என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trauma"

    • நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்."
    • தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    நாளை திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களை பற்றி இச்செய்தியில் பார்க்கலாம் வாங்க.

    Trauma

    நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த சேதுபதி, இறைவி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தது. இந்நிலையில் அடுத்ததாக டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. இப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    அஸ்திரம்

    நடிகர் ஷாம் மற்றும் இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் "அஸ்திரம்." இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. து. கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்டிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, அருல் தி சங்கர், ஜீவா ரவி மற்றும் ரஞ்சித் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தன ஷண்முகமணி தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு சுந்தரமூர்த்தி இசைமயைத்துள்ளார். இவர் இதற்கு முன் ஐடா, 8 தோட்டாக்கள் மற்றும் பொம்மை நாயகி படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நாளை வெளியாகிறது.

    பேய் கொட்டு

    எஸ். லாவன்யா இயக்கி, நடித்து, தயாரித்து, ஒளிப்பதிவு, இசை என 31 திரைக்கலைகளையும் செய்து ஒரு உலக சாதனை படத்தி திரைப்படமாகும். இப்படத்தில் தீபா ஷங்கர், ஷாந்தி ஆனந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது.

    என்னை சுடும் பனி

    எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் சார்பில், ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரிக்கும் படம், 'எனை சுடும் பனி'. இதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் நட்ராஜ் சுந்தர்ராஜ். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்கிறார்.

    கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம் சேவா. வெங்கட் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அருள் தேவ் இசை அமைக்கிறார். இத்திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

    ரீ-ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள்

    பகவதி

    2002 ஆம் ஆண்டு நடிகர் விஜய் மற்றும் ரீமா சென் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது பகவதி திரைப்படம். இப்படமே நடிகர் ஜெய் அறிமுகமான திரைப்படமாகும். இவர்களுடன் வடிவேலு, ஆஷிஷ் வித்யர்தி, யுகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் இசையை தேவா மேற்கொண்டார். இப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

    பாஸ் (எ) பாஸ்கரன்

    எம். ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா , நயன்தாராமற்றும் சந்தானம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியானது பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படம். இப்படம் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றது. படத்தில் அமைந்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும். நண்பேண்டா என்ற சொல்லும் மிகவும் டிரென்ட் ஆனது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படம் நாளை மீண்டும் ரிலீஸ் ஆகிறது.

    • தலையில் படுகாயமடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

    கும்பகோணம்:

    திருப்பனந்தாள் அருகே உள்ள மானம்பாடி அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாய தொழிலாளி.

    இவருடைய மகன் மாதேஷ் (வயது3).

    இவர்கள் கடந்த 21-ந் தேதி திருப்பனந்தாளில் இருந்து மானம்பாடி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.திருவாய்ப்பா டியில்சென்றபோது அங்கு வந்த மாடு இருவரையும் முட்டியது.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த மாதேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மாதேஷ் மேல் சிகிச் சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று குழந்தை மாதேஷ் பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
    • திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்து 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகலாவுதீன் (வயது 24) கணேஷ் (23). இவர்கள் 2 பேரும் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஏ.சி. பழுது நீக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் திருநாகேஸ்வரம் மேலமடவளாகம் பகுதியில் உள்ள ஒருவர் வீட்டில் ஏ.சி. எந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திடீரென ஏ.சி. எந்திரம் வெடித்துள்ளது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருநீலக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைக்கு செல்வதாக சென்ற பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் தனியார் ரத்த பரிசோதனை நிலையத்தில் 19 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்றுஅப் பெண் வேலைக்கு செல்வ தாக சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்சசியடைந்த அவரது பெற்றோர்கள் இளம்பெண்ணை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    • ராஜபாளையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட முயற்சி நடப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி ரோட்டில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுவதால், மூடப்பட்ட ரெயில்வே கேட்டுக்கு மாற்றாக டி.பி.மில்ஸ் சாலையையும், எதிர்ப்புற சாலையையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையை அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதன் மூலம் இரு சக்கர மற்றும் இலகுரக வாகனங்கள் மேம்பாலத்தில் ஏறாமல் சுலபமாக ரெயில் பாதையை கடக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணிகள் நிறைவேறி இடையூறில்லாத போக்குவரத்து உருவாகும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

    அந்த சுரங்கப்பாதைக்கான அணுகு சாலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்க வேண்டி உள்ளது. அந்த திட்டவரைவை முடிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில்வே துறை தனது பொறுப்பில் சுரங்கப் பாதை நிறுவுவதற்குரிய காங்கிரீட் பாலங்கள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

    இந்நிலையில் இந்த சுரங்கப்பாதை பணிகளை முற்றிலும் கைவிடும் முயற்சிகள் மதுரை கோட்ட ரெயில்வே சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாத கையறு நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

    பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகள் அனைத்தும் நகரின் கிழக்கு பகுதியில்தான் அமைந்துள்ளன. மாணவர்கள், பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் பேருதவியாக அமையும் சுரங்கப்பாதை திட்டம் கைவிடப்படும் என்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது. ஏற்கனவே பல்வேறு திட்டப்பணிகள் தாமதம் காரணமாக துவண்டு போய் கிடக்கும் நகர மக்களுக்கு இந்த தகவல் பேரிடியாக உள்ளது.

    இந்தநிலையில் உள்ளாட்சி மக்கள் மன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பி னர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள், தொழில் நிறுவன நிர்வாகங்கள் மற்றும் அனைத்து அரசியல் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து இந்த திட்டம் கை விடப்படுவதை தடுத்துநிறுத்தி, சுரங்கப் பாதை திட்டத்தை எந்த தாமதமுமின்றி உடனடியாக நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும் என ராஜபாளையம் ரெயில் பயனாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

    • சினேகா மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.
    • இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சினேகா (வயது 22) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவருக்கும் கடந்த 4வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.கல்யாணம் ஆனமுதலே கணவன் -மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சினேகா கடந்த ஒரு வருடமாக மாத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி அன்று வீட்டில் இருந்த சினேகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகிலுள்ள இடங்களில் தேடிப் பார்த்து எங்கேயும் கிடைக்காததால் நேற்று கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்தில் சினேகாவின் தாய் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மாயமான சினேகாவை போலீசார் தேடி வருகின்றனர்.

    • மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ்ப-1 படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளி மாணவிக்கும், வாலிபருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பேசி பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் சம்பவத்தன்று பள்ளி மாணவி தனது வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் அக்கம் பக்கத்தில் விசாரித்த போது வாலிபர் ஒருவர் பள்ளி மாணவியை கடத்தி சென்றதாக கூறப்பட்டது. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் புதுவைைய சேர்ந்த குருமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
    • கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே கேப்பர்மலையைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் மாணவியை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவி கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கடலூர் புதுநகரை சேர்ந்த 16 வயது மாணவன் கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி மாணவன் டியூஷனுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி மாணவனை தேடினர். ஆனால் எங்கு தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது.
    • மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூரில் மெக்கானிக் சங்க கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த மெக்கானிக்குகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்ற 3 பேர் டீ குடிக்க கூட்ட அரங்கை விட்டு வெளியில் வந்தனர். இவர்கள் வடலூர் ரெயில் நிலையம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி மோதியது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேேய உடல் நசுங்கி உயிரிழந்தார். மீதமுள்ள 2 பேர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தனர். இதேபோல சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி மீதும் டிப்பர் லாரி மோதியது. அவரும் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வடலூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த மோட்டார் சைக்கிள் மெக்கானிக் பாரி (வயது 30) என்பது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்தவர்கள் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த கே.சுரேஷ், இ.சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மயக்க நிலையில் இருந்த மூதாட்டி யார் என்பது தெரியவில்லை. பலத்த காயமடைந்த மூதாட்டி உள்ளிட்ட 3 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான பாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மெக்கானிக் கூட்டத்திற்கு வந்தவர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.
    • மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள ராமநாதன்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன் ஹரிகரன் (13) சி.முட்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். ராமநாதன்குப்பம் பகுதியில் சுமார் 40 அடி உயர தண்ணீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மீது ஏறி ஹரிகரன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பட்டத்தின் நூல் அறுந்தது. உடனே பட்டத்தை பிடிப்பதற்காக தண்ணீர் தொட்டியின் மீது ஓடிய ஹரிகரன் கால் தவறி எதிர்பாராத விதமாக தொட்டியில் இருந்து கீழே விழுந்தான். பயங்கர சத்தத்துடன் அலறி கொண்டு தரையில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே வலியால் உயிருக்கு போராடிய மாணவனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே ஹரிகரன் பரிதாபமாக உயிர் இழந்தான். இதுகுறித்து தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடிக் கொண்டிருக்கும் போது கால் தவறி கீழே விழுந்து மாணவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற கார்த்திக், என்ஜினீயர். சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுவேதா (19). இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் சுவேதா சாத்தங் குடியில் கணவர் வீட்டில் தங்கி ஆலம்பட்டி யில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கர்ப்பமாக இருந்த சுவேதாவுக்கு கருவில் குழந்தை வளர்ச்சி இல்லை என தெரிய வந்ததால் கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு கருக்கலைப்பு செய்தார்.

    இதனால் அவர் மனவிரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இந்த நிலையில் அவரது மாமியார் வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. தட்டி பார்த்தபோது கதவை திறக்கவில்லை.

    இதையடுத்து அதே பகுதியில் வசிக்கும் சுவேதா வின் தந்தை கருப்பசாமிக்கு போனில் தகவல் தெரி வித்தார். அவரும், அக்கம் பக்கத்தினரும் சேர்ந்து கதவை உடைத்து வீட்டுக்குள் சென்றனர். அப்போது சுவேதா தூக்கில் தொங்கிய படி பேச்சு, மூச்சின்றி இருந்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி ஓராண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் திருமங்கலம் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.
    • அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் இருந்து காரைக்காலுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் திருநாகேஸ்வரம் தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், பஸ்சும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் நசுங்கியது.

    லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைகிறது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் காரைக்கால் சேத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 38). கண்டக்டர் புதுச்சேரி திருப்புவனம் பாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் (47), கூத்தகுடியை சேர்ந்த சிவசக்தி (17), காரைக்கால் கணபதி நகரை சேர்ந்த சிராஜ் நிஷா (58), விருதுநகர் சொக்கநாதபுத்தூர் பகுதியை சேர்ந்த சித்ரா (30), குடவாசலை சேர்ந்த ரவி (57) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×