என் மலர்
நீங்கள் தேடியது "therottam"
- இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கினார்.
- சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது.
நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது.
இக்கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி இன்றளவும் காணப்படுகிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் சென்று நண்பகல் 11.40 மணிக்கு தேர்நிலையை அடைந்தது.
தேரோட்டத்தில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், திருப்பணி குழுவினர், கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதை தொடர்ந்து இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கினார். பிறகு சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேல் வாங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந் தேதி வேல் வாங்குதலும் 30-ந்தேதி சூரசம்ஹாரமும் நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றது, இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு மகாஅபிஷேகமும், சர்வஅலங்காரமும் தீப தூப, ஆராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து தன்இருப்பிடத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத்தேரில் காலை 9.05மணிக்கு எழுந்தருளினார்.
காலை 9.15 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டு சன்னதி தெரு கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் சட்டத்தேர் ஆடி அசைந்து வலம் வந்தது. தேரை பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காலை 11.35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.
தமிழ்புத்தாண்டு தினத்திலும், கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகபெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கந்தசஷ்டியையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் முருகபெருமான் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.
- மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று (10-ந் தேதி) வரை 3 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி 6 ஊர் சப்பரங்கள் அம்மாபட்டியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது பரவசப்படுத்தியது. இந்த திருவிழா முத்தாலம்மன் கோவில் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு அம்மாபட்டியை தவிர மற்ற 6 கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் சப்பரத்தை இரவு, பகல் பாராது செய்து வந்தனர். வண்ண, வண்ண காகிதங்கள், மூங்கில் கொண்டு சப்பரத்தை அலங்கரித்தனர்.
ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை இருந்தது.கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் தலை சுமையாகவே சுமார் 2 கிலோமீட்டர் அம்மாபட்டிக்கு சுமந்து கொண்டு வந்தனர்.
கிளாங்குளம்,சத்திரப்பட்டி,சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது. அம்மா பட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டு இருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமத்துக்கு திரும்பினர். தொடர்ந்து சப்பரங்கள் அவர்கள் கிராமத்திற்கு திரும்பியது.பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர்களை, வடம் பிடித்து,அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் தங்கள் தலை சுமையாக தூக்கி வருவது சிறப்பாகும்.இந்த சப்பர திருவிழாவை பார்த்து,அம்மன்கள் அருள்பெற வேண்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.
தொடர்ந்து மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு சமுகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒன்றுமையை திருவிழாவின் மூலம் வெளிபடுத்தினார்கள்.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.
- அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருச்செங்கோட்டில் உள்ள ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு சுமார் 51 ஆண்டுகளுக்கு பின்னா் நேற்று தெப்பத்தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு தெப்பத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
அதன்படி கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனி வந்த அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடுகுள பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், உதவி கலெக்டர் கவுசல்யா, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன் அர்த்நாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
- கடைமுக தீர்த்தவாரி விழா இன்று நடைபெறுகிறது.
மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் கடைசி 10 நாட்கள் உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.
மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக வதாரண்யேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நேற்று மாலை 2 மணி அளவில் தொடங்கிய தேரோட்டம் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
- ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பரிமள ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
- காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.
108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமாகவும் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது.
இந்த கோவிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பரிமள ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என பக்திகோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து மதியம் பரிமள ரெங்கநாத பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.
- கடந்த 14-ந்தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது
- தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வந்தது.
பாலக்காடு அருகே கல்பாத்தி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் ஆகிய 3 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் தேர்த்திருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி முதல் நாள் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 2-வது நாள் நாள் தேரோட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று 3-து நாள் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளினர்.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு தேரோட்டம் நடந்தது. விசாலாட்சி சமேத விஸ்வநாதர் சுவாமி கோவில், கணபதி கோவில், சாந்தபுரம் பிரசன்ன விநாயகர் கோவில் மற்றும் 2 கோவில்களை சேர்ந்த தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் அணிவகுத்து வந்தன. கோவிலை ஊற்றி தேரோட்டம் நடந்து, பின்னர் கல்பாத்தி கிராமத்தில் ஒரே இடத்தில் சங்கமம் ஆனது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
- ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
- பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 6-ந்தேதி காலை பரணி தீபம் மாலை 6 மணிக்கு மாலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவையொட்டி தொடர்ந்து இரவு மாட வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தீபத் திருவிழாவில் 7-வது நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம் நடந்தது. காலை 6.45 மணிக்கு விநாயகர் தேர் புறப்பாடு நடைபெற்றது. ஒருபுறம் ஆண்களும் மறுபுறம் பெண்களும் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து விநாயகர் தேர் நிலைக்கு வந்த பிறகு முருகர் தேரோட்டம் நடைபெற்றது. மதியம் 1.30 மணிக்கு மேல் அருணாசலேஸ்வரர் மகாதேரோட்டம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து பெண்களால் இழுக்கப்படும் அம்மன் தேரோட்டமும், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெறுகிறது.
2 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற்றதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். ரத வீதிகளில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷம் எழுப்பியபடி பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்துச் சென்றனர்.
ராஜகோபுரம் முன்பு ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதிகளில் பக்தர்கள் பரவசத்துடன் காணப்பட்டனர்.
கார்த்திகை தீபத்திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும் நாளன்று நேர்த்தி கடனாக கரும்பில் சேலையால் தொட்டில் கட்டி தங்கள் குழந்தையை சுமந்தபடி மாட வீதியை வலம் வருவார்கள். அதன்படி, இன்று ஏராளமான பக்தர்கள் கரும்பு தொட்டில் அமைத்து மாட வீதியை வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
தேரோட்ட த்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட்டன.
- மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது.
- இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும்.
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் தேர்த்திருவிழா நடைபெற்றது முதலில் விநாயகர் தேர் காலை 6 45க்கும் தொடங்கி 10 20க்கு நிலைக்கு வந்தன.
அதனைத் தொடர்ந்து முருகர் 10.35க்கும் தொடங்கி 2.50 மணிக்கு நிலைக்கு வந்த சேர்ந்தன. தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய தேர் மாலை 3. 47 க்கு தொடங்கியது பெரிய தேர் தொடங்கியது.
அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் மிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.
மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது. பின்பு இரவு 11 42 மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தன இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும். இது தேர் மாட வீதியை உலா வந்து விடியற்காலை 4 மணிக்கு வந்து நிலைக்கு சேர்ந்தன. இதனுடன் சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.
- பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
- வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறகூடிய பங்குனி பெருவிழாவில் கிரிவல பாதையில் மகா தேரோட்டம் நடைபெறும். இதற்காக கோவில் வாசல் முன்பு பெரிய தேர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தை மாதத்தில் தெப்பத் திருவிழா மற்றும் கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீப திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.
இதற்காக பதினாறு மண்டபம் வளாகத்தில் "தேர்" நிலைநிறுத்தப்பட்டுள்ளது. பதினாறுகால் மண்டப வளாகத்தில் இருந்து கீழ ரதவீதி, பெரிய ரதவீதி, மேலரதவீதி வழியாக தேர்வலம் வரும். அதில் ஏராளமான பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தரிசனம் செய்வார்கள். இத்தகைய நிகழ்வானது காலம், காலமாக தொன்றுதொட்டு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தநிலையில் தற்போது திருக்கார்த்திகை தீப திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முத்தாய்ப்பாக வருகின்ற 6-ந்தேதி திருக்கார்த்திகை நாளாகும்.
ஆகவே கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் ரதவீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி பதினாறுகால் மண்டப வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள தேரின் மீது தண்ணீர் பீய்ச்சி சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வண்ண துணிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தேரோட்டத்திற்கு தேர் தயார்படுத்தப்பட்டுள்ளது. நாளை(செவ்வாய்கிழமை) காலையில் தேரோட்டம் நடக்கிறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
- தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் கல்யாண ரெங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் இரணிய நரசிம்மர்களுக்கு தனி சன்னதி இந்த கோவிலில் உள்ளது.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் கடந்த வாரம் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதனையொட்டி கல்யாண ரெங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வார் பக்தர்களால் தேருக்கு எடுத்து வரப்பட்டனர். இதையடுத்து தீபாராதனை காட்டப்பட்டு, தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், ஆய்வர் மதியழகன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், விழாகுழு செயலாளர் ரகுநாதன், ஒன்றிய கவுன்சிலர் நடராஜன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பின்னர் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டகணேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
- சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
- மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை மாதத்தில் நடக்கும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பிரசித்தி பெற்றது.
இதேபோன்று மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வெளிவீதிகளில் நடைபெறும் அஷ்டமி சப்பர திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளப்பதை குறிக்கும் வகையில் அஷ்டமி சப்பரம் தேரோட்டம் நடத்தப் படுகிறது. அஷ்டமியான இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அஷ்டமி சப்பர தேரோட்டம் நடைபெறுகிறது.
இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அதன் பின் காலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சொக்கநாதரும், சிறிய தேரில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். பக்தர்கள் கோஷம் முழங்க 2 தேர்களையும் வடம் பிடித்து இழுத்து அஷ்டமி சப்பரத்தை தொடங்கி வைத்தனர்.
இதில் மீனாட்சி அம்மன் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். வழி நெடுகிலும் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதன் காரணமாக மதுரையில் விழாக்கோலம் பூண்டிருந்தது.
தேரோட்டத்தின் போது 2 தேர்களிலும் இருந்த சிவாச்சாரி யார்கள் பூஜை செய்த அரிசியை வழி நெடுகிலும் தூவிச்சென்றனர். அதனை பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்தனர். இந்த அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக் கொண்டால் பசி என்னும் நோய் ஒழியும் நம்பிக்கை.
2 தேர்களும் கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்டு யானைக்கல், கீழவெளிவீதி, தெற்குவெளி வீதி, கிரைம் பிராஞ்ச், திருப்பரங்குன்றம் சாலை, மேலவெளி வீதி, குட்செட் தெரு, வக்கீல் புதுத்தெரு வழியாக நிலையை அடைந்தது.
அஷ்டமி சப்பரத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தன. 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.