என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "The farmer"
- ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார்.
- அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள தேவூர் கோணகழுத்தனூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 49), விவசாயி. இவர் அங்குள்ள தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சரஸ்வதி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். நேற்று அங்குள்ள அவரது உறவினரான செல்லப்பன் என்பவரது விவசாய கிணற்றில் ரமேஷ் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர். தொடர்ந்து அவரது உடலை கயிறு கட்டி மீட்டனர். தகவல் அறிந்த தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்ற போது அவர் கால் தவறி விழுந்தாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் சில்லரை கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- விவசாயிகள் உழவு செய்து முட்டைகோசை அளித்ததாக வேதணையுடன் தெரிவித்தார்.
தாளவாடி,
ஈரோடு மாவட்டத்தின் கடைகோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ள தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூர் பாரதிபுரம், கெட்டவாடி ,தலமலை, அருள்வாடி போன்ற 80 -க்கும் மேற்பட்ட கிராங்கள் உள்ளன.இங்கு கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் முட்டைகோஸ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ முட்டைகோஷ்ற்கு 1 ரூபாய் மட்டுமே விலை கொடுப்பதால் விவசாயிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
3 மாத பயிரான முட்டைகோஸ் 1ஏக்கருக்கு நாற்று,களை எடுத்தல் ,உரம் மருந்து என 80 ஆயிரம் வரை செலவு ஆகிறது. இம்முறை தண்ணீர் பற்றாக்குறை இல்லை என்பதால் பயிரிட்ட முட்டைகோஸ் நன்கு விளைந்துள்ளது.
தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கும் காய்கறிகள் வியாபரிகள் கோவை ,ஈரோடு ,திருப்பூர்,கரூர் பேன்ற பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பணை செய்கின்றனர். தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த விவசாயி குணசேகரன் 5 ஏக்கரில் முட்டைகோஸ் சாகுபடி செய்திருந்தார்.
இது குறித்து அவர் கூறும் போது, கடந்த 6 மாதமாகவே கிலோ 1 முதல் 2 ரூபாய் வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தாளவாடி மலைப்பகுதியில் 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் முட்டைகோஸ் சில்லரை கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விவசாயி முட்டைகோஸ் நடவு செய்தது கழை எடுத்து, உரம் போன்றவற்றை போட்டு முட்டைகோசை விளைவிக்கும் விவசாயிக்கு 1 ரூபாய் ஆனால் இடைதரகர்களின் அதிக்கத்தால் கடையில் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதில் போக்குவரத்து செலவு ஆட்கள் கூலி செலவு என வியாபாரிகளுக்கு கிலோவுக்கு ரூபாய் 5 போனாலும் கிலோவுக்கு 24 ரூபாய் இடைதரகர்கள் லாபம் பார்க்கின்றனர் . இதே போல் அனைத்து காய்கறிகளும் விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி 4 முதல் 5 மடங்கு அதிக விலை வைத்து சில்லரை விற்பனையில் விற்பணை செய்கின்றனர்.
5 ஏக்கரில் பயிர் செய்திருந்த முட்டைககோசை வாங்க வியாபாரிகள் யாரும் வராததால் வேறு வழியில்லாமல் உழவு செய்து அளித்ததாகவும் இதில் மட்டும் 4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இதே போல் தாளவாடியில் நிறைய விவசாயிகள் உழவு செய்து முட்டைகோசை அளித்ததாக வேதணையுடன் தெரிவித்தார்.
எனவே அரசு காய்கறிகளுக்கு விலை நிர்ணையம் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயிகளும் பாதிக்கப்படமாட்டார்கள், அதை வாங்கும் பொதுமக்களும் பாதிக்கப்பட மாட்டர்கள். எனவே தாளவாடி மலைப்பகுதியில் விளைவிக்கும் காய்கறிகளை அரசே நேரடியாக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யவேண்டும் என்றனர்.
- வாசு திடீரென விஷம் குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
கோபிசெட்டிபாளையம் பைரவர் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசு (வயது 52). விவசாயி. இவருக்கு அந்த பகுதியில் தோட்டம் இரு ந்தது. அவர் அங்கு விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வாசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வங்கி மற்றும் தெரிந்த வர்களிடம் கடன் பெற்று சொந்தமாக வீடு வாங்கினார். ஆரம்பத்தில் கடன் கட்டி கொண்டு வந்தார். ஆனால் தொடர்ந்து அவரால் வங்கி கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படு கிறது.
இதையடுத்து வாசு அவருக்கு சொந்தமான விவசாய வயலை விற்றார். அந்த பணத்தை கொண்டு கடனை அடை த்தார். இதை தொடர்ந்து அவர் கடனுக்காக தனது விவசாய தோட்டத்தை விற்று விட்டோமே என புலம்பி கொண்டு இருந்தார். இதையடுத்து அவர் மன வேதனையில் இருந்து வந்த தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டின் மாடியில் வாசு திடீரென விஷம் (பூச்சி மருந்து) குடித்து வாந்தி எடுத்து கொண்டு இருந்தார். இதை கண்ட அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் அவரை 108 ஆம்புலன்சு மூலம் மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த வாசு சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இற ந்தார்.
இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- மாரியப்பன் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார்.
- திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.
கடலூர்:
சிதம்பரத்தை அடுத்த அகரநல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 68). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு சென்றார். நிலத்தை சுற்றிப்பார்த்து விட்டு அருகில் இருந்த ஓடையில் கை, கால் கழுவச் சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு வலிப்பு வந்தது. இதில் ஓடையில் விழுந்த அவர் முச்சுத்திணறி இறந்து விட்டார்.
இது குறித்து அவரது மகன் சுப்பரமணியன் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
- உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட அமாவாசை நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.
அதன்படி, இன்று ஆவணி மாத அமாவாசையையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 1013 விவசாயிகள், பல்வேறு வகையான 4924 காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 247.293 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 55,282 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.69, 11, 292 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
- அலங்காநல்லூர் அருகே மனைவி-குழந்தைகளை கொன்ற விவசாயி கவலைக்கிடமாக உள்ளது.
- இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருேக பெரிய இலந்தைகுளத்தைச் சேர்ந்தவர் உத்தராஜ். இவரது மகன் முருகன் (வயது 38). இவர் அலங்காநல்லூர் குலமங்கலம் ரோட்டின் அருகில் உள்ள பொம்மாத்தேவர் என்பவருக்கு சொந்தமான கொய்யா தோப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
அவர் நிலத்தை குத்த கைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இதில் அவருக்கு சரியான லாபம் கிடைக்கவில்லை. இதனால் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் முருகனின் மனைவி சுரேகா, மகள் யோகிதா, மகன் மோகனன் ஆகியோர் அங்குள்ள தோட்டத்து கிணற்றில் பிணமாக கிடந்தனர். முருகன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சி செய்த தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அலங்கா நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிணற்றில் பிணமாக கிடந்த 3 பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் போலீசாரின் விசாரணையில் முருகன், தனது மனைவியின் கை, கால்களை கட்டிப்போட்டு கொலை செய்ததாகவும், அதே போல் மகன், மகளையும் கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து முருகன் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் முருகன் கழுத்ைத அறுத்துக்கொண்டதால் அவரது கழுத்து நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சுய நினைவு இழந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு தனது நண்பர்கள் மற்றும் ஜோதிடர் ஒருவ ருக்கு போன் செய்து அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவ தாகவும், அவர்களது உடல்களை நல்லடக்கம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அவர் தன்னிடம் ரூ. 4 ஆயிரம் மட்டும் உள்ளதாகவும் தெரி வித்துள்ளார்.
முருகன் சிலரிடம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அதனை திருப்பி செலுத்த முடியாமல் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக தெரிகி றது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்