என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Way"
- வேப்பங்குளம் கிராமத்தில் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது.
- ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்டது வேப்பங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் அமைந்துள்ள சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதால் இறந்தவர்களின் உடலை அதன் அருகே உள்ள ஓடை வழியாக கொண்டு செல்ல வேண்டி இருப்பதாகவும், மழை காலங்களில் ஓடை களில் தண்ணீர் செல்லும் போது மிகுந்த சிரமப்படுவதாகவும் அப்பகுதி பொது மக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்றி சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். ஆனாலும் இதுவரை சுடுகாட்டு பாதை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த விஜய குமார் என்பவர் இறந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய சுடுகாட்டு ஓடையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதற்கு அவரது உறவி னர்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர்.
தொடர்ந்து மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் அவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்த நிலையில் இன்று காலை நெல்லை டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்று அவர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் ஆக்கிரமிப்பை சரி செய்து தருவதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து ஓடை வழியாக விஜயக்குமார் உடலை சுமந்து சென்று அவரது உறவினர்கள் அடக்கம் செய்தனர்.
- பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
- தனியார் பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.
சிவகிரி:
சிவகிரியில் இருந்து விஸ்வநாதபேரி, தென்மலை, ராயகிரி போன்ற பகுதிகளுக்கு தார் சாலை வசதி இல்லாத காலத்தில் மக்கள், வாகனங்கள், கால்நடைகள் போக்குவரத்து பாதையாகவும், தென்மலை, வடுகபட்டி, ராயகிரி விஸ்வநாதபேரி போன்ற பகுதிகளில் இருந்து சிவகிரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ - மாணவிகள் கல்வி பயில்வதற்கு சென்று வர முக்கிய பாதையாகவும், தேவிப்பட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வனபகுதிகளுக்கும், புஞ்செய் பகுதிகளுக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக சென்று வருவதற்காகவும் பயன்படுத்தி வந்த 30 அடி அகலம் கொண்ட பசுப்பாதை என்று அழைக்கப்பட்ட பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை கைப்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதின்பேரில் சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையில், வாசு தேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், ஊர் நல அலுவலர் தெய்வானை ஆகியோர் முன்னிலையில், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து சிவகிரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.
இதில் மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர வடிவு, தலையாரி வேல்மு ருகன், சர்வேயர் பாண்டி செல்வி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத்தலைவர் காளீஸ்வரி, செயலர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.
- சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது.
- 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.
ஆத்தூர்:
இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்த துக்க தினம் புனித வெள்ளியாக இன்று கிறிஸ்தவ மக்களால் உலகமெங்கும் அனு சரிக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை கிரகோரிராஜன் தலைமை யில் புனித வெள்ளி அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, சிறப்பு சிலுவைப்பாதை பவனி, ஆலயத்திலிருந்து உடையார்பாளையம் கல்லறைத்தோட்டம் வரை நடைபெற்றது.
இதில், இயேசு சிலுவையை சுமந்து சென்றபோது, சாட்டையால் அடித்து அவரை துன்புறுத்து வது போன்ற தத்ரூபமான காட்சிகள் இடம்பெற்று இருந்தன.
இந்த சிலுவைப்பாதை யில் ஏராளமான கிறிஸ்த வர்கள் கலந்து கொண்டு, 14 சிலுவைப்பாதை நிலைகளையும், இயேசு சிலுவையில் மொழிந்த 7 வார்த்தைகளையும் தியானம் செய்து கொண்டு அமைதி ஊர்வலமாக சென்று கல்லறைத் தோட்டத்தை அடைந்தனர்.
- பல வருடங்களாக புதுப்பிக்கபடாததால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
- சாலை ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 13 வது வார்டு அரையபுரம் கேட்டுத்தெரு, தோப்புத் தெருசாலை பல வருடங்களாக புதுப்பிக்கப்படாததால் சாலையை கிராமமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
மேலும் சாலை புல் பூண்டுகள் மண்டிய நிலையில் ஒற்றையடி பாதை போன்று காணப்படுகிறது.
சேதமடைந்த சாலையை புதுப்பிக்க கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் கிராமமக்கள் வலியுறுத்தியும் நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து கிராமமக்கள் கூறியதாவது அரையபுரம்கேட்டுத்தெரு, தோப்புதெரு சாலை போடபட்டு 30 வருடத்திற்கு மேல் ஆகிறது.
தற்போது சாலை முற்றிலும் சேதமடைந்து இருசக்கர வாகனங்கள் கூட போக முடியாத நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.
எனவே பழுதான சாலையை விரைவில் சீரமைத்து தர வேண்டும் என தெரிவித்தனர்.
- அவர்களை அக்கம் பக்கத்தினர்மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.
- இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள உத்திரை கிராமத்தில் இன்று நூறு நாள்வேலைக்கு ஏராளமான பெண்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது செல்லும் வழியில் தென்னை மரத்தில் இருந்த கதண்டு திடீரென பறந்து வந்து திருப்புறம்பயம் கண்ணுக்குடி தெருவை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கோகிலா, ரவிச்சந்திரன் மனைவி மகாலட்சுமி ,நடேசன் மனைவி நவநீதம் ஆகிய 3 பேரையும் கதண்டு சுற்றி சுற்றி கடித்ததில் தலை மற்றும் கை கண்களில் காயம் ஏற்பட்டது.
அவர்களை அக்கம் பக்கத்தினர்மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர்.
அங்குஅவர்க ளுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது குறித்து சுவாமிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்