என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tag 99728"

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பெற்றோர் பணம் தராததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர், தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    ஒட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள மேலமுடிமண் பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் லெட்சுமண 
    பெருமாள். இவருக்கு செல்வக்குமார்(வயது 24), கார்த்தி(22) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    செல்வக்குமாருக்கு திருமணமாகி ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். தனது மனைவியின் ஊரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அமீர்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கார்த்தி ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மாலினி(22) என்ற மனைவி உள்ளார். இவர் தனது பெற்றோருடன் ஒன்றாக வசித்து வந்தார். சமீபகாலமாக கார்த்திக்குக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் தனது பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். உடனே அவரது தாயாரும் தன்னிடம் இருந்த நகை மற்றும் ரூ.1 லட்சம் பணத்தை கார்த்திக்கிடம் கொடுத்துள்ளார்.

    இதுபற்றி அறிந்த செல்வக்குமார், தனக்கும் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர், கார்த்தி பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்ததால் கொடுத்தோம் என்று கூறி உள்ளனர். ஆனாலும் செல்வக்குமார் அடிக்கடி பணத்தை கேட்டு சண்டை போட்டு வந்துள்ளார்.

    சமீபத்தில் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார், நேற்று இரவு தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அங்கு லெட்சுமண பெருமாள் மற்றும் கார்த்தியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது வாக்குவாதம் முற்றவே, தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்தியை செல்வக்குமார் குத்தினார். இதில் கார்த்தியின் மார்பில் கத்திக்குத்து விழுந்தது.

    உடனே அருகில் நின்று கொண்டிருந்த அவரது உறவினர் கண்ணன், தடுக்க முயன்றார். அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், சரிந்து விழுந்த கார்த்தி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

    பின்னர் அங்கிருந்து செல்வக்குமார் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டப்பிடாரம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமாரை மீட்டு ஒட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கார்த்தியின் மனைவி மாலினி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.
    தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம் பகுதியில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    மாதவரம் மஞ்சம்பாக்கத்தில் இருந்து வடபெரும்பாக்கம் வழியாக புழல், செங்குன்றம் பகுதிகளுக்கு செல்லும் மாதவரம் நெடுஞ்சாலையில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை செங்குன்றத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவர் நடத்தி வருகிறார்.

    இங்கு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்களான கமல் என்ற கமலக்கண்ணன், குமரன், நவீன் ஆகியோர் மது குடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு 7.30 மணி அளவில் இருவரும் மது குடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கிருந்த வடமாநில லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் 2 பேரும் சாப்பிடுவதற்கு சப்பாத்தி இருக்கிறதா? என கேட்டுள்ளனர். இது தொடர்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கமல், குமரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை எடுத்துக் கொண்டு அதனை வேகமாக பின்னோக்கி ஓட்டினார். மின்னல் வேகத்தில் லாரியை ஓட்டிச் சென்ற அவர் கமல், குமரன், நவீன் ஆகியோர் மீது லாரியை ஏற்றினார். இதில் இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள். நவீன் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் டிரைவர், லாரியை திருப்பி சிறிது தூரம் ஓட்டிச் சென்று விட்டு தப்பினார். அவருடன் இருந்த கிளீனரும் தலைமறைவானார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் லாரி யார்டுக்கு திரண்டு சென்றனர். அவர்கள் ஆத்திரத்தில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 5 லாரிகளின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.

    இதனால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் மகேஷ், உதவி கமிஷனர்கள் முருகேசன், தட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், கொடிராஜ் உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கமல், குமரன் இருவர் மீதும் லாரியை ஏற்றி அவர்களது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த டிரைவர் கண்ணையாலால்சிங், கிளீனர் கிரீஸ்குமார் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    உயிரிழந்த கமல், குமரன் இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். ஒன்றாக ஒரே பள்ளியிலேயே படித்துள்ளனர். இருவரும் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தனர். கார்களை வாடகைக்கு விடும் தொழிலில் ஈடுபட்டு வந்த இருவரும் ஒரே நேரத்தில் கொலையுண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    வடபெரும்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார்கள்.

    இதன் காரணமாக அங்கு போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட கமல், குமரன் இருவருமே இளம் வயதை சேர்ந்தவர்கள். கமலுக்கு 36 வயதும், குமரனுக்கு 34 வயதும் ஆகிறது. இருவருக்கும் திருமணமாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர்.

    படுகாயத்துடன் உயிர் தப்பிய நவீனுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் வேலை செய்து வரும் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களை பற்றிய கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர், கிளீனர் இருவரும் சேர்ந்து லாரியை ஏற்றி 2 வாலிபர்களை கொலை செய்துள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதையடுத்து செங்குன்றம் பகுதியில் வடமாநிலத்தவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    செங்குன்றம் அருகே லாரியை ஏற்றியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.
    சென்னை:

    சென்னை செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கத்தில் லாரிகளை நிறுத்தும் பார்க்கிங் யார்டில் மதுபோதையில் ஏற்பட்ட மோதலில் லாரியை ஏற்றி கமல், குமரன் ஆகிய 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    இதுதொடர்பாக செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    லாரியை ஏற்றியதில் நவீன் என்ற வாலிபர் படுகாயம் அடைந்திருந்தார். ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரவில் அனுமதிக்கப்பட்டிருந்த நவீனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நவீன் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம் லாரியை ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையுண்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேசத்தை சேர்ந்த லாரி டிரைவர் கண்ணையாலால், கிளீனர் கிரிஸ்குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உயிர் பலி 3 ஆக உயர்ந்துள்ள நிலையில் போலீசார் வடபெரும்பாக்கம் பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    • அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர்.
    • நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர். இதனை பார்த்த பூபாலன் ஏன் பள்ளி வளாகத்தில் மது அருந்துகிறீர்கள் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பூபாலனிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பூபாலனை மீண்டும் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் வழிமறித்து மிரட்டி உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என எச்சரித்துள்ளனர். இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் பூபாலன் புகார் செய்தார்.

    இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வீட்டின் சுவற்றின் அருகே விழுந்து வெடித்ததில் அங்கிருந்த மரம் லேசாக பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த பூபாலனை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது பற்றி சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காட்பாடி அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த கரசமங்கலம் சிங்கா ரெட்டியூரில் சிலர் இன்று காலை கானாறு வழியாக நடந்து சென்றனர். அப்போது கானாறு பள்ளத்தில் 35 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் தலை குப்புற கவிழ்ந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    இறந்து கிடந்த வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.

    மேலும் அவரது ஒரு கையில் 5 விரல்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தன. கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் யார் என தெரியவில்லை.

    இறந்தவர் சிகப்பு கலரில் டி-சர்ட்டும், சிமெண்ட் கலர் பேண்ட்டும் அணிந்திருந்தார். இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் கொலைக்கான காரணம் என்ன? முன்விரோத தகராறில் கொலை செய்து இங்கு வீசி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே கணவரை கொன்று நாடகமாடிய மனைவியை 2 மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு வீரமணி (வயது36) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜதானி அருகில் உள்ள கொட்டபட்டியில் அய்யனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 12.3.19-ந் தேதியன்று அய்யனார் தலையில் காயங்களுடன் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

    உறவினர்கள் அனைவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யனார் உடலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யனார் எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது.

    தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வீரமணியே போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    பல்வேறு கோணங்களில் பலரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார்.

    போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் சம்பவத்தன்று அதேபோல் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாளால் தலையில் தாக்கியதாக கூறினார். இதனையடுத்து போலீசார் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    திருப்பத்தூர் அருகே மனைவியை கொன்று கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த குரிசிலாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் ( வயது 30). பேண்ட் வாத்திய இசை கலைஞர். இவருடைய மனைவி சின்னபாப்பா (28). தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகளும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    முருகன் தினமும் குடித்துவிட்டு வந்து சின்ன பாப்பாவிடம் தகராறு செய்து வந்தார். நேற்றிரவு கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    இன்று காலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்து, முதுகில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த சின்னபாப்பா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    ஆத்திரத்தில் மனைவியை கொன்றுவிட்டோமே என்று அதிர்ச்சியடைந்த முருகன் தானும் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி மனைவியின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி பிணத்தின் மீது அவரது உடலும் கிடந்தது.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் குரிசிலாப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து கணவன், மனைவி பிணத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அனாதையான 2 குழந்தைகளும் தாய், தந்தையின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

    மனைவியை வெட்டி கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சாயர்புரத்தில் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 3 பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    சாயர்புரம்:

    சாயர்புரம் புது நகரை சேர்ந்தவர் முருகன் மகன் மாதேஷ் (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் (24). அங்கு நடை பெற்ற சந்தன மாரியம்மன் கோவில் திருவிழாவில் பேனர் வைக்கப்பட்டது. அதில் நவீன்குமார் படம் இடம் பெறவில்லை. 

    இதுகுறித்து ஆனந்த ராமன், மாதேஷ், பொன் மாணிக்கம் ஆகியோரிடம் எனது படம் ஏன் பேனரில் சேர்க்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றவே 3 பேரையும் நவீன்குமார் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    காயம் அடைந்த 3 பேரும் சாயர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் நவீன்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குரோம்பேட்டையை அருகே வாகனத்துக்கு வழிவிடும் தகராறில் பிளஸ்-2 மாணவரை குத்திக்கொலை செய்த பா.ஜனதா பிரமுகர்-மகன் கைது செய்யப்பட்டனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டையை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் விக்னேஷ் (வயது16) தாம்பரத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 சேர்ந்து உள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அதே பகுதியை சேர்ந்த நண்பரான கல்லூரி மாணவர் நந்தாவுடன்(19) மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள மற்றொரு நண்பரை சந்திக்க சென்றார்.

    குரோம்பட்டை சி.எல்.சி. லைன் ரோட்டில் சென்ற போது முன்னாள் மற்றொரு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியைச் சேர்ந்த பாரதீய ஜனதா பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவது தொடர்பாக விக்னேஷ், நந்தா ஆகியோருக்கும் மதன், அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் விக்னேசும், நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் அங்கேயே காத்திருந்தனர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் மோட்டார்சைக்கிளில் வந்தனர். அவர்களை வழிமறித்து மதனும், நித்தியானந்தமும் சரமாரியாக குத்தினர்.

    இதில் விக்னேசும், நந்தாவும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் இன்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே மதனையும், அவரது மகன் நித்தியானந்தத்தையும் கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்திருந்தனர்.

    இப்போது விக்னேஷ் இறந்ததால் அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிங்காரபேட்டை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேரை போலீசார் கைது செய்து ஊத்தங்கரை கிளை சிறையில் அடைத்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரபேட்டை அருகே சந்தை செயல்பட்டு வருகிறது. சந்தைக்கு செல்லும் வழியில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது மோட்டார்சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினார். அப்போது அங்கு வந்த குப்பநத்தம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 30), திருப்பதி (21), அஜீத் (24), பிரவீன் (25) ஆகிய 4 பேரும் சேர்ந்து வெங்கடேசன் வண்டி நிறுத்தியது குறித்து அவரிடம் கேட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4பேரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து வெங்க டேசன் சிங்காரபேட்டை போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இளவரசன், அஜித், திருப்பதி ஆகிய 3 பேரை கைது செய்தனர். 

    இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேசன் தரப்பினரை சேர்ந்த ராஜி, சென்னகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் சேர்ந்து தங்களை தாக்கியதாக 3 பேர் மீது அஜித் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் ராஜி, வெங்கடேசன், சென்னகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் ஜெயமோகனும், பிரவீனும் தலைமறைவாக உள்ளளர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஊத்தங்கரை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
    பெரியகுளம் அருகே தனியார் மில் பஸ் கண்ணாடியை உடைத்தவர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    பெரியகுளம் அருகே வடுகபட்டி மறவர் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூணன் (வயது 39). தனியார் மில் பஸ் டிரைவராக உள்ளார். சம்பவத்தன்று வடுகபட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே பஸ்சை ஓட்டிச் சென்றார். அப்போது மேல் மங்கலம் ராஜேந்திரபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (44) என்பவர் வழி மறித்து தகராறு செய்தார். இதை அர்ஜூணன் தட்டிக் கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் பஸ்சின் முன் பக்க கண்ணாடியை உடைத்தார். மேலும் அர்ஜூணனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்.

    போச்சம்பள்ளி அருகே பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள சுண்டக்காப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது50). விவசாயியான இவர் தோட்டத்தில் பட்டுக்கூடு வளர்த்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அன்பழகன் நேற்று மதியம் தனது விவசாயதோட்டத்தில் பூச்சிமருந்தை குடித்து  மயங்கி கிடந்தார்.  

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனேஅவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து அன்பழகனை மீட்டு சிகிச்சைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சைபெற்ற அன்பழகன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்த அன்பழகனுக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளார்.
    ×