என் மலர்
நீங்கள் தேடியது "விஜய்"
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு.
மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்றது.
இந்நிலையில், வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்த தமிழக வெற்றிக் கழகம் முடிவு செய்துள்ளது.
மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நாளை (ஏப்ரல் 4) போராட்டம் நடத்துமாறு நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் உத்தரவு என தகவல் வெளியாகியுள்ளது.
- தவெக பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
- சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார்.
தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய் தலைமையில் கடந்த ஒரு வாரம் முன்பு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் தடுப்பு குறித்தும் பேசியிருந்தார்.
பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போதைப் பொருள் குறித்தும் பேச விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது.
சினிமா துறை சேர்ந்த பாடகி சுசித்ரா உங்கள் மீது குற்றச்சாட்டு வைத்தார். விஜய் தனது இல்ல நிகழ்ச்சிகளில் சக நடிகர், நடிகைகளுக்கு வெள்ளி தாம்பூலத் தட்டில் விலை உயர்ந்த போதைப் பொருள் வைத்து வழங்குவார் என கூறினார்.
சுசித்ராவின் குற்றச்சாட்டிற்கு விஜய் அமைதியாக இருக்கிறார். காவல் துறையும் விஜய் மீதும், நடிகை த்ரிஷா மீதும் விசாரணை நடத்தாதது ஏன்?
இப்படி ஒரு சூழலில் விஜய் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்து போதைப் பொருள் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து வர வேண்டும்.
- மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல்.
திருவிடைமருதூர்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகே கஞ்சனூர் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவிலுக்கு மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் தரிசனம் செய்ய வருகை தந்தார்.
அவருக்கு விழா கமிட்டியினரும், கிராம மக்களும் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கிராம தெய்வ வழிபாடு முக்கியமானது. மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்துள்ளது. பிரகாரங்கள் மற்றும் விமானங்களின் திருப்பணிகள் நடந்து வருகிறது.
2028-ம் ஆண்டு வரும் கும்பகோணம் மகாமக பெருவிழா மிகப்பெரிய விழாவாக நிச்சயமாக கொண்டாட அரசு முயற்சிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.
அரசியல் என்பது யார் வேண்டுமானாலும் வருவது என்பது கூடாது. கடுமையாக உழைத்து அனுபவரீதியாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து அரசியலுக்கு வர வேண்டும். சினிமா அரசியல் தேவையில்லை. சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும்.
சினிமாவில் நடிப்பது மட்டும் அரசியலுக்கு போதும் என்று நினைப்பது தவறு. மக்களுக்காக தொண்டு செய்வது தான் அரசியல். மக்களுக்காக பல்வேறு துறைகளில் தொண்டு செய்யக் கூடியவர்கள் போற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'.
- திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது அதற்கு பின் முழுநேர அரசியலில் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது.
திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு சமீபத்தில் புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தனர். படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் டிஜிட்டல் உரிமையை பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டாலும். படத்தின் உரிமையை பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. இப்படத்தை அமேசான் பிரைம் 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. மேலும் ஜன நாயகன் படத்தின் இந்தி வெர்ஷனை ஓடிடியில் 8 வாரம் திரையரங்கில் ஓடிய பிறகே ஓடிடியில் வெளியிடவுள்ளனர். திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
- விஜய் உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
- தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் த.வெ.க. நிர்வாகிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டு இருந்தார். அவரது உத்தரவுக்கிணங்க தமிழகம் முழுவதும் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
எனினும் பல இடங்களில் தண்ணீர் பந்தல் இல்லாமல் இருக்கிறது. அப்படிப்பட்ட இடங்களை நிர்வாகிகள் ஆய்வு செய்து 234 தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதி வீதியாகவும் தண்ணீர் பந்தல் கட்சி சார்பில் அமைக்க வேண்டும்.
தண்ணீர் பந்தல் அமைப்பது மட்டுமின்றி தினமும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இருப்பதை நிர்வாகிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தொண்டர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருக்கிறார்.
- உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.
- இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.
ரம்ஜான் பண்டிகை இன்று நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி..., ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும்,
உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ரமலான் நல்வாழ்த்துகள்.
இந்நாளில் அனைரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளார்.
- மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை என்றார்.
சென்னை:
பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் உண்மைக்கு புறம்பாக மத்திய அரசை விமர்சித்து விஜய் பேசியது வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்தன.
பிரதமருக்கு தமிழகம் என்றால் அலர்ஜி, தமிழக ஜி.எஸ்.டி. வருவாயை வாங்கிக் கொண்டு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதியே ஒதுக்குவதில்லை, இருமொழிக் கொள்கையில் உறுதி, வக்பு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறவேண்டும், தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை என்று மாநில அரசு சொல்லும் அதே கருத்துகளை விஜய் பிரதிபலித்திருப்பது தான் மேலும் வேடிக்கை.
ஆளுங்கட்சிக்கு சாதகமாக பேசுவதாக எண்ணி, மத்தியிலே நடந்துகொண்டிருக்கின்ற சிறந்த ஆட்சியை, ஒரு இந்திய குடிமகனாக பாரதத்தை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்லும் பாரத தலைவரை, உலகம் போற்றுகின்ற ஒரு சாதனை மனிதரை, சாதாரண மனிதராக எண்ணிக் கொண்டு கேலியாக பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இனி வருங்காலங்களில் இவை அனைத்தும் தவிர்த்து அனைத்து தரவுகளையும் ஆராய்ந்து உண்மையான கருத்துகளைப் பேசி ஆக்கப்பூர்வமான, நாகரிகமான அரசியலில் விஜய் ஈடுபடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
- விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
- செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
சென்னை:
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்று பேசுகிறார். எதுகை மோனையில் வேண்டுமானால் அது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரில் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கட்சியில் அடிப்படையிலேயே மிக தீவிரமாக மக்கள் பணியாற்றி முன்னுக்கு வந்தனர்.
விஜய் முதலில் தி.மு.க.வுக்கான எதிர்ப்பை தீவிரப்படுத்த வேண்டும். அந்த காலத்து நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே இருந்தது. ஆனால் இன்று விஜய் படம் தெலுங்கானாவில் ஓஹோவென்று ஓடுகிறது. உங்களுக்கு பல மொழிகள் தேவைப்படும் போது குழந்தைகளுக்கும் இணைப்பு மொழி தேவைப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் படத்திற்கு பல மொழிகள் வேண்டும். பாடத்திற்கு பல மொழிகள் வேண்டாம் என்று சொன்னால் எப்படி? விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மைதான் உள்ளது.
எங்களை தி.மு.க.வின் பி அணி என்று விஜய் சொல்கிறார். தி.மு.க. சொல்வதைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். நீங்கள்தான் தி.மு.க.வின் பி அணி.
பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என்று விஜய் சொல்கிறார். உங்களுக்கு பனையூர் வேண்டும். நீங்கள் சாலிகிராமத்தில் எனது வீட்டு அருகில் தான் சிறிய வீட்டில் இருந்தீர்கள். உங்கள் வாழ்க்கை விரிவடைய விரிவடைய உங்களுக்கு பனையூர் தேவைப்படுகிறது. அப்படியென்றால் தமிழக மக்களின் வாழ்க்கை விரிவடைய விரிவடைய பரந்தூர் தேவைப்படுகிறது. தமிழக அரசு கொடுக்கும் இடத்தில்தான் மத்திய அரசு விமான நிலையம் அமைக்கும்.
பிரதமர் மோடியை எதிர்த்து பேசும் தைரியும் இருப்பதாக கூறும் விஜய் தனது தயாரிப்பாளரை எதிர்த்து பேசி இருப்பாரா? உங்களுடைய டைரக்டரை எதிர்த்து பேசி இருப்பீர்களா?
விஜய் இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், ஆழமாகவும் அரசியலை கற்றுக் கொண்டு பேச வேண்டும். செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது ஏன் என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம்.
- தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
கே.கே. நகர்:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கொலை நடந்து 13 ஆண்டு கடந்த நிலையிலும் குற்றவாளி யார்? என்று தெரியவில்லை. பெரிய தலைவர்களின் நிலை இப்படி என்றால் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு.
பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த வழக்கு இழுத்தடிக்கப்படுகிறது. உரிய விசாரணை நடத்தப்படவில்லை.
அரசுக்கு எது தேவையோ எடுத்துக் கொள்ளப்படுகிறது. மற்றவைகளை மூடி மறைக்கப்படுகிறது.
டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை சோதனை நடந்தது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது யாருக்கும் தெரியாது.
நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் அனைத்தும் தி.மு.க.வின் அலுவலகம் போன்று செயல்படுகிறது.
நான் பெரியார் குறித்து பேசியதற்கு 100-க்கும் மேற்பட்ட இடங்களில் என் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் நான் கொடுக்கும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
ஆனால் என் மீது கொடுக்கப்படும் வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
என் மீது பல்வேறு இடங்களில் தொடுக்கப்பட்ட வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான எல்லா வழக்குகளும் ஒன்றிணைந்து விசாரிக்கப்படுகிறது.
இதன் மூலம் ஒட்டுமொத்த மக்களின் நீதிமன்றம் மதிப்பை இழந்து வருகிறது.
வருகிற சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என சி.ஓட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு ள்ளது. நாங்கள் பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு 36 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். ஆனால், எங்கள் கட்சி அந்த கருத்துக்கணிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை.
இதிலிருந்து கருத்துக்கணிப்பின் நேர்மை புலப்படுகிறது. இது கருத்துக்கணிப்பல்ல, கருத்து திணிப்பு. நாங்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல, போராளிகள் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம்.
ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அதில் உண்மை உள்ளதா இல்லையா என தெரியவில்லை. அதில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் குற்றவாளிகளா அல்லது குற்றத்தில் தொடர்புடையவர்களா? என்பதை அரசு கூற வேண்டும்.
சவுக்குசங்கர் வீடு தாக்குதலுக்கு உள்ளானது. குற்றத்தை யார் புரிந்தார்? என்பது வெளிப்படையாகவே தெரியும். அதற்கு எதற்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணை. அதிகாரத்தில் உள்ளவர்களே அந்த குற்றச்செயல்களை செய்துள்ளனர்.
இது பூனை தன் குட்டியை கவ்வதும், எலியை பிடிப்பதற்கு உள்ள வித்தியாசமாகும். எங்களை கடிக்கும் போது எலியை கடிப்பது போல் கடிக்கிறீர்கள். கொடுமையானவர்களே குற்றச் செயல்களில் உடந்தையானவர்களை பூனை குட்டியை கவ்வதை போல் பிடிக்கிறீர்கள்.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட வழக்கில் ஒப்புக்காக 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரம் அவர்கள் கையில் உள்ளதால் நாட்டில் குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுட்டு பிடிப்பதற்கு காரணம் அவர்களது இயலாமை. அவர்களை பிடித்தால் பல்வேறு உண்மைகள் வெளியே வரும் என்பதால் அவர்களை சுட்டுக்கொன்று விடுகின்றனர்.
சங்கிலி திருடர்களை சுட்டு பிடிப்பதற்கு என்ன காரணம்? கள்ளச்சாராயம் அருந்தி 65 பேர் உயிரிழந்த சம்பவத்தை விட இது பெரிய சம்பவமா?
குடித்துவிட்டு பாட்டிலை திரும்பி கொடுத்தால் பத்து ரூபாய், பாடையிலே படுத்துவிட்டால் 10 லட்ச ரூபாய், இது திராவிட மாடல் பாலிசி. வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டு தி.மு.க.வை வீழ்த்துவேன் என்ற விஜய் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.
நான் பிரபாகரனை போல தனித்தே நின்று போட்டியிடுவேன். நான் புலி போன்றவன் தனித்தே நின்று போட்டியிடுவேன். படை சேர்த்துக்கொண்டு தேர்தலை சந்திப்பவன் அல்ல நான். கூட்டத்தில் ஒரு ஆளாக போட்டியிட துணிவோ, வீரமோ தேவையில்லை, தனித்து நிற்கவும் தான் துணிவும் வீரமும் தேவை.
எதிரியை தீர்மானித்து விட்டு தான் களத்தில் இறங்கி உள்ளோம். எந்த குழப்பமும் இல்லை தடுமாற்றமும் இல்லை. இன்னும் சில மாதங்கள் உள்ளது. தேர்தலில் நாங்கள் வாங்கப்போவது தி.மு.க., அ.தி.மு.க. ஓட்டு அல்ல, மக்களின் ஓட்டு தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் பண்டிகைகள் ஒன்று யுகாதி பண்டிகை. இது தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தெலுங்கு வருட பிறப்பின் முதல் நாள் யுகாதி பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எனினும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்று யுகாதி திருநாள் கொண்டாடப்படுவதை அடுத்து, தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் மற்று்ம பலர் வாழ்த்து செய்தி வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோருக்கு யுதாதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "தெலுங்கு மற்றும் கன்னட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த யுகாதி திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புத்தாண்டில் அனைவரின் வாழ்விலும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம் நிலைத்து, சகோதரத்துவம் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க வுக்கும் இடையே தான் போட்டி என்கிற அறிவிப்பை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் விஜய் தெரிவித்து உள்ளார்.
- விஜய் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யும் களம் கண்டுள்ளார்.
மத்தியில் பா.ஜ.க.வையும், தமிழகத்தில் தி.மு.க.வையும் மட்டுமே எதிர்த்து அரசியல் செய்து வரும் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும் த.வெ.க வுக்கும் இடையே தான் போட்டி என்கிற அறிவிப்பை நேற்று நடைபெற்ற பொதுக்குழுவில் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. இருக்கும் நிலையில் அந்த கட்சியைப் பற்றி எதுவுமே பேசாமல் தி.மு.க.வை மட்டுமே போட்டியாளராக கருதி விஜய் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. இதுதொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க.-வை சேர்ந்த தலைவர்கள் விஜய் குறித்து விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, தி.மு.க.வை மன்னராட்சி என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசிய குறித்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, முந்தாநாள் கட்சி தொடங்கிய விஜயின் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
- யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை
- யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை. எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.