என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Varun Gandhi"
- பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார்.
- வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.
முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.
இறுதியில் மேனகா காந்தியின் மகன் வருண்காந்தியை பிரியங்காவுக்கு எதிராக களம் இறக்கலாம் என்று முடிவு செய்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் வருண்காந்தியை அழைத்து பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது திட்டத்தை அறிந்த வருண்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார்.
வருண்காந்தி பிரியங்காவின் தம்பி ஆவார். அவர் உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதியில் இருந்து 2 தடவை பாராளுமன்றத்துக்கு எம்.பி.யாக தேர்வாகி உள்ளார். இந்த தடவையும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு அந்த தொகுதியில் போட்டியிட பா.ஜ.க. மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. பிரியாங்கவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிடுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டார். ஆனால் சகோதரியை எதிர்த்து தன்னால் போட்டியிட இயலாது என்று வருண்காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
பிரியங்காவுக்கு நெருக்கடி கொடுக்கவே வருண்காந்தியை முன்னிலைப்படுத்த அமித்ஷா திட்டமிட்டு இருந்தார். வருண்காந்தி மறுத்து உள்ளதால் அமித்ஷா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். வேறு சாதாரண வேட்பாளரை நிறுத்தினால் பிரியங்கா சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இது காங்கிரஸ் கட்சிக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் மாறி விடும் என்று பா.ஜ.க. தலைவர்கள் கருதுகிறார்கள். அந்த நிலையை தடுத்து நிறுத்தவே வருண்காந்தி உதவியை அவர்கள் நாடினார்கள். ஆனால் வருண்காந்தி மறுத்து விட்டதால் வேறு யாரை பிரியங்காவை எதிர்த்து நிறுத்தலாம் என்று ஆலோசித்து வருகிறார்கள்.
முன்னாள் மத்திய மந்திரி உமாபாரதியை பிரியங்காவுக்கு எதிராக நிறுத்தலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பஜ்ரங்தள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான வினய் கத்தியர், சமாஜ்வாடி முன்னாள் தலைவர் மனோஜ்பாண்டே மற்றும் அரச குடும்பத்தை சேர்ந்த ராகேஷ் பிரதாப்சிங் ஆகியோரது பெயர்களும் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
- முன்னணி தலைவரான வருண் காந்திக்கு பா.ஜ.க.வில் இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
- தலைமையின் இந்தச் செயல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் பிலிபித் மக்களவை தொகுதியில் பா.ஜ.க. சார்பில் கடந்த 2009 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்றவர் வருண் காந்தி. 2014-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். இவரது தாய் மேனகா காந்தி 2019-ம் ஆண்டு சுல்தான்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் பிலிபித் தொகுதி உறுப்பினராக உள்ள வருண் காந்திக்கு இம்முறை போட்டியிட பா.ஜ.க. வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்குப் பதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியது.
வருண் காந்தி போட்டியிட கட்சி தலைமை வாய்ப்பு வழங்காதது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பிரதமர் மோடியை வருண் காந்தி விமர்சனம் செய்ததால்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வருண் காந்தி தனது தொகுதி மக்களுக்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பிலிபித் தொகுதி உறுப்பினராக இருக்கும் எனது பதவிக்காலம் முடிவடைகிறது. எம்.பி.யாக உங்களுடனான தொடர்பு முடிவுக்கு வரலாம். ஆனால் ஒரு மனிதனாக எனது கடைசி மூச்சு வரை உங்களுடன் இருப்பேன். பிலிபித் மக்கள் அற்புதமானவர்கள்.
இந்த தொகுதியில் எம்.பி.யாக அவர்களுக்கு பணியாற்றியதில் திருப்தி அடைகிறேன். எனது பதவிக்காலத்தில் பிலிபித் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். எனக்கு இந்த முறை அதிர்ஷ்டம் இல்லை. இனி நான் உங்களோடு எம்.பி.யாக இருக்க மாட்டேன். நான் கடைசி வரை உங்கள் மகனாக இருப்பேன். உங்களுக்காக என் வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். இப்போது நான் உங்கள் ஆசீர்வாதத்தை மட்டுமே கேட்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
- இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் உறுதிமொழியை நிறைவேற்ற இன்னும் வேகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
- வேலையற்ற இளைஞர்களின் வலி மற்றும் வேதனையை புரிந்துகொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி.
அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த பல்வேறு அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பாஜக எம்.பி வருண் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வருண் காந்தி கூறியதாவது:-
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், காலியாக உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பவும் அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் உறுதிமொழியை நிறைவேற்ற இன்னும் வேகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
வேலையற்ற இளைஞர்களின் வலி மற்றும் வேதனையை புரிந்துகொண்டதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
- தற்போது, எல்லா அரசியல் கட்சிகளுமே இலவசம் அளிக்கின்றன.
புதுடெல்லி :
பா.ஜனதா எம்.பி. வருண்காந்தி, பல்வேறு பிரச்சினைகளில் பா.ஜனதா நிலைப்பாட்டுக்கு மாற்றாக கருத்து தெரிவித்து வருகிறார்.
அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
இலவசங்களை அளிப்பதாக வாக்குறுதி அளிப்பது, வாக்காளர்களை அவமதிப்பது போன்றது. பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அல்லது பகுதி அளவுக்கு நிறைவேற்றப்படுகின்றன. இலவசங்கள் அளிப்பதன் மூலம் மக்கள் பணம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்.
தற்போது, எல்லா அரசியல் கட்சிகளுமே இலவசம் அளிக்கின்றன. அதன் மூலம் இலவசங்கள் பெறுவது உரிமை என்ற மனநிலை ஊக்குவிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து அளித்து, 'தொட்டில் முதல் கல்லறை வரை' இலவசங்கள் அளிக்கும் மாநிலத்தை உருவாக்குகின்றன. அதே சமயத்தில், எல்லா திட்டங்களையும், வாக்குறுதிகளையும் இலவசமாக கருத முடியாது. உதாரணமாக, பள்ளிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதை அப்படி சொல்ல முடியாது. அது, மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இலவசங்களை அளிப்பதற்கான நிதி ஆதாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- போலீஸ் வேலைக்கு 4 ஆண்டுகளாக காத்திருந்திருக்கும் இளைஞர்கள்.
- இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்துகின்றனர்.
புதுடெல்லி :
உத்தரபிரதேச மாநிலம், பிலிப்பிட் தொகுதி பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, அந்த மாநிலத்தில் போலீஸ் வேலைக்கு இளைஞர்கள் 4 ஆண்டுகளாக காத்திருந்தும் பலனில்லை என சாடி இருக்கிறார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், " போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கப்படவில்லை. நம்பிக்கையும் வழங்கப்படவில்லை. இளைஞர்கள் தங்கள் குரலை சமூக ஊடகங்கள் வழியாக உயர்த்துகின்றனர். ஆனால் நிவாரணம்தான் கிடைப்பதாக இல்லை. ஆனால் அவர்கள் வீதிகளில் இறங்கி போராடினால் அவர்கள் தொந்தரவு செய்பவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இது அநீதி இல்லையா?" என கூறி உள்ளார்.
வருண்காந்தி, பா.ஜ.க. எம்.பி. என்றபோதும், அந்தக் கட்சியின் மத்திய, உ.பி. மாநில அரசுகளை பல்வேறு விஷயங்களில் சாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.
- ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர்.
புதுடெல்லி :
சுதந்திர தின 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி வீடுகள்தோறும் 13 முதல் 15-ந்தேதி வரை தேசியக்கொடி ஏற்றுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதையொட்டி நாடு முழுவதும் தேசியக்கொடி விற்பனை அதிகரித்து உள்ளது.
அதேநேரம் தேசியக்கொடி வாங்காதவர்களுக்கு பல இடங்களில் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
அதில் ரூ.20 கொடுத்து தேசியக்கொடி வாங்க வற்புறுத்துவதாக சில ரேஷன் அட்டைதாரர்கள் குற்றம் சாட்டுவது பதிவாகி இருக்கிறது.
இது குறித்து அவர், 'சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு கொண்டாட்டங்கள் ஏழைகளுக்கு ஒரு சுமையாக மாறினால், அது துரதிர்ஷ்டவசமானது. ரேஷன் அட்டை தாரர்கள் தேசியக்கொடி வாங்க வற்புறுத்தப்படுகின்றனர். வாங்காதவர்களுக்கு ரேஷன் உணவுப்பொருட்கள் மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் வாழும் தேசியக்கொடிக்காக ஏழைகளின் உணவை பறித்து எடுப்பது வெட்கக்கேடானது' என்று குறிப்பிட்டு இருந்தார்.
- ஊழல் தொழில் அதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
- வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி
ஓட்டுகளை அள்ளுவதற்காக அரசியல் கட்சிகள் தேர்தலின்போது இலவசங்களை தருவதாக கூறுவதாக பிரதமர் மோடி சமீபத்தில் சாடினார்.
இதற்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி பதிலடி தந்துள்ளார்.
அவர் டுவிட்டரில் இந்தியில் நேற்று வெளியிட்ட பதிவில், கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்கள் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அத்துடன் வாங்கிய கடனை செலுத்தத் தவறிய 10 நிறுவனங்கள் பட்டியலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டதை அவர் பகிர்ந்துள்ளார். இந்த நிறுவனங்களில் இரண்டில் மெகுல்சோக்சி, ரிஷி அகர்வால் உள்ளிட்ட தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையொட்டி வருண் காந்தி குறிப்பிடுகையில், " ஏழைகளுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்களை வழங்கி விட்டு நாடாளுமன்றம் நன்றியை எதிர்பார்க்கிறது. ஆனால் 5 ஆண்டுகளில் ஊழல் தொழில் அதிபர்களுக்கு வழங்கிய ரூ.10 லட்சம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்திருப்பதாக அதே நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. அரசின் கஜானாவில் முதல் உரிமை யாருக்கு? "என கேள்வி எழுப்பி உள்ளார்.
- வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும்.
- நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 25 கிலோவிற்கும் குறைவான எடையுள்ள பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட அரிசி, தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி, மீன், தேன், உலர்ந்த காய்கறிகள், உலர்ந்த மக்கானா, கோதுமை மாவு தயிர் உள்ளிட்ட பால் பொருட்களுக்கு 5 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் வசூலிக்கப்படுகிறது. இதனால் இந்த பொருட்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பை ஆளும் பா.ஜ.க எம்.பி வருண் காந்தி விமர்சித்துள்ளார். இது ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்கும் என்று தமது டூவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு நடுத்தரக் குடும்பங்களுக்கு, குறிப்பாக வாடகை வீடுகளில் வாழும் இளைஞர்களுக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ள வருண்காந்தி, அவர்களுக்கு நிவாரணம் தேவைப்படும் நேரத்தில் நாங்கள் அவர்களைத் துன்புறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய மந்திரி மேனகா காந்தி உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்.பி.யாக உள்ளார்.
அவர் 1996, 1998, 1999, 2004, 2014 தேர்தல்களில் அந்த தொகுதியில் வெற்றி பெற்றார்.
தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மேனகா காந்தி தொகுதி மாறுகிறார். அவர் தனது மகனுக்கு பிலிபிட் தொகுதியை விட்டுக் கொடுக்கிறார்.
வருண்காந்தி கடந்த தேர்தலில உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியை ஒட்டி சுல்தான்பூர் இருக்கிறது. அங்கு வலுவான காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்பட்டால் வருண்காந்தி தோல்வியை சந்திக்க நேரிடும் என்று மேனகா காந்தி அச்சப்படுகிறார்.
மேனகா காந்தியின் இந்த வேண்டுகோளை பா.ஜனதா மேலிடம் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது. வருண் காந்தி ஏற்கனவே 2009 தேர்தலில் பிலிபிட் தொகுதியில் போட்டியிட்டு 50.09 சதவீத வாக்குகள் பெற்று இருக்கிறார். இதனால் அவருக்கு கட்சி மேலிடம் அந்த தொகுதியை ஒதுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் மேனகா காந்தி அரியானா மாநிலம் கர்ணல் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
2014 தேர்தலில் இந்த தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் அஸ்வினி குமார் சோப்ரா வெற்றி பெற்று இருக்கிறார். #VarunGandhi #ManekaGandhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்