search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tennis tournament"

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று நடைபெறுகிறது.
    • இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

    4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    களிமண் தரையில் நடைபெறும் போட்டியான பிரெஞ்சு ஓபனில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2005ம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் அறிமுகமான ரபெல் நடால் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதித்து இருக்கிறார். இதுவரை அந்த போட்டியில் 112 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருக்கும் அவர் 3 ஆட்டங்களில் மட்டுமே தோல்வி கண்டு இருக்கிறார்.

    22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இருக்கும் நடப்பு சாம்பியன் ரபெல் நடால் இடுப்பு பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காயம் காரணமாக முதல்முறையாக இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் இந்த முறை ஆண்கள் ஒற்றையர் பிரிவில் புதிய சாம்பியன் உருவாக வாய்ப்பு கனிந்து இருக்கிறது. இதேபோல் முன்னாள் சாம்பியனான ஆன்டி முர்ரேவும் (இங்கிலாந்து) போட்டியில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.439 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.20¼ கோடியும், 2-வது இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.10 கோடியும் பரிசாக வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் கோப்பையை வெல்பவர்களுக்கு ரூ.5¼ கோடி பரிசாக கிட்டும். இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5, 2 ஆகிய சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.
    • 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

    பில்லி ஜீன் கோப்பைக்கான பெண்கள் அணிகள் டென்னிசில் ஆசிய- ஓசியானா குரூப்-1 சுற்று ஆட்டங்கள் உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் தென்கொரியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் போராடி வீழ்ந்தது.

    ஒற்றையர் பிரிவின் முதல் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் டாபின் கிம்மிடம் வீழ்ந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ருதுஜா போசெல் 7-5, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் யோன்வூ குவை வீழ்த்தினார்.

    இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போசெல்-அங்கிதா ரெய்னா இணை 4-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் ஜி ஹீ சோய்-டாபின் கிம் ஜோடியிடம் தோல்வியை தழுவியது. 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்திய அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

    • தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் 17 வயதுக்குட்பட்ேடாருக்கான மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது.
    • நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வீனிஷ் மற்றும் மாணவர் விஷால் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    நெல்லை:

    தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை நடத்தும் 17 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நெல்லை வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் வீனிஷ் மற்றும் மாணவர் விஷால் கலந்து கொண்டு இரட்டையர் பிரிவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், முதன்மை முதல்வர் ராஜலெட்சுமி, முதல்வர் முருகவேள், உடற்கல்வி இயக்குனர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார், பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.
    • வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பகுதியில் செயல்பட்டு வரும் ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளியில் தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இடையே டென்னிஸ் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலு ங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமத் தலைவர் பொறியாளர் சத்தியநாதன், ரம்யா சத்தியநாதன் கல்விக் குழுமச் செயலர் ஜெனட் ரம்யா ஆகியோர் தலைமை‌ வகித்தனர்.

    போட்டிகளை தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் லோகநாதன் , தஞ்சாவூர் மாவட்ட டென்னிஸ் கழகத் தலைவர் டேவிட் அவர்களும் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். ரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி டென்னிஸ் பயிற்சியாளர் சிலம்பரசன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் உதவிப்பொது மேலாளர் மார்ட்டின் மற்றும் குழுவினர், நடுவர்களாக பங்கு பெற்றனர்.

    பல போட்டிகளில் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில்கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி முதல் இடத்தையும், கரூர் டிஎன்பிஎல் பள்ளி 2ம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில், சாரதா சில்ரன்ஸ அகாடமி ஷ்ரத்தா பள்ளிமுதல் இடத்தையும், சென்னை‌ வேலம்மாள்‌வித்யாலய பள்ளி இரண்டாம் இடத்தையும்,

    19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் கரூர் வேலம்மாள் பள்ளி முதல் இடத்தையும், சென்னை‌ பவன்ஸ்ரா ஜாஜி வித்யாஷ்ரம் 2ம் இடத்தையும், 19 வயதுக்குட்பட்டபெண்கள் பிரிவில் சூரப்பட்டு வேலம்மாள் வித்யாஷ்ரம்பள்ளி முதல் இடத்தையும், கோவை சச்சிதானந்தா ஜோதிநிகேதன் இன்டர் நேஷனல் பள்ளி 2ம் இடத்தையும் பெற்று வெற்றிபெற்றனர்.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு ரம்யா சத்தியநாதன் கல்விக்குழுமதலைவர் சத்தியநாதன் பரிசுகளை வழங்கினார். போட்டிகளைரம்யா சத்தியநாதன் சீனியர் செகண்டரி பள்ளி முதல்வர் ஜோன் பெர்னாண்டஸ் துணை முதல்வர் அம்பேத்கர் நடத்தினர்.

    ×