search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training class"

    • 16.10.2024 முதல் 18.10.2024 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.
    • விவரங்களை அறிய www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் "யூடியூப் சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும் 16.10.2024 முதல் 18.10.2024 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிட வளாகத்தில் நடை பெற உள்ளது.

    "சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு-ஆன்லைன் மார்க்கெட்டிங்-டொமைன் பெயர்-ஹோஸ்டிங்-இணையதள வடிவமைப்பு நுட்பங்கள், சைபர் குற்றம், பாலிசி மற்றும் விதிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

    இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பாக நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும்.

    ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பயிற்சியில் பங்கு பெறும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் தங்கி பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. 8668 100181, 9841 336033 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப் படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.

    இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது.
    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டு திட்ட நிரலின்படி, பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதியாகும்.

    இந்த தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற 27-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற தங்களது சுய விவரத்தை https://forms.gle/gsZtU6Quse6iG71XA என்ற லிங்க்கில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வெற்றிச்செல்வன் ,அண்ணா பல்கலை கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ், சுரில், பிரபாகரன் ஆகியோர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் பங்கு, தோல்கழிவு மற்றும் திடக்கழிவு கையாள்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினர்.

    பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
    • அடுத்ததாக போலீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 750 சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்) மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இத்தேர்விற்கு வருகிற 30-ந் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்ததாக போலீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மேலும் ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாராகும் வகையில் தனித்தேர்வு பயிற்சி வகுப்புகள், தனியே நாளை (திங்கள்கிழமை) முதல் நடத்தபட உள்ளது.

    எனவே இப்பயிற்சி வகுப்பில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணி லும்தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் 9-ந் தேதி தொடங்குவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசால் அறிவிக்கப்படும் அனைத்து விதமான போட்டித் தேர்வு களுக்கும் கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்த பட்டு வருகிறது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 2023-24-ம் ஆண்டிற்கான ஆண்டில் குரூப்-1, குரூப்-4, குரூப்-2 போன்ற பல்வேறு பணிக்காலியிடங்க ளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இந்த போட்டித்தேர்வு தொடர்பாக விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நேரடியாக இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெறவுள்ளது. அதற்கான இலவச மாதிரி தேர்வுகள் வாரந்தோறும் விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

    மேலும் பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நூலகத்தில் இத்தேர்வுக்கான புத்தகங்க ளை பயன்படுத்திக் கொள்ள லாம்.

    இப்பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க https://forms.gle/QuWrLhx6tKZVP4C69 என்ற Google Form பூர்த்தி செய்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் https://t.me/vnrstudycircle என்ற டெலிகிராம் மூலமாகவோ, studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ மாவட்ட வேலை வாய்ப்பு அலுவல கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் எடுத்து கூறினார்.
    • மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுரையின்படி, வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலமாக வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணை எந்திரமயமாக்கல் மற்றும் புதிய எந்திரங்களை பிரபலப்படுத்துதல் பற்றி விவசாயிகள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் தமிழ் மலர் தலைமை தாங்கி விவசாயிகளிடையே உரையாற்றினார். வேளாண் அடுக்கு திட்டம் தொடர்பாக விவசாயிகளிடையே எடுத்து கூறினார். கிராம நிர்வாக அலுவலர் தங்களுடைய ஆவணங்களை கொடுத்து வலைதளத்தில் பதிவேற்றம் செய்து 13 துறை திட்டங்களின் பயன்களைப் பெற பயனுள்ளதாக இருக்கும் என்றும், வேளாண் உழவர் நலத்துறை சம்பந்தமான திட்டங்கள் பற்றியும், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறினார். மேலநீலிதநல்லூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஞான தீபா கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார். வேளாண் பொறியாளர் திருப்பதி பேசுகையில், மானிய விலையில் சோலார் பம்ப்செட் அமைப்பது மற்றும் டிராக்டர் மானிய விலையில் பெறுவது, பண்ணை குட்டை அமைப்பது மற்றும் பல புதிய பண்ணை எந்திரங்களை மானிய விலையில் பெற முடியும் என்பதை பற்றி விவசாயிகளிடையே தெளிவாக எடுத்துக் கூறினார். வேளாண்மை அலுவலர் மகேஷ் திட்டங்கள் மானிய விவரங்கள் பற்றி பேசினார். பயிற்சியில் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் திருமலை குமார் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ஆனந்தன், பயிர் அறுவடை பரிசோதகர் மகேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    சேலம்:

    தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

    தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

    சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    • நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது
    • வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கம்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிடிஓ அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் சார்பில் நெமிலி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கிராம பகுதிகளுக்கு சென்று தொழில் மையம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமிற்கு ஒன்றிய குழு தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார், ஒன்றிய குழு துணைத் தலைவர் தீனதயாளன், பிடிஓ வேதமுத்து ஆகியோர் மு்னிலை வகித்தனர்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் கோமதி கலந்துகொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு தொழில் மையம் சார்பில் வழங்கக்கூடிய திட்டங்கள் குறித்து கூறுகையில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

    மேலும் ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பேசுகையில் தமிழ்நாடு அரசால் வழங்கக்கூடிய தொழில் மையம் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வதற்காக வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் தொழில்ம யத்தினை பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    தொழில் மையம் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான “எண்ணும் எழுத்தும்” ஐந்துநாள் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
    • பயிற்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் கற்றலை எளிமைப்படுத்துவதற்காக பாடல், கதை, படைப்பாற்றல், எழுதுதல் போன்றவை செயல்பாட்டு வடிவங்களுடன் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வள மையத்தின் சார்பில், தொடக்க நிலையில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான "எண்ணும் எழுத்தும்" ஐந்துநாள் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி, பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) முருகேசன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துக் கூறினார்.

    பயிற்சியில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் கற்றலை எளிமைப்படுத்துவதற்காக பாடல், கதை, படைப்பாற்றல், எழுதுதல் போன்றவை செயல்பாட்டு வடிவங்களுடன் ஆசிரியர்களுக்கு கற்பிக்கப்பட்டது.

    அரசு மகளிர் மேல்நி லைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி,வட்டார கல்வி அலுவலர் அங்கைய ற்கண்ணி, சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் இளையராணி, மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் முனைவர் ஜெயராஜ் பயிற்சியினை பார்வையிட்டனர். இப்பயிற்சி 109 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் முதுகலை ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாமக்கல்:

    நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் குறித்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு எப்படி? அளிக்க வேண்டும் என்பது தொடர்பான பயிற்சி நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் அனைத்து அரசு பள்ளி முதுகலை ஆசிரியை, ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த பயிற்சி மையங்கள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நாமக்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 285 முதுகலை ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகிறார்கள்.

    இன்று காலை 10 மணிக்கு அவர்கள் திடீரென பயிற்சி வகுப்புகளை புறக்கணித்து மாவட்ட ஆசிரியர் பயிற்சி கல்லூரி வளாகத்தில் நின்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் திரண்டு சென்று முதன்மை கல்வி அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு கற்பித்தல், மாணவர்களை ஆயத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது.

    மேலும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி போன்ற கூடுதல் பணிச்சுமை ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுவதால் வாரத்தில் 7 நாள்கள் ஓய்வின்றி விடுமுறையின்றி பணி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் உடல் நலம் மற்றும் குடும்ப நலன் பாதிக்கும்.

    எனவே, ஆசியர்களுக்கு முழு பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். நீட் மற்றும் ஜே.இ.இ. போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்.

    நீட், ஜே.இ.இ. பயிற்சிக்கு விரிவான கையேடுகள் வழங்க வேண்டும். ஜே.இ.இ. தேர்வுக்கு தமிழ்வழியில் வினாத்தாள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.
    ×