என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train service"

    • சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஆனதால், பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இருப்பினும், ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
    • திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
    • மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    கொல்லம்-கோட்டயம்-ஈட்டுமண்ணூர், எர்ணாகுளம்-திருச்சூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு மாற்று வழியிலும், தாமதமாகவும் இயக்கப்பட உள்ளன.

    சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்தபுரம்-குருவாயூர் இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். குருவாயூர்-திருவனந்தபுரம் இடையே சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • பயணிகள் ரயில் சேவை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது
    • பராமரிப்பு பணிகள்

    கரூர்:

    சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர்-திருச்சி ெரயில்வே வழித்தடத்தில் மாயனுார் பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பயணிகள் ெரயில் (எண்-06882) மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சிக்கு செல்லும் ெரயில் சேவையும், திருச்சி-கரூர் பயணிகள் ெரயில் (எண்-06123) திருச்சியில் மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூருக்கு வரும் ெரயில் சேவையும் மேற்கண்ட இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    • முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
    • 2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் ரெயில் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. பழமையான இந்த பாலத்தில் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருவதால் இதன் அருகிலேயே பல கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரெயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாம்பன் ரெயில் பாலத்தில் அதிர்வுகளை கண்டறிய 84 இடங்களில் சென்சார் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இவை ரெயில்கள் ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும்போது அதிர்வுகளை பதிவு செய்யும். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு ரெயில் பாம்பன் பாலத்தை கடந்தபோது தூக்குப்பாலத்தில் உள்ள சென்சார் கருவியில் இருந்து எச்சரிக்கை ஒலி எழுப்பியது.

    இதுதொடர்பாக தகவலறிந்த அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு செய்தபோது பாலத்தில் வழக்கத்தை விட அதிர்வுகள் இருப்பதாக சென்சாரில் பதிவாகி உள்ளது தெரிய வந்தது. இதனை எச்சரிக்கும் வகையில் ஒலி எழுப்பியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. சென்னை, மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ரெயில்கள் மண்டபம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ மூலம் ராமேசுவரம் சென்றனர். மேலும் ராமேசுவரத்தில் இருந்து இயக்கப்படவிருந்த ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய மதுரையில் இருந்து அதிகாரிகள் குழுவினர் பாம்பனுக்கு சென்றனர். அவர்கள் ரெயில் பாலத்தில் உள்ள தூக்குபாலத்தில் ஆய்வு நடத்தினர். ஆனால் பழுதை உடனடியாக சரிசெய்ய இயலவில்லை.

    இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து இன்று ஐ.ஐ.டி. குழுவினர் வருகின்றனர். அவர்கள் பாலத்தின் உறுதித்தன்மையை ஆராய்ந்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்தபின் பாம்பன் ரெயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ரெயில் பாலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நேற்று முதல் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்பட்டன. மேலும் சென்னை மற்றும் வட மாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டன.

    ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட காலி பெட்டிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த ரெயில் பாம்பன் ரெயில் பாலத்தை மெதுவாக கடந்து மண்டபம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த ரெயில் பயணிகளுடன் செகந்திராபாத்துக்கு புறப்பட்டு சென்றது.

    2-வது நாளாக இன்றும் பழுதை சரிசெய்யும் பணி நடப்பதால் மண்டபம், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து இன்று ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபால் வெளியூர்களில் இருந்து வரும் ரெயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்படுகின்றன.

    • பாம்பன் பாலத்தில் 28-ந் தேதி வரை ெரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து இன்று (25-ந் தேதி) மற்றும் 26, 27-ந் தேதிகளில் வரும் ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் டிசம்பர் 26, 27, 28-ந் தேதிகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ெரயில்கள் ஆகியவை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.

    நாளை (26-ந் தேதி) முதல் 28-ந் தேதி வரை திருச்சி-ராமேஸ்வரம், மதுரை-ராமேசுவரம், ராமேசுவரம்-கோவை விரைவு ெரயில்கள் ஆகியவை இரு மார்க்கத்திலும் ராமநாதபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

    பயணிகளின் வசதிக்காக ராமேசுவரம் ெரயில் நிலையத்தில் 9360548465, மண்டபம் ெரயில் நிலையத்தில் 9360544307 ஆகிய அலைபேசி எண்களுடன் உதவி மையம் செயல்படுகிறது என்று மதுரை கோட்ட ெரயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

    * பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * வேளச்சேரி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை கடற்கரை - பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று மற்றும் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * வேளச்சேரி - ஆவடி இடையே இரவு 10.30 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று (சனிக்கிழமை) இயக்கப்படுகிறது.

    * சென்னை கடற்கரை - ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது.

    * சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.50 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.

    * சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு ரெயில் இன்று மற்றும் நாளை இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • ரெயில் சேவையில் இன்று 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை :

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சேவையில் இன்று(சனிக்கிழமை) முதல் வருகிற 25-ந்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    *மூர் மார்க்கெட் - பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், பட்டாபிராம் மிலிட்டரி - ஆவடி இடையே இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    *பட்டாபிராம் மிலிட்டரி - சென்னை சென்டிரல் இடையே இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் ஆவடி-சென்டிரல் இடையேயும், சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-வியாசர்பாடி இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * கும்மிடிப்பூண்டி - சென்டிரல் இடையே காலை 4.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல் - கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் பேசின் பிரிட்ஜ் -சென்டிரல் இடையேயும், சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே காலை 7.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் சென்டிரல்- பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை - சென்டிரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் கொருக்குபேட்டை-சென்டிரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை சென்டிரல் - திருவள்ளூர் இடையே இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும்.

    * சென்டிரல் - ஆவடி இடையே இரவு 11.45 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும்.

    * சென்டிரல் - ஆவடி இடையே நள்ளிரவு 12.15 மணி இயக்கப்படும் மின்சார ரெயில் சென்னை கடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20 மணிக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ெரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும்.

    திருப்பூர் :

    ராமேசுவரம்-தனுஷ்கோடி ெரயில் இணைப்புத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- காசியைப் போன்று மிகவும் பிரசித்தி பெற்றது ராமேசுவரத்தில் உள்ள தனுஷ்கோடியாகும். கடந்த 1960 ஆம் ஆண்டில் வந்த சுனாமிப் பேரலையால் தனுஷ்கோடி அழிந்தது. இதன் பிறகு அந்தத் தீவைப் புனரமைக்க மத்திய, மாநில அரசுகள் எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

    இதனிடையே, தனு ஷ்கோடி புனரமைக்கப்பட்டு ராமேசுவரத்தில் இருந்து ரெயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு ரூ. 90 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தனுஷ்கோடி ரெயில் திட்டம் நிறைவேறினால் யாத்ரீகா்களின் வருகை பலமடங்கு அதிகரிக்கும். ஆகவே, ராமேசுவரம்-தனுஷ்கோடி இடையே ரெயில் சேவை தொடங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
    • 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 3 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு பாதையில் விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் பெரும்பாலும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இதனால் அங்கு எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே அங்கு கூட்டத்தை குறைக்க தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக வடமாநிலங்களுக்கு ரெயில்களை இயக்க புதிய பாதை தேவைப்படுகிறது.

    எனவே சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே 4.3 கீ.மீ தொலைவுக்கு 4-வது புதிய ரெயில்பாதை அமைக்க ரெயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்தது. இதற்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. ஆனால் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வருகிற ஜூலை 1-ந்தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.
    • இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பதி ரெயில் சேவை பொறியியல் பணி காரணமாக நாளை 29-ந் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது. நாளை 29-ந் தேதி இந்த ரெயில் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    காட்பாடியில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படாது. இதுபோல் திருப்பதி-கோவை ரெயில் நாளை 29-ந் தேதி காட்பாடியில் இருந்து கோவை வரை மட்டுமே இயக்கப்படும். திருப்பதி-காட்பாடி வரை இயக்கப்படாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும்.
    • இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது.

    ஈரோடு:

    தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே உள்ள ரெயில் தண்டவாளம் பராமரிப்பு பணி நாளை (திங்கட்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் ரெயில் எண்.06412 (ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்) ஈரோட்டில் இருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு 12.10 மணிக்கு ஜோலார்பேட்டை சென்ற டையும். ரெயில் நாளை முழு வதும் ரத்து செய்ய ப்படுகிறது.

    இதே போல் ரெயில் எண். 06411 (ஜோலார் பேட்டை- ஈரோடு ரெயில்) ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு, 7.45 மணிக்கு ஈரோட்டை வந்தடைந்தது. இந்த ரெயிலும் நாளை முழுவதுமாக ரத்து செய்ய ப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    ×