என் மலர்
நீங்கள் தேடியது "Teenage girl"
- கோவைக்கு வந்து மாயமான திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீயாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
- பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொன்று உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடவள்ளி:
கோவை ஆலாந்துறையை அடுத்த செம்மேடு அருகே ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் இளம்பெண்ணின் உடல் கிடப்பதாக ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் வந்தது.
தகவலின் பேரில் போலீசார் தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு வந்து அங்கிருந்து மாயமான திருப்பூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு விரைந்து அது சுபஸ்ரீதான் என்பதை உறுதி செய்தனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொன்று உடலை கிணற்றில் வீசினார்களா என்பது குறித்து தெரிய வரும்.
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- சம்பவத்தன்று அங்கு வந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து 2 மகன்களை யும் அழைத்து சென்று விட்டார்.
மேலூர்
மேலூர் சிலோன் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு ஹேமநாத் (வயது 11), கோகுல்நாத் (9) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக காயத்திரி 2 மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று அங்கு வந்த குமார், மனைவியுடன் தகராறு செய்து 2 மகன்களை யும் அழைத்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த காயத்திரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செயது கொண்டார்.
இதுகுறித்து மேலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) முகைதீன் அப்துல்காதர், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகன்களை பிரித்து கணவர் அழைத்து சென்றதால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இளம்பெண் உள்பட3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை சபாஷ்புரத்தை சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ஹரினி(18). இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இதனால் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். மருத்துவம் பார்த்தும் நோய் குணமாகவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராமன் அளித்த புகாரின்பேரில் திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் மாரீஸ்வரன்(24). மில் தொழிலாளி. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது. மாரீஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் விரக்தியில் இருந்த மாரீஸ்வரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் மகாலட்சுமி அளித்த புகாரின்பேரில் ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(23). அச்சகத்தில் வேலை பார்த்தார். இவருக்கு சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து இருந்துள்ளார். இதனால் சரியாக தூக்கம் இல்லாமல் அவதிபட்டுள்ளார். இதனால் விரக்தியடைந்த செந்தில்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.
- பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
பல்லடம் :
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியை சேர்ந்தவர் ரோபாஸ்டன் (வயது 21). இவர் அந்த பகுதியை சேர்ந்த 21 வயதான பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார். இந்தநிலையில் காதலர்கள் இருவரும் ஊட்டிக்குச் செல்ல திட்டமிட்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் சாயல்குடியில் இருந்து ஊட்டிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். மதுரை ,ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக பல்லடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பல்லடம் அருகே செல்லும்போது திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் வந்தார். திடீரென அவர்களது மோட்டார் சைக்கிளை வழிமறித்து இருவரும் எங்கு செல்கிறீர்கள். உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது. உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியு ள்ளார். நாங்கள் ஊட்டி செல்கிறோம், இருவரும் காதலர்கள் என்று அவர்கள் கூறிய போது உங்களை தனித்தனியே விசாரிக்க வேண்டும் என்று கூறிய அந்த வாலிபர், ரோபாஸ்டனை மோட்டார் சைக்கிளில் சுமார்1 கிலோமீட்டர் தூரம் வரை அழைத்து சென்று பல்லடம் - திருச்சி சாலையில் உள்ள மாதப்பூர் கருப்பசாமி கோவில் அருகே நிற்க வைத்துவிட்டு, காதலியிடம் விசாரணை நடத்த செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
இந்தநிலையில் அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த ரோபாஸ்டன் உடனே காதலி இருக்கும் இடத்திற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு காதலியை காணவி ல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அப்பகுதியில் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காதலி கடத்தப்பட்டது குறித்து பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சோத னை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்து வாலிபரை பிடிக்க உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து போலீ சார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகிய காட்சி களையும் பார்வையி ட்டனர்.
இந்நிலையில் நேற்று காலை கடத்தப்பட்ட இளம்பெண் மதுரையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை சென்ற போலீசார் இளம்பெண்ணை மீட்டு பல்லடதிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.பின்னர் அந்தப் பெண் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இளம்பெண்ணை போலீஸ் எனக் கூறி, கடத்திய வாலிபரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்க ப்பட்டது. தனிப்படை போலீசார் , இளம்பெண்ணை கடத்திய வாலிபர் யார், எதற்காக கடத்தி சென்றார் என்று தீவிர விசாரணை நடத்தி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
- செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாப்பே ட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குறிச்சி செம்பாடம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சோலையம்மாள் (55). இவரது கணவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
மூத்த மகள் செல்வி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள சோலையம்மாளின் தம்பியான பழனிச்சாமியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சிவசக்தி (17) என்ற மகனும், சோபியா (13) என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் அதே பகுதியில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து செல்வி அவரது கணவரிடம் கோபித்துக் கொண்டு தாயார் சோலையம்மாள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை தொடர்ந்து செல்வி அவரது தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
நேற்று சோலையம்மாள் 100 நாள் வேலைக்கு சென்று விட்ட நிலையில், வீட்டில் தனியாக இருந்த செல்வி கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீடடு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
- இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
சிவகாசி கிழக்கு தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவரது மனைவி மாரி(29). கணவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதில் விரக்தியடைந்த மாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அருப்புக்கோட்டை சேர்ந்தவர் பெரிய கருப்பன்(வயது30), தொழி லாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததார். மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் எடுத்து செலவு செய்ததாக தெரிகிறது. இதனை அவரது மனைவி இருவக்காள் கண்டித்துள்ளார்.இதனால் விரக்தி யடைந்த பெரிய கருப்பன் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள புலியூரான் கிராமத்தை ேசர்ந்தவர் கந்தசாமி(வயது63). 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது கந்தசாமி திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மதுைர அரசு ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கந்தசாமி இறந்தார். திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் சாப்டூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட வி. ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மணிமாலா (வயது 28).
இவருக்கு கடந்த சில மாதங்களாக தொடர் வயிற்று வலி இருந்து வந்தது. மருத்துவரிடம் காண்பித்தும் குணமாகவில்லை. இந்த நிலையில் 100 நாள் வேலைக்குச் சென்ற மணிமாலா வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண்கள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை
மதுரை சிந்தாமணி கீழத்தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் பாண்டிராஜ்(வயது18). இவர் வேலைக்கு செல்லா மல் இருந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த பாண்டியராஜ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை சோலையழகு புரம் மகாலட்சுமி கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் ரம்ஜான்பீவி(45). கணவ ருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனியாக வசித்து வருகிறார். இதனால் மன விரக்தியில் இருந்த ரம்ஜான்பீவி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது சகோதரர் சுல்தான் அலாவு தீன் கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் தாசில்தார் நகரில் உள்ள சவுபாக்கிய கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி சுகந்தி(39). கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதில் மன முடைந்த சுகந்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தங்குடி அய்யன் பரமகுரு நகரை சேர்ந்தவர் பாண்டிகணேஷ்(37). திருமணமாகாத இவர் சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- நிஷா என்கிற குட்டிமா தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
- போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஆட்சிக்காடு கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவருடைய மகள் நிஷா என்கிற குட்டிமா (21). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வீட்டில் சமையல் அறையில் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்காணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சம்பவ இடத்திற்க்கு வந்து தூக்கில் பிணமாக தொங்கிய நிஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவையில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் நிஷா இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார்.
- கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்றதாக தெரியவந்தது.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் நெய்வேலி விருதாச்சலம் ரோமாபுரி பகுதியைச்சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் பஞ்சாயத்து போர்டு டேங்க் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். இவரது மூத்த மகள் ஷர்மி நிஷாந்தினியை, (வயது19). காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் முதலிமேட்டைச்சேர்ந்த பிரின்ஸ் கிளிண்டன் (21) என்பவருடன், கடந்த 13.11.22 அன்று திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஷர்மி நிஷாந்தினி தந்தை வீட்டுக்கு சென்றபோது, நெற்றியில் தையல் போட்டு இருந்தார். தந்தை விசாரித்தபோது, கணவர் குடித்துவிட்டு அடித்துவிட்டதாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன், ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, கணவர் தினமும் குடித்துவிட்டு அடித்து கொடுமைச் செய்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 30-ந் தேதி ஷர்மி நிஷாந்தினி தந்தைக்கு போன் செய்து, ஆடிக்கு கூப்பிட வரவில்லையா என கேட்டுள்ளார். அதற்கு தந்தை தற்போது நிலைமை சரியில்லை, பிறகு வந்து கூப்பிடுகிறேன் என கூறினார். இந்நிலையில், பிரின்ஸ் கிளிண்டன் தாய் விக்டோரியா ஆரோக்கியராஜிற்கு போன் செய்து, ஷர்மி நிஷாந்தினி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைச் செய்துகொண்டதாக கூறினார். அடுத்து, ஆரோக்கியராஜ், உறவினர்களுடன் திரு.பட்டினம் சென்று விசாரித்தபோது, 1-ந் தேதி இரவு 11 மணிக்கு கணவர், மனைவி இருக்கும் இடையே சண்டை நடை பெற்ற தாகவும், அப்போது கிளிண்டன் அடித்ததால் ஷர்மி நிஷாந்தினி தனி அறையில் படுத்து தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது, ஷர்மிநிஷாந்தினி தூக்கில் தொங்கியதாகவும் தெரியவந்தது. இது குறித்து, ஆரோக்கியராஜ், திரு.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார்.
- விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகள் கனகவள்ளி (வயது 20). நர்சிங் முடித்துள்ளார். இவருக்கும் பக்கத்து கிராமமான பாட்சா பாளையத்தை சேர்ந்த விவசாயத் தொழிலாளி சுகனேஷ் (25) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்தை முன்னிட்டு கனக வள்ளியின் பெற்றோர், சுகனேஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு சீர் வரிசை வைத்து, கனகவள்ளியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த கனகவள்ளி சோகமாகவே இருந்துள்ளார். புதியதாக திருமணமாகி கணவனை பிரிந்ததால் சோகமாக இருப்பதாக பெற்றோர் கருதினர்.
இந்நிலையில் வீட்டில் படுத்துறங்கிய கனகவள்ளி இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் வீட்டிலிருந்த அறைக்குள் சென்று பார்த்தனர். அங்கிருந்த மின்விசிறியில் கனவள்ளி தூக்குபோட்டு இறந்த நிலையில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறியழுத காட்சி அக்கம் பக்கம் இருந்தவர்களிடையே நெகி ழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை போலீ சார், கனகவள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கனவள்ளி தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால், இது தொடர்பாக விசாரணை நடத்த கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி திருக்கோவிலூர் கோட்டாட்சியர் சிறுபாக்கம், பாட்சா பாளையம் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி யையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
- சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்.
- பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சேலம்:
சேலம் பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மகள் மீனா (22). இவருக்கும் இவரது சகோதரிக்கும் நேற்று இரவு வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த மீனா வீட்டில் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார். இதை கண்ட பெற்றோர் மீனாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.