என் மலர்
நீங்கள் தேடியது "Thaipoosam"
- தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
- தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது.
இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.
தைப்பூச வழிபாடு:
நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். தை மாதப் பூச நட்சத்திரம் பெரும்பாலும் பவுர்ணமியில் வரும்.
முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.
தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
- தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
- உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.
தைப்பூச சிறப்புகள்:
சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.
சிதம்பரத்திற்கு வந்து அரும்பெரும் திருப்பணிகள் செய்து, நடராஜரை இரணியவர்மன் என்னும் மன்னன் நேருக்கு நேராகத் தரிசித்தது இந்நாளிலேயே.
இக்காரணங்களுக்காகவே சிவன் கோவில்களில் தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகங்களுடன் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்றுதான் சமாதியானார்.
இதனைக் குறிக்கும் விதமாக அவர் சமாதியான வடலூரில், தைப்பூசத்தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
தைப்பூச விரத முறை:
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர்.
தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர்.
உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம்.
மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.
- வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
- வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.
வடலூரில் தைப்பூசத்தன்று அருட்பெரும் ஜோதி விழா நடைபெறும்.
மாத பூசத்தில் ஆறு திரை விலக்கிக் காட்டுவார்கள்.
வருட பூசம் தை மாதத்தில் ஏழு திரை விலக்கி ஜோதி தரிசனம் காட்டுவதைக் காணலாம்.
1. கறுப்புத்திரை - மாயசக்தி,
2. நீலத் திரை- திரியா சக்தி,
3. சிவப்புத் திரை - இச்சாசக்தி,
4. பச்சைத் திரை- பராசக்தி,
5. பொன்திரை- ஞானசக்தி,
6. வெள்ளைத்திரை- ஆதிசக்தி,
7. பல வண்ணத்திரை- சிற்பசக்தி.
- கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
- மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
தைப்பூசத்தில் தான் யாழ்ப்பாண மக்கள் புது நெல்லு (புதிர்) எடுப்பர்.
தைப்பூசம் முருகனுக்கு உரிய சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
அன்று அதிகாலையில் எழுந்து வீடு வாசலைச் சுத்தம் செய்து வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் அரிவாள்,
தேங்காய், கற்பூரம், கத்தி, கடகம் என்பவற்றுடன் வயலுக்குச் சென்று,
கிழக்கு முகமாக நின்று சூரியனை வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க,
மற்றவர் முற்றிய புதுநெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர்.
அதனைக் குடும்பத்தலைவி பெற்று சுவாமி அறையில் வைப்பார்.
அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து,
வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர்.
அந்த அரிசியுடன் வீட்டில் உள்ள அரிசியையும் கலந்து அன்றைய மதிய உணவு சமைக்கப்படும்.
ஊரில் உள்ள முருகன் கோவில்களில் பால் குடம் எடுத்தும், காவடி எடுத்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றுவர்.
- தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
- வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.
வள்ளல் பெருமான் தைப்பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்.
காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாகும்.
தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பதாகும்.
அகரம்+உகரம்+மகரம்=ஓம்
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும்.
அப்போது ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப்படும். அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
* சந்திரன் என்பது மனஅறிவு.
* சூரியன் என்பது ஜீவ அறிவு.
* அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி, சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தைபூசம்.
மனம் ஜீவனில் அடங்கி, ஜீவன் ஆன்மாவில் அடங்கி, ஆன்மா சிவத்துடன் கலந்து விடும் என்பதை காட்டவே தைபூசம் நமது வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.
- காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான இன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும், இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முருகப் பெருமான் அருளால் தமிழக மக்கள் அனைவரின் வாழ்விலும், மகிழ்ச்சியும், அமைதியும் பெருகிட, அனைத்து வளங்களும் கிடைத்திட வேண்டிக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான தர்மத்தின் வெற்றிக்கு வழிகாட்டும் எம்பெருமான் முருகன், நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை அகற்றி, ஒளியைத் தரட்டும்.
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கூறியுள்ளார்.
- முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
- பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முருகன் கோவில்களில் அலைகடலென திரண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பெரும்பாலான பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தைப்பூசத் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தனித்துயர்ந்த
குன்றுகள் தோறும்
வீற்றிருக்கும்
தமிழ்நிலக் கடவுள்;
உலகெங்கும் வாழும்
தமிழர்களின்
தனிப்பெரும் கடவுள்
முருகப் பெருமானைப்
போற்றுவோம்!
அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.
- தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.
சென்னை:
தைப்பூச திருநாளையொட்டி மக்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
வேல் ஏந்தி நம்மை காத்தருளும் தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமானின் தைப்பூச நன்னாளில், உலகத் தமிழர்கள் வாழ்வெல்லாம் மலர, தொட்டது யாவும் துலங்க, வெற்றி மேல் வெற்றி சேர முருகப் பெருமானின் பூரண அருளை வேண்டி வழிபடுவதுடன்,
தைப்பூசம் திருநாளை அரசுப் பொது விடுமுறையாக நமது அதிமுக அரசு அறிவித்தமையைப் பெருமிதத்துடன் நினைவு கூர்கிறேன்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கூறியுள்ளார்.
- அனைவருக்கும் மகிழ்ச்சியான தைப்பூச வாழ்த்துகள்.
- முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும்.
புதுடெல்லி:
தைப்பூச விழாவையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் மகிழ்ச்சியான தைப்பூச வாழ்த்துகள். முருகனின் தெய்வீக அருள் நம்மை வலிமை, செழிப்பு மற்றும் ஞானத்துடன் வழிநடத்தட்டும். இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம்,வெற்றிக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
இந்த நாள் நம் வாழ்வில் அமைதியையும் நேர்மறையையும் கொண்டு வரட்டும். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று தெரிவித்துள்ளார்.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.
எடப்பாடி:
சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று தைப்பூச திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முருகன் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடைபெற்றது. இதில் எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து காவடி பூஜை, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. சிறப்பு பூஜையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் எடப்பாடி அடுத்த வெண்குன்றம் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில், எடப்பாடி அருள் ஞான பாலமுருகன் சன்னதி, க.புதூர் கந்தசாமி ஆலயம், கவுண்டம்பட்டி குமர வடிவேலர் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகப்பெருமான் கோவில்களில் தைப்பூச விழா விமர்சையாக நடைபெற்றது.
- கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
- மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகபெருமானின் 3ம் படைவீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசமாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 5ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் பால், பன்னீர், பறவை காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆட்டம், பாட்டத்துடன் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இந்த 10 நாளில் சுமார் 9 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 23 நாட்களுக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது.
இதில் கோவில் ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 776 மற்றும் 587 கிராம் தங்கம், 21,235 கிராம் வெள்ளி, 1153 வெளிநாட்டு கரன்சி கிடைத்துள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, யானைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மலைக்கோவிலில் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தண்டாயுதபாணியை தரிசனம் செய்தனர்.