்த பயனும் இல்லை. மாநிலங்களவைக்கு மீண்டும் சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்த உங்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. ஆதலால் சாதி வெறுப்பை விதைப்பதற்கு முயற்சி செய்து காலம் கடத்தி கொண்டிருக்கின்றீர்கள்.

    இரண்டு நாட்களில் இரண்டு லாக்-அப் மரணங்கள். காவல் நிலையத்துக்கு சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல்-அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    கடந்த ஒரு வருடத்தில் 7 லாக்-அப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா?

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.
    • திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை.

    சேலம்:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சேலம் வந்தார். அவருக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சேலம் மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் தங்கராஜ் இல்லத்திற்கு வருகை தந்து மணமக்கள் எபிநேசன்-பிரியங்கா ஆகியோரை வாழ்த்தினார்.

    பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகள் குறித்து கணிக்கும் அளவிற்கு நான் ஞானி அல்ல.

    இந்தியா வளர்ந்து வரும் நாடாக இருக்கும் நிலையில்,இதனை சீர்குலைக்கும் வகையில் சிலர் உருவாகி கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் மதத்தை பற்றி தேவையில்லாமல் பிரச்சினையை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவு செய்யாமல் இருந்தால் நல்லது.

    சென்னையில் போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற கைதி மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினருக்கு பல அழுத்தங்கள் இருப்பதால் உயரதிகாரிகள், அவர்களின் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து வகுப்புகள் எடுக்க வேண்டும்.

    திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது பெரிய குற்றச்சாட்டு சொல்லும் அளவிற்கு இல்லை. மின்தடை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து பிரச்சினைகள் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

    சமத்துவ மக்கள் கட்சியை வலிமைப்படுத்தும், சீர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பண அரசியலை ஒழித்தால் மட்டுமே இங்கு அரசியல் நடத்த முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகிவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு
    • திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் இன்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 8 ஆண்டுகளாக யாரும் நிறைவேற்றாத, நிறைவேற்ற முடியாது என்று கருதுகின்ற விஷயங்கள் பா.ஜ.க. அரசினால் நிறைவேற்றப்பட்டு உள்ளது. கொரோனாவிற்கு மத்திய அரசு தடுப்பூசி கண்டுபிடித்து 200 கோடி மக்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. உக்ரைன் நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 300 மாணவர்களை ஒரு கீறல் கூட இல்லாமல் மீட்டு வந்து உள்ளோம் என்று தமிழக முதல்- அமைச்சர் சொல்கிறார். இது ஒரு பொய்யான தகவல். ஏனென்றால் 4 மந்திரிகளை அண்டை நாடுகளில் அமர்த்தி 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு அழைத்து வந்து உள்ளது.

    தமிழக அரசில் ஊழல் மட்டுமே நடைபெற்று வருகின்றது. ஊழல் நடக்கும் போதே எங்கள் மாநில தலைவர் உடனடியாக பிடித்து விடுவதால் தமிழக அரசாங்கம் உடனடியாக பின்வாங்கி முடிவை மாற்றி வருகின்றது.

    நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் ஊழல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகின்றது. அதிலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த நிலையங்களில் நெல் விதைக்காதவனும் நெல் விற்பனை செய்ய வருகின்றனர். கலெக்டரிடமும் இது குறித்து புகார் செய்யப்பட்டு உள்ளது. இங்கு ஒவ்வொரு விவசாயியும் வஞ்சிக்கப்படுகிறார். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்ற ஏற்கனவே மத்திய நீர்வளத்துறை மந்திரி தெரிவித்து உள்ளார்.

    தி.மு.க. இந்து கோவில் விஷயத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டு இருகின்றது. கோவில் நகைகளை உருக்குவது என்பது கோவில் நகைகளை திருடுவதற்கு ஒப்பாகும். தி.மு.க.விற்கு சித்தாந்தம் ரீதியாக கடுமையான எதிர்ப்பை காட்டி வரும் கட்சி பா.ஜ.க. ஆகும். மாநில தலைவர் ஊழலை வரும் முன் காப்போம் என்று தடுத்து வருகின்றார். இது வரை தமிழகத்தில் 7 லாக்கப் மரணங்கள் நடந்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. காவல் துறை என்ற ஒரு துறை தமிழகத்தில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலை வைப்பதை பா.ஜ.க. ஏற்கவில்லை. இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

    • ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
    • பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் என்.நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபகாலமாக திமுகவினைச் சார்ந்த ஒருசில நிர்வாகிகள் பிராமண சமூகத்தினை தாக்கிப் பேசுவதும், சம்மந்தமில்லாமல் சாடுவதும் அதிகரித்து வருகிறது.

    திமுகவின் பேச்சாளர் ராஜிவ் காந்தி, சமீபத்தில் பிராமணர்களை இனப்படுகொலை செய்திருக்க வேண்டும் என்று அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் பேசி உள்ளதை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வாய்ப்பு கிடைக்கின்ற பொழுதெல்லாம் பிராமண சமூகத்தினை சாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கட்சிகளுக்கோ, பிற கட்சி தலைவர்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ பதில் அளிக்கின்ற பொழுது பிராமண சமூகத்தின் பெயரினை இழுப்பது என்பது பகுத்தறிவு சார்ந்த செயல் இல்லை என்பதை அவர் உணர்ந்திட வேண்டும்.

    இவர்களது பிராமண வெறுப்பு பேச்சுக்களை தமிழ்நாடு பிராமணர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    இதுபோன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபடக்கூடாது என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கண்டிப்புடன் அறிவுரைகளை வழங்க வேண்டும் என தமிழ்நாடு பிராமணர் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருப்போரூர் ஓ.எம்.ஆர். சாலையில் அமைந்துள்ள சைதன்யா திருமண மண்டபத்தில் நடக்கிறது.

    மாவட்ட கழக அவைத்தலைவர் த.துரைசாமி தலைமையிலும், மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் இ.கருணாநிதி எம்.எல்.ஏ., து.மூர்த்தி, வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் வெ.விசுவநாதன் ஆகியோர் முன்னிலையிலும் கூட்டம் நடைபெற உள்ளது.

    இக்கூட்டத்தில் கழக இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட கழகப் பிரதிநிதிகள், கழக அணிகளின் மாநில, மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    கழகத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தளபதிக்கு வாழ்த்து, பூத் கமிட்டி அமைத்தல், கழக இளைஞரணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, கழக வளர்ச்சி ஆகிய 4 பொருள்களில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
    • அவரது கருத்து காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    சென்னை :

    தி.மு.க. செய்தித்தொடர்பு செயலாளராக இருந்து வந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு குறித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில், ''காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சிலர் தொடர்ந்து தலைமைப் பதவியை வகிக்க முடியாமல் போயிருக்கிறது. தகுதியுள்ள சிலர், சில காரணங்களால் தேர்தலில் தோல்வியைத் தழுவ வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுவிடுகிறது. அரசியலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பு மட்டுமல்ல, நேர்மை மட்டுமல்ல, அதைத் தாண்டி சில அக, புற காரணிகள் இருக்கின்றன'' என்று கூறியிருந்தார்.

    அவரது இந்த கருத்து, தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கிவைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்கப்படுகிறார்.'' என்று கூறப்பட்டுள்ளது.

    • 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது?
    • தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது?

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சட்டமன்றத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும் போடத்தான் இந்த ஆட்சியா? தமிழக அரசின் இருமொழி கொள்கை என்பது என்ன? ஆங்கிலம் கட்டாயம், ஆனால் தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே? அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் 1-ம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இது தமிழ்மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா?

    தமிழக அரசு செலவில் தமிழ்மொழியை படிக்காமலேயே, கல்லூரி வரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசு பள்ளிகள் பட்டியல் உண்மையா? இல்லையா? பயிற்றுமொழியாக உருது மொழியில் 56 பள்ளிகள், மலையாள பள்ளிகள் 50, தெலுங்கு பள்ளிகள் 35, கன்னட பள்ளி 1, இதுதவிர பாடமொழியாக உருது மொழியில் 204 பள்ளிகள், மலையாள மொழியில் 50 பள்ளிகள், தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள், கன்னட மொழியில் 60 பள்ளிகள் அரசு செலவில் இயங்குகின்றன. தமிழ்மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசு இந்தியை மட்டும், விருப்பம் உள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்?

    50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது?

    தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க.வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது? ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார். தமிழுக்கு எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்ப் பிரசாரத்தை இன்னும் எத்தனை நாள் தி.மு.க. சொல்லிக்கொண்டு இருக்கும்? இந்தி எதிர்ப்பு போர் தி.மு.க.வை 1967-ல் அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் தி.மு.க.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
    • சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    சென்னை:

    இந்தி திணிப்பு மற்றும் ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில், தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார். மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. இளைஞரணி, மாணவர் அணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர்.

    • இலவச பஸ் பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
    • முதல்-அமைச்சருக்கு பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும் என்பதால் பஸ்சில் இலவச கட்டணத்தை வழங்கினார்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நான் துணைப்பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்பு முதன் முதலாக இந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். இதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எந்த அளவிற்கு அரசு மக்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    அதேசமயம், கடந்த ஆட்சியின் குறைகளையும் தற்போது தி.மு.க. அரசு சரி செய்து வருகிறது. 10 ஆண்டுகள் நடைபெற்ற பிரச்சினைகள் மக்கள் சந்திக்கக்கூடிய கஷ்டங்கள் இவை எல்லாம் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறார். மேலும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

    மக்களுக்கு என்ன வேண்டும் என சிந்தித்து மக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே நடவடிக்கைகள் எடுத்து அதனை நிறைவேற்றி தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    இலவச பஸ் பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் முதல்-அமைச்சருக்கு பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும் என்பதால் பஸ்சில் இலவச கட்டணத்தை வழங்கினார். இதனால் பெண்கள் தன்னம்பிக்கையோடு வெளியே சென்று வருகிறார்கள்.

    நம்ம வீட்டு பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அரசு ரூ.1000 வழங்கும் திட்டத்தை உருவாக்கி தந்தவர் முதல்-அமைச்சர். பெண்களின் உயர்கல்வி கனவு எந்த விதத்திலும் நின்று போகக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தந்து உள்ளார்.

    பள்ளிகளில், பசியோடு மாணவர்கள் மதிய உணவு வரை காத்திருக்க கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை உருவாக்கி தந்திருக்கிறார். இந்த திட்டம் மதிய உணவு திட்டத்தை போல எல்லா பள்ளிகளிலும் விரைவில் கொண்டு வரப்படும்.

    தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு எல்லா பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கும் படித்த இளம்பெண்கள், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

    எல்லா பகுதிகளும் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக மாற வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான முதலீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகளை, வளர்ச்சியை கொண்டு வந்த ஆட்சி தி.மு.க . ஆட்சி.

    இந்த ஆட்சி தமிழக மக்களின் உரிமைக்காக, மொழி உணர்வுக்காக, இன உணர்வுக்காக உரிமைகளுக்காக போராடக்கூடிய ஆட்சி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

    நாம் அனைவரும் அவருடன் நின்று நம்முடைய எதிர்காலத்துக்காக நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நம்முடைய சுயமரியாதைக்காக அவரோடு நின்று அவர் வழியில் பயணம் செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுவதாக குற்றச்சாட்டு
    • புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர முயற்சிக்கிறது

    சென்னை:

    இந்தி திணிப்பை கண்டித்து வரும் வரும் 15ம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இதுதொடர்பாக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் தி.மு.க. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில், இந்திய துணைக் கண்டத்தின் பன்முகத் தன்மையை சிதைக்கும் வகையில், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே உணர்வு, ஒரே பண்பாடு என்ற ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்படுத்த முற்படுவதாகவும், இதன்மூலம் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஒருமைப்பாட்டை சிதைத்து, ஒருமை தன்மையாக்க நினைப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளனர்.

    அலுவல் மொழி சட்டத்தின் வாயிலாகவும், இந்திய அளவில் அனைத்து பாடத் துறைகளுக்கும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தின் மூலமாகவும் இந்தி மொழியை திணிக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, அதனை கைவிட வேண்டுமென்றும், புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் சமூகநீதிக்கு எதிரான திட்டங்களை கொண்டு வர வேண்டுமென்று நினைக்கும் மத்திய அரசின் முடிவினை திரும்பப் பெற வலியுறுத்தியும், வரும் 15.10.2022 அன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் "மாபெரும் கண்ட ஆர்ப்பாட்டம்" நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

    இதில் தி.மு.க. இளைஞர் அணி - மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணித் தோழர்களும், மாணவர் அணித் தோழர்களும் திரளாக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    • மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள்.
    • எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது. விழாவில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசியதாவது-

    அ.தி.மு.க. வலுவாக இருப்பதற்கு காரணமே மக்களுடைய பெரும் ஆதரவு தான். அதனால் இன்றைக்கு அ.தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியவில்லை. எத்தனையோ பேர் இந்த கட்சியை உடைக்க பார்த்தார்கள். முடக்கப்பார்த்தார்கள்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எத்தனையோ அவதாரம் எடுத்து அ.தி.மு.க.வை அழிக்கப்பார்த்தார். அத்தனை அவதாரத்தையும் தவிடு பொடியாக்கிய கட்சி அ.தி.மு.க. தான். மக்கள்தான் அ.தி.மு.க.வை இயக்குகிறார்கள்.

    அ.தி.மு.கவை பொறுத்தவரைக்கும் ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் கட்சி. இதற்காக எங்களது தொண்டர்கள், நிர்வாகிகள் உழைப்பார்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் வாய்ப்பு இருப்பதாக நாட்டு மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    மக்களுடைய எண்ணமெல்லாம் இந்த தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்பதுதான். யாரை கேட்டாலும் இப்படித்தான் சொல்கிறார்கள். தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கிராமம் முதல் நகரம் வரை வசிக்கும் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 இடங்களில் அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்படுகின்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். மக்கள் எழுச்சியோடு இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

    மு.க.ஸ்டாலின் நீங்கள் சொன்ன எந்த திட்டமாவது நிறைவேற்றி இருக்கிறீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டத்தை நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்திற்கு தான் அடிக்கல் நாட்டுகிறார்கள்.

    லஞ்சம் வாங்குவதில் முதன்மை தி.மு.க. அரசாக உள்ளது. கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் இதுதான் இந்த ஆட்சியில் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    முதன்மை முதன்மை என்று தி.மு.க. சொல்வது லஞ்சம் வாங்குவதை தான் முதன்மை என்று சொல்கிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொதுக்குழு கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து பார்க்கின்றபோது ஏதாவது நடந்து விடுமோ என அச்சத்தில் தேடி பார்க்கிறேன் என்கிறார். அப்படினா அவருடைய நிலைமை பரிதாபமாக உள்ளது. அவர் கட்சிக்காரரை பார்த்து பயப்படுகின்றார். ஏனென்றால் தினந்தோறும் ஊடகங்களில் வருகின்ற செய்தியே தி.மு.க.காரர்கள் செய்கின்ற பிரச்சினை தான். அதை பார்த்து பயந்து நடுங்கி காலையில் எழுகின்றபோது எதுவுமே நடக்கக்கூடாது என வேண்டுகின்றேன், என அவரே கூறுகிறார். கட்சிக்காரர்களை பார்த்து பயப்படுகின்ற நிலைமைக்கு இன்று தி.மு.க. தலைவர் போய்விட்டார்.

    5 மாத காலத்திற்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதிகாரியாக இருப்பேன் என சொன்னார். ஒழுங்காக கட்சியில் பணி செய்யவில்லை என்றால் யாராக இருந்தாலும் பார்க்க மாட்டேன். கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என சொன்ன அதே மு.க.ஸ்டாலின் இன்று கட்சியினர் மத்தியில் கெஞ்சுகின்ற நிலைமையை பார்க்கின்றோம். ஆகவே திறமை இல்லாத முதல்-அமைச்சர் நாட்டை ஆளுகின்றார்.

    நான் முதல்-அமைச்சராக இருந்தபோது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் நிவாரணம் அளித்தேன். கொரோனா தொற்றின்போது சிறப்பாக செயல்பட்டோம். டாக்டர்களுக்கு உரிய முறையில் பயிற்சி அளித்து விலை மதிக்க முடியாத உயிர்களை காப்பாற்றிய அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×