என் மலர்
நீங்கள் தேடியது "Try to kill"
- வினோத் பேசிய போது அவரிடம் ரெயில் அருகில் தனியாக வா. உன்னிடம் பேச வேண்டும் என யாரோ கூறியுள்ளனர்.
- வினோத்தை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
கும்பகோணம்:
தஞ்சை, கும்பகோணம் மாதுளம்பேட்டை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன்வினோத் (வயது 44)
பிரபல ரவுடி. இவர் மீது பல்வேறு வழக்குகள் கும்பகோணம் காவல் நிலையங்களில் உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் வினோத் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்த வினோத் பேசிய போது அவரிடம் ரெயில் அருகில் தனியாக வா.
உன்னிடம் பேச வேண்டும் என யாரோ கூறியுள்ளனர்.
இதையடுத்து வினோத் வீட்டிலிருந்து கிளம்பி கும்பகோணம் ரயில்வே நிலையம் அருகே உள்ள கஸ்தூரிபாய் ரோட்டிற்கு வந்துள்ளார்.
அப்போதுஅங்கு சிலர் நின்று கொண்டிருந்து ள்ளனர். அவர்கள் வினோத்தை அருகில் அழைத்துள்ளனர். இவர்கள் தான் தன்னிடம் செல்போனில் பேசியவர்கள் என நினைத்து அவர்களை நோக்கி சென்றுள்ளார்.
அப்போது சிறிதும் எதிர்பாராத நேரத்தில் வினோத்தை அந்த மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் நிலைகுலைந்த வினோத் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அந்த மர்மநபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்றனர்.இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த வினோத்தை மீட்டு தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தனர்.
தகவலறிந்த கும்பகோணம் டி.எஸ்பி. அசோகன் மற்றும் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கைப்பற்றி தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்து அவர்களை தேடி வருகின்றனர்.
பிரபல ரவிடியை பட்டப்பகலில் மர்மநபர்கள் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர்:
ஆவடியை அடுத்த அயப்பாக்கம் தேவி நகரை சேர்ந்தவர் வேணு. கூலி தொழிலாளி. இவரது மகன் பாபு(14). அம்பத்தூர் அத்திப்பட்டில் உள்ள அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் வீட்டின் மொட்டை மாடியில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம கும்பல் பாபுவை கத்தியால் சரமாரியாக குத்தினர். வயிறு, முதுகு, முகம் என 10-க்கும் மேற்பட்ட இடத்தில் அவருக்கு கத்தி குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்ததும் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாபுவை மீட்டு மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளியில் சக மாணவர்களுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததா? என்பது குறித்து திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முசிறி பி.எஸ். அக்ரஹாரம் படித்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டி இரு சக்கர வாகனங்களில் கடத்தப்படுவதாக முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, சிலர் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி சென்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் கிராம நிர்வாக அதிகாரி பிடிக்க முயன்றார்.
இதையடுத்து மணல் கடத்தல்காரர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளால் கிராம நிர்வாக அதிகாரி மீது மோதி கொல்ல முயன்றார். மேலும் மணல் மூட்டைகளை தள்ளிவிட்டும், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டும், மணல் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதில் காயமடைந்த கிராம நிர்வாக அதிகாரி வள்ளிநாயகன், சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
உளுந்தூர்பேட்டை:
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் தலைமையிலான போலீசார் நேற்று காலை உளுந்தூர்பேட்டை பிரகாஷ்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குபின் முரணான தகவல்கள் தெரிவித்தனர்.
இதில் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபர்கள் 2 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது.
இதையடுத்து அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் உளுந்தூர்பேட்டை அருகே குணமங்கலம் பகுதியை சேர்ந்த சேகர்(42), பாளையப்பட்டு தெருவை சேர்ந்த சொக்கநாதன்(45) என்பதும் அவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் போது சேகர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராஜமன்னாரை குத்த முயன்றார்.
இதைபார்த்து சுதாரித்துக் கொண்ட சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் ராஜமன்னார் சேகரை மடக்கி பிடித்து அவர் கையில் இருந்த கத்தியை பிடுங்கினார். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சேகர், சொக்கநாதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டபகலில் போலீஸ்காரரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே ஈச்சங்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது40),கூலித்தொழிலாளி. இவரது தம்பி செந்தில். இருவர் குடும்பத்தினருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது.
அதேபோல் நேற்றும் இருவர் குடும்பத்திற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில், ரமேசை சரமாரியாக தாக்கி அவரது கழுத்தை நெரித்தார். மேலும் இதனை தடுக்க முயன்ற ரமேஷின் மனைவி குப்பம்மாளை (34) தாக்கி விட்டு செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
கழுத்து நெரிக்கப்பட்டதால் ரமேஷ் ஆபத்தான நிலையில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குப்பம்மாள் கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து செந்திலை தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 65). தொழில் அதிபரான இவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி அருகில் அபி அண்ட் அபி மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் நடத்தி வருகிறார். மேலும் கல்லூரிகளையும் நிர்வகித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஷோரூமுக்கு வந்த தொழில் அதிபர் இளங்கோவனை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஒடிவிட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இளங்கோவன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கோரிகுளம் முருகன், கீழையூரை சேர்ந்த கவுதம் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை திலகர் திடல் பகுதியில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுப்பது தொடர்பாக, இளங்கோவனை கொல்ல முயற்சி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதில் அந்த மருத்துவமனை டாக்டர்கள் பாரதி மோகன், ஆனந்தசேகர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் டாக்டர் பாரதிமோகன் மற்றும் அவரது மனைவி அனுசுயா, மகள் ஜெசிதா மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர் கலைச்செல்வி ஆகியோரிடம் போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை போலீஸ் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன், தலைமையிலான போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இதில் தொழில் அதிபர் இளங்கோவனை கொலை செய்ய முயற்சி நடந்தது ஏன்? என்பது பற்றி டாக்டர் பாரதிமோகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வாக்கு மூலத்தை போலீசார் பதிவு செய்து வருகின்றனர்.
உடுமலை:
உடுமலை ருத்ரா பாளையத்தல் சிறுத்தை தோல் விற்பனை செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தருமத்தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (வயது 37).
பன்றிமலை அமைதிச் சோலையை சேர்ந்த பாலுசாமி (70) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர்.
அவரிகளிடம் இருந்து 2 வயது சிறுத்தையின் பதப்படுத்தப்பட்ட தோல் பறிமுதல் செய்யப்பட்டது. வேட்டையாடியது யார்? எந்த வனப்பகுதியில் சிறுத்தை கொல்லப்பட்டது.
தோல் மட்டும் கிடைத்த நிலையில் நகம், பல் உள்ளிட்ட பொருட்கள் என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுத்தை தோலை வாங்க முயன்ற நபரை இன்னும் கண்டு பிடிக்கமுடியவில்லை.
இது குறித்து அமராவதி வனச்சரக அலுவலர் முருகேசன் கூறும்போது, சிறுத்தை தோலை விற்க முயன்ற இருவர் கோர்ட்டு உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சேகர் என்பரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகிறோம் என்றார்.
மதுரை:
செல்லூர் மீனாட்சிபுரம் சத்தியமூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 29) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கார்த்திகா. குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
நேற்றும் விஜயகுமார் மது குடித்து வர, கார்த்திகா குழந்தைகளுடன் அறையில் சென்று படுத்து விட்டார்.
இந்த நிலையில் நள்ளிரவில் அவரது தலையில் கல்லைப்போட்டு தாக்கி விட்டு விஜயகுமார் தப்பி ஓடிவிட்டார்.
பலத்த காயம் அடைந்த கார்த்திகா சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.