என் மலர்
நீங்கள் தேடியது "tamil"
- சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்;
- அப்பர், எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்துத் திருந்தியவர்;
இயல், இசை, நாடகம் என்று முத்தமிழ் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. வாரியார் சுவாமிகள் இயலில் நான்கு தமிழ் உண்டு என்கிறார். அவை தேவாரத் திருவாசகங்களில் உண்டு என்கிறார்!
கொஞ்சு தமிழ்:
திருஞானசம்பந்தர் உமை அன்னை தந்த ஞானப்பாலை உண்டு தமது மூன்றாவது வயதிலேயே "தோடுடைய செவியன்'' என்று தம் மழலை மொழியில் கொஞ்சிப் பாடினார். அதனால் அவர் தமிழ் கொஞ்சு தமிழ்.
விஞ்சு தமிழ்:
சுந்தரர் மிடுக்குள்ளவர்; கயிலையில் சிவப்பரம்பொருளின் அணுக்கத் தொண்டராக இருந்தவர்; திருமுனைப்பாடி நாட்டு அரசராகிய நரசிங்கமுனையர் வளர்ப்புப் பிள்ளை; ஆண்டவரிடத்து அவர் உரிமையுடன் பேசுவது இயல்பு தானே? அதனால் அவர் தமிழ் விஞ்சு தமிழ்.
கெஞ்சு தமிழ் :
அப்பர், எண்பது வயது முதியவர்; குறைகளை உணர்ந்துத் திருந்தியவர்; தன்னைத் தாழ்த்திக் கொண்டு மன்றாடுபவர்; அதனால் அவர் தமிழ் கெஞ்சு தமிழ்.
நெஞ்சு தமிழ்:
மாணிக்கவாசகர், "அழுதால் உன்னைப் பெறலாமே''என்றவர்; பக்தியால் நெஞ்சுருகி, நைந்து நெகிழ்ந்த உள்ளத்துடன் உருகுவார். அதனால் அவர் தமிழ் நெஞ்சு தமிழ்.
-வீரமணி
- நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குச் சென்றுள்ளது.
- பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டு, 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அது இன்னும் நடைமுறைக்கு வராதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.
தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16-ம் ஆண்டில் அச்சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. தமிழக அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுகிறது. அதைக் காண சகிக்கவில்லை. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குச் சென்றுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் நீதிபதிகளுக்கு உணர்த்தும் வகையில் வாதிடக் கூடிய திறமையான சட்ட வல்லுனரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் வெற்றி பெற்று நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் “மாபெரும் தமிழ் கனவு” நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
- இந்நிகழ்ச்சியில் “தொன்மை மறவேல்” என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி கலெக்டர் கார்மேகம் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் "தொன்மை மறவேல்" என்ற தலைப்பில் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் கலை, இலக்கியம், தொன்மை மற்றும் வாழ்வின் முன்னேற்றம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பல்வேறு துறை வல்லுநர்கள் பதில் அளிக்க உள்ளனர்.
மேலும் மகளிர் திட்டம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், உதவி இயக்குநர் (நான் முதல்வன்) திறன் பயிற்சி, மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், மாவட்ட நூலகம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுமாய் மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
- தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி காமராஜர் மணி மண்டபத்தில் தேசிய கல்விக் கொள்கை 3-வது ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால், அங்கு சில குறை இருந்தால் சொல்வேன். தமிழ்நாடு பாட திட்டத்துக்கு பதிலாக சி.பி.எஸ்.இ. பாடதிட்டத்தை அமல்படுத்திய தமிழிசை தமிழின துரோகி என தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கூறியுள்ளார்.
தமிழின துரோகியாக தமிழிசை இருக்க முடியாது.
தமிழ் என் உயிரிலும் இருக்கிறது. என் பெயரிலும் இருக்கிறது.
ஆனால் தமிழ்நாட்டில் இருந்து இங்கு வந்து புதுச்சேரி பாடத்திட்டத்தை தமிழ்நாடு பாட நூல் கழக தலைவர் விமர்சித்துள்ளார்.
22 மொழிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என்று தெரியாமல் பேசியுள்ளார். தமிழகத்தில் 47 ஆயிரம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழிலும், பிளஸ்-2 தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தமிழ் தேர்வை எழுதவில்லை.
ஆனால், நாங்கள் தமிழை வளர்த்துதான், வருகிறோம். எனவே, தமிழை வைத்து எங்களுக்கு மதிப்பெண் போட தமிழ்நாடு பாடநூல் கழக தலைவருக்கு உரிமை இல்லை.
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதில் அரசியல் கிடையாது. இதில் அரசியல் இருப்பதாக முன்னாள் முதல்வர் கூறுகிறார்.
அவருக்கு நான் பதில் சொல்வதாக இல்லை. 22 ஆண்டுகளாக பொது வாழ்வில் ஈடுபட்டு வருகிறேன்.
மக்கள் பணத்தை எடுத்து என்னுடைய வசதிக்காக செலவு செய்யமாட்டேன் என்றார்.
- மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்கு கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சி
- தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும்...
மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி இந்தி மற்றும் பிற அனைத்து இந்திய மொழிகளையும் உலக அரங்கில் பெருமைப் படுத்தி வருகிறார். மாநில மொழிகளுடன் இந்தி போட்டியிடவில்லை. அனைத்து மாநில மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலமாகவே நமது நாடு வலிமை அடையும்.
தமிழ், மராத்தி, குஜராத்தி ஆகிய மொழிகளுக்கு இந்தி மொழி போட்டியாக கொண்டு வருவதாக கூறப்படுவது தவறு. அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வதற்கான தேவையை நாம் உருவாக்க வேண்டும்.
அலுவல் மொழியை ஏற்றுக் கொள்வது சட்டம் மூலமாகவோ, சுற்றறிக்கை மூலமாகவோ இருக்கக் கூடாது. அது நல்ல முயற்சியின் மூலமாக வரவேண்டும். பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை பிரதான 10 மாநில மொழிகளில் தொடங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் இதற்கான பாடத்திட்டங்கள் வெளியாகும்.
பிரதமர் மோடி ஒருமுறை கூட பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தியதில்லை. மத்திய மந்திரிகளும் இந்திய மொழிகளில் உரை நிகழ்த்த முயற்சிக்கின்றனர். இது பல்வேறு மொழிகளை இணைக்கும் முயற்சிற்கு அதிக வேகத்தை அளிக்கிறது.
இந்திய மொழிகளும் அவற்றின் அகராதிகளும் ஆட்சி செய்த காலகட்டத்திற்குப் பிறகும் அப்படியே இருந்தன. இது ஒரு பெரிய சாதனை. மொழிகள் நாட்டை ஒன்றிணைக்க பாடுபட்டுள்ளன.
மொழியின் மரியாதை இல்லாமல் பாரம்பரியத்தின் மரியாதை முழுமையடையாது. உள்ளூர் மொழிகளுக்கு அனைவரும் மரியாதை கொடுக்கும்போதுதான் அலுவல் மொழி ஏற்றுக்கொள்ளப்படும். அலுவல் மொழியின் வேகம் மெதுவாக இருந்தாலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அதற்கு ஏற்புணர்வை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற உள்துறை மந்திரி அமித்ஷாவின் பேச்சு மற்ற மொழி பேசும் அனைத்து இன மக்களையும் இந்திக்குக் கொத்தடிமை ஆக்கும் எதேச்சதிகார முயற்சியாகும். இதைக் கேட்டு நடக்க தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல.
தமிழ்நாட்டுக்கு வந்தால் தொன்மையான மொழி என்று நாக்கில் தேன் தடவுவதும், டெல்லிக்குச் சென்றதும் நஞ்சைப் பரப்புவதும் பா.ஜ.க.வின் பசப்பு அரசியல் என்பதை அனைவரும் அறிவோம்.
இந்தித் திணிப்பை இப்போது மேற்கு வங்கம், கர்நாடகம் எனப் பல மாநிலங்களும் கடுமையாக எதிர்க்கத் தொடங்கி இருப்பதை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உணர வேண்டும்.
1965 மொழிப்புரட்சிக் காலத்தை மீண்டும் உருவாக்கி விடாதீர்கள் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.
- 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் தமிழ் சமூகம் பெற்றுள்ளது என வெங்கடேசன் எம்.பி., பேசினார்.
- பெண் கதா பாத்திரங்கள் தமிழ் மொழியில் உள்ளன.
மதுரை
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் சங்கீதா தலைமையில் "மாபெரும் தமிழ் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. இதில் எழுத்தாளரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான வெங்க டேசன் "தமிழ் – தொன் மையும், தொடர்ச்சியும்" என்ற தலைப்பில் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா பேசிய தாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மை யானது. தமிழ் மரபின் வளமை யையும், பண் பாட்டின் செழுமையையும், காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரித லையும் வளரும் தலை முறையினருக்கு கொண்டு சேர்த்திடும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படு கின்றது.
மதுரை மாவட்டத்தில் கடந்த கல்வி யாண்டில் 4 மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு ஏராளமான மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் பங்கேற்று பயனடைந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் மதுரை மாவட்டத்தில் 8 நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப் பட்டு ள்ளன. அதன் தொடக்க மாக, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி யில் இந்நிகழ்ச்சி சிறப்பாக தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பேசியதாவது:-
சங்ககாலம் தொட்டு தமிழ்நாடு மாநிலம் எழுத்தறி வும், படிப்பறிவும் கொண்ட கற்றறிந்த சமூகமாக திகழ்ந்து வருகிறது. மொழியில் உயரந்த மொழி, தாழ்ந்த மொழி என எதுவும் இல்லை. ஒவ்வொரு மொழி க்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1960-களில் மொழிப் பிரச்சனை தீவிர மானபோது ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழ்நாடு பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்கள் அன்றைய மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய தமிழ் சங்க இலக்கியங்களில் அவற்றை உருவாக்கிய எழுத்தா ளர்களுள் 40 பெண் எழுத்தாளர்கள் இருந்து ள்ளனர்.
இது வேறு எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு. "ஆணுக்கு பணி விடை செய்வதே பெண் ணின் கடமை" என்ற நோக்கத்தை வலியுறுத்தியே சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் இலக்கியங்கள் உள்ளன. "நீதி தவறியது மன்னனே ஆனாலும் எதிர்த்து போராடும்" நோக்கத்தை வலியுறுத்து கின்ற கண்ணகி போன்ற தீரமான பெண் கதா பாத்திரங்கள் தமிழ் மொழியில் உள்ளன.
நமது தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவும், படிப்பறிவும் பெற்று கற்றறிந்த சமூகமாக வாழ்ந்தோம் என்பதை கீழடி அகழ்வாய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற பொருட்களின் ஆய்வின் அடிப்படையில் நாம் அறிய முடிகிறது. சங்க இலக்கி யங்களில் பயன் படுத்தப் பட்ட பல்வேறு தமிழ் சொற்கள் இன்றளவும் சாமானிய மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது தமிழ்மொழியின் சிறப்பு. திருக்குறள், தொல்காப்பியம் போன்ற தமிழ் இலக்கியங்கள் மனிதனுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்பிக்கின்றன. சங்ககாலம் முதல் நிலப்பரப்புகளாக பிரிந்திருந்தாலும் தமிழ்மொழி உணர்வால் நம்மை ஒன்றிணைத்துள்ளது. பழம்பெருமை பேசுவதற் காக அல்ல, நம்மிடம் உள்ள மேன்மைகளை நாம் கொண்டாடும் போது நம் மனதில் நம்மையும் அறியாமல் உள்ள கீழ்மைகள் தானாக ஒழியும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் அனைவருக்கும் உயர்கல்வி தொடர்பான வழிகாட்டு கையேடு வழங்கப்பட்டது. மேலும், கல்விக் கடனுதவி பெறுதல், சுயதொழில் தொ டங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் அரசு மானியத்துடன் கூடிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனை மாணவ, மாணவி கள் பார்வையிட்டு பயன டைந்தனர்.
இதில் அரசு மருத்தவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராஜமோகன், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கோவிலின் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.
- திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
முப்பெருந்தேவியின் அம்சமாக விளங்கும் திருவாரூர் கமலாம்பிகை!
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலை சுற்றிப் பார்க்க வேண்டுமானால், முழுமையாக ஒருநாள் ஆகும் அவ்வளவு பெரிய கோவில்.
பெரும்பாலான கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் சிறிய சன்னதிகள்தான் இருக்கும்.
ஆனால், திருவாரூர் கோயிலின் உள்ளே இருக்கும் சன்னதிகள், கிட்டத்தட்ட தெருவோர கோயில்களின் அளவுக்கு பெரிய அளவில் இருக்கிறது.
இத்தலத்தில் உள்ள பக்தர்கள் ராகு கால துர்க்கையை வழிபட்டு பதவி உயர்வு பணிமாற்றம் உள்ளிட்ட பல காரியங்கள் வெற்றியடையப் பெறுகிறார்கள்.
இத்தலத்து சண்முகரை வழிபட்டால் பகை விலகும் நீலோத்பலாம்பாளை வழிபட்டால் அர்த்தஜாமத்தில் நைவேத்தியம் செய்து பால் சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கிறது.
பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவதும் நிகழ்கிறது. ருணவிமோசனப் பெருமானை வழிபட்டால் கடன் தொல்லை, உடற்பிணிகள் ஆகியன விட்டு விலகும்.
மேலும் பிரதான மூர்த்தியான தியாகேசரை வணங்கினால் திருமண வரம், குழந்தை வரம், கல்வி மேன்மை, வேலை வாய்பபு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவை நிறைவேறுகிறது.
மூலவர் வன்மீகி நாதரை வழிபட்டால் எண்ணற்ற வரங்களும், செல்வ செழிப்பும் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், ஆணவம் மறையும். அம்மன் சன்னதியில் உள்ள அட்சர பீடத்தை வணங்கினால் கல்வியறிவு பெருகும்.
திருவாரூரில் மூலவரை வன்மீகநாதர் என்ற திருப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
இவர் தலையில் பிறைச்சந்திரனை சூடியுள்ளதைப் போல, இத்தலத்து நாயகி கமலாம்பிகையும் சந்திரனை நெற்றியில் சூடியிருக்கிறாள். க-கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள் ஆகிய முப்பெரும் தேவியரின் அம்சமாக விளங்குகிறாள்.
வலக்கரத்தில் மலர் ஏந்தியும், இடது கரத்தை இடையில் வைத்தும், கால்களை யோகாசன நிலையில் அமைத்தும் ராணி போல் காட்சி தருகிறாள்.
சிவன் கோயில்களில் தேவாரம் பாடியதும், "திருச்சிற்றம்பலம்' எனக் கூறி முடிப்பார்கள்.
சிதம்பரம் நடராஜர் கோயிலே முதல் கோவில் என்ற அடிப்படையில், அங்கு நடராஜர் நடனமாடும் சிற்றம்பலத்தை இப்படி சொல்வதுண்டு.
ஆனால், சிதம்பரம் கோவிலுக்கும் முந்தைய கோயில் திருவாரூர் எனக் கருதப்படுவதால், இந்தக் கோவிலில் மட்டும் தேவாரம் பாடி முடித்ததும், "திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை.
தமிழகத்திலுள்ள தேர்களிலேயே திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும்.
இதனால் தான் "திருவாரூர் தேரழகு' என்பார்கள்.
சிவபெருமான் இத்தலத்தில் மட்டும் 364 திருவிளையாடல்கள் நிகழ்த்தியுள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி என்பதால், எமனுக்கு வேலை இல்லாமல் போனது.
எனவே இங்கு எமனே, சண்டிகேஸ்வரராக இருந்து இறைவனை வேண்டி தன் வேலையை காப்பாற்றிக் கொண்டார். எமபயம் உள்ளவர்கள் இங்கு வழிபடுவது சிறப்பு.
திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு.
சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோவிலின் தனிச்சிறப்பு. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது.
லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் "கமலாலயம்' எனப்படுகிறது.
பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சன்னதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது.
இதை "நித்திய பிரதோஷம்' என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர் களும் தரிசிப்பதாக ஐதீகம்.
எனவே, இந்தக் கோவிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
- ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மேயர் சரவணன் தலைமை தாங்கினார். துணை மேயர் கே.ஆர்.ராஜூ, உதவி கமிஷனர் தாணுமூர்த்தி, உதவி பொறியாளர் வாசு தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்தேச தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை மாநகர பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாளை கே.டி.சி. நகர் மேம்பாலத்தின் இருபுறமும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக இரும்பு சட்டங்களால் 'திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி' என ஆங்கிலத்தில் வரவேற்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இது நெல்லை மாநகராட்சி ஆணையாளரின் தமிழ் ஆட்சி மொழி சட்ட அரசாணையை மீறும் செயலாகும். எனவே அங்குள்ள ஆங்கில எழுத்துக்களை அகற்றி விட்டு தமிழிலில் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
34-வது வார்டு கவுன்சிலர் சர்மிளா கொடுத்த மனுவில், எனது வார்டுக்குட்பட்ட சமாதான புரம் முதல் மிலிட்டரி லைன் வரையிலான 60 அடி சாலையில் 20 அடிகள் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
மேலும் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற செல்லும் போது அங்கு இருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடி யாக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
- திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
- பிரபஞ்சசக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம்மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதி ரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன் சக்தி மிகுந்த கோவில் என்பதால் மன நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.
மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.
திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆனது என்ற கதைகள் உண்டு.
இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.
துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு கூட்டம்.
பெருமாளின் சிரித்த ஆனந்தமான பார்வை அனைவரையும் ஆனந்தபடுத்தும்.
அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.
நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.
- தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்க புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
- தேர்வு செய்யப்படும் தமிழ் ஆர்வலருககு ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்படும்
புதுக்கோட்டை
தமிழ் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரை தேர்வு செய்து அவர்களுக்கு "தமிழ் செம்மல்" விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. "தமிழ் செம்மல்" விருதாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசுத்தொகையும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பெற்று வருகின்றன. இவ்வகையில் 2023-ம் ஆண்டிற்கான "தமிழ் செம்மல்" விருதுக்கான விண்ணப்பங்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சி துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ் ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடிகளில் உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன்றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச்சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில் அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாக குறிப்பிடத்தக்க பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயல்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்துரை கடிதம் மற்றும் 2 கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கான சான்றுகளையும் இணைத்து புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதிக்குள் கிடைக்கப்பெறும் வகையில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலும் விண்ணப்பம் மற்றும் விவரங்களுக்கு 04322-228840 என்ற தொலைபேசி எண்ணிலோ, 914322 228840 என்ற வாட்ஸ்-அப் எண்ணிலோ அல்லது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரையோ தொடர்பு கொள்ளலாம்.
- பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்
- பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "அறுவடையை கொண்டாடும் இந்த பண்டிகை புதிய நம்பிக்கைகளையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரட்டும். இது புதிய விருப்பங்களை ஒளிரச் செய்து மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
- மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம்.
- இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள்.
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள, சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கவிப்பேரரசு வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
ஆண்டுக்கு ஆண்டு திருவள்ளுவர் திருநாளுக்கு பெருகி வரும் ஆதரவு திருவள்ளுவரின் செல்வாக்கு பெருகுவதை காட்டுகிறது. திருவள்ளுவர் பண்பாட்டின் வரலாற்று அடையாளம். கடந்த வாரம் அதிகம் பேசப்பட்ட இரு மொழி கொள்கை குறித்து பேச வேண்டும். திருக்குறளை படிக்கும்போது நாங்கள் தமிழையே படிக்கிறோம். மும்மொழி கொள்கை என்றால் திணிப்பு என்பதே தமிழர்களின் தீர்க்கமான எண்ணம் எனக் கூறினார்.
இந்தி திணிக்கப்படாத வரை கற்க வேண்டியவர்கள் கற்றுக் கொள்வார்கள். இங்கிருந்து வட மாநிலத்திற்கு செல்வர்கள் இந்தியை கற்றுக் கொள்கிறார்கள். அங்கிருந்து இங்கு தொழிலுக்காக வருபவர்கள் தமிழை கற்றுக் கொள்கிறார்கள். மூன்றாவது மொழி என்பது சூழலாலே உருவாகிறது என்றார்.
எப்படி கரையான் புகுந்து ஒரு மரத்தை அரிக்கிறதோ, அதுபோல் வடமொழி நிலத்தை அரித்து விட்டது. அப்படி நாங்கள் அதிகம் இழந்திருக்கிறோம். இனியும் எங்கள் மொழியையும், நிலத்தையும், இனத்தையும் இழக்க தயாராக இல்லை. இந்தி மொழி மீது எங்களுக்கு கோபம் இல்லை. அச்சம் தான் உள்ளது. இந்த நியாயமான அச்சத்தை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மேலும், இந்தி மொழியை திணித்து தமிழர்களுக்கு அச்சத்தை கொடுக்காமல் பாதுகாப்பை கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.