என் மலர்
நீங்கள் தேடியது "the kerala story"
- தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
- வரி விலக்கை முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
போபால்:
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியானது. இந்த படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு மத்தியபிரதேசத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அம்மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
- சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
- தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிப்பு.
கேரள மாநில பெண்களை மையமாக வைத்து தி கேரளா ஸ்டோரி திரைப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறி பின்னர் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்று கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு கேரள மாநிலத்தில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் படத்தை திட்டமிட்டபடி திரையிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
இதற்கு தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால், இந்த படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
சென்னை அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட அனைத்து தியேட்டர்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் வெளியானது.
இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் நேற்று மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் திரையிடப்பட்ட நிலையில் நாளை முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த 2 நாட்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றது.
- தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
சென்னை:
கேரளாவை சேர்ந்த இந்து பெண்கள், முஸ்லிமாக மதம் மாறி ஐ.எஸ்.ஐ. எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போன்ற காட்சி அமைப்புகளுடன் எடுக்கப்பட்ட 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் கடந்த 5-ந்தேதி தமிழகத்தில் வெளியானது.
இந்த படம் வெளியானால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில் தான் 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியானது. சென்னையில் 13 தியேட்டர்களிலும், கோவையில் 3 தியேட்டர்களிலும் படம் வெளியானது.
இதையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியான தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படம் வெளியான கடந்த 5-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் 4 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தி கேரளா ஸ்டோரி படத்தை வெளியிட்டால் தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று நாம் தமிழர் கட்சி சார்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் படி அமைந்தகரை சந்திப்பில் உள்ள ஸ்கைவாக் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.
இப்படி கடந்த 2 நாட்களாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிராக சென்னையில் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் தி கேரளா ஸ்டோரி படம் ஓடும் தியேட்டர்கள் முன்பு பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத்தொடர்ந்து தியேட்டர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் தி கேரளா ஸ்டோரி படத்தை நிறுத்தியுள்ளதாக தியேட்டர்கள் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணை செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டங்கள் நடைபெற்றுள்ளதால் திரையரங்குகளின் பாதுகாப்பு கருதி அந்த படத்தை இன்று முதல் நிறுத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.
இந்த படம் தமிழகம் முழுவதும் வெளியாகவில்லை. சென்னையில் 13 தியேட்டர்களிலும், கோவையில் 3 தியேட்டரிலும் மட்டுமே படம் வெளியாகி இருந்தது. இந்த 2 இடங்களிலும் தியேட்டர்களில் இன்றுமுதல் படம் திரையிடப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்தார்.
'தி கேரளா ஸ்டோரி' படம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக நடைபெற்ற போராட்டம் காரணமாக தியேட்டர்கள் முன்பு பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் படம் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து தியேட்டர்களில் நீடித்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
- தீவிரவாதம் எந்தவிதத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என கருத்து தெரிவித்துள்ளார்
- தி கேரளா ஸ்டோரி திரைப்படம் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது.
கோவை,
தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் கோவை வந்தார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது
சாதி, மதம் பிரித்துப் பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எனக்கு ஒரே ஒரு சிறிய கேள்விதான். நான் தமிழ்நாட்டில் ஒரு இந்துவாக பிறந்தவள். எப்படி எதை வைத்து பிரித்துப் பார்ப்பதனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற இந்து பண்டிகைகளுக்கு நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். பிரதமர் எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்து சொல்கிறார். என்னைப் போன்ற கவர்னர்களும் எல்லாம் மத விழாக்களுக்கும் வாழ்த்துக்கள் சொல்கிறோம் எதையும் பிரித்து பார்ப்பது கிடையாது. அதனால் எப்படி பிரித்துப் பார்ப்பதால் நீங்கள் வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள் எனக் கூறினால் நன்றாக இருக்கும்.
ஒரு ஆட்சியில் அறிவிப்புகள் நிறைய வரலாம். ஆனால் அறிவிப்புகளை திரும்ப பெரும் ஆட்சியாக இது இருந்து வருகிறது. மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான படமாக இது உள்ளது. அதற்கு ஆதரவாக இருப்பவர்கள் இந்த படத்தை எதிரானதாக கருதலாம். தீவிரவாதத்திற்கு எதிரானது என்றால் அனைவரும் ஆதரிக்கலாம். பிரதமர் மோடி அதைப்பற்றி தான் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதம் எந்த விதத்தில் வந்தாலும் அதிலும் குறிப்பாக பெண்கள் இளைஞர்களை குறி வைத்து வந்தால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. அவர்களுக்கு ஆதரவான கருத்தை வைத்து படம் எடுத்தால் கருத்து சுதந்திரம், அப்படி இல்லை என்றால் கருத்து சுதந்திரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்
- 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி வெளியானது.
- இதையடுத்து தமிழகத்தில் உள்ள மால்களில் இன்று முதல் இப்படம் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.
கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்ட படம் 'தி கேரளா ஸ்டோரி'. இந்த படம் சென்னை உள்பட தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மே 5-ஆம் தேதி இப்படம் வெளியானது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை ,படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து நடிகை குஷ்பு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துபவர்கள் எதை கண்டு அச்சம் கொள்கின்றனர் என்றே தெரியவில்லை. வெளிப்படையாக கூறப்பட்ட உண்மையா அல்லது இந்த உண்மையின் அங்கமாக பல ஆண்டுகளாக அமைதியாகவும், தெரியாமலும் இருந்ததா என்று புரியவில்லை. எதை பார்க்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானம் செய்து கொள்ளட்டும். நீங்கள் யாருக்காகவும் முடிவெடுக்க வேண்டாம். காட்சிகளை ரத்து செய்வதற்காக தமிழ்நாடு அரசு நொண்டி காரணங்களை கூறி வருகிறது. இது கட்டாயம் பார்க்கப்பட வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க செய்ததற்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Wonder what scares those who are fighting to ban #TheKeralaStory . The blatantly told truth or the fear of realising of being part of the truth, unknowingly & silently for years. Let people decide what they want to watch. You cannot decide for others. TN govt gives lame reasons…
— KhushbuSundar (@khushsundar) May 8, 2023
- கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
- இப்படத்திற்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்ட நிலையில் இன்று முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
- இப்படத்திற்கு வரி விலக்கு அறிவிப்பதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.

தி கேரளா ஸ்டோரி
இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சினை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்க நிர்வாகங்கள் இந்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

தி கேரளா ஸ்டோரி
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் ஒரு பிரிவினரை அவமதிப்பது போன்று வெளியானது. அதுபோல் தான் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படமும் ஒரு பிரச்சினையை உருவாக்குவது போன்று தெரிகிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

மத்தியப் பிரதேச அரசு கடந்த 6-ம் தேதி இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்திருந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தில் "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவித்துள்ளார்.
'The Kerala Story' उत्तर प्रदेश में टैक्स फ्री की जाएगी।
— Yogi Adityanath (@myogiadityanath) May 9, 2023
- ‘தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்துக்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
- இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், இம்மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.

அப்போது இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதா? என்று நீதிபதிகள் கேட்டனர். படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து விட்டதாக கபில்சிபல் தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை வருகிற 15-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
- நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது.
- இப்படம் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கடந்த 5-ந் தேதி 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது. கேரளாவில் இந்து, கிறிஸ்தவ பெண்களை மூளை சலவை செய்து வெளிநாட்டுக்கு கடத்தி சென்று தீவிரவாத இயக்கத்தில் சேர்ப்பதாக இந்த படத்தின் கதை சித்தரிக்கப்பட்டு இருந்தது. இதற்கு கேரளா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. என்றாலும் எதிர்ப்பை மீறி நாடு முழுவதும் இந்த படம் திரையிடப்பட்டது.
தமிழ் நாட்டில் பல தியேட்டர்களில் இந்த படம் வெளியானது. இதுபோல கேரளாவிலும் 30-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. படம் வெளியான 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த படத்திற்கு மேற்கு வங்காளம் தடை விதித்து உள்ளது.
இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் கொலை மிரட்டல் வந்தது. இதுபற்றி படத்தின் இயக்குனர் சுதிப்தோ சென் மும்பை போலீசில் புகார் கொடுத்தார். அதில் படக்குழுவை சேர்ந்தவருக்கு டெலிபோன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. வீட்டை விட்டு தனியாக வெளியே வந்தால் மீண்டும் வீடு போய் சேரமுடியாது என்று மர்ம நபர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மிரட்டல் வந்த நபருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள்
- உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.
புதுடெல்லி :
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அந்தப் பதிவில் அவர், "தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்துகிறவர்கள், எதைக் கண்டு பயப்படுகின்றனர் என்று தெரியவில்லை. எதைப் பார்க்க வேண்டும் என்பதில் மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், நீங்கள் மற்றவர்களுக்காக தீர்மானிக்க முடியாது" என கூறி உள்ளார். இதற்கு முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யு மான கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
பா.ஜ.க.வின் குஷ்பு, 'தி கேரளா ஸ்டோரி' படத்தைப் பொறுத்தமட்டில், எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்களைத் தீர்மானிக்க விடுங்கள், மற்றவர்களுக்காக நீங்கள் தீர்மானிக்க முடியாது என்கிறார். அப்படியென்றால் அமீர்கானின் பி.கே., ஷாருக்கானின் பதான், பஜ்ராவ் மஸ்தானி படங்களுக்கு எதிராக எதற்காக போராட்டங்கள்? உங்கள் அரசியல், வெறுப்பைத்தூண்டுகிறதை ஆதரியுங்கள் என்பதுதான்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன.
- ‘தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.
மும்பை :
இந்தியில் வெளியான 'தி கேரளா ஸ்டோரி' படம் நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், சுதீப்தோ சென் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் நடிகைகள் அடா சர்மா, யோகித பிஹானி, சித்தி இத்னானி மற்றும் சோனியா பலானி உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர்.
கேரளாவில் மாயமான பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேருவது போல படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில் இந்த சினிமா திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த படத்துக்கு இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா ஆதரவு தெரிவித்துள்ளன. மும்பையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்தை பொதுமக்கள், தொண்டர்கள் இலவசமாக பார்க்க பா.ஜனதா தலைவர்கள் டிக்கெட் எடுத்து கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக மும்பையை சேர்ந்த பா.ஜனதா மந்திரிகள் மங்கல் பிரதாப் லோதா, அதுல் பத்கால்கர், எம்.எல்.ஏ.க்கள் சுனில் ரானே, பரக் ஷா ஆகியோர் தொண்டர்கள் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக 'தி கேரளா ஸ்டோரி' படம் மும்பையில் வசூலை குவித்து வருகிறது.
இந்தநிலையில் 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த படத்தின் தயாரிப்பாளரை பொது வெளியில் தூக்கில் போட வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மந்திரியுமான ஜிதேந்திர அவாத் ஆவேசமாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "அவர்கள் கேரளாவின் பெயரை மட்டும் கெடுக்கவில்லை, அந்த மாநிலத்தின் பெண்களை அவமதித்து உள்ளனர். அவர்கள் 32 ஆயிரம் கேரள பெண்கள் மாயமாகி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்ததாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சேர்ந்தவர்கள் 3 பேர் தான். அந்த படத்தின் தயாரிப்பாளரை பொதுவெளியில் தூக்கில் போட வேண்டும்" என்றார்.
- கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'.
- இந்த திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அசம்பாவிதங்களை தவிர்க்க தியேட்டர்களில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் இப்படம் திரையிடப்பட்டு பின்னர் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டது.

தி கேரளா ஸ்டோரி
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை விதித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதாவது, வெறுப்பு மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து உத்தரப்பிரதேசத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு வரி விலக்கு அறிவிக்க உள்ளதாக அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படக்குழுவினர் லக்னோவில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.