என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "UGC"
- சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- பாதுகாப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
மதுரை
சுயநிதி கல்லூரி ஆசிரியர் பாதுகாப்பு மாநாடு மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மூட்டா தலை வர் செந்தாமரைக் கண்ணன் தலைமை தாங்கினார். மண் டல தலைவர்கள் ரமேஷ் ராஜ், ஞானேஸ்வரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். செயலாளர் ராபர்ட் திலீபன் வரவேற்றார். மாநாட்டின் முக்கிய நோக் கம் குறித்து பொதுச்செயலா ளர் நாகராஜன் பேசினார்.
மாநாட்டில் தமிழ்நாடு அரசு சுயநிதி ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கேரள அரசின் சுயநிதி ஆசிரியர்கள் ஒழுங்காற்றுச் சட்டத்தைப் போல் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி சுல்லூரிகளை ஒழுங்குபடுத்த தனி இயக்கு னரகம் தொடங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு, சுயநிதி ஆசிரியர்களுக்கு யு.ஜி.சி. பரிந்துரைத்த ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசு சுயநிதி கல்லூரிகள் பற்றிய வெள்ளை அறிக்கை வெளி யிட வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் சுயநிதி பிரி வில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. நிர்ண யித்துள்ள ஊதிய விகிதம்,
அகவிலைப்படி உள் ளிட்ட பிற படிகளும், ஆசிரி யர் அல்லாத அலுவலர்க ளுக்கு குறைந்தபட்ச கூலிச் சட்டம் 1948-ன் அடிப்ப டையில் ஊதியம் அகவி லைப்படி உள்ளிட்ட பிற படிகளும் ஆண்டு ஊதிய உயர்வு மருத்துவ விடுப்பு மகப்பேறு மருத்துவ விடுப்பு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன.
முடிவில் பொருளாளர் ராஜ ஜெயசேகர் நன்றி கூறி னார்.
- உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
- கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகங்களை யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு பட்டியலிட்டு உள்ளது. போலி பல்கலைக்கழகங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள் எந்த டிகிரியையும் (பட்டம்) வழங்க அனுமதி இல்லை என கூறியுள்ளது.
இது தொடர்பாக யு.ஜி.சி. செயலாளர் மணிஷ் ஜோஷி கூறுகையில், 'பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணாக ஏராளமான நிறுவனங்கள் பட்டங்களை வழங்கி வருவதாக யு.ஜி.சி.க்கு தெரியவந்துள்ளது. அத்தகைய பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டங்கள் உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பு நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்படவோ செல்லுபடியாகவோ செய்யாது. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு எந்தப் பட்டமும் வழங்க அதிகாரம் இல்லை' என தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு போலியானவை என பட்டியலிடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களில் டெல்லியில் மட்டுமே 8 பல்கலைக்கழகங்கள் உள்ளன.
அந்தவகையில், அகில இந்திய பொது மற்றும் உடல் நல அறிவியல் நிறுவனம், வர்த்தக பல்கலைக்கழகம் லிமிடெட், ஐ.நா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பல்கலைக்கழகம், ஏ.டி.ஆர். மத்திய நீதித்துறை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், சுயவேலைவாய்ப்புக்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம் மற்றும் அத்யாத்மிக் விஸ்வவித்யாலயா (ஆன்மிக பல்கலைக்கழகம்) ஆகிய பல்கலைக்கழகங்கள் போலியானவை என அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதைப்போல உத்தரபிரதேசத்தில் 4 பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருவதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
இதைத்தவிர கர்நாடகா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி பல்கலைக்கழகங்கள் இருப்பதாக யு.ஜி.சி. கூறியுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ள இந்த போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, யுஜிசி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
- அக்டோபர் 30ம் தேதிக்குள் விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும்.
புதுடெல்லி:
நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றும், அக்டோபர் 30ம் தேதிக்குள் கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களிடம் ரூ.1000 சேவை கட்டணம் பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையை ரத்து செய்த பிறகும் அல்லது கல்லூரியில் இருந்து விலகிய பிறகும் உயர் கல்வி நிறுவனங்கள் கட்டணத்தை திரும்ப வழங்காதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததையடுத்து, இதுதொடர்பாக யுஜிசி சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
- டெல்லி உள்பட நாடு முழுதும் செயல்படும் 21 பல்கலைக்கழகங்கள் போலியானவை.
- அவை பட்டம் வழங்க தகுதியற்றவை என யு.ஜி.சி. தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அதில், தலைநகர் டெல்லியில் சுமார் 8 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேசத்தில் 7, ஒடிசா, மேற்குவங்காளம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் கடந்த 10 ஆண்டுகளில் பி.எச்.டி. பட்டம் பெற வேண்டி விண்ணப்பித்தவர்கள் சமர்ப்பித்த ஆய்வு கட்டுரைகளின் அசல் தன்மை மற்றும் தரத்தின் மீது சந்தேகம் இருப்பதாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அவர்கள் சமர்பித்த ஆய்வு கட்டுரைகளை மறுஆய்வு செய்து வருகிறது. மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக் கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் கடந்த 10 ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள், ஆய்வுக்கான நோக்கத்தில் இருந்து வேறுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எனவே ஆய்வு கட்டுரைகள் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாக யு.ஜி.சி. தெரிவித்துள்ளது. இந்த பணிகள் அடுத்த 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறியதாவது:-
இந்தியாவில் உயர் கல்வியின் தரத்தை விரிவுப்படுத்தி நீண்டகாலம் ஆகிவிட்டது. எனவே மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தி தரமான மாணவர்களாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
நாட்டின் தலைநகரமான டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் 2 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 24 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அவற்றில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 8, டெல்லியில் 7, மேற்கு வங்காள மாநிலம், ஒடிசா மாநிலங்களில் தலா 2, பீகார், கர்நாடகம், கேரளா, மராட்டியம், புதுச்சேரி ஆகியவற்றில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை பாய்கிறது.
இதுபற்றி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை ராஜாங்க மந்திரி சத்யபால்சிங் எழுத்து மூலம் அளித்த ஒரு பதிலில் கூறி இருப்பதாவது:-
பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் நடத்திக்கொண்டு, மக்களை முட்டாள் ஆக்கும் விதத்தில் தவறான விளம்பரங்களை வெளியிட்டு வருகிற போலி பல்கலைக்கழகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவை உரிய அனுமதியின்றி நடத்தப்படுபவை ஆகும்.
மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதன்மைச் செயலாளர்கள், கல்வித்துறை செயலாளர்களுக்கு கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில் தங்கள் பகுதியில் உள்ள போலி பல்கலைக்கழகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பல்கலைக்கழக மானியக்குழு போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளைக் கேட்டு வந்தும் அவற்றில் மாணவர்கள் சேருவதால்தான் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #FakeUniversity #UGC
அனைத்து பல்கலைக்கழக வளாகங்களிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வெளியிட்ட அறிக்கையில், 'டீ கப், பிளாஸ்டிக் கவரால் பேக் செய்யப்பட்ட மதிய உணவு, பிளேட்ஸ், பிளாஸ்டிக் ஸ்டாராஸ் போன்ற பொருட்கள் பயன்படுத்தக்கூடாது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு மத்திய சுற்றுச்சூழல் துறை அளித்த கோரிக்கையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு உலக சூற்றுச்சூழல் தினத்தை இந்தியா நடத்த இருக்கிறது. அதன் முக்கிய நோக்கம் பிளாஸ்டிக் மாசுபாட்டை அழிப்பதாகும். அதனால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. #UGC #plasticban
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்