என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teenage suicide"

    • காதலை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் பராசக்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி மலையம்மாள், இவர்களது மகன் அருண்பாண்டி (வயது 24). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    மகனின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக விரக்தியுடன் காணப்பட்ட அருண்பாண்டி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அவனியாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அருண்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து போலீசார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்காக வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார்.
    • இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 27). இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டதால், தனது பெரியம்மா வனிதா வீட்டில் வளர்ந்தார். இவர் தனக்கு கிடைக்கும் வேலைகளை செய்து வந்துள்ளார்.

    ரமேசுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்னும் தனக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்த ரமேஷ், நேற்று இரவு வீட்டில் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், இன்று காலை சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
    • நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார்.

    பள்ளிப்பாளையம்:

    ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி சோதனை சாவடி அருகே காவேரி பழைய பாலம், புது பாலம் என 2 பாலங்கள் உள்ளது.

    போக்குவரத்துக்கு முக்கிய இடம்

    இந்த வழியாகத்தான் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம், நாமக்கல், திருச்செங்கோடு, சேலம், சென்னை போன்ற முக்கிய இடங்களுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதேபோல் அங்கிருந்தும் ஈரோட்டுக்கு வருபவர்கள் இந்த பாலம் வழியாகத்தான் வருகின்றனர். இதனால் இந்த பாலம் போக்குவ ரத்துக்கு முக்கிய இடமாக உள்ளது.

    தற்போது காவிரி ஆற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு ள்ளதால் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

    இந்நிலையில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஜீவா செட் பகுதியை சேர்ந்த நசரத், சாஜிதா தம்பதிகளின் மகன் ரியாஸ் வயது (19.) தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். நேராக காவிரி ஆற்று பழைய பாலத்தின் நடுவில் திடீரென வண்டியை நிறுத்தினார்.

    பின்னர் தனது நண்பர்களுக்கு செல்போனில் ஒரு மெசேஜ் அனுப்பி திடீரென ரியாஸ் காவேரி ஆற்று பாலத்தில் இருந்து காவேரி ஆற்றில் குதித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் இதுகுறித்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பால சுப்பி ரமணியம் என்பவருக்கு தெரிவித்தனர்.

    தேடும் பணி தீவிரம்

    உடனடியாக அவர் இது குறித்து கருங்கல்பாளையம் போலீஸ் நிலையம் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். கருங்கல் பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    ரியாஸ் குதித்த பகுதி மிகவும் ஆழமான பகுதியாகும். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் பரிசலில் சென்று மீனவர்கள் உதவியுடன் ரியாசை தேடி வருகின்ற னர். ஆம்புலன்சும் தயார் நிலையில் வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனை வேடிக்கை பார்க்க அப்பகுதி மக்கள் கூட்டம் கூடி விட்டதால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். ரியாஸ் பள்ளிபாளை யத்தில் உள்ள தனியார் நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தார்.

    அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கேரளா பதிவு எண்ணை கொண்டதாக உள்ளது. தொடர்ந்து அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.

    • சிவக்குமாருக்கும் கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லை.
    • சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    கடலூர்:

    புவனகிரி அடுத்த வடக்கு திட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 35). இவருக்கும் இவரது மனைவி ரம்யா கிருஷ்ணன் என்பவருக்கும் திருமணம் ஆகி குழந்தை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறிப்படுகிறது.

    இந்த நிலையில் சிவக்குமாரின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் வீட்டில் இருந்த மண்ணெண்ணை யை ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    • சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்.
    • சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மோகனா (வயது 38). இவர் குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடத்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனா பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19).
    • கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரமனூர் நாராயண பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னவர். இவரது மனைவி ஜெனிபர் (வயது 19). இவர்களுக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சிறிது நேரம் வெளியில் சென்று விட்டு மீண்டும் சின்னவர் வீட்டுக்கு வந்தபோது, ஜெனிபர் வீட்டில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்தார். இதனை பார்த்து சின்ன வர், உறவி னர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஜெனிபரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஜெனிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி னர். மேலும் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
    • அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி அடுத்த காட்டூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று அவரது மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கார்த்தியின் தாய் அவரை கண்டித்தார். இதனால் மனமுடைந்த கார்த்தி வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

    அதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்.
    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங்குறிச்சி சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 28). இவருக்கு திருமணமாகி ரேவதி என்ற மனைவி உள்ளார்.

    புகழேந்தி கருப்பூர் அருகே ஞானக்கவுண்டம் பட்டி பகுதியில் உள்ள ஒரு சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர், நேற்றுமுன்தினம் மதியம் குடிபோதையில் இவரது கடைக்கு அருகே உள்ள கிணற்றில் திடீரென குதித்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி யடைந்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள், உடனடியாக கருப்பூர் போலீசாருக்கும், ஓமலூர் தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த புகழேந்தியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், புகழேந்திக்கும், அவரது மனைவி ரேவதிக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடும்பத் தகராறு ஏற்பட்டது. இதில் ரேவதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மனமுடைந்த புகழேந்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணன் நகர், 2-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் அசோக்குமார் (வயது 33). எம்.பி.ஏ பட்டதாரியான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இதனிடையே படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் அசோக்குமார் மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி எலி மருந்தை சாப்பிட்ட அவர், வீட்டில் யாரிடமும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார்.

    கடந்த 19-ந் தேதி அசோக்குமாருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்படவே அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அப்போது, எலி மருந்து சாப்பிட்டதை கூறியுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அசோக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுந்தரேசன் திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
    • விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா வட மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை . விவசாயி. அவருடைய மகன் சுந்தரேசன் (வயது 25).திருப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த அவர் தனது பெற்றோரிடம் எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாக தெரிகிறது.

    இதற்கு அவரது தந்தை ஏழுமலை கடன் வாங்கி திருமணம் செய்து வைக்கிறேன் என அறிவுறுத்தி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த சுந்தரேசன் வீட்டில் விவசாய நிலத்திற்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். பின்னர்வீ ட்டில் மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள்அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுந்தரேசன் பரிதாபமாக இறந்தார்.தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ,சப் -இன்ஸ்பெக்டர் ராமதாஸ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சதீஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.
    • இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று குப்பனூர் பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.

    சேலம்:

    சேலம் வீராணம் அருகே உள்ள குப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). இவருக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆகிறது.

    இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று குப்பனூர் பகுதியில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் வீராணம் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். சதீஷ்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி அருகே காதல் தோல்வியில் வடமாநில வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஹனீப்அலி. இவரது மகன் ஹபிதுல் ஹக்(19). இவர் தனது ஊரில் உறவினர் பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பெண் வீட்டார் ஏற்கவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் வந்த ஹபிதுல் ஹக் சிவகாசி சிட்கோவில் உள்ள தனியார் நிறுவ னத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்தார்.

    சில வாரங்களுக்கு முன்பு மகனை பார்க்க அவரது பெற்றோர் வந்த னர். அப்போது காதலித்த பெண்ணை மறந்து விடுமாறும், வேறோரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் ஹபிதுல் ஹக் இதனை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சம்பவத்தன்று காதல் தோல்வியால் ஏற்பட்ட மன வருத்தத்தில் தான் தங்கியிருந்த அறையில் ஹபிதுல் ஹக் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ஹனீப்அலி கொடுத்த புகாரின்பேரில் திருத்தங்கல் 

    ×