என் மலர்
நீங்கள் தேடியது "Voter List"
- இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
- பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது
வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை மேம்படுத்தவும், சேவைகளை சீரமைக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டன
இறந்த நபர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இனி முறையாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், இறந்தவர்களின் விவரங்கள் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து உடனுக்குடன் பெறப்படும். அந்த விவரங்கள், வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகள் மூலம் நேரில் களஆய்வு செய்து உறுதி செய்யப்படும். இதன்பின் அந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும்.
மேலும் பூத் சிலிப்பின் வடிவமைப்பை திருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களின் பெயர்கள் மற்றும் வரிசை எண்கள் பெரிய எழுத்துக்களில் காட்டப்படும். இது வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பதை எளிதாக்குகிறது மற்றும் அதிகாரிகள் பட்டியலில் உள்ள பெயர்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.
அத்துடன், வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகளுக்கு நிலையான புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, அவர்களுடன் வாக்காளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
- ஏப்ரல் 30-ந் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.
- கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு.
புதுடெல்லி:
போலி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பிரச்சனை நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.
இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எழுப்பிய எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது தொடர்பாக அவையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி கோரிக்கை எழுப்பினார்.
கடந்த சில ஆண்டுகளாக சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தவறி விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாக்காளர் பட்டியல் இந்திய பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நிலையில் ஏதாவது தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்துக்கு வரும் ஏப்ரல் 30-ந் தேதிக்குகள் ஆலோசனை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் கட்சிகளுக்கு தனித்தனியாக தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டப்படி தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வருமாறு கட்சிகளின் தலைவர்களுக்கும் மூத்த உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையம் கடந்த வாரம் நடத்திய கருத்தரங்கில் பங்கேற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அரசியல் கட்சிகளுடன் அவ்வப்போது சந்திப்புகளை நடத்துமாறும் சட்டத்துக்கு உட்பட்டு பெறப்படும் ஆலோசனைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறும் அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
- சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
- மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், தொகுதிக்கு உள்ளேயே முகவரி மாற்றம் செய்தல் ஆகியவற்றுக்கான படிவங்களை பூர்த்தி செய்து அளிக்கலாம்.
இதற்கான சிறப்பு முகாம் அடுத்த மாதம் 12, 13, 26, 27-ந்தேதி ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம் அனுப்பி உள்ளார்.
- சிறப்பு முகாம் வருகின்ற 12, 13, 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது.
- வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்து வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி நடைபெற்று வருகிறது. இதனால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியன்று 18 வயது பூர்த்தி அடையும் ஒவ்வொருவரும் இதுவரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் இருந்தால் புதியதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.
அதன்படி பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்கம் செய்ய படிவம் 7-ம், வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகள், தொகுதி மாற்றம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ம் பதிவு செய்தும் வாக்குச்சாவடிகளில் அளிக்கலாம்.
இதற்கான முகாம் பகுதிகளில் அமைந்துள்ள கல்வி நிலையங்களில் வருகின்ற 12, 13,26 மற்றும் 27-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறுகின்றது. இதையொட்டி, முகாம்களுக்கு நேரில் வந்து மேற்கூரிய உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்று ஆவணங்களுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்பிக்க வேண்டும் இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை காஞ்சிபுரம் கலெக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
- அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 பேர். இதில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 94 ஆயிரத்து 631 பேர். பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 36 ஆயிரத்து 137 பேர். மற்றவர்கள் 135 பேர் அடங்குவர்.
தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு,
ராசிபுரம் தனி தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 862 பேரும், சேர்ந்தமங்கலம் தனி தொகுதியில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 54 பேரும், நாமக்கல் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 705 பேரும், பரமத்தி வேலூர் தோகுதியில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 729 பேரும், திருச்செங்கோடு தொகுதியில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 487 பேரும், குமாரபாளையம் தொகுதியில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 116 பேரும் உள்ளனர்.
கடந்த 5-1-2022 முதல் 6591 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 27 ஆயிரத்து 868 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 14 லட்சத்து 52 ஆயிரத்து 230 வாக்காளர்கள் இருந்த நிலையில், இன்றைய தேதி படி வாக்காளர்கள் 14 லட்சத்து 30 ஆயிரத்து 953 ஆக உள்ளனர். இதனால் வாக்காளர் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 5-1-2022 முதல் 31-10-2022 வரை பொதுமக்களிடம் பெறப்பட்ட படிவங்களை விசாரணை செய்து வரைவு வாக்காளர் பட்டியல் ஆனது இன்று வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் அலுவலகம், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சி யர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர் களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் அஞ்சல் மூலமாக வழங்கப்படும்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின் தொடர்ச்சியாக இன்று முதல் 8-12-2022 வரை சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற உள்ளது. பணியின் போது 1-1-2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளாதவர்கள் திருத்தங்கள் செய்ய விரும்புபவர்களும் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அளிக்கலாம்.
மேலும் வருகிற 12, 13-ஆம் தேதி மற்றும் 26, 27-ந் தேதிகளில் மாவட்டத்தில் உள்ள 686 வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அந்த நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பிசிங் தெரிவித்தார்.
- திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
1-1-2023 நாளினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2023 மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட கால அட்டவணைப்படி இன்று (புதன்கிழமை) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உரிய வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மறு சீரமைக்கப்பட்டு வாக்கு சாவடி பட்டியலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி தாராபுரம் (தனி) தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 298, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 222, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 313, 3-ம் பாலினத்தவர் 10 என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 545, காங்கேயம் தொகுதியில் மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகள் எண்ணிக்கை 295, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 553, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 30 ஆயிரத்து 551, 3-ம் பாலினத்தவர் 21 என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 125, அவினாசி (தனி) மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 313, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 42 ஆயிரத்து 394, 3-ம் பாலினத்தவர் 4 என மொத்தம் 2 லட்சத்து 76 ஆயிரத்து 698, திருப்பூர் வடக்கு மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 374, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 92 ஆயிரத்து 618, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 87 ஆயிரத்து 540, 3-ம் பாலினத்தவர் 140 என மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 298, திருப்பூர் தெற்கு மறு சீரமைகப்பட்ட வாக்கு சாவடி 242, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 874, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 874, 3-ம் பாலினத்தவர் 35 பேர் என மொத்தம் 2 லட்சத்து 67 ஆயிரத்து 783, பல்லடம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி 410, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 90 ஆயிரத்து 379, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 94 ஆயிரத்து 38, 3-ம் பாலினத்தவர் 69 என மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரத்து 486, உடுமலை மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 294, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 25 ஆயிரத்து 632, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 633, 3-ம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2 லட்சத்து 61 ஆயிரத்து 290, மடத்துக்குளம் மறு சீரமைக்கப்பட்ட வாக்கு சாவடி எண்ணிக்கை 287, ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 854, பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 120, 3-ம் பாலினத்தவர் 20 பேர் என மொத்தம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 994 பேர் உள்ளனர். ஒட்டு மொத்தமாக திருப்பூர் மாவட்டத்தில் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 2513, ஆண் வாக்காளர்கள் 11 லட்சத்து 42 ஆயிரத்து 432 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 76 ஆயிரத்து 463, 3-ம் பாலினத்தவர் 324, என மொத்தம் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் உள்ளவர்கள் இன்று முதல் வருகிற வருகிற 8-ம் தேதி வரை உரிய படிவங்களில் வாக்கு சாவடி மையத்தில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்களில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது
- புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, பூர்த்தி செய்து வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்க சுருக்கமுறை திருத்தத்தை அறிவித்து உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் 8.12.2022 வரை நடக்கிறது. வருகிற 12, 13, 26, 27 ஆகிய நாட்களில் வாக்காளர்பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கிறது.
ஆகையால் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெறம் முகாம்களில் சம்பந்தப்பட்ட மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை மற்றும் வார்டு செயலாளர்கள், பாக முகவர்கள் அனைவரும் வாக்காளர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும்.
18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்பதற்கு படிவம்-6, ஆதார் விவரம் சேர்க்க படிவம் 6ஏ, நீக்கம் செய்ய 7, பெயர், முகவரி மாற்றம், திருத்தம், வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் வாக்குச்சாவடிகளில் நேரில் அளிக்க வேண்டும். இந்த பணிகளில் தி.மு.க.வினர் மெத்தன போக்கு காட்டாமல் விரைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர்.
- வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க 15 படிவங்களும் பெறப்பட்டன.
பல்லடம் :
பல்லடம் அருகே, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்றது.
பல்லடம் சட்டமன்ற தொகுதியில் 9.11.22ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்படி 1லட்சத்து90 ஆயிரத்து379 ஆண்களும், 1லட்சத்து94ஆயிரத்து38 பெண்களும், 69 திருநங்கைகளும் ஆக மொத்தம் 3லட்சத்து 84 ஆயிரத்து 486 வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகர் நரிக்குறவர் காலனியில் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் தலைமையில் நடைபெற்றது.இதில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 10 படிவங்களும், குடிமாற்றம் செய்ய 2 படிவங்களும், வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்க 15 படிவங்களும் பெறப்பட்டன.இதில் தேர்தல் துணை தாசில்தார் தேன்மொழி,மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.
- 2 நாட்கள் நடைபெறும் முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்கள் புதிதாக பெயரை சேர்க்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறி சென்றவர்கள் திருத்தம் செய்யவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
பெயர் சேர்க்க, திருத்தங்கள் மேற்கொள்ள படிவங்கள் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களுடன் கொடுப்பதற்கான சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் கடந்த 12, 13 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டன.
இதன்மூலம் சுமார் 7 லட்சத்து 10 ஆயிரம் பேர் பயன் அடைந்தனர். அதனை தொடர்ந்து 2-வது கட்டமாக சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களும் நடைபெறுகின்றன.
சென்னையில் 3,723 வாக்குச்சாவடிகளாக செயல்படும் பள்ளிகளில் இந்த மையங்கள் நடக்கின்றன. படிவங்கள், 6, 6ஏ, 7 மற்றும் 8 ஆகியவற்றை பயன்படுத்தி திருத்தங்களை மேற்கொள்ளலாம். சென்னையில் கடந்த முகாமில் 23,519 பேர் திருத்தம் மேற்கொள்ள மனுக்கள் கொடுத்தனர்.
அரசியல் கட்சியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் இறுதி வாய்ப்பாக இருப்பதால் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமிஷனருமான ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒவ்வொரு மையங்களிலும் ஒரு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது.
மையங்களுக்கு செல்லாமல் www.nvsp.in என்ற இணைய தளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாக உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.
- 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.
திருப்பூர் :
வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு மாதம் துவங்கி நடைபெற்றுவருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்ட சபை தொகுதிகளில் 23 லட்சத்து 19 ஆயிரத்து 219 வாக்காளர்கள் உள்ளனர்.மாவட்ட மொத்த வாக்காளர்களில் 48 சதவீத வாக்காளர் மட்டுமே ஆதார் இணைத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் ஆதார் இணைப்பில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்தநிலையில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் வினீத் தலைமை வகித்தார்.8 தொகுதிகளில், வாக்காளர் பட்டியல் - ஆதார் இணைப்பில் பின்தங்கிய பகுதிகளைச்சேர்ந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட ஆதார் இணைப்பு விகிதத்தை உயர்த்தவேண்டும் என ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில்டி.ஆர்.ஓ., ஜெய்பீம், தேர்தல் பிரிவு தாசில்தார் தங்கவேல் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
- சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
கோவை:
நாடு முழுவதும் வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
மாவட்டத் தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க வாக்காளர்களிடையே போதிய ஆர்வம் இல்லை. குறிப்பாக மாநகரம், நகரப் பகுதிகளில் வசிப்பவர்கள் ஆதார் எண் இணைப்பதில் அக்கறை காட்டவில்லை என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மாவட்டத்தேர்தல் பிரிவு அதிகாரி கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஆனால், 12 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே (40 சதவீதம்) ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். ஆதார் எண் இணைப்பதன் மூலம் தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் பெற முடியும்.
ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி போன்ற கிராமங்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அதேவேளையில் சென்னை, கோவை போன்ற மாநகரப் பகுதிகளில் 20 மற்றும் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
அனைத்து வாக்காளர்களும் ஆதார்எண்ணை இணைத்து பயன்பெற வேண்டும். எனவே, வாக்காளர்கள் தங்கள் பகுதிக்கு வரும் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் படிவத்தை நிரப்பிக் கொடுத்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ள வேண்டும்.
தவிர தேர்தல் ஆணையத்தின் nvsp இணையதளம் வழியாகவும், வோட்டர்ஸ் ஹெல்ப் லைன் என்ற கைப்பேசி செயலி வழியாகவும் ஆதார் எண்ணை இணைத்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- அதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, சிறப்பு சுருக்க முறை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பணி வருகிற டிசம்பர் 8-ந்தேதி வரை நடக்கிறது.
மாவட்டத்தில் இதுவரை சேர்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6) 21,998, நீக்கல் விண்ணப்பகள் (படிவம்-7) 8,620 மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம்-8) 14,355 என மொத்தம் 44,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் (அதாவது 31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள்) பெயரானது ஜனவரி-2023 மாதம் வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
தற்போது 17 வயதான வர்களும் படிவம்-6ஐ பயன்படுத்தி தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கு (அதாவது 31.12.2005 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும்) விண்ணப்பிக்கலாம். இவர்களின் பெயரானது 18 வயது பூர்த்தியடைந்த காலாண்டில் (ஏப்ரல்-2023, ஜூலை-2023, அக்டோபர்-2023) வெளி யிடப்படும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
எனவே இந்த வாக்காளர் பட்டியல் திருத்தகாலத்தில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களை அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் அல்லது வட்டாட்சியர் அலுவல கங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை
பதிவுசெய்து கொள்ளுமா றும். மேலும் இதுவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளா தவர்கள் இணைத்துக் கொள்ளுமாறும் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி சிங் தெரிவித்து உள்ளார்.