என் மலர்
நீங்கள் தேடியது "Theft"
- பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும்.
- ஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த நபர் நுழைந்தார்.
"அங்காடியா" என்பது, வணிகர்கள் தங்கள் பணத்தை ஒரு இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய முறையாகும். பல நூற்றாண்டுகளாக செயல்முறையில் உள்ள இது ஒரு வங்கிக்கு இணையான அமைப்பாகும். பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் நபர்கள் அங்காடியாக்கள் ஆவர்.
இவ்வாறான ஒரு அங்காடியாவை டெல்லியில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கிமுனையில் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
டெல்லியின் லஹோரி கேட் பகுதியில் உள்ள மார்கெட்டில் முகமூடி அணிந்த ஒருவர் அங்காடியா வர்த்தகரிடம் துப்பாக்கி முனையில் 80 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்தார்.
அந்த நபர் வர்த்தகரை பின்தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி அவரது பையை எடுத்துக்கொண்டு ஓடுவது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மேலும் அங்கிருந்து செல்வதன்முன் பல முறை தனது துப்பாக்கியால் அந்த நபர் சுட்டார்.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உலகநாதன் மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார்.
- மர்ம நபர்கள் யாரோ மோட்டார்சைக்கிளை திருடி சென்று விட்டனர்
களக்காடு:
வீரவநல்லூர் அணைக்கரை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிதுரை மகன் உலகநாதன் (23). இவர் மனோ கல்லூரியில் எம்.காம். முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது சகோதரனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் களக்காடு பச்சையாறு அணை அருகே உள்ள தேங்காய் உருளி அருவிக்கு குளிக்க சென்றார். அருவிக்கு அருகே உள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குளித்துக் கொண்டிருந்தார்..
பின்னர் குளித்து முடித்து விட்டு வந்து பார்த்த போது, மோட்டார்சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ அதனை திருடி சென்று விட்டனர் என்பதை அறிந்த அவர் இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி மோட்டார்சைக்கிளை திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.
- தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார்
- 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு
நெல்லை:
பாளை கே.டி.சி. நகர் அருகே உள்ள சீனிவாச நகரை சேர்ந்தவர் ராம் ஜவகர்(வயது 57). இவர் அரசு பஸ் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நகை திருட்டு
தீபாவளி பண்டிகை யையொட்டி வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் ராம் ஜவகர் வெளியூர் சென்றுவிட்டார். நேற்று மீண்டும் அவர்கள் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.
இதுதொடர்பாக ராம் ஜவகர் ஐகிரவுண்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாளை மகிழ்ச்சிநகரை சேர்ந்தவர் ராஜ் (55). இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்றுவிட்டார். இன்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், அங்கு நகை, பணம் இல்லாததால் கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் சுபாஷ்
- சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
நெல்லை:
பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). இவர் சவுண்ட் சர்வீஸ் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார்.
காலையில் பார்த்தபோது அதனை காணவில்லை. இது தொடர்பாக பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மோட்டார் சைக்கிளை திருடியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்தார்.
- கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி பெருமாள் கோவிலில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கோவிலுக்குள் வந்து பூட்டை உடைத்து அங்கிருந்த அம்மனின் ஒரு கிராம் பொட்டு தங்கத்தை திருடியுள்ளார். பின்னர் கோவில் மூலஸ்தான அறையின் பூட்டை உடைக்கும் போது சத்தம் கேட்டு காவலாளி பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் அந்த திருடன் திருட கொண்டு வந்த பொருட்களை கோவிலிலேயே போட்டு விட்டு தப்பி சென்று விட்டான். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி உள்ளிட்ட பொருட்களையும் உடைத்து சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சந்திப்பு பகுதி சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார்.
- ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.
நெல்லை:
நெல்லை டவுன் பாட்டபத்து நபிகள் நாயகம் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(வயது 27). இவர் தீபாவளி பண்டிகையையொட்டி தனது நண்பருடன் சந்திப்பு பகுதியில் மெயின்ரோட்டில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு சாலையோரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த பிலால் என்ற வாலிபர் ஆடைகள் விற்பனை செய்து வந்துள்ளார். அப்போது அவருக்கு தெரியாமல் ஆனந்த் தனது நண்பருடன் சேர்ந்து ஆடைகள் இருந்த மூட்டையை திருடிச்சென்று விட்டனர்.
இதுதொடர்பாக பிலால், சந்திப்பு பாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆனந்த் மற்றும் அவரது நண்பரை தேடி வந்தனர். நேற்று ஆனந்த் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தனர்.
- ஜெயச்சந்திரன் தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
- இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முருக்கேரி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன். இவர் திண்டிவனம் மயிலம் ரோட்டில் உள்ள தனியார் இருசக்கர வாகன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர்இருசக்கர வாகனம் நிறுவனம் எதிரே தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். இரவு பணியை முடித்து விட்டு வந்து பார்க்கையில் அவரது வாகனம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து திண்டிவனம் போலீசாரிடம் ஜெயச்சந்திரன் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்துமர்ம நபர்களை வலை வீசிதேடி வருகின்றனர்.
- திருமங்கலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் நகை கொள்ளை போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- பாப்பாக்குடி மின்வாரியத்தில் அலுமினிய மின் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது
- அலுமினிய கம்பிகளை பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சுதாகர், குமாரசாமிபுரம் மாரியப்பன், பனையங்குறிச்சியைச் சேர்ந்த முருகன், பழைய இரும்பு வியாபாரி கணேசன் ஆகியோர் திருடியது தெரியவந்தது.
முக்கூடல்:
பாப்பாக்குடி மின்வாரியத்தில் அலுமினிய மின் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகள் சம்பவத்தன்று திருட்டு போனது.
இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் பரிமளாதேவி பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அலுமினிய கம்பிகளை பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சுதாகர், குமாரசாமிபுரம் மாரியப்பன், பனையங்குறிச்சியைச் சேர்ந்த முருகன், பழைய இரும்பு வியாபாரி கணேசன் ஆகியோர் திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
- வீட்டில் 8 பவுன் நகை-ரூ.1 லட்சம் திருட்டுபோனது.
- வயல் வேலைக்கு சென்ற போது நடந்த சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஜி.கே.எம். நகரில் குடியிருப்பவர் ஜாவித் பீவி. இவரது கணவர் பக்ரீத் முகமது. இவர்களது 2 மகன்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இதனால் திருமானூரில் உள்ள வீட்டில் பக்ரீத் முகமதுவும், ஜாவித் பீவியும் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு, வெங்கனூரில் உள்ள தங்களது வயலில் சாகுபடி பணிக்காக சென்றுள்ளனர். பின்னர் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்ததை கண்ட அக்கம், பக்கத்தினர் இது குறித்து ஜாவித் பீவிக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்த்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து திருமானூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதில் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வள்ளியூர் பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.
- திருட்டில் ஈடுபட்டது சுனில் , செல்வன்,ஜெபாஸ்டின் ஆகியோர் என்பது தெரியவந்தது.
வள்ளியூர்:
வள்ளியூர், பணகுடி, பழவூர், ராதாபுரம் மற்றும் கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.
மோட்டார் சைக்கிள் திருட்டு
அதன்பேரில் திருட்டில் ஈடுபடும் நபர்களை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின்பேரில், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் மேற்பார்வையில் வள்ளி யூர் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீஸ் காரர்கள் சுரேஷ் , லூர்து டேனியல் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் வள்ளியூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் குமரி மாவட்டம் மயிலாடி புதூரை சேர்ந்த சுனில் (வயது 18), செல்வன் (32) மற்றும் கூத்தங்குழி மேலத்தெருவை சேர்ந்த ஜெபாஸ்டின் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.12.50 லட்சம் மதிப்புள்ள 22 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்த வள்ளியூர் சரக போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.
- வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்துள்ளார்.
- காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது 2 ஆடுகள் திருட்டு.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் வசிப்பவர் ஜான்சுல்தான் (வயது 52).
இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கொட்டகையில் ஆடுகளை அடைத்து வைத்து உள்ளார்.
காலையில் ஆட்டுக்கொட்டகையில் சென்று பார்த்தபோது அதில் 2 ஆடுகள் திருட்டு போய் இருப்பது தெரிய வந்தது.
இது குறித்து வேதாரண்யம் காவல்நிலையத்தில் ஜான் சுல்தான் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்கு பதிவு கோடியக்காடு பகுதி விஜய் (வயது 22) என்பவரை கைது செய்தனர்.
தலைமறைவான கோடியக்காடு அஜீத் (22) என்பவரை தேடி வருகின்றனர்.