என் மலர்
நீங்கள் தேடியது "tennis"
- பிரெஞ்சு ஓபனில் அல்காரஸ் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
- அரையிறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.
பாரிஸ்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) கால்இறுதி ஆட்டத்தில் கிரீஸ் நாட்டை சேர்ந்த 5-ம் நிலை வீரரான ஸ்டேபானோஸ் சிட்சிபாசை எதிர்கொண்டார்.
இதில் அல்காரஸ் 6-2, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அவர் முதல்முறையாக அரைஇறுதிக்கு நுழைந்துள்ளார்.
அல்காரஸ் அரைஇறுதி ஆட்டத்தில் 3-வது வரிசையில் உள்ள ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார். இந்தப் போட்டி இந்திய நேரப்படி நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்கு தொடங்குகிறது.
22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற 36 வயதான ஜோகோவிச் கால்இறுதியில் கரன் கச்சனோவை (ரஷியா) 4-6, 7-6 (7-0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.
இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் சுவரேவ் (ஜெர்மனி)-எட்செவரி (அர்ஜென்டினா), கேஸ்பர் ரூட் (நார்வே)-ஹோல்கர் ருனே (டென் மார்க்) மோதுகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தில் உள்ள ஷபலென்கா (ரஷியா), கரோலினா மச்கோவா (செக் குடியரசு) ஆகியோர் கால்இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். இருவரும் அரைஇறுதியில் மோதுகிறார்கள்.
இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜபீர் (துனிசியா)-ஹதாத் மயா (பிரேசில்), இகா ஸ்வியாடெக் (போலந்து)-கோகோ கவூப் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
- காலிறுதிச்சுற்றில் நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
- அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரேவை எதிர்கொண்டார்.
நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடர் ஆண்டுதோறும் நடந்து வருகிறது.
இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில், நார்வே வீரர் காஸ்பர் ரூட், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை எதிர்கொண்டார்.
இந்த போட்டியின் இறுதியில், 6-1, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வென்ற ரூட், ரூனேவை வீழ்த்தி அரை இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அரை இறுதிச்சுற்றில் காஸ்பர் ரூட் சுவேரெவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தின் முடிவில், 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் சுவேரேவை வீழ்த்தி ரூட் வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
- 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
- கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
லண்டன்:
எஸ்தோனியா நாட்டின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட் தற்போது தரவரிசையில் 79-வது இடத்தில் இருக்கிறார். அதிகபட்சமாக 2-வது இடம் வரை முன்னேறியுள்ள அவர் இதுவரை 6 பட்டங்களை வென்றுள்ளார். 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் காலிறுதியை எட்டியது, கிராண்ட்ஸ்லாமில் அவரது சிறந்த செயல்பாடாகும்.
இந்த நிலையில் 27 வயதான கோன்டாவெய்ட் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டியுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முதுகுதண்டுவட பாதிப்பால் அடிக்கடி அவதிப்படும் அவர் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குறுகிய காலத்திலேயே டென்னிசுக்கு முழுக்கு போடுகிறார்.
- முதல் செட்டை 3-6 என ஸ்வெரேவ் இழந்தார்
- 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 5-7 என இழந்து தோல்வி
ஜெர்மனியின் ஹாலே நகரில் ஆண்களுக்கான ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 9-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- தரநிலை பெறாத கஜகஜஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்-ஐ எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பாராத வகையில் ஸ்வெரேவ் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
முதல் செட்டை கஜகஜஸ்தானின் 26 வயதான பப்லிக் 6-3 என எளிதில் வென்றார். 220 கி.மீட்டர் வேகத்தில் பப்லிக் சர்வீஸ் செய்ய ஸ்வெரேவ் மிரண்டு போனார். இதனால் தொடக்கத்தில் 4-1 என பின்தங்கினார். இது முதல் செட்டை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது.
2-வது செட்டில் இருவரும் 5-5 என சமநிலையில் இருக்கும்போது, அடுத்த இரண்டு கேம்களையும் கைப்பற்றி 7-5 என வெற்றி பெற்றார்.
அலெக்சாண்டர் பப்லிக் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீரரான ருப்லேவ்-ஐ எதிர்கொள்கிறார்.
- 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார்.
- கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன்.
டென்னிஸ் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை கரோலினா வோஸ்னியாக்கி. டென்மார்க்கை சேர்ந்த இவர் 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார். கடந்த 2020-ம் ஆண்டு தனது 29-வது வயதில் வோஸ்னியாக்கி, டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார். இவர் முன்னாள் கூடைப்பந்து வீரர் டேவிட் லீயை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு டென்னிஸ் களத்துக்கு திரும்ப உள்ளதாக வோஸ்னியாக்கி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது, கடந்த மூன்று ஆண்டுகள் விளையாட்டில் இருந்து விலகி, எனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்தேன். நான் இப்போது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளேன். ஆனால் நான் இன்னும் அடைய விரும்பும் இலக்குகள் உள்ளது.
நான் மீண்டும் விளையாட வருகிறேன். அமெரிக்க ஓபனில் விளையாட உள்ளேன். என்னால் கிராண்ட்சிலாம் பட்டங்களை வெல்ல முடியும் என்று நினைக்கிறேன் என்றார்.
- 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
- 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.
லண்டன்:
கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
23 கிராண்ட் சிலாம் பட்டம் வென்றவரும், தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் மூன்று கிராண்ட் சிலாம் பட்டம் பெற்ற வாவ் ரிங்காவை (சுவிட்சர் லாந்து) எதிர் கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-1, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லேவ் (ரஷியா), 8-ம் நிலை வீரரான சின்னர் (இத்தாலி) ஆகியோரும் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். 2-வது சுற்று ஆட்டங்களில் மெட்வதேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்) உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
உலகின் முதல் நிலை வீராங்கனையான இகாஸ்வியா டெக் (போலந்து) 3-வது சுற்றில் குரோஷியாவை சேர்ந்த 30-வது வரிசையில் உள்ள பெட்ரா மேட்ரிச்சை எதிர்கொண்டார். இதில் ஸ்வியா டெக் 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் 4-வது வரிசையில் உள்ள ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை எலிசா பெட்டாவை வீழ்த்தினார். விக்டோரியோ அசரென்கா (பெலாரஸ்), சுவிட்டோலினா (உக்ரைன்), ஆகியோரும் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.
5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 32-ம் நிலை வீராங்கனை மரியா பவுஸ்கோவா (செக் குடியரசு) 7-6, (7-4), 4-6, 7-5 என்ற கணக்கில் கார்சியாவை தோற்கடித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
- இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.
- 23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது.
இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா)-ஜானிக் சினெர் (இத்தாலி) ஆகியோர் மோதுகிறார்கள்.
23 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள ஜோகோ விச் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளார்.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் நடப்பு சாம்பியனான அவர் விம்பிள்டன் டென்னிசில் 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்.
இரவு 8 மணிக்கு நடக்கும் மற்றொரு அரை இறுதியில் நம்பர் ஒன் வீரர் கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)-மெட்வடேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நாளை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் வோன்ட் ரோசோவா (செக்குடியரசு)-ஜாபியர் (துனிசியா) ஆகியோர் மோதுகிறார்கள்.
- 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் மான்பில்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
- மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்கா தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் மான்பில்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் வாவ் ரிங்கா தோல்வி அடைந்தார். அவரை மேக்ஸ் பர்செல் (ஆஸ்திரேலியா) 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
அதே போல் நம்பர் ஒன் வீரர் அல்கராஸ் (ஸ்பெயின்), அட்ரியன் மன்னா ரினோ (பிரான்ஸ்), ஸ்வெ ரேவ் (ஜெர்மனி), டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலாந்து), அலெக்சி பாபிரின் (ஆஸ்திரேலியா)ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஸ்வியாடெக் (போலாந்து) 3-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜெங்கை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.
- டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது.
- இதில் இந்தியாவின் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்றார்.
பீஜிங்:
ஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்மித் நாகல், மக்காவ் நாட்டின் மார்கோ லியூங்குடன் மோதினார்.
இதில் ஸ்மித் நாகல் 6-0, 6-0 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
- நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
- 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அறிமுக தொடரில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அந்த அணி நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்களை வாரி வழங்கி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பந்து வீச்சு படுமோசமாக இருப்பதால் பெங்களூரு அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.
இந்த நிலையில் பிரபல இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும், பெங்களூரு அணி நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், 'விளையாட்டின், ஐ.பி.எல். கிரிக்கெட்டின், ரசிகர்களின், வீரர்களின் நலன் கருதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வேறு உரிமையாளரிடம் விற்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். மற்ற அணி நிர்வாகங்கள் எப்படி அணியை சிறப்பாக கட்டமைத்து செயல்படுகிறதோ? அதேபோல் பெங்களூரு அணியையும் சிறப்பானதாக உருவாக்கும் அக்கறை கொண்ட புதிய உரிமையாளரிடம் விற்று விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர்.
- மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
லூயிஸ் உய்ட்டன் நிறுவனத்துடன் பிரபல டென்னிஸ் வீரர்களான ரோஜர் பெடரர் - ரஃபேல் நடால் ஆகியோர் இணைந்து ரசிகர்களுடன் உரையாடுவதற்காக புதிய விளம்பர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரோஜர் பெடரர் மற்றும் ரஃபேல் நடால் இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத்தொடரின் உச்சிக்கு ஏறியுள்ளனர். அந்த இடத்தில் இருந்து இது தொடர்பாக அவர்கள் இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய ரஃபேல் நடால், "இறுதியில் நான் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். போட்டியின் இயக்குநர்கள், போட்டிகளில் பணிபுரிபவர்கள், ஊழியர்கள் டென்னிஸ் வீரர்கள் சங்கத்தில் உள்ளவர்கள் என எல்லாரும் ஒரு டென்னிஸ் வீரரை விட நான் யார் என்பதை பற்றிய நல்ல விஷயங்களை சொல்லுங்கள்.ஏனென்றால், டென்னிஸ் வீரராக, பட்டங்கள், சாதனைகள் என்னிடம் உள்ளது. நான் கனவு கண்டதை விட அதிகமாக சாதித்தேன்" என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய ரோஜர் பெடரர், "நான் ஒரு டென்னிஸ் வீரராக மட்டும் நினைவில் கொள்ளப்படவில்லை, ஆனால் நான் விளையாட்டிற்கு என்ன கொடுத்தேன் மற்றும் விளையாட்டிற்கு பின்னால் ஒரு நபராக நினைவுகூரப்பட்டால், அது எனது விம்பிள்டன் வெற்றிகள் அல்லது அது எதுவாக இருந்தாலும், அது குறைவாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் ஒரு டென்னிஸ் வீரராக இருப்பதை விட ஆளுமையாக நினைவில் கொள்ள முடிந்தால், அது நன்றாக இருக்கும். நான் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருந்தால், அது எனக்கும் மகிழ்ச்சியைத் தரும். மக்கள் எங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.
- போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார்.
- ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
அமெரிக்காவின் அர்கன்சாசில் ஏ.டி.பி. சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் பெர்னார்ட் டொமிக் மற்றும் ஜப்பானை சேர்ந்த யுடா ஷிமிசு மோதினர். சர்வதேச தரவரிசையில் இவர்கள் முறையே 247 மற்றும் 265 இடங்களில் உள்ளனர்.
இத்தகைய போட்டிகளில் விளையாடி தனது தரவரிசையை முன்னேற்றி, போட்டியின் அடுத்தடுத்த சவால்களை எதிர்கொள்ளும் முனைப்பில் டொமிக் களமிறங்கினார். எனினும், துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஜப்பான் வீரர் யுடா ஷிமிசு முதல் செட்-ஐ 6-க்கு 1 என்ற அடிப்படையில் கைப்பற்றினார்.
போட்டியின் போது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று பலமுறை கூறிய டொமிக், மருத்துவர்கள் உதவியை நாடினார். எனினும், களத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறி போட்டி நடுவர் அவரை விளையாடுமாறு கூறியுள்ளார்.
இதனிடையே இந்த போட்டியை காண டொமிக்-இன் காதலி கீலி ஹண்ணா வந்திருந்தார். போட்டியின் போது டொமிக் மற்றும் அவரது காதலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து விளையாடிய அவர் போட்டியில் கவனம் செலுத்த முடியாதவராக காணப்பட்டார்.
இரண்டாவது செட்-இல் 5 புள்ளிகளை மட்டும் பெற்ற டொமிக் அதன்பிறகு போட்டியில் இருந்து வெளியேறினார். உடல்நிலை மோசமாவதால், தொடர்ந்து விளையாட முடியாது என்று கூறி டொமிக் போட்டியில் இருந்து வெளியேறியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து டொமிக்-இன் காதலியும் களத்தில் இருந்து வெளியேறினார்.