என் மலர்
நீங்கள் தேடியது "Therpavani"
- தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
- திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணிகண்டம்:
மணிகண்டம் ஒன்றியம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அருள்நிறை அடைக்கல அன்னை ஆலய திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு நற்கருணை பவனியும், இயேசுவின் திருப்பாடுகள் காட்சி எனப்படும் பாஸ்கா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
நள்ளிரவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட 4 சப்பரங்களில் அருள்நிறை அடைக்கல அன்னை, செபஸ்தியார், அந்தோணியார் மற்றும் ஆவூர் தேர் என்று அழைக்கப்படும் சப்பரத்தில் உயிர் நீத்த ஆண்டவர் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் தேர்பவனி நடைபெற்றது.
முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் நேற்று அதிகாலை நிலையை அடைந்தது. விழாவில் நவலூர் குட்டப்பட்டு, ராம்ஜிநகர், சோமரசம்பேட்டை, புங்கனூர், மணிகண்டம், திருச்சி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று காலை தேரடி திருப்பலி, புது நன்மை ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவில் உபய தேர்பவனியும், கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து பட்டிமன்றம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக மணியக்காரர்கள் சேவியர், ஜெரின் ராஜதுரை, கொத்து மணியக்காரர்கள், கத்தோலிக்க இளைஞர் மன்றத்தினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.
- திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- இன்று காலை பிஷப் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலி யும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரி களுக்காக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் தூய பணிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது, தொடர்ந்து இரவு 10 மணிக்கு தூய பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திருவிழாவில் அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
- மானாமதுரையில் குழந்தை தெரசாள் ஆலய தேர்பவனி நடந்தது.
- 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் புகழ்பெற்ற குழந்தை தெரசாள் ஆலயம் உள்ளது. இங்கு 83-ம் ஆண்டு பெருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை, சிறியபல்லக்கில் குழந்தை தெரசாள் ஆலய வளாகத்தில் வலம் வரும் நிகழ்ச்சியில் இறைசெய்தி வாசிக்கப்பட்டது.
முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி, மின்சார சப்பர தேர்பவனி நடந்தது. அருட்தந்தை செங்கோல் விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் சிறக்க வேண்டியும், மாணவ- மாணவிகள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டியும் திருப்பலி பூஜைகளை நடத்தினார்.
முடிவில் ஆலயம் முன்பு குழந்தை தெரசாள் சொரூபத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரம் மெயின் கடை வீதி வழியாக பவனி வந்து ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தை எஸ்.எஸ். பாஸ்டின் மற்றும் அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.
- புனித அன்னம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
- கொடியேற்றத்துடன் தொடங்கியது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி புனித அன்னம்மாள் ஆலய ஆண்டு விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதன்பின்னர் மைக்கேல் பட்டி பங்குத்தந்தை அடைக்கலசாமி திருப்பலி செய்து திருத்தேரை மந்திரித்தார். தேரில் அன்னம்மாள் சொரூபத்தை வைத்து பவனி நடைபெற்றது. நேற்று காலை சிறப்பு திருப்பலியோடு ஆண்டு பெருவிழா நிறைவு பெற்றது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா தேர்பவனி நடந்தது.
- பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பங்திகேற்பார்கள்.
ராமேசுவரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட வேர்க்காடு பகுதியில் 480 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான புனித சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 16-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர் பணிக்கு முன்னதாக மாலை 6 மணிக்கு மதுரை புனித ஜெபமாலை அன்னை ஆலய பங்கு பணியாளர் மற்றும் வட்டார அதிபர் ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் பிராத்தனை கூட்டம் நடந்தது. இரவு 9 மணி அளவில் சாமி சந்தியாகப்பர் மற்றும் மரியாள் மற்றும் தூதர் மின் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் பவனி வந்தனர். இதில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு புனித சந்தியாகப்பரை தரிசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் ரவிச்சந்திர ராமாவன்னி, ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான், நகர்மன்ற துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆலய பங்குதந்தை செபஸ்டின், பாம்பன் பங்குத்தந்தை இயேசு ஜெயராஜ், மண்டபம் பகுதி பங்குத்தந்தை ஜான் ராபர்ட், ராமேசுவரம் பகுதி பங்குத்தந்தை தேவசகாயம், தென்குடா பங்குத்தந்தைகள் சுந்தர்ராஜ், அருள்ராஜ், விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் அமல்ராஜ், அரியாங்குண்டு கிராமத்தலைவர் சந்தியாதாஸ், தென்குடா கிராமத்தலைவர் அந்தோணி சந்தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மும்மதத்தினர் பங்கேற்பு
இந்த புனித யாகப்பர் ஆலயத்தில் ஏறத்தாழ 480 ஆண்டுகளாக ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழாவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம் தீவு பகுதியைச் சேர்ந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் பங்திகேற்பார்கள். இந்த திருவிழாவில் இந்துக்கள் அதிகமாக கலந்து கொண்டு முடி்காணிக்கை செலுத்தினர். மேலும் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி வழிபட்டனர்.
- கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
- விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 30-ம் தேதி நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், சோழவித்யா புரத்தில் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னையின் தாயான புனித சந்தன மாதா ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு திருவிழா கொடியே ற்றத்துடன் தொடங்கியது. மறைவட்ட அதிபர் பன்னீ ர்செல்வம் தலைமையில் ஜெபமாலை, மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.இதை தொடர்ந்து கொடி புனிதம் செய்யப்பட்டு கொடி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது.கொடியேற்ற நிகழ்வில் சோழவித்தியாபுர கிறிஸ்தவ சமுதாய தலைவர் மரியசூசை, சோழவித்யாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கோமதிதமிழ்ச்செல்வம் மற்றும் கிறிஸ்துவ சமூதா யத்தினர் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
- இடைக்காட்டூரில் திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா நடந்து வருகிறது.
- தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் ஆலயம் உள்ளது. இங்கு 128 -ம் ஆண்டு திருஇருதய ஆண்டவர் ஆலய தேர்பவனி திருவிழா கடந்த
23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
தமிழக அரசால் சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட இங்கு மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருஇருதய பெருவிழா சிறப்பாக 10 நாட்கள் நடைபெறும்.
இந்த விழாவில் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு ஏசு நாதரின் வாழ்வின் அற்புதங்களை எடுத்துரைப்பார்கள்.
இன்று முக்கிய நிகழ்ச்சியாக திருவிழா சிறப்பு திருப்பலியும், மாலை 6மணிக்கு திருஇருதய சொரூபம் தாங்கிய திரு தேர்பவனியும் நடைபெறுகிறது. நாளை (2-ந்ேததி) நற்பவனி விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல பணியாளர் இம்மானுவேல் தாசன், இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், செசல்ஸ் பேரவையினர் செய்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு மதுரை மத்திய பஸ்நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இடைக்காட்டூர் ஆலயத்துக்கு சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்திலேயே ஏசுநாதர் தனது இடதுபக்க இருதயத்தை காண்பித்தப்படி உள்ள ஒரே ஆலயம் இதுதான். பிரான்ஸ் நாட்டு கட்டிட கலையான "கோதிக்'' கட்டிட கலை நுட்பத்துடன தமிழகத்தில் முதன் முதலில் கட்டப்பட்டது இந்த தேவாலயம் ஆகும்.