search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vande Bharat Rail"

    • தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    • டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    சென்னை:

    வந்தே பாரத் ரெயில் இருக்கை வசதியுடன் தற்போது இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து பெங்களூரு, மைசூரு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், கோவை-பெங்களூர், மதுரை-பெங்க ளூர் இடையே இந்த ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    சொகுசான வசதியுடன் பயண நேரம் குறைவதால் வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் எப்போதும் முழுமையாக நிரம்பி செல்கின்றன.

    பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள வந்தே பாரத் ரெயில்களை படுக்கை வசதியுடன் தயாரிக்க ரெயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. முற்றிலும் படுக்கை வசதியுடன் இந்த ரெயில் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டது.


    சென்னை ஐ.சி.எப். இதற்கான மாடலை தயாரித்து பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் கொடுத்தது. ஒவ்வொரு பெட்டியிலும் பயணிகளுக்கு தூங்கும் வசதி படுக்கைகள் நவீன தொழில் நுட்பத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    160 கி.மீ. வேகத்தில் சென்றாலும் பெட்டிகள் குலுங்காமல் இருக்கவும் விரைவாக கட்டுப்படுத்தவும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில் விரைவில் பரிசோதனைக்கு விடப்படுகிறது.

    சென்னையில் இந்த ரெயிலின் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபற்றி அதிகாரிகள் மேலும் கூறியதாவது:-

    வந்தே பாரத் முதல் படுக்கை வசதி ரெயில் தயாரிப்பு பணிகள் முடிந்து ஐ.சி.எப். தொழிற்சாலைக்குள் பல்வேறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து ஏதாவது ஒரு நகருக்கு சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படும். டிசம்பர் அல்லது ஜனவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.

    படுக்கை வசதி வந்தே பாரத் ரெயில் முதல் முதலாக எந்த நகருக்கு விடப் படும் என்பதை ரெயில்வே வாரியம் முடிவு செய்யும். சென்னையில் இயக்கப் படுமா? அல்லது வேறு நக ரங்களுக்கு ஒதுக்கப்படுமா? என்பது ஓரிரு மாதங்களில் தெரிய வரும் என்றனர்.

    • பராமரிப்பு காரணமாக ரெயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயில் அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன.

    சென்னை:

    சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு இடையே புதிதாக வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்து பல மாதங்களாகிவிட்டது.

    இதற்கான இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்து கடந்த ஜூன் மாதம் ரெயில் போக்குவரத்து தொடங்குவதாக இருந்தது.

    பிரதமா் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதும் தமிழகத்துக்கு 2 வந்தே பாரத் ரெயில்களை தொடங்கி வைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆனால், மேற்கு வங்காளத்தில் ஜூன் 17-ந்தேதி நிகழ்ந்த மோசமான ரெயில் விபத்து மற்றும் சென்னை, தாம்பரம், மதுரையில் ரெயில் பாதைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த 2 ரெயில் சேவைகளின் தொடக்கம் தள்ளிவைக்கப்பட்டது.

    மேலும் நாடு முழுவதும் 10 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கான வழித்தடம் கண்டறியப்பட்டு தயாா் நிலையில் உள்ளன. இந்த புதிய வந்தே பாரத் ரெயில்களின் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் எனவும் ரெயில்வே பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இது குறித்து ஐ.சி.எப். அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

    சென்னை பெரம்பூா் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தற்போது வரை 70 வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 51 ரெயில்கள் இயக்கத்திலும், 9 ரெயில்கள் அவசர தேவைக்காகவும் உள்ளன. மேலும், 10 வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்குத் தயாா் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவா் கூறினார்.

    இந்த நிலையில் சென்னை-நாகா்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில் சேவைகள் அடுத்த (செப்டம்பா்) மாதம் தொடங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

    இதுகுறித்து அவர்கள் கூறுகையில், 'சென்னை-நாகர்கோவில், மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரெயில்கள் இயக்குவதற்கு அனைத்து வசதிகளுடன் தயாா் நிலையில் உள்ளன. ரெயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம்.

    தற்போது ராமேசுவரம் புதிய பாம்பன் பாலப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், அதன் திறப்பு விழாவை செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்க உள்ளதால், இதனுடன் சோ்த்து புதிய வந்தே பாரத் ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    விரைவில் இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் வெளியாகும்' என்றனர்.

    • அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
    • சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    வந்தே பாரத் விரைவு ரெயிலில் பயணி ஒருவர் உணவு பரிமாறும் பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

    வந்தே பாரத் ரெயிலில் சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவு பரிமாறியதாக பணியாளரிடம் வயதான பயணி ஒருவர் சண்டை போட்டுள்ளார். அப்போது அந்த பணியாளரை கோவத்தில் அந்த பயணி அறைந்துள்ளார்.

    அந்த சண்டையை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், வந்தே பாரத் பணியாளரிடம் பயணி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அதே சமயம் சக பயணிகள் பணியாளருக்கு ஆதரவாக அந்த பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    பணியாளர் ஒருவர் தவறுதலாக உணவு பரிமாறியதற்காக அவரை அடிப்பீர்களா என்று நெட்டிசன்கள் இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பணியாளருக்கு ஆதரவாக சக பயணிகள் பேசியதையும் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

    • இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.
    • இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.

    இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

    இருப்பினும் ரெயிலில் நீர் ஒழுகும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் ரெயில்வேத்துறையின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர்.

    • ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது.
    • டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம்.

    பெங்களூரு:

    மத்திய ரெயில்வே மற்றும் ஜல்சக்தி துறை இணை மந்திரி வி.சோமண்ணா பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயிலில் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயணம் செய்யும் வகையில் அதன் டிக்கெட் கட்டணத்தை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக பிரதமர் மோடியுடன் ஆலோசித்தோம். ரெயில்வே துறையில் மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவின் அனுபவம் எனக்கு ஊக்கமளிக்கிறது.

    ரெயில்வே துறையின் செயல்பாடும் ராணுவம் போன்றது. நாட்டில் ராணுவம் முதலிடத்திலும், ரெயில்வே துறை 2-வது இடத்திலும் உள்ளது. அதற்கேற்ப 2 துறைகளின் செயல்பாடுகளும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து நெல்லூருக்கு வந்தே பாரத் ரெயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரெயில் பெட்டிகளில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.

    2 வாலிபர்கள் வைத்திருந்த சூட்கேஸை போலீசார் சோதனை செய்தபோது அதில் கட்டு கட்டாக பணம் இருந்தது. உடனடியாக பணம் கொண்டு வந்த 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பணத்தை எண்ணிப் பார்த்ததில் ரூ.50 லட்சம் கொண்டு வந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் ஆந்திர மாநிலம் ஆத்மகூரு சட்டமன்றத் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ. வேட்பாளராக போட்டியிடும் மேகவதி விக்ரம் ரெட்டிக்கு சொந்தமான பணம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். வருமானவரித்துறை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வந்து ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

    வாலிபர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே, இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
    • தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    இந்த புதிய சென்னை-மைசூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் ஒரு பயணி "மலர்கள் கேட்டேன்" பாடலைப் பாடி மகிழ, அவரது தோழி நாட்டியக் குறிப்புகளுடன் அசைவுகள் கொடுக்கும் வீடியோ ஒன்றை தென்னிந்திய ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    தென்னிந்திய ரெயில்வே-ன் இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    பேருந்து, ரெயில், மெட்ரோவில் பயணம் செய்யும் போது கூட சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காமல் ஹெட் செட் அணிந்து பாடல் கேட்கவும் என பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

    இந்நிலையில் வந்தே பாரத் ரெயிலில் கர்நாடக இசை பாடல் பாடுவது பிற பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காதா? இதே போல கிராமிய, கானா பாடல்களை பாட ரெயில்வே நிர்வாகம் அனுமதிக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    • வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    • ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை-பெங்களூர்- மைசூர் வழித்தடத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால் 2-வது வந்தே பாரத் ரெயிலை தெற்கு ரெயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சென்னையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் மைசூரை அடையும். ஆனால், இப்போது அறிமுகப்ப டுத்தப்படும் வந்தே பாரத் ரெயில் காலையில் மைசூரில் இருந்து கிளம்பி, மதியம் சென்னை வந்தடையும். இந்த வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட், இப்போது இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலின் டிக்கெட் விலைக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் இந்த வந்தே பாரத் ரெயில் மாண்டியா, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மைசூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த வந்தே பாரத் ரெயில் காலை 7.45 மணிக்கு பெங்களூர் வரும். மதியம் 12.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில், இரவு 9.25 மணிக்கு பெங்களூர் சென்றடையும். இரவு 11.20 மணிக்கு மைசூர் செல்லும்.

    சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே ஏற்கனவே ஒரு வந்தே பாரத் இயக்கப்படும் நிலையில், இப்போது 2-வது வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி வருகிற 12-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த ரெயில் புதன்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த ரெயில் தொடங்கப் பட்ட பிறகு சென்னையில் இருந்து பெங்களூருக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் வந்தே பாரத் ரெயில் சேவை கிடைக்கும். இதன் மூலம் பயணிகள் சென்னையில் இருந்து 4.25 மணி நேரத்தில் பெங்களூர் செல்லலாம்.

    • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.
    • சென்னையில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு பயணிகள் வசதிகளுக்காக தென்னக ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

    அந்த வகையில் சென்னை- நாகர்கோவில் இடையே இரு மார்க்கங்களிலும் வந்தே பாரத் சிறப்பு ரெயில் இன்றும் நாளையும் (13 மற்றும் 14-ந்தேதி) இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் மதியம் 1.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    நாகர்கோவிலில் மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் இரவு 11.35 மணிக்கு சென்னை வந்தடையும்.

    • கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.
    • சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    திருப்பூர்:

    இந்திய ெரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே வந்தே பாரத் ெரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு தொடக்கம் முதலே மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தது.

    தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- பெங்களூர்- மைசூர் வந்தே பாரத் தான். இருப்பினும் அதன் பெரும்பகுதி கர்நாடகாவில் தான் செல்கிறது. எனவே முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் இயக்கப்பட்ட முதல் வந்தே பாரத் என்றால் அது சென்னை- கோவை வந்தே பாரத் தான். இதனை கடந்த ஏப்ரல் 8-ந் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    கடந்த 25-ந் தேதியுடன் இந்த ெரயில் தொடங்கப்பட்டு 200 நாட்களை நிறைவடைகிறது.இந்தியாவில் இயக்கப்படும் பல வந்தே பாரத் ெரயில்கள் காலியாகவும் பயணிகள் இல்லாமல் இயக்கப்படும் நிலையில், சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் இந்த 199 நாட்களும் ஹவுஸ்புல்லாகவே இருந்துள்ளது.

    இந்த ெரயிலை முதல் நாள் பிரதமர் மோடி நேரில் வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது முதலே இந்த ெரயில் டிக்கெட்கள் வெயிடிங் லிஸ்டிலேயே இருந்துள்ளது. அதிலும் கோவை - சென்னை மார்க்கத்தில் வந்தே பாரத் ெரயில்களின் டிக்கெட்டுகள் பல நாட்கள் முன்பாகவே விற்று தீர்ந்துவிடுகிறது. இதனால் கோவை - சென்னை வந்தே பாரத்தில் பயணிக்க விரும்புவோர் முன்கூட்டியே நிச்சயம் புக் செய்தாக வேண்டும்.

    சென்னை -கோவை வந்தே பாரத்தில் 56 இருக்கைகளை கொண்ட முதல் வகுப்பு எக்ஸிகியூட்டிவ் க்ளாஸ் இருக்கைக்கான டிக்கெட் ரூ. 2,310ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 450 சீட்களை கொண்ட வழக்கமான சேர் காருக்கு டிக்கெட் ரூ.1,215ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக வந்தே பாரத்தில் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருக்கிறது என்ற விமர்சனம் இருக்கும். ஆனால், இது சென்னை- கோவை வந்தே பாரத் ெரயில்கள் முன்பதிவை குறைக்கவில்லை.

    எப்போதும் இருக்கும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்கள் இதற்கு சாட்சியாகும். ஒரு சில வந்தே பாரத் ெரயில்களில் டிக்கெட் விற்பனை குறைவாக உள்ளதாக புகார் இருக்கும் நிலையில் சென்னை -கோவை வந்தே பாரத் நல்ல வரவேற்புடன் புதிய சாதனை படைத்து வருகிறது.

    முதலில் சென்னை- கோவை வந்தே பாரத் 6 மணி நேரம் 10 நிமிடங்களில் செல்லும் என அறிவிக்கப்பட்டது. அதிவேகமாக ெரயில்கள் செல்லும் வகையில் டிராக் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலையில் வந்தே பாரத் பயண நேரம் மேலும் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இப்போது சென்னை- கோவை வந்தே பாரத் 5.50 மணி நேரத்தில் இலக்கை சென்றடைகிறது.

    கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் திருப்பூர், ஈரோடு. சேலம் வழியாக 11.50க்கு சென்னை சென்றடையும். அதேபோல சென்னையில் இருந்து மதியம் 2.25 மணிக்குக் கிளம்பும் வந்தே பாரத் இரவு 8.15 மணிக்கு மீண்டும் கோவை வந்தடையும். இந்த ெரயில் திருப்பூர் மற்றும் சேலத்தில் இரண்டு நிமிடங்களும் ஈரோட்டில் 3 நிமிடங்களும் நிறுத்தப்படுகிறது.

    சென்னை - ஜோலார்பேட்டை இடையே மணிக்கு 130 கி.மீ வேகத்தில் செல்ல அனுமதித்ததும், அதைத் தொடர்ந்து அரக்கோணம் - ஜோலார்பேட்டை பிரிவில் வேகத்தை அதிகரித்ததும் பயண நேரத்தை குறைக்க உதவி இருக்கிறது. சென்னை- கோவை இடையே பகல் நேரத்தில் ஏற்கனவே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இயக்கப்படும் நிலையில், அதையும் தாண்டி வந்தே பாரத்திற்கு மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

    மேலும் நாட்டில் இயக்கப்படும் மற்ற வந்தே பாரத் ெரயில்களில் மொத்தம் 16 பெட்டிகள் இருக்கும். ஆனால், சென்னை -கோவை ரூட்டில் 8 பெட்டிகள் மட்டும் இருக்கிறது. இந்த ரூட்டில் டிக்கெட் தேவை அதிகமாக இருப்பதால் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இருப்பினும் ஒரு ரூட்டில் 6 மாதங்கள் ெரயில் இயங்கிய பிறகே தேவையான மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதால் தற்போதைய சூழலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

    • வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும்.
    • தர்மர் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

    பரமக்குடி

    அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தர்மர் பரமக்கு டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தவும், பயண நேரத்தை குறைக்கவும் நாடு முழுவதும் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களை தொடங்கியுள்ளது.

    இந்த ஆண்டு இறுதிக்குள் 75 வந்தே பாரத் ரெயில்களையும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 ரெயில்க ளையும் இயக்க இந்திய ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இந்தியா வின் புண்ணிய தலங்களில் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமாகவும், சுற்றுலா தலமாகவும் ராமேசுவரம் விளங்கி வருகிறது.

    நாடு முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு ராமேசு வரத்திற்கு தேவையான அளவு போக்குவரத்து வசதிகள் இல்லை. அகலப் பாதை மாற்றத்தால் ராமே சுவரம்-கோயம்புத்தூர், ராமேசுவரம்-பாலக்காடு, ராமேசுவரம்-மதுரை மற்றும் சில பிரபலமான ரெயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் இங்கு வரும் பக்தர்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் வியாபாரிகள், தொழி லாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா கின்றனர். ஆகவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில்களை ராமேசுவரம் வரை ரெயில்வே நிர்வாகம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

    மேலும் இடைநிறுத்தப் பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இது குறித்து ரெயில்வே முதன்மை நிர்வாக இயக்குனர் தேவேந்திர குமாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.
    • 2 முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.

    சென்னை:

    நாடு முழுவதும் ஏ.சி. வசதி இல்லாத சாதாரண பெட்டிகளை கொண்ட வந்தே சாதாரண் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. 8 முன்பதிவு இல்லாத பெட்டிகள் உள்பட 22 பெட்டிகளை கொண்ட வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு பணிகள் சென்னை ஐ.சி.எப். ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

    வந்தே சாதாரண் ரெயிலின் முதல் ரெயிலுக்கான பெட்டிகளே ஐ.சி.எப். ஆலையில் தயாரிக்கப்படுகின்றன. வந்தே பாரத் ரெயிலில் சில மாற்றங்களை செய்து வந்தே சாதாரண் ரெயில் பெட்டிகள் உருவாக்கப்படுகின்றன.

    பெரம்பூரில் உள்ள கேரேஜ் மற்றும் லோகோ ஒர்க்சில் ஏரோடைனமிக் முகப்பு தோற்றம் கொண்ட 2 என்ஜின்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதியில் வந்தே சதரன் ரெயில்கள் ஓடும் வகையில் தயாரிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

    வந்தே சாதாரண் ரெயிலில் சுமார் 1800 பயணிகள் பயணிக்க முடியும். இந்த ரெயில் மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் செல்லும். ஏ.சி. இல்லாத மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க விரும்பும் பயணிகளுக்கு வந்தே பாரத் ரெயிலின் அதே பயண அனுபவத்தை வழங்கும் வகையில் வந்தே சாதாரண் ரெயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

    அழகான இருக்கைகள், படுக்கை வசதிகளுடன் நவீன விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் உட்புறம் தற்போதைய ரெயில்களின் பொதுப்பெட்டிகள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மின் விசிறிகள், சுவிட்சுகள் நவீன வடிவமைப்பை கொண்டவை. ஒவ்வொரு இருக்கையிலும் மொபைல் போன் சார்ஜர் வசதிகள் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் ஒரு கழிப்பறையும் உள்ளது.

    இந்த ரெயில் வந்தே பாரத் ரெயிலுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடியது. 2 முனைகளிலும் என்ஜின்கள் உள்ளன. இது பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் உள்ளது.

    ×