என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threatened to kill"

    • திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தி (வயது 43).
    • முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

    திருச்சி

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி (வயது 43).

    இவர் அதே பகுதியை சேர்ந்த டிசோசா மோசஸ், மற்றும் அவரது மனைவி ஏஞ்சல் தெரசா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் சீட்டு போட்டனர். முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.

    அதற்கு அவர்கள் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வசந்தி எடமலைப்பட்டி புதூர் போலீசில்புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இரண்டு பேரையும் கைது செய்தனர்.

    • மார்க்கம்பட்டியை சேர்ந்த 3 பேர் ஆக்கிரமிப்பை எதற்கு அகற்றினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.
    • வி.ஏ.ஓ.வை மிரட்டுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே வி.எஸ்.கோட்டை கிராம வி.ஏ.ஓ.வாக இருப்பவர் கோபாலகிருஷ்ணன் (வயது37). இவர் சாணார்பட்டி போலீசில் அளித்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

    நான் கடந்த 1½ ஆண்டுகளாக வி.எஸ்.கோட்டை குரூப் கிராமத்தில் வி.ஏ.ஓ. வாக பணிபுரிந்து வருகிறேன். மார்க்கம்பட்டி பகுதியில் பொது ப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள மறுகால் செல்லும் வாய்க்காலில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் வந்தது.

    ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலர், நான் மற்றும் உதவியாளர் சம்பவ இடத்துக்கு சென்று ஜே.சி.பி.வாகனத்தின் உதவி யுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டோம். அன்று மாலை எனது அலுவலகத்திற்கு மார்க்கம்பட்டியை சேர்ந்த செல்வம், திருப்பதி, மூர்த்தி ஆகிய 3 பேரும் வந்து ஆக்கிரமிப்பை எதற்கு அகற்றினீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் என்னையும் கிராம உதவியாளரையும் அச்சுறுத்தும் விதமாக மிரட்டல் விடுத்தனர். அரசு பணியை செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வி.ஏ.ஓ.வை மிரட்டுவதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
    • ஜெயக்குமார் இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சியில் 1- வது வார்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இங்குள்ளவர்களில் பலர் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் சுமார் 300 குடிசைகளை அமைத்திருந்தனர். ஆனால் இது ஆக்கிரமிப்பு எனவும் புகார் எழுந்தது.இந்த நிலையில் அப்பகுதியின் வார்டு கவுன்சிலர் மாரீஸ்வரி என்பவரின் மகனான செல்வகுமார் தனது நண்பர்களான முருகன், ஆனந்த் ஆகியோருடன் சென்று ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் நேற்று முன்தினம் அங்குள்ள குடிசைகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்த நடவடிக்கையை கண்டித்து அப்பகுதி மக்கள் கூடினர். பள்ளிக்கூடம் அருகில் குப்பையை கொட்ட கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வகுமார், நான் இப்பகுதி கவுன்சிலர். குப்பைகளை கொட்டுவதற்காக இந்த இடத்தை சரி செய்து கொண்டிருக்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. மீறினால் அவர்களின் அடிப்படை உரிமைகளை ரத்து செய்துவிடுவேன். இதற்கு மேலும் பேசினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து அப்பகுதி ஊர் நல கமிட்டி பொறுப்பாளரான ஜெயக்குமார் நேற்று ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.இதன் பேரில் செல்வகுமார், முருகன், ஆனந்த் ஆகிய 3பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பிரபகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அவினாசி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் லோகநாதன்.
    • சப் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    அவினாசி :

    அவினாசி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்ப்பவர் லோகநாதன். இவர் நேற்று அவினாசி மங்கலம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவ்வழியே மோட்டர் சைக்கிளில் வேகமாக வந்த நபரை தடுத்து நிறுத்தி சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் அவரிடம் ஆவணங்களை கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் சப் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே குடிபோதையில் இருந்த அவரை போலீஸ் நிலையம் கொண்டுவந்து விசாரித்ததில் அவர் அவினாசி வள்ளுவர் வீதியை சேர்ந்த செல்லப்பன் மகன் பிரகாஷ் (வயது 38) என்பதும் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • குமார்(36) மற்றும் சுந்தர்(36) என்பவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதனை பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.
    • அதனை தொடர்ந்து, கையில்வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம்,கைகளில் வெட்டியுள்ளார்

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே கோட்டுச்சேரி இராயன்பாளையம் நேதாஜிநகரைச்சேர்ந்தவர் பாரதி(வயது32). பெயிண்டர் வேலை செய்துவரும் இவர், தனது , நண்பர் வினோத் என்பவருடன், கோட்டுச்சேரி சாராயக்க டையில் குடிக்க சென்றுள்ளனர். அப்போது, வட மட்டத்தைச்சேர்ந்த குமார்(36) மற்றும் சுந்தர்(36) என்பவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு அடித்துகொண்டனர். இதனை பார்த்த பாரதி, இருவரையும் விலக்கி விட்டுள்ளார். மாலை 7 மணி சுமாருக்கு, வீட்டு வாசலில் நின்ற பாரதியை அழைத்து, நீ என்ன குமாருக்கு ஆதரவாக பேசுகிறாயா என கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து, கையில்வைத்திருந்த கத்தியால், பாரதியின் கன்னம்,கைகளில் வெட்டியுள்ளார். தடுக்க வந்த பாரதியின் மனைவி சசியையும் சுந்தர் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டதாக கூற ப்படுகிறது. தொடர்ந்து, கணவன், மனைவி இருவரும் கோட்டுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பாரதி கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சுந்தரை தேடிவருகின்றனர்.

    • சத்தியபாமா என்பவர் தனது மாமா ராமு என்பவரின் மகன் மணி (30) பொறியியல் பட்டதாரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
    • சத்தியபாமா விடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தார்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே காரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சத்தியபாமா (வயது 22) பி.எஸ்.சி. படித்துவிட்டு சென்னையில் லேப் டெக்னீஷனாக பணிபுரிந்து வருகிறார்  இவர் தியாகதுரும் அருகே வேளானந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனது மாமா ராமு என்பவரின் மகன் மணி (30) பொறியியல் பட்டதாரி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவரும் தொலை பேசியிலும், தனிமையிலும் சந்தித்தும் பேசி வந்துள்ளனர்.

    மேலும் ராமு அவ்வப்போது காரனூர் கிராமத்திற்கு சென்று தனிமையில் இருக்கும்போது சத்தியபாமா விடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியபாமா வின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் வேளானந்தல் கிராமத்தில் உள்ள மணி வீட்டிற்க்கு சென்று நிச்சயதார்த்தம் குறித்து பேசி உள்ளனர். அப்பொழுது வீட்டில் இருந்த மணி இவரின் தாய் சாந்தா (58), அக்காள்கள் தீபா (32), வெண்ணிலா ஆகியோர் இவர்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து சத்தியபாமா கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணி, சாந்தா, தீபா, வெண்ணிலா ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தனர்.

    • கொளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 54). சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு செல்லம்மாள் நின்று கொண்டிருந்தார்.
    • செல்லம்மாள் அவர்களை பார்த்து, வாகனத்தில் நிதானமாக வரக்கூடாதா‌ என கேட்டுள்ளார். இதையடுத்து அந்த 3 பேரும் செல்லம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்ட மங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூரை சேர்ந்தவர் செல்லம்மாள் (வயது 54). சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு செல்லம்மாள் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக போதையில் மொபட்டில் வந்த 3 நபர்கள், நிலைதடுமாறி செல்லம்மாள் வீட்டிற்கு முன்பு கீழே விழுந்துள்ளனர்.

    அப்போது செல்லம்மாள் அவர்களை பார்த்து, வாகனத்தில் நிதானமாக வரக்கூடாதா என கேட்டுள்ளார். இதையடுத்து அந்த 3 பேரும் செல்லம்மாளிடம் தகராறு செய்துள்ளனர்.

    இந்த வாய்த்தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த 3 பேரும் செல்லம்மாளின் தலைமுடியை பிடித்து அறுக்க முயன்றனர். மேலும் செல்லம்மாளின் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோது, 3 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த 3 பேரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் விசாரணை யில், தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தவர்கள் கொந்தளத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், கொந்தளம் அருகே பச்சப்பாளியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் அருண்குமார் (20), கொந்தளம் வெங்க மேட்டுப்புதூரை சேர்ந்த அய்யப்பன் மகன் சரவணன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் பரமத்திவேலூர் போலீசார் கைது செய்தனர்.

    • நல்லிபாளையத்தை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் தனது கணவர் முத்துசாமி மீது கொடுத்த புகார் மனு விசாரணைக்காக, முத்துசாமி சார்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.
    • நுழைவு வாயில் அருகே ரங்கநாயகி யும், பெயர் தெரியாத ஒருவரும் முத்துசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள பீமநாயக்கனூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 46), வக்கீல். இவர், நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்கத்தில் 18 ஆண்டு களாக உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று, நல்லிபாளையத்தை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் தனது கணவர் முத்துசாமி மீது கொடுத்த புகார் மனு விசாரணைக்காக, முத்துசாமி சார்பாக நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்றுள்ளார்.

    அப்போது நுழைவு வாயில் அருகே ரங்கநாயகி யும், பெயர் தெரியாத ஒருவரும் முத்துசாமியை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வக்கீல் அய்யப்பன், அவரிடம் நீங்கள் ஏன் என் கட்சிக்காரரிடம் பேசுகிறீர்கள்? என்று கேட்டு உள்ளார்.அதற்கு அந்த நபர், வக்கீல் அய்யப்பனை தகாத வார்த்தையால் திட்டி, உள்ளாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அய்யப்பன் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். இதில், அவர் காரைக்குடி புதுவயல் பகுதியை சேர்ந்த அலெக்ஸாண்டர் (45) என்ப தும், உளவியல் நிபுணராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்து பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் சுருளிப்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த உதயமூர்த்தி மனைவி லதா (வயது 47). இவர் தனது மகன் பிரசாத் (29)தின் தேவைக்காக கடன் கொடுத்துள்ளார்.

    அந்த கடனை திருப்பிக் கேட்ட போது ஆட்டோ ஓட்டி கழித்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் லதா அடிக்கடி பணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பிரசாத் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜேஸ்வரி அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார்.
    • இசக்கிராஜா, அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார்.

    களக்காடு:

    ஏர்வாடி மரக்குடி தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரான்சிஸ் சாவி யோ. இவரது குடும்பத்தின ருக்கும், அதே பகுதியை சேர்ந்த இசக்கிராஜா (வயது 26) குடும்பத்தினருக்கும் பொது முடுக்கில் தூண் கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஜோசப் பிரான்சிஸ் மனைவி ராஜேஸ்வரி (37) தனது வீட்டின் முன் நின்று தந்தை அனந்தப்பனிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இசக்கிராஜா, ராஜேஸ்வரி குடும்பத்தினரை அவதூறாக பேசினார். இதனை அன ந்தப்பன் தட்டி கேட்டார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கிராஜா அனந்தப்பனை கை விரல்களில் கடித்தார். மேலும் ராஜேஸ்வரியை கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, இசக்கி ராஜாவை கைது செய்தனர்.

    • நாவப்பிள்ளை கிராம நிர்வாக அலுவலர்.
    • கொலை மிரட்டல்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பரமநத்தம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் நாவப்பிள்ளை (வயது 57). இவரிடம் பரமநத்தம் காட்டுக்கொட்டாயை சேர்ந்த ஏழுமலை, முருகன் ஆகியோர் போலி ஆவணங்களை கொடுத்து நிலப்பட்டா வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுத்த கிராம நிர்வாக அலுவலர் நாவப்பிளையை அசிங்கமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து நாவப்பிள்ளை கொடுத்த புகாரின் பேரில் ஏழுமலை, முருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.
    • அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா திடுமல் குடித்தெரு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 47), விவசாயி.

    இவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரரான விஸ்வநாதன் - பூங்கொடி தம்பதிக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பூங்கொடி, கிருஷ்ணவேணி வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

    அதை பார்த்த விஸ்வநாதன் வீட்டிலிருந்து இரும்பு குழாயை எடுத்து சென்று கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு குழாயால் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் கிருஷ்ணவேணி பலத்த காயமடைந்தார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜவகர் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஸ்வநாதனை தீவிரமாக தேடி வருகின்றார்.

    ×