என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 97412"

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்தக் கோவிலுக்கு இன்று வைகாசி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு 5 நாட்கள் மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    பிரதோஷ தினமான இன்று மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறை வனத்துறை கேட்டிருக்கும் முன்பு குவிந்தனர்.

    காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுந்தரமகாலிங்கம் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    • நந்தீஸ்வரருக்கு 13 வகையான சிறப்பு அபிஷேகம்
    • ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்ற சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று.

    குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்துள்ளது சிறப்பாகும். இப்படிப்பட்ட வரலாற்றுசிறப்புமிக்க இந்த கோவிலில் வைகாசி மாத பிரதோஷ வழிபாடுநடந்தது. இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலின் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர். இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்ற்று அகத்தீஸ்வரர் கோவில், ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இன்று செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம்.
    • இன்று விரதம் இருந்து சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம்.

    பிரதோஷ அன்று சிவபெருமானுக்கு பூஜை செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் ரொம்பவே மகத்துவம் மிக்கது.

    விரதம் இருந்து சனிக்கிழமை பிரதோஷ காலத்தில் சிவனாரை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். புகழும் கெளரவமுமாக வாழலாம்.

    விரதம் இருந்து பிரதோஷ நாளில் செய்யப்படும் எந்த தானமும் மும்மடங்குப் பலன்களை வழங்கும் என்பது ஐதீகம். பிறப்பே இல்லாத முக்தியை அளித்து அருள் செய்யும்.

    சனிப் பிரதோஷ நாளில், முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவநடனத்தைத் தரிசிக்க பூலோகம் வருவார்களாம். நந்திதேவரையும் சிவனாரையும் அபிஷேகித்து,ஆராதித்து தரிசித்தார்களாம். பிரதோஷ பூஜைக்கு நாமும் அபிஷேகப் பொருட்களையும் பூக்களையும் வழங்குவோம்.

    நந்திதேவரின் கொம்புகளுக்கிடையே ஈசன் திருநடனம் புரியும் தருணம் பிரதோஷம் என்கிறது புராணம். விரதம் இருந்து பிரதோஷ நாளில், நமசிவாயம் என்று ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்து, சிவ பூஜையை தரிசித்தாலோ சிவ பூஜை செய்தாலோ, நம் முன்னோர்கள் செய்த ஏழுதலைமுறை பாவங்களும் நீங்கும் என்கிறது சிவபுராணம்.

    இன்னொரு விஷயம்... மற்ற நாட்களில் வரும் பிரதோஷ நாளில், சிவ தரிசனம் செய்வதாலும் சிவ பூஜை செய்வதாலும் என்னென்ன பலன்கள் கிடைக்கிறதோ... சனிப் பிரதோஷ நாளில் செய்தால், மும்மடங்கு பலன்கள் கிடைக்கும்.

    பிரதோஷம் என்பது திரயோதசி திதியில் வரும். பிரதோஷ வேளை என்பது மாலை 4.30 முதல் 6 மணி வரை. இந்த நேரத்தில், சிவ பூஜை செய்யவேண்டும். குளித்துவிட்டு, சுவாமி படத்துக்கு முன்னே அமர்ந்துகொண்டு, 'நமசிவாயம்' என்று ஜபித்துக் கொண்டிருந்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும். புண்ணியம் பெருகிவிடும்.

    மற்ற பிரதோஷம் வழிபட சனிப்பிரதோஷ முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், சிவ ஆலயத்தில் இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் நன்மைகள் தான் காரணம். ஒருவர் பிற நாட்களில் கோயிலுக்கு செல்வதை விட இந்த சனிப் பிரதோஷ நாட்களில் அவர்கள் மனதில் நினைத்த விஷயங்களை எண்ணி வழிபாடு செய்வதன் மூலமாக எண்ணிய காரியங்களில் எண்ணியவாறு அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். முக்கியமாக சிவாலயங்களுக்கு நீங்கள் சென்று வழிபடுவது ஐந்து வருட வழிபாட்டிற்கு சமமாக இந்த ஒரு நாள் வழிபாடும் கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    என்ன வகைப்பட்ட தோஷங்கள் ஒருவரை ஆட்டிப் படைத்தாலும், அவர்கள் இந்த நாளில் சிவனை வழிபடுவதன் மூலமாக அந்தப் ஒரு தோஷங்களில் இருந்து விலகுவதாக ஐதீகம் உள்ளது. சாதாரண தினங்களில் ஏற்படும் வழிபாடுகளை விட சனிக்கிழமை பிரதோஷம் செய்யும் வழிபாடு ஆயிரம் மடங்கு நன்மைகளை வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் முழுவதும் விரதம் இருந்து, பால் ஆகாரம் மட்டும எடுத்துக் கொண்டு, மாலையில் சிவன் கோயில் சென்று வழிபடுவது மிகவும் நன்மை பயக்கும்.

    வீட்டில் விளக்கு ஏற்றி சிவன்பெருமான் புகைப்படத்தின் முன்பு அவருடைய மந்திரத்தை சொல்லி வழிபடுவதன் மூலமாக இந்த நாளில் சிறப்பு பயன்களை நீங்கள் முழுமையாக அடைய முடியும்.

    இன்று (22ம் தேதி) சனிப் பிரதோஷம். மாலையில் சிவனாரைத் தொழுவோம். நமசிவாயம் சொல்லுவோம். நல்லனவற்றையெல்லாம் பெறுவோம்.

    நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

    • சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள்.
    • பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும்.

    புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    புரட்டாசி மாதம் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம். மகாவிஷ்ணுவை வழிபடுவதற்கான மாதம். இந்த மாதம் முழுவதுமே துளசி தீர்த்தம் பருகுவதும் பெருமாளுக்கு துளசிமாலை சார்த்துவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்.

    புரட்டாசி சனிக்கிழமைகளில், பெருமாள் வழிபாடு செய்வது உத்தமம். அதேபோல், வெள்ளிக்கிழமைகளில், மகாலக்ஷ்மி வழிபாடு செய்வதும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்வதும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வதும் சகல ஐஸ்வரியங்களையும் தந்தருளும்.

    அதேபோல், புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.

    புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. இன்று பிரதோஷம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.

    கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

    பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

    • புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள்.
    • கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார்.

    இன்று புரட்டாசி விரதம். இந்த நன்னாளில், சிவ வழிபாடு செய்யுங்கள். பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். புண்ணியம் நிறைந்த மாதம் புரட்டாசி என்பார்கள். புரட்டாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். புரட்டாசி மாதத்தில் நாம் எந்த வழிபாட்டைச் செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    புரட்டாசி மாதம் வெயிலும் இல்லாத, குளிரும் இல்லாத அற்புதமான மாதம். இந்த மாதத்தில், மனம் ஒரு நிலைப்படுத்தி, அரைமணி நேரம் பூஜையிலும் வழிபாட்டிலும் இருக்க, உள்ளொளி கிடைப்பது நிச்சயம். அதேபோல், மந்திர ஜபங்கள் செய்வதும் ஸ்லோகங்கள் சொல்வதும் மிகுந்த பலன்களைத் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பிரதோஷ காலமும் மிக மிக முக்கியமானது. மகாவிஷ்ணு வழிபாடு எப்படி முக்கியமோ அதேபோல் சிவ வழிபாடும் அளப்பரிய நன்மைகளைக் கொடுக்கக் கூடியது.

    புரட்டாசி மாதம் நிறைவுறும் தருணத்தில் பிரதோஷம் வருகிறது. அதுவும் பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்லுவார்கள்.

    இன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யுங்கள். சிவ ஸ்தோத்திரம் பாராயணம் செய்யுங்கள். ருத்ரம் ஒலிக்கவிட்டு கேளுங்கள். அருகில் உள்ள சிவாலயத்துக்கு, மாலையில் பிரதோஷ வேளையில் சென்று தரிசியுங்கள். சிவனாருக்கும் நந்திதேவருக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துகொண்டு கண் குளிரத் தரிசியுங்கள்.

    கஷ்டங்களையெல்லாம் போக்கி அருளுவார் தென்னாடுடைய சிவனார். துக்கங்களையெல்லாம் நீக்கி அருளுவார் ஈசன்.

    இன்று மாலையில் சிவன் ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்துகொள்ளுங்கள். பிரதோஷத்தில் சிவ தரிசனம் செய்தால், புத்தியில் தெளிவு உண்டாகும். மனோபலம் பெருகும். மனக்கிலேசம் விலகும். மங்கல காரியங்கள் நடந்தேறும்.

    • சோழவந்தான் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    சோழவந்தான்,

    மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ள பிரளயநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சிவலிங்கம், நந்திகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பால், தயிர் உள்பட 12 திரவிய பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமியும், அம்மனும் கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.

    இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் சுவாமியுடன் வலம்வந்து சிவாய நமக... சிவாய நமக... என்று சொல்லி வந்தனர். இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத் துணைத்தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளிமயில், தாளாளர் மருதுபாண்டியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலிலும், விக்கிரமங்கலம் கோவி ல்பட்டி மருததோதைய ஈஸ்வரர் ஆலயத்திலும், மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவிலிலும், பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும், திருவாலவாயநல்லூர் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. 

    • ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
    • ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.

    உடுமலை :

    உடுமலையில் பிரதோஷத்தை முன்னிட்டு உடுமலை மற்றும் சுற்றுப் பகுதி சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.உடுமலை தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் நந்தியம்பகவானுக்கும், அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

    ரத்தினலிங்கேஸ்வரர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவில் பிரகாரத்தில் வீதியுலா வந்தார்.தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்து மலர்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கோவிலுக்கு மாதத்தில் 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
    • கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை .

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமி 10-ந்தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை (8-ந்தேதி) முன்னிட்டும் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 நாட்களில் மலைப்பகுதிகளில் மழை அறிகுறியோ, நீர்வரத்துகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இன்று விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும்.
    • இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

    இன்று பிரதோஷம். புதன்கிழமையில் வருகிற பிரதோஷத்தன்று சிவ தரிசனம் செய்வது நன்மை தரக்கூடியது. இன்று விரதம் இருந்து மாலை சிவ ஆலயம் சென்று அபிஷேகத்துக்கு பொருட்களை வழங்கி இறைவனை தரிசித்தால் வீட்டில் உள்ள கடன் தொல்லை நீங்கும். 16 வகை செல்வங்கள் கிடைக்கும். வீட்டில் சுபிட்சம் நிலவும். புத்திர பாக்கியம் கிடைக்கும். சிவன் நந்தி அபிஷேகத்திற்கு இளநீர் வாங்கித் தந்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும். வீட்டில் தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி மளமளவென்று நடைபெறும்.

    புதன் என்பது அள்ளித்தரக்கூடிய ஒரு பொன்னான நாள். அந்த நாளில் யார் ஒருவர் விரதம் இருந்து பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ, அவர்களின் வாழ்வில் செல்வம் பெருகும். செல்வம் என்பது பணம் மட்டுமல்ல அறிவுச் செல்வம், ஆரோக்கியம், குழந்தை செல்வம், திருமண பாக்கியம், குடும்ப ஒற்றுமை என 16 வகையான செல்வங்கள் இருக்கின்றன. அந்த 16 செல்வங்களைப் பெற புதன்கிழமைகளில் வரும் பிரதோஷ நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும். .

    புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து சிவாலய வழிபாடு செய்வது கடன் தொல்லையை நீக்கும். இன்று நந்தி அபிஷேகத்துக்கு இளநீர் வாங்கிக் கொடுத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீக நம்பிக்கையாக உள்ளது. இன்று நந்தியை மனம் உருக வழிபட்டால் தடைபட்ட சுப காரியங்கள் மளமளவென நடக்க தொடங்கும்.

    இன்று மாலை கோவிலில் தயிர் சாதம் வழங்குபவர்களுக்கு, நீண்ட நாள் காரியம் நிறைவேறும். பசுவிற்கு 4 மஞ்சள் வாழைப்பழம் கொடுக்கவும்.

    • கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    • 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது.

    குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான 5 1/2 அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்துள்ளது சிறப்பாகும். இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆடி மாத பிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது. இதை யொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதே போல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசி விசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்து வாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுத முடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் பிரதேசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அபிசேக பூஜை, சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
    • அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு அபிசேக பூஜை,சிறப்பு யாகம் ஆராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன .பிரதோசத்தை முன்னிட்டு அம்மையப்பர் கோவில் திருவீதி உலா நடைபெற்றது.

    இதேபோல பல்லடம் கோட்டைவிநாயகர்கோவில், பொங்காளியம்மன் கோவில், அருளானந்த ஈஸ்வரர்கோவில்,சித்தம்பலம் நவகிரக கோட்டை உள்ளிட்ட சிவாலயங்களில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வழிபட்டனர்.

    • புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி தீபாராதனை நடைபெற்றது.
    • சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் பிரதோஷ விழா சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பிரதோஷ வழிபாடு சுபமங்களம் தரும், பிரதோஷ வழிபாட்டினால் பதவி, புகழ் போன்றவற்றை தருவதோடு, மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அளிக்கும்.சகல தோஷமும் போக்கி மகிழ்ச்சி அளிக்கும் பிரதோஷ வழிபாடு சிறப்புடையது என்று ஆன்றோர்களின் ஜதீக வாக்காகும். இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சங்கல்பம், கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபண கும்பகலச பூஜை, ருத்திர ஜெபம், வருணஜெபம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி, நந்தியம் பெருமான்னுக்கு மஞ்சள் பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணி அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினார்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ×