என் மலர்
நீங்கள் தேடியது "tag 98614"
இலவச எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு, பெயர் பட்டியல் பலகையில் ஒட்டப்பட்டது.
சேலம்:
2022-2023-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 25.05.2022 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து, அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் கடந்த 28-ந்தேதி ஒட்டப்பட்டது.
தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் இன்று (30-ந்தேதி) குலுக்கல் முறையில் தெரிவு செய்து மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
குலுக்கல் மூலம் தேர்வு இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குலுக்கல் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் பிறந்த சான்றிதழ், சாதி சான்றிதழ், நலிவடைந்த பிரிவினருக்கான வருமான சான்று, ஆதார் அட்டை, புகைப்படம், பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.
அதன்படி இன்று காலை 9 மணிக்கு முன்பாக பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு வந்திருந்தனர். ஒரு இடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்ததால் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளிகளில் குலுக்கல் முறையை கண்காணிக்க ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
காலை 10 மணி அளவில் வகுப்பறையில் வைத்து மாணவ- மாணவிகளின் பெயர்கள் துண்டு சீட்டுக்களில் எழுதி அட்டை பெட்டிகளில் போடப்பட்டது. இதையடுத்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் முன்னிலையில் அரசு அதிகாரி மேற்பார்வையில் அட்டை பெட்டி குலுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இன்று பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு மையமாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்வு முடிந்ததும் பிற்பகல் வேளையில் குலுக்கல் நடைபெற்றது.
பெயர் பட்டியல் இந்த குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் அரசு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது. மேலும் இந்த தேர்வு பட்டியலும் பள்ளி நோட்டீசு பலகையில் ஒட்டப்பட்டது. மேலும் உடனுக்குடன் இந்த குழந்தைகளுக்கு இலவச எல்.கே.ஜி. சேர்க்கை வழங்கப்பட்டது.
இலவச மற்றும் கட்டாய கல்வி திட்டத்தில் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
கீழக்கரை
தமிழகம் முழுவதும் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி ஏழை, எளிய குழந்தைகள் தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளியில் படிப்பதற்காக இலவச மற்றும் கட்டாய கல்வியை மத்திய அரசு அறிவித்தது.
இதன்படி எல்.கே.ஜி.வகுப்பில் சேர்க்க கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளிக்கு 38 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஆவணங்களுடன் பெற்றோர்கள் இணைய தளத்தில் பதிவு செய்தனர்.
இஸ்லாமியா பள்ளியில் சேருவதற்காக மொத்தம் 211 மனுக்கள் கல்வித்துறையால் பெறப்பட்டது. இதில் மாவட்ட கல்வித்துறை அதிகாரி அலுவலகத்தில் 10 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, மீதமுள்ள 28 இடங்களுக்கு மாவட்ட கல்வி துறையால் பரிந்துரை செய்யப்பட்ட 163 பெயர்கள் எழுதப்பட்டு குலுக்கல் நடந்தது.
ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பெயர் தேர்வு செய்யப்படுமா? என்ற ஆவலில் பள்ளி வளாகத்தில் காத்திருந்தனர். பள்ளி தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராஹிம் ஆலோசனையின் படி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், மாவட்ட கல்வித்துறை அலு வலக பார்வையாளர் மாயா முன்னிலையில் குலுக்கல் நடந்தது. இதில் 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி நிர்வாக அலுவலர் மலைச்சாமி தேர்வு செய்யப்பட்ட குழந்தை களின் பெயரை அறிவிப்பு செய்தார். பின்னர் பள்ளி யில் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது.
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார்.
நியூயார்க்:
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 460 குழந்தைகள் பலியாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குந்தூஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.
தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தினமும் சிகிச்சைக்காக அழைத்துவரப்படுவதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது பாஹிம் கூறுகிறார்.
பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு போர் குறித்து விளக்கிய யுனிசெப், ஆப்கானிஸ்தானில் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்த ஆண்டில் இவ்வளவு குழந்தைகள் குண்டுவெடிப்பில் பலியானது கவலை அளிப்பதாக யுனிசெப் கூறி உள்ளது. வறுமை, உணவுப் பஞ்சம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளால் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... பத்ம பூஷன் விருது பெற்றார் பி.வி.சிந்து
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. #Easterattacks #SriLankaBlasts
கொழும்பு:
இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை குறித்து கொழும்பை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துவிட்டன. அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர்.
குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் ‘உளவியல் முதலுதவி’ தேவைப்படுகிறது. இந்த வேதனையுடன் அவர்கள் புதிய சவால்களை சந்திக்க தயங்குவார்கள். ஆகவே, உளவியல் முதலுதவி அளிப்பதன் மூலம், அவர்களின் ஆரம்பகட்ட மன உளைச்சலை தணிக்க முடியும் என்று செஞ்சிலுவை சங்கம் கருதுகிறது.
மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், பாதுகாப்பு சோதனையும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Easterattacks #SriLankaBlasts
இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை குறித்து கொழும்பை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் ‘உளவியல் முதலுதவி’ தேவைப்படுகிறது. இந்த வேதனையுடன் அவர்கள் புதிய சவால்களை சந்திக்க தயங்குவார்கள். ஆகவே, உளவியல் முதலுதவி அளிப்பதன் மூலம், அவர்களின் ஆரம்பகட்ட மன உளைச்சலை தணிக்க முடியும் என்று செஞ்சிலுவை சங்கம் கருதுகிறது.
மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், பாதுகாப்பு சோதனையும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Easterattacks #SriLankaBlasts
கோவில் கும்பாபிஷேக விழாவில் ஐஸ் கீரிம் சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து 2 ஐஸ் கம்பெனிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சீர்காழி:
நாகை மாவட்டம் திருவெண்காடு அருகே வானகிரி கிராமம் மீனவர் தெருவில் ரேணுகாதேவி கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பகுதியில் 5-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐஸ் விற்பனை செய்தனர்.
கடும் கோடை வெயிலில் கோவிலுக்கு திரண்டு வந்திருந்த பக்தர்கள் அப்பகுதியில் விற்பனை செய்த பல்வேறு கம்பெனிகளில் குச்சி ஐஸ், குல்பி ஐஸ், பார் ஐஸ் போன்றவைகளை வாங்கி சாப்பிட்டனர்.
அதேபோல் தங்களது குழந்தைகள் விரும்பி கேட்ட ஐஸ்களையும் வாங்கி கொடுத்தனர். ஐஸ் சாப்பிட்டு வீடு திரும்பிய வானகிரி கிராமத்தை சேர்ந்த பல குழந்தைகள், பெரியவர்களுக்கு திடீர் வாந்தி, மயக்கம், வயிற்று போக்கு ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாகவும், தனியார் வாகனங்கள் மூலமாகவும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதில் வானகிரி வடக்கு தெருவை சேர்ந்த விவேகா (வயது3), மதுஷா (3), கனி(5), பூம்புகார் பகுதியை சேர்ந்த அபிஷ் ஆனந்த்(2),மித்ரன்(2), தரங்கம்பாடியை சேர்ந்த மு.சபிதா(5), வானகிரியை சேர்ந்த மித்ரன் (3), கவிஷா (5),பூம்புகாரை சேர்ந்த கனிஷ்கா (6), வானகிரியை சேர்ந்த ரஞ்சித் (12), பிரித்தி (14), பூம்புகாரை சேர்ந்த பவித்ரா(4), அனுசியா (2), சந்தியா(22),சர்மா(11), வசந்த் (2), பிரமிதா(4), முகேஷ்(5), அனு(4), நமீதா (4) உள்ளிட்ட 22 பேர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் தேவலதா தலைமையில் மருத்துவ குழுவினர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மீதி உள்ள 85-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த சீர்காழி தாசில் தார் சபீதாதேவி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வானகிரி கிராமத்தில் சுகாதார குழுவினர்கள் முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஐஸ் மாதிரியை திரட்டி ஆய்வுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து வியாபாரிகள், காலாவதியான ஐஸ்சை விற்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பூம்புகார், சீர்காழி, திருவெண்காடு, செம்பனார் கோவில் பகுதிகளை சேர்ந்த 4 ஐஸ் கம்பெனிகளில் சுகாதார துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மணிக் கிராமம் பகுதியில் உரிய உரிமம் இல்லாமல் நடத்தி வந்த ஒரு ஐஸ் கிரீம் கம்பெனிக்கும், திருவெண்காடு பகுதியில் மற்றொரு ஐஸ் கம்பெனிக்கும் சுகாதார துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் காலாவதியான ஐஸ்கீரிம்களையும் பறிமுதல் செய்தனர்.

ஊட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். #PolioDropsCamp
ஊட்டி:
ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு குழந்தைக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமுக்காக 770 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சிறப்பு வாகனங்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க பயன்படுத்தப்படுகிறது.
பஸ் நிலையம், ரெயில் நிலையம், மார்க்கெட், சோதனைச்சாவடிகள், 29 கோவில்கள், 52 கிறிஸ்தவ ஆலயங்கள், 6 மசூதிகள் மற்றும் அனைத்து முக்கிய சுற்றுலா தலங்களிலும் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. நகர்புற பகுதிகளில் 135 போலியோ சொட்டு மருந்து முகாம்களும், கிராம பகுதியில் 635 போலியோ சொட்டு மருந்து முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளன. மாவட்ட அளவில் 42,558 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ நோயினை அறவே ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #PolioDropsCamp
குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது என போப் ஆண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். #PopFrancis
வாடிகன் சிட்டி:
குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சர்வதேச மாநாடு வாடிகனில், போப் ஆண்டவர் பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை சேர்ந்த பேராயர்கள் மற்றும் பாதிரியார்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய போப் ஆண்டவர் பிரான்சிஸ், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் கூறியதாவது:-
குழந்தைகளை பாலியல் ரீதியில் துன்புறுத்துபவர்கள் சாத்தானின் கருவிகள் ஆவர். தற்போது நடைபெற்று வரும் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்கள், பழங்காலத்தில் அதீத மதநம்பிக்கை கொண்டவர்கள் மனிதர்களை பலி கொடுத்ததை எனக்கு நினைவூட்டுகிறது. இது மிகவும் வேதனை தரக்கூடியது.
பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஒவ்வொரு வழக்கும் மிக தீவிரமாக விசாரிக்கப்படும். பேராயர்கள் தங்கள் தேவாலயங்களில் உள்ள பல்வேறு விதிமுறைகளை ஆய்வு செய்வதுடன், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களை தடுக்கும் வலுவான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் தாய் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
ராஜாக்கமங்கலம் முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெயராம் (வயது 34). இவரது மனைவி ரம்யா (26). இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி இரணியலை அடுத்த பட்டன்விளை பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அங்கிருந்த அவர் திடீரென்று 2 குழந்தைகளுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ரம்யா மற்றும் அவரது குழந்தைகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை.
இதையடுத்து இரணியல் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பொன்தேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான ரம்யா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.

ஹங்கேரியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமான வரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படும் என்று பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்துள்ளார். #Hungarianwomen #Children
புடாபெஸ்ட்:
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்திக்கிறது. அங்கு ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு மக்கள்தொகையில் வீழ்ச்சி ஏற்படுகிறது.
இதனால் நாட்டில் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர்பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெறும் பெண்களுக்கு, வருமானவரி செலுத்துவதில் இருந்து வாழ்நாள் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் விக்டர் ஆர்பன் அறிவித்தார்.
மேலும், நாட்டில் சரிந்துவரும் மக்கள்தொகையை சீர்செய்யும் விதமாக, இளம் தம்பதியருக்கு 36 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வட்டி இல்லா கடனாக வழங்கப்படும் என்றும் அந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்த பிறகு கடன் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். #Hungarianwomen #Children

அயனாவரம் அருகே நடத்தை பற்றி பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசியதால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெண் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அம்பத்தூர்:
அயனாவரம் கெல்லீஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி திவ்யா (28). இவர்களுக்கு விக்னேஷ் (11), என்ற மகனும், அபிநயா (8), செந்தமிழ் (5) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். கருத்துவேறுபாடு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து சென்ற வெங்கடேஷ் ஒருவருடத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.
இந்தநிலையில் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் திவ்யா வீட்டுக்கு வந்து சென்றார். இதை பக்கத்து வீட்டு பெண்கள் தவறாக பேசினார்கள். திவ்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டனர்.
இதனால் மனவருத்தம் அடைந்த திவ்யா நேற்று இரவு பாலில் எலிமருந்து கலந்து குடித்தார். தனது குழந்தைகள் விக்னேஷ், அபிநயா மற்றும் செந்தமிழ் ஆகியோருக்கும் கொடுத்தார். வயிறு மற்றும் தொண்டை எரிந்ததால் நள்ளிரவு 12 மணியளவில் குழந்தைகள் அலற தொடங்கினர்.
உடனே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தலைமை செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தார். பக்கத்து வீடுகளை சேர்ந்த 3 பெண்களிடம் விசாரணை நடத்தினார். #tamilnews

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்து கைதாகி, ஈராக் சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் ரஷிய நாட்டுப் பெண்களின் 30 குழந்தைகள் விமானம் மூலம் மாஸ்கோ நகரை வந்தடைந்தனர். #RussianISFighters #IraqISFighters
மாஸ்கோ:
சிரியா மற்றும் ஈராக் நாட்டின் சில பகுதிகளை முன்னர் கைப்பற்றி, அங்கிருந்து பரந்து, விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்க பயங்கரவாத ஆயுதத்தை கையில் ஏந்திய ஐ.எஸ். இயக்கத்தில் சேர்வதற்காக கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து சில வாலிபர்கள் சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு சென்றனர்.
இதேபோல், இணையதளங்களின் வழியாக மூளைச்சலவை செய்யப்பட்டு உலகின் பல நாடுகளை சேர்ந்த வாலிபர்களும், இளம்பெண்களும் சிரியா மற்றும் ஈராக் நாடுகளுக்கு சென்றனர். அங்கிருந்த ஐ.எஸ். பயங்கரவாத முகாம்களில் சேர்ந்த அவர்கள் போர் பயிற்சிபெற்று, அரசுப் படைகள் மற்றும் மக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டனர்.
அவ்வகையில், ரஷியாவில் இருந்து ஈராக் நாட்டுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பெண்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் கைது செய்யப்பட்டனர். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர்கள் பல்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷியாவில் உள்ள பிரபல தொண்டு நிறுவனத்தின் மூலம் ஈராக் சிறைகளில் அடைபட்டு கிடக்கும் 115 குழந்தைகளை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒருபகுதியாக 16 சிறுமியர் 14 சிறுவர்கள் என 3 முதல் 13 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகள் முதல்கட்டமாக நேற்று விமானம் மூலம் மாஸ்கோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
போதிய கவனிப்பின்றி சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு மற்றும் மன அழுத்த பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த குழந்தைகள் அனைவரும் மாஸ்கோவில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரும் ஜனவரி மாதத்தில் மேலும் 36 குழந்தைகளை அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ரஷிய குழந்தைகள் உரிமை அமைப்பின் நடுவர் அன்னா குஸ்னேட்சோவா தெரிவித்துள்ளார். #RussianISFighters #IraqISFighters

இப்படி ரஷியாவில் இருந்து ஈராக் வந்த பல பெண்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். சில பெண்கள் இங்கு வந்த பின்னர் குழந்தைகளை பெற்றனர். தற்போது தண்டனை அனுபவித்துவரும் இந்தப் பெண்களுடன் அவர்களின் குழந்தைகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷியாவில் உள்ள பிரபல தொண்டு நிறுவனத்தின் மூலம் ஈராக் சிறைகளில் அடைபட்டு கிடக்கும் 115 குழந்தைகளை மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒருபகுதியாக 16 சிறுமியர் 14 சிறுவர்கள் என 3 முதல் 13 வயதுக்குட்பட்ட 30 குழந்தைகள் முதல்கட்டமாக நேற்று விமானம் மூலம் மாஸ்கோ நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
போதிய கவனிப்பின்றி சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு மற்றும் மன அழுத்த பாதிப்புகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த குழந்தைகள் அனைவரும் மாஸ்கோவில் உள்ள தேசிய மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
வரும் ஜனவரி மாதத்தில் மேலும் 36 குழந்தைகளை அழைத்து வரும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக ரஷிய குழந்தைகள் உரிமை அமைப்பின் நடுவர் அன்னா குஸ்னேட்சோவா தெரிவித்துள்ளார். #RussianISFighters #IraqISFighters
கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க உதவியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ‘சுலாகிட்டி’ நரசம்மா (98) இன்று காலமானார். #SulagittiNarasamma
பெங்களூரு:
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நரசம்மா. தெலுங்கை தாய்மொழியாக கொண்ட இவரது முன்னோர்கள் நாடோடிகள் வம்சத்தினராக இருந்தனர்.
கல்வியறிவு இல்லாத நரசம்மாவுக்கு 12-வது வயதில் திருமணம் செய்து வைத்தனர். அவருக்கு பிறந்த 12 குழந்தைகளில் 4 மகன்கள் சிறுவயதில் இறந்து விட்டனர்.
1940-ம் ஆண்டில் சுமார் 20 வயது பெண்ணாக இருந்தபோது இவரது அத்தைக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது மருத்துவச்சியாக இருந்து பிரசவம் பார்த்த தனது பாட்டி மரிகெம்மா என்பவருக்கு நரசம்மா உறுதுணையாக இருந்தார்.
இதன்மூலம் பிரசவம் பார்க்கும் முறையை தனது பாட்டியிடம் கற்றுகொண்ட நரசம்மா தங்களது உறவினர்கள் வீட்டில் நடந்த பிரசவங்களை பின்னர் தனியாக பார்க்க ஆரம்பித்தார்.
இதனால், கன்னட மொழியில் ‘வீட்டில் பிரசவம் பார்க்கும் மருத்துவச்சி’ என்னும் பொருள்படும் ‘சுலாகட்டி’ என்ற துணை பெயர் நரசம்மாவுடன் ஒட்டிக் கொண்டது.
காலப்போக்கில் பிரசவம் பார்க்கும் கலையில் கைதேர்ந்த மருத்துவச்சியாக மாறிவிட்ட ‘சுலாகட்டி’ நரசம்மா, கிருஷ்ணாபுரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெகு சீக்கிரம் பிரபலமாக தொடங்கினார். சரியான வாகன போக்குவரத்து வசதிகள் இல்லாத அந்த காலத்தில் அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லாத பல பகுதிகளுக்கு இவர் சிரமப்பட்டுச் சென்று பிரசவம் பார்த்து வந்தார்.
கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையின் நிலை எப்படி இருக்கிறது? என்பதை அறிந்து சொல்லும் அளவுக்கு
காலப்போக்கில் இந்த தொழிலில் அவர் நிபுணத்துவம் பெற்றார். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மருந்து, பிறந்த குழந்தைக்கு புகட்டும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆகியவற்றையும் நாட்டு வைத்திய முறையில் வீட்டில் தயாரிக்க ஆரம்பித்தார்.

தன்னை உதவிக்கு அழைத்தவர்களில் பலரிடம் பணம் ஏதும் கட்டணமாக வாங்காமல் இலவசமாகவே மருத்துவம் பார்க்கும் சேவையை செய்துவந்த நரசம்மா இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளின் பிறப்புக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.
இந்த துறையில் சுமார் 70 ஆண்டுகளாக இவர் ஆற்றிய அரும்சேவையை பாராட்டி கடந்த 2012-ம் ஆண்டில் ‘இந்தியாவின் சிறந்த குடிமகள்’ விருது நரசம்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் மிகப்பெரிய சிறப்புக்குரிய நான்காவது விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை இந்த ஆண்டு அவர் பெற்றார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பெங்களூரு நகரில் நரசம்மா (98) இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு துறைகளை சார்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #PadmaShriawardee #SulagittiNarasamma #Narasammapassesaway