search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tea shop"

    • டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
    • சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர்.

    சென்னை எழும்பூர் அருகே உள்ள சிந்தாதிரிப்பேட்டையில் டீ குடிக்க அழைத்த நபரை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் (வயது 20) என்பவர் நேற்று முன் தினம் மதியம் டேம்ஸ் சாலை சந்திப்பில் டீ குடித்துக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாகப் பிரபு என்பவரும் அவரது மனைவி காயத்திரியும் வந்துள்ளனர். இவர்கள் ராகுலின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. எனவே பிரபுவையும், காயத்திரியையும் டீ குடிக்க அழைத்துள்ளார் ராகுல். அப்போது கணவன் மனைவி இருவரும், "நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா? ஓசியில் டீ குடிக்க" என்று ராகுலிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒரு கட்டத்தில் சாலையில் கிடந்த காலி பீர் பாட்டிலை எடுத்து ராகுலின் தலையில் அடித்துள்ளனர். இதில் ரத்தக்காயம் ஏற்பட்டு ராகுல் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதற்கிடையே இந்த தாக்குதல் தொடர்பாக ராகுல் அளித்த புகாரின் பேரில் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கொலை முயற்சி வழக்கின் கீழ் பிரபு, காயத்ரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். ராகுலுக்கும் இவர்களுக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு பின்னர் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கொல்கத்தா விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.
    • சென்னை விமான நிலையத்தில் தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

    கொல்கத்தா விமான நிலையத்தில் விற்கப்படும் தேநீரின் விலை குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவு பேசுபொருளானது.

    அவரது பதிவில், "கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள The Coffee Bean and Tea Leaf உணவகத்தில் பால் சேர்க்கப்படாத ஒரு சாதாரண தேநீர் ரூ.340க்கு விற்கப்படுகிறது.

    சில வருடங்களுக்கு பிறகு சென்னை விமான நிலையத்தில் ஒரு சாதாரண தேநீர் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டதை குறித்து நான் பதிவிட்டுள்ளேன். தமிழ்நாட்டை விட மேற்குவங்கத்தில் பணவீக்கம் அதிகமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    ப. சிதம்பரத்தின் பதிவிற்கு பதிலளித்த கொல்கத்தா விமான நிலையம், "நீங்கள் குறிப்பிட்டுள்ள விலை வித்தியாசத்தை குறித்து விசாரித்து விரைவில் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்ததற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளது.

    • அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.
    • கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    மைதா - 1/2 கிலோ

    நேந்திரம் பழம் - 5

    சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்

    அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    மஞ்சள்தூள் - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு

    தேங்காய் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.

    செய்முறை:

    • பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

    • மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.

    • பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்து, கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் போட்டு சிவக்கப் பொரித்தெடுங்கள்.

    • சுவையான பழம்பொரி தயார்.

    • சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • விசாரணையில் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    புதுக்கோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டம் உலக்குடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 40). இவர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் வட்டத்தை சேர்ந்த ஏம்பல் கிராமத்தில் உள்ள ஒரு டீ கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏம்பல் கடை அருகே ராமச்சந்திரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    இச்சம்பவத்தில் தனது கணவர் சாதிய ரீதியாக துன்புறுத்தப்பட்டு, அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக ராமச்சந்திரனின் மனைவி ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் டீ கடையில் பணிபுரிந்த சக தொழிலாளர்களான நாரணமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (33), மணல்மேல்குடி நரியனேந்தலை சேர்ந்த ரங்கய்யா (24) ஆகியோர் ராமச்சந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    இது குறித்து சுப்பிரமணியன், ரங்கையா ஆகியோர் மீது கொலை, வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.
    • தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் தனியார் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தில் புதிய டீக்கடை ஒன்றை திறந்து உள்ளது.

    இந்த டீக்கடையில் டீ மாஸ்டர், பணியாளர்கள் கிடையாது.

    கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்யும் வசதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கியூ ஆர் கோட்டை ஸ்கேன் செய்தால் போதும் தங்களுக்கு விருப்பமான டீயை வாங்கி குடிக்கலாம்.

    மேலும் தண்ணீர் பாட்டில் பிஸ்கட் உள்ளிட்டவையும் பெற்றுக் கொள்ளலாம்.

    நவீன தொழில்நுட்பத்திலான டீக்கடையை ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கமலாகர், மேயர் சுனில் ராவ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதுகுறித்து தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத்குமார் கூறுகையில், தற்போது டீ மாஸ்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.

    மேலும் டீ மாஸ்டர்கள் அதிக அளவில் சம்பளம் கேட்கின்றனர். தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் எளிதாக வேண்டியதை விரும்பி சாப்பிடலாம்.

    தற்போது ஆந்திரா தெலுங்கானாவில் ஒரே சமயத்தில் 600 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் நாடு முழுவதும் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

    • டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர்.
    • விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் அருகே உள்ள சூரியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கலாமணி. இவர் குண்டடம்- திருப்பூர் சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று காலை வழக்கம் போல் டீக்கடையில் ஏராளமானோர் டீ அருந்தி கொண்டிருந்தனர். இந்நிலையில் காலை 7.30 மணி அளவில் கரூரில் இருந்து சிமெண்ட் கலவை லோடு ஏற்றிய லாரி ஒன்று திருப்பூர் நோக்கி வந்தது. லாரியை சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த ரத்தினகுமார் (28) என்பவர் ஓட்டி வந்தார். லாரி சூரியநல்லூர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கலாமணியின் டீ கடைக்குள் புகுந்தது.

    இதில் கடையில் டீ அருந்திக் கொண்டிருந்த பத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் குண்டடம் போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் முத்துச்சாமி(65) சுப்பன் (70) மற்றும் லாரி டிரைவர் ரத்தினகுமார் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார்கள். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி, மகேந்திரன், மாணிக்கம், செல்லமணி ஆகிய 4 பேரையும் படுகாயங்களுடன் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
    • இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் அருகே யுள்ள சத்திய மங்கலம் மெயின் ரோட்டில் புஞ்சை துறைய ம்பாளையம் ஊராட்சி பஸ் நிறுத்தம் அருகே மாரியப்பன் (49) என்பவர் டீ கடை வைத்து நடத்தி வருகிறார்.

    வேலை முடிந்ததும் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி சென்றார். இந்நிலையில் நள்ளிரவு சுமார் 2.30 மணியளவில் மாரியப்பன் டீ கடையில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற வர்கள் சத்தம் போட்டனர். இதையடுத்து மாரியப்பன் மற்றும் அவரது வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்களை எழுப்பி வெளியேற்றினர்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் தீயணைப்பு துறையினரு க்கு தகவல் கொடுக்கப்ப ட்டது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் மாரியப்பனின் டீ கடை மற்றும் வீட்டின் மேற்கூரை முழுவதும் பற்றி எரிந்தது.

    தீயணைப்பு வீரர்கள் 2 சிலிண்டர்களை மீட்டனர். மேலும் டீ கடையில் இருந்த பொருட்கள் மற்றும் சில பாத்திரங்கள் சேதமடைந்தன.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இரவு டீ கடையில் வேலை முடிந்து செல்லும் போது விறகு கட்டையில் இருந்த தீயை சரி வர அணைக்காமல் கவனக்குறைவாக இருந்து தூங்க சென்றுள்ளதாக தெரியவந்தது.

    இதனால் காற்றின் வேகத்தில் தீ உருவாகி படிப்படியாக விறகில் பற்றிய தீ டீ கடை முழுவதும் பற்றி எரிந்து இருக்கும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. கடையில் இருந்த 2 சிலிண்டர்கள் வெடித்து இருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்றுமத பிரச்சாரம் செய்யும் வகையில் சின்னங்கள் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ள திருமலையில் இந்து மதத்தை தவிர வேற்று மத பிரச்சாரம் செய்யும் விதமாக அதன் சின்னங்கள், கொண்டு வரவும் பயன்படுத்தவும், வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் திருப்பதி மலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே உள்ள டீக்கடையில் வழங்கப்பட்ட டீ கப்பில் சிலுவையின் அடையாளமாக டீ என்ற எழுத்து அச்சிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பக்தர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், திருமலை திருப்பதி தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் டீக்கடைகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது, ஒரு கடையில் சிலுவை வடிவிலான டீ என அச்சிடப்பட்ட டீ கப்புகள் இருந்தன அதனை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.

    திருப்பதி மலையில் வேற்றுமத அடையாளங்கள் எக்காரணத்தை கொண்டும் இருக்க கூடாது என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், லிங்கங்குண்டலா பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா (வயது 13).

    குண்டூர் கலெக்டர் அலுவலகம் அருகே டீ கடை ஒன்று உள்ளது.

    நேற்று இரவு டீக்கடை உரிமையாளர் வழக்கம் போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி சென்றார்.

    மணிகண்டா நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். டீக்கடையில் இருந்த பொருட்களை திருடிக் கொண்டு இருந்தார்.

    அப்போது வெளிச்சம் இல்லாததால் டீக்கடையில் இருந்த மின் விளக்கின் சுவிட்ச் போட்டு உள்ளார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மணிகண்டா மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நேற்று காலை டீக்கடை உரிமையாளர் கடையை திறக்க வந்தார். கடை திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது மணிகண்டா மின்சாரம் தாக்கி இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணிகண்டா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.
    • சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது.

    மும்பை:

    சொகுசு கார்களை பலர் தங்கள் வாழ்நாள் கனவாக வைத்திருப்பார்கள். ஆனால் ஆடம்பரம் நிறைந்த அந்த காரை ஒரு டீக்கடையாக நினைத்து பார்க்க முடியுமா!. ஆனால் மும்பையில் 2 வாலிபர்கள் தங்கள் சொகுசு காரை டீக்கடையாக மாற்றி, பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

    மன்னு சர்மா மற்றும் அமித் கஷ்யப் ஆகியோர் தான் அந்த வாலிபர்கள். அவர்கள் சுமார் ரூ.70 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரின் டிக்கியில் 20 ரூபாய்க்கு டீ விற்கின்றனர். அந்தேரி மேற்கு புறநகர் பகுதியில் உள்ள லோகந்தவாலாவில் அவர்கள் 6 மாதங்களாக இந்த சொகுசு கார் டீக் கடையை நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் அவர்களின் இந்த டீக்கடை சமூக வலைதளங்களில் பிரபலமானது. இதனால் கடைக்கு கூட்டம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் வாலிபர்களின் தனித்துவமான எண்ணம் மட்டும் அல்ல, 'டீ'யின் சுவையும் தான் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக கூறுகின்றனர்.

    அதற்கு ஏற்றார்போல் அங்கு வரும் வாடிக்கையாளர் ஒருவர், "கடந்த 2 மாதங்களாக நான் இங்கு 'டீ' குடிக்க வருகிறேன். ஏனென்றால் அதன் சுவை அற்புதமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் நான் இந்த பகுதியை கடந்து செல்லும்போது அவர்களின் 'டீ'யை வாங்கி குடிக்க விரும்புகிறேன்" என்கிறார்.

    இந்த நூதன முயற்சி குறித்து மன்னு சர்மா கூறியதாவது:-

    நாங்கள் இரவில் ஒருநாள் 'டீ' குடிப்பதற்காக அலைந்து கொண்டிருந்தோம். ஆனால் அந்த நேரத்தில் டீக்கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தான் சொந்தமாக 'டீ' ஸ்டாலை திறக்க திட்டமிட்டோம்.

    நாங்கள் சொகுசு காரில் டீ விற்பதன் மூலம் பொருளாதார வசதி இல்லாதவர்கள் மட்டும் தான் டீ விற்பார்கள் என்ற எண்ணம் தவறு என்பதை நிரூபித்துவிட்டோம். இங்கு சைக்கிளில் செல்பவர்களும் டீ குடிக்கிறார். அதேபோல சொகுசு காரில் வருபவர்களும் எங்கள் 'டீ'யை ருசிக்கிறார்கள்.

    இருவரும் ஒரு மாதம் பல்வேறு சமையல் குறிப்புகளை கொண்டு வீட்டிலேயே 'டீ' தயாரிக்க பயிற்சி செய்து, இறுதியில் ஒரு செய்முறையை உறுதி செய்தோம். பின்னர் சொகுசு காரில் டீ விற்பனை செய்ய தொடங்கினோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டீ கடை தொடங்குவதற்கு முன்பு அரியானாவை சேர்ந்த மன்னு சர்மா ஆப்பிரிக்க நிறுவனத்தில் வேலை செய்துவந்தார். அதேபோல அமித் கஷ்யப் காலையில் பங்கு சந்தை வர்த்தகராகவும் மாலையில் டீ கடைக்காரராகவும் மாறியுள்ளார்.

    இவர்கள் வருங்காலத்தில் பல்வேறு பகுதிகளில் இதேபோன்ற டீ கடைகளை திறக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

    கருப்பூர் அருகே டீக்கடை கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டை கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28).

    இவர் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல வேலையை முடித்த அவர் இரவில் கடையை பூட்டிவிட்டு சென்றார்.  இந்த நிலையில் இன்று காலை கடையை திறக்க வந்தபோது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பணம் 2 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

    இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசில் கார்த்திக் புகார் கொடுத்தார். அதன்பேரில் கதவை உடைத்து உள்ளே சென்று திருடிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    • முருகன் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார்.
    • திருட்டு குறித்து முத்தையாபுரம் போலீசில் முருகன் புகார் செய்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜூவ்நகரை சேர்ந்தவர் முருகன் (வயது52). இவர் முள்ளக்காடு மெயின்ரோட்டில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு தூங்க சென்றார். இன்று அதிகாலை கடையை திறக்க முருகன் சென்றார்.

    அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் சில பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் முத்தையாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அப்பகுதியினர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு இடத்தில் 40 கோழிகளும், மற்றொரு இடத்தில் காரில் வந்து ஆடுகளையும் மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×