search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trust"

    • திருமண உறவானது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டும்.
    • எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும்.

    மனிதராக பிறந்த ஒவ்வொருக்குள்ளும் காதல் உணர்வு என்பது கண்டிப்பாக இருக்கும், ஆண் - பெண் என யாராக இருந்தாலும் சரி காதலிக்காமல் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு கட்டத்தில் எல்லோரது வாழ்விலும் காதல் என்கிற ஒரு தருணம் கண்டிப்பாக வரும். ஆரோக்கியமான காதலில் அன்பு, பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஆறுதல் போன்றவற்றை ஒவ்வொருவரும் வழங்க வேண்டும்.

    நம்முடைய திருமண உறவானது நமது துணைக்கு ஊன்றுகோலாக தான் இருக்க வேண்டுமே தவிர, ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. சிலர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் சில விஷயங்கள் அவர்களது துணைக்கு பெரும் தொல்லையாகவோ அல்லது அவர்களது வளர்ச்சியை தடுக்கக்கூடியதாகவோ இருந்துவிடக்கூடும்.

    * கணவன்-மனைவி இருவருக்கும் சண்டை வருவது என்பது சகஜமான ஒன்றுதான், அடிக்கடி கருத்து வேறுபாடுகளும் ஏற்றப்படுவது சகஜம். அதற்காக ஒருவர் தனது துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது தவறான ஒன்றாகும். இதுபோன்று துணையின் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது பாதுகாப்பு, மற்றும் நம்பிக்கையின் உணர்வைப் பாதிக்கக்கூடும். மன மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் இதனால் ஏற்படும், மேலும் இதனால் இருவரது சுய மரியாதைக்கு இழுக்கு ஏற்படும்.

    * கணவன்-மனைவி உறவில் வெறுப்பு இருக்கக்கூடாது, அப்படி வெறுப்பு இருந்தால் அது வலி, கோபம் மற்றும் எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தும். வெறுப்புணர்வை வைத்திருப்பது உங்கள் கணவன்-மனைவியின் ஆழ்மனதில் தவறான சிந்தனையை ஏற்படுத்திவிடும். வெறுப்புகளை வைத்திருப்பது உறவு முறிவு, மனச்சோர்வு, பதட்டம் மற்றும் கோபம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். புண்படுத்தும் நிகழ்வுகள் அல்லது நடத்தை குறித்து கசப்பாக மாறாமல் இருக்க, உங்கள் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைப் உங்கள் துணையிடம் வெளிப்படையாக பேசுங்கள்.

    * உங்கள் கணவனை-மனைவியை ஒருபோதும் உங்கள் முந்தைய உறவோடோ அல்லது வேறொருவரின் உறவோடு ஒப்பிட்டு பேசாதீர்கள். அப்படி நீங்கள் அவர்களை வேறொருவருடன் ஒப்பிட்டு பேசினால் அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிடுவார். அப்படி நீங்கள் உங்கள் துணையை மற்றவருடன் ஒப்பிட்டு பேசுகிறீர்கள் என்றால் அவர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே தான் நீங்கள் உற்றுநோக்குகிறீர்கள் என்பதை வெளிக்காட்டுகிறது. இதனால் உங்கள் கணவன்-மனைவி உறவில் பெரியளவில் சிக்கல் ஏற்படும்.

    * உங்கள் கணவன்-மனைவியின் தொலைபேசி அல்லது பிற சமூக வலைதள பக்கங்களை அவர்களுக்குத் தெரியாமல் பார்ப்பது மிகவும் தவறான செயலாகும், இது உங்கள் துணையின் தனி உரிமையை மீறக்கூடிய மோசமான செயலாகும், இது அவர்கள் மீதான நம்பிக்கையின்மையை காட்டுகிறது. இவ்வாறு செய்வது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் துணைக்கும் ஒரு வித மனசோர்வை ஏற்படுத்திவிடும். இதுபோன்று சந்தேக கண்ணோட்டத்துடன் உங்கள் துணையின் செயலை உற்றுநோக்குவது தவறான புரிதலை ஏற்படுத்தி உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

    * உங்கள் துணையின் சில பழக்கவழக்கங்கள், ஆடைத் தேர்வுகள் மற்றும் உங்கள் துணை யாருடனாவது பேசினால் அவர்களை கட்டுப்படுத்துவது போன்ற செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. இப்படி அவர்களது விருப்பம் எல்லாவற்றிலும் நீங்கள் மூக்கை நுழைத்தால் அது அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காது.

    • மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
    • 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.25-

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பூமாலை சந்தில் ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரங்கத்தில் தேவாங்கர் சமூக நல மன்றம் மற்றும் தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை சார்பில் மூத்தோரை கவுரவித்து நினைவு பரிசு வழங்குதல்,கல்வி பரிசளிப்பு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, அதைத்தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.முன்னதாக ராமலிங்க சௌடேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதில் அனைவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 75 வயது நிறைவடைந்த மூத்தவர்கள் கௌரவிக்கப் பட்டனர். தொடர்ந்து 2023 -ம் ஆண்டு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு- சான்றிதழ் வழங்கப்பட்டது.

    அதன்படி 10-ம் வகுப்பில் 11 மாணவர்களுக்கும், பிளஸ்-2வகுப்பில் 6 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.அத்துடன் 100 க்கு 100 மற்றும் 200 க்கு 200 மதிப்பெண் பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேற்படிப்புக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மேஜிக் ஷோ நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தேவாங்கர் சமூக நல மன்றத்தலைவர் மாணிக்கம்(பொறுப்பு), செயலாளர் திருமலைசாமி(பொறுப்பு), பொருளாளர் சீனிவாசன், தேவாங்கர் சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் சீனிவாசன்,செயலாளர் சௌந்தரராஜன், பொருளாளர் ஞானமணி உள்ளிட்ட நிர்வாகிகள் ,தேவாங்கர் சமூக பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • 1980 முதல் ஆண்டுதோறும் சிவகுமார் அறக்கட்டளை பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறது.
    • 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சூர்யா வழங்கினார்.

    பழம்பெரும் நடிகரான சிவகுமார் 1979-ல் தனது 100- வது படத்தின் போது சிவகுமார் கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதை நடிகர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். பின்னர் 1980 முதல் ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை மூலம் பல மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு பெற்றோரை இழந்த 12-ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேரின் மேல்படிப்பிற்கு கல்வி உதவி தொகையை சிவகுமாரின் மகன் நடிகர் சூர்யா வழங்கினார்.



    இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசியதாவது, கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள். வாழ்க்கை முழுவதும் கல்வி ரொம்ப தேவையான ஒரு விஷயம். ஏனென்றால் சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. சாதி, மதம் இவை அனைத்தையும் கடந்து எப்படி நாம் வாழ்க்கையை பார்க்க போகிறோம். வெறும் மார்க் மட்டுமே கிடையாது வாழ்க்கை. அதை தாண்டி வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்ளலாம்.

    தொழிலுக்கும் சுற்றி இருக்கும் அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதை சொல்லிக் கொடுப்பது கல்வி. அந்த கல்வி சூழலை அழகாக வைத்து கொள்ள ரொம்ப ரொம்ப முக்கியம் ஆசிரியர்கள். இங்கு வந்திருக்கும் ஆசிரியர்களை பார்க்கும் போது எவ்வளவு சவால்கள் இருக்கும் அதை எல்லாம் தாண்டி ஒரு பள்ளிக்கு வரும் மாணவர்களை எவ்வாறு ஊக்குவிக்கிறார்கள், இவ்வளவு தூரம் நான் வருவதற்கு என் ஆசிரியர்கள் தான் காரணம் என்று மாணவர்கள் கூறும் போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களுக்கும் தலைவணங்கி நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.


    மூன்று வருடமாக அகரம் அரசுடன் சேர்ந்து இயக்கி வருகிறது. இந்த வருடம் ஒரு லட்சம் மாணவ- மாணவிகளை கல்லூரி மற்றும் பள்ளிக்கு மீட்டு வர உதவியது. நாங்கள் 14 வருடங்களாக சமமான கல்வி கொடுக்க வேண்டும் என்று பல அமைப்புகளுடன் சேர்ந்து இதுவரைக்கும் 5200 மாணவ-மாணவிகளின் வாழ்க்கையை மாற்ற முடிந்தது. ஆனால், அரசுடன் சேர்ந்து இயக்கி மூன்று வருடத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற முடிந்துள்ளது. அரசுடன் சேர்ந்து பயணிப்பது அகரத்தின் பெருமை" என்று கூறினார்.

    • ராம்கோ குரூப் அறக்கட்டளை சார்பில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ராம்கோ குரூப் அறக்கட்டளைகளில் ஒன்றான பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் மலைவாழ் பழங்குடியின மக்கள் மற்றும் மலைவாழ் குழந்தைகள் கொண்டாடிய 19-ம் ஆண்டு விழா நடந்தது.

    பரம பூஜ்ய ஸ்வாமி ஸ்ரீமத் தயானந்த சரஸ்வதி ஆலோசனைப்படி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக ராம்கோ குரூப் முன்னாள் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிர மணியராஜாவும், அவரது துணைவியார் சுதர்சனமும் இணைந்து 2004-ம் ஆண்டு பி.ஏ.சி.ஆர். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்ட் சார்பில் ராஜபாளையத்தில் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின மாணவ-மாணவிகள் விடுதியை தொடங்கினர்.

    கல்வி அறிவு என்பதே இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த மலைவாழ் குழந்தைகளை ராஜபாளையம் அழைத்து வந்து பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைத்தனர். இந்த விடுதியில் தற்போது 51 மாணவர்கள், 54 மாணவிகள் என மொத்தம் 105 பேர் கல்வி கற்று வருகிறார்கள்.

    இதன் 19-ம் ஆண்டு விழா நடந்தது. இதில் பங்கேற்ற கலெக்டர் ஜெயசீலன் பேசுகையில், இந்த விடுதியில் நர்சிங் படித்த ராம் நகர் பகுதி மாணவி மகாலட்சுமியை நான் மலை கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்றபோது சந்தித்து பேசினேன். இந்த சமூகத்தில் ஒரு மாணவி படித்து வேலை பார்த்து வருவது மகிழ்ச்சியாக இருந்தது, மேலும் சிலர் வனத்துறையில் வேலை பார்த்து வருவதாக அறிந்தேன். இந்த சமூகம் முன்னேற ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா செய்து வரும் பணிகளை பாராட்டுகிறேன் என்றார்.

    ராம்கோ குரூப் சேர்மன் துணைவியார் நிர்மலாராஜ் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சேதுராமம்மாள் சாரிட்டி டிரஸ்டின் டிரஸ்டி யும், விஷ்ணு சங்கர் மில் மேனேஜிங் டிரஸ்ட்டியுமான சாரதா தீபா தலைமை தாங்கினார்.

    ராம்நகர், அத்திகோவில், ஜெயந்த்நகர், வள்ளியம்மாள் நகர், செண்பகத்தோப்பு, அய்யனார்கோவில், தலை யணை, மொக்கத்தான்பாறை ஆகிய பகுதிகளை சேர்ந்த மலைவாழ் மக்கள் 200 குடும்பங்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் புதிய ஆடைகள் வழங்கினார். மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன் வாழ்த்தி பேசி னார். விடுதி மேலாளர் முருகேசன் வரவேற்றார். பி.ஏ.சி ராமசாமி ராஜா கல்வி தர்மஸ்தாபன கல்வி நிறுவனங்களின் தாளாளர் என்.கே.ஸ்ரீகண்டராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    ராம்கோ டிரஸ்ட்களின் செயலாளரும், விஷ்ணு சங்கர் மில் துணைத் தலைவருமான குருசாமி, ஸ்ரீமதி லிங்கம்மாள் சாஸ்திர ப்ரதிஷ்டா டிரஸ்ட் முதன்மை பொது மேலாளர் ராஜ்குமார், பி.ஏ.சி.ஆர்.கல்வி தர்ம ஸ்தாபனத்தின் சி.இ.ஓ. வெங்கட்ராஜ், ஜி.எம்.கூடலிங்கம், பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ரோகிணி, பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து, பி.ஏ.சி.ஆர். சேதுராமம்பாள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணா, டி.ஏ.கே.எம்.ஆர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா, ராம்கோ பாலவித்தியா பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா, மற்றும் பலர் பங்கேற்றனர். ஆண்கள் விடுதி காப்பாளர் ராமசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பார்வையற்றோர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிக்காக சிங்கப்பூரை சேர்ந்த அறக்கட்டளை சார்பில் ரூ.27 லட்சத்தை நன்கொடையாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கப்பட்டது.

    இது குறித்து கலெக்டர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மேம்பாலம் அருகில் மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பார்வை திறன் குறைபாடு உடையவர்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி வைத்த கோரிக்கையை ஏற்று சிங்கப்பூரை சேர்ந்த அன்னை வராகி அறக்கட்டளை சார்பில் உறுப்பினர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.27 லட்சத்துக்கான காசோலையை அறக்கட்டளை நிர்வாகி குருஜி வராகி மைந்தன், இந்திரயோகன் ஆகியோர் வழங்கி உள்ளனர்.

    இந்த நன்கொடை மூலம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மிகத் தரமான கட்டிடம் கட்டப்பட்டு ஐந்து மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் ‌.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன், காளியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • கே.என்.சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி ராக வேந்திரா அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதில் 10-வது மாத நிகழ்ச்சியாக கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்ரகாளியம்மன், காளியம்மன் கோவிலில் அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கே.என்.சுப்புராஜ் நினைவு கல்வியியல் கல்லூரி செயலாளர் மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் லவராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அருண் பேக்கரி உரிமையாளர் மாடசாமி, வேல் விநாயகா டிரேடர்ஸ் உரிமையாளர் ஜெயபால், ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழியபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், தலைவர் ஜெயக்கொடி, செயலாளர் ஜோதி காமாட்சி, பொருளாளர் கார்த்திகேயன், தொழிலதிபர்கள் அசோக், தனபால், சேகர், மாடசாமி, ரவிக்குமார மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் நடராஜன், பாலமுருகன், சண்முகசுந்தரம், கதிரேசன், மாரிமுத்து, செல்வம், தங்கராஜ், சுப்பிரமணியன், முத்துமாரியம்மன், பொன்னு பாண்டி, காளிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.

    ×