என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "weapons"

    • தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். திடீரென போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

    இதில் ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் லாவகமாக அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 28), முத்தையாபுரத்தை சேர்ந்த ரத்தினகுமார் ஹரீஷ் (29), மற்றும் லோகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் வீட்டு மாடியில் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • பாளை கக்கன் நகரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • நம்பி நாராயணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    பாளை கக்கன் நகர் மேம்பாலம் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக மூர்த்தி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த பாளை திம்மராஜபுரத்தை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 26), நம்பி நாராயணன்(21) மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜன்(22) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து அரிவாள், வாள் உள்ளிட்டவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார்

    3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    • மதுரையில் ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க பதுங்கியிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர்.

    மதுரை

    மதுரையில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் ஈடுபடு பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதன்படி மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், செல்லூர் உதவி கமிஷனர் விஜயகுமார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று கூடல் நகர் பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 10 பேர் கும்பல் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் அவர்களில் 6 பேரை விரட்டி சென்று பிடித்தனர்.

    அவர்களை சோதனை யிட்டபோது வாள், பெரிய கத்தி, உருட்டுகட்டை, கயிறு மற்றும் மிளகாய் பொடி ஆகியவை இருந்தது தெரியவந்தது. ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 6 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் பெத்தா னியாபுரம், மேட்டு தெரு முருகன் மகன் சூர்யா (வயது 24), மேலவாசல் சிவகுமார் மகன் பிரகாஷ் (23), பெத்தானியாபுரம், திலீபன் தெரு கருப்பசாமி மகன் அசோக்குமார் (22), கரிசல்குளம், நேரு காலனி பாலகிருஷ்ணன் (25), கள்ளிக்குடி சுந்தர்ராஜன் மகன் அருண்குமார் (19), ஆரப்பாளையம், மஞ்சள் மேட்டு காலனி, அன்னை இந்திரா நகர், மெய்யப்பன் தெரு ஜெயக்குமார் மகன் மனோஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் வேலைக்கு செல்லமால் கொள்ளை அடித்து பணம் திருடுவது என்று முடிவு செய்தனர். இதற்காக ஆயுதங்கள் பாலத்தில் கீழ் பதுங்கி இருந்து உள்ளனர். இைதயடுத்து 6 பேரையும் செல்லூர் போலீசார் கைது செய்தனர். தப்பிய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • மதுரையில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்ளையடிக்க திட்டமிட்டது அம்பலமானது.

    மதுரை

    மதுரை மாநகரில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், தெற்கு வாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படை போலீசார் நேற்று மாலை கிருதுமால் நதி அருகே ரோந்து சென்றனர். அப்போது சில்வர் பட்டறை எதிரே தண்டவாளம் அருகே 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் 5 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் 5 பேர் தப்பிச்சென்று விட்டனர்.

    பிடிபட்ட 5 பேரிடம் இருந்து கத்தி, அரிவாள், உருட்டுகட்டை, மிளகாய் பொடி பாக்கெட், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    விசாரணையில், அவர்கள் பண்ணியான் கீழத்தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் அஜய் (வயது 21), திருநகர் நாகராஜ் மகன் ஆகாஷ் (21), சமயநல்லூர் சுந்தரமூர்த்தி மகன் ராம்கிஷோர் (20), விக்ரமங்கலம், பெரியார் நகர் முத்தையா மகன் விஜய் (20) வில்லாபுரம், மணிகண்டன் நகர் முத்துவேல் மகன் சோலார் சரவணன் (21) என்பது தெரியவந்தது. அவர்கள் சரியாக வேலைக்கு செல்லாமல் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்க முடிவு செய்து பதுங்கி இருந்ததாக தெரிவித்தனர்.

    • மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரையில் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை கட்டுப்படுத்த, அதில் ஈடுபடுபவர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

    ரவுடி கும்பல்

    அதன்பேரில் மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் தெற்குவாசல் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.அந்த தனிப்படை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஜெய்ஹிந்த்புரம் முத்து பாலம் பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அருகே 5 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர்.

    இதையடுத்து கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள் யார்? என்று விசாரித்த போது மதுரை ஆண்டாள்புரம் பழைய மீனாட்சி காலனியை சேர்ந்த கலையரசன் என்பவரின் மகன் பிரவீன் (வயது22), சுந்தர்ராஜபுரம் வி.வி.கிரி சாலையை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் தமிழரசன் (21) மற்றும் 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

    அவர்கள் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, மிளகாய் பொடி, கயிறு உள்ளிட்டவைகளை வைத்திருந்தனர். அதுபற்றி விசாரித்த போது, அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கில் ஆயுதங்களுடன் அங்கு பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    பிரவீனும், தமிழரசனும் ரவுடிகள் ஆவர். பிரவீன் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளும், தமிழரசன் மீது கொள்ளை முயற்சி, தாக்குதல், ஆயுதங்களுடன் திரிந்தது உள்ளிட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அவர்களுடன் சிக்கிய சிறுவன் மீது வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கு மட்டும் இருக்கிறது.

    தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.
    • ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறி உள்ளார்

    மாஸ்கோ:

    உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பை தொடங்கி ஓராண்டை நெருங்குகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகி உள்ளனர். உக்ரைனின் உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ரஷியாவுக்கு அடிபணியாமல் உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதற்கு ரஷியா கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவின் தாக்குதலை சமாளிக்கும் வகையில், உக்ரைனுக்கு நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களை வழங்க மேற்கத்திய நாடுகள் ஆலோசித்து வருகின்றன. உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப உள்ளதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ரஷியாவை மேலும் ஆத்திரமூட்டி உள்ளது. ரஷியாவை தாக்கும் திறன் கொண்ட ஆயுதங்களை மேற்கத்திய நாடுகள் வழங்கினால், போர் தீவிரமடையும் என ரஷியா எச்சரித்துள்ளது.

    'இது மிகவும் ஆபத்தானது. இது மோதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதற்கு வழிவகுக்கும். உலகளாவிய மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பின் பார்வையில் இது நல்லதல்ல' என ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

    இதற்கிடையே உக்ரைனை ராணுவரீதியாக ஆதரிப்பது குறித்த புதிய சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. ராம்ஸ்டீனில் உள்ள விமானத் தளத்தில் நாளை இந்த சந்திப்பு நடக்க உள்ளது.

    ரஷியாவையோ அல்லது 2014இல் உக்ரைனில் இருந்து இணைக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையோ குறிவைத்து மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களைப் பயன்படுத்தினால், ரஷியா பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்காவிற்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
    • பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ராதா நகரை சேர்ந்தவர் அபிஷேக் ( வயது 21). பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் தமிழ்செல்வம் என்பவர் பனியன் நிறுவனத்துக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வசந்த், ரமணா, முரளி ஆகியோர் தமிழ்செல்வத்தை உரசுவது போல் சென்றனர்.

    இதனால் இருதரப்புக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அதன்பின் மூவரும் தனது நண்பர்கள் சிலரை அழைத்து பனியன் நிறுவனத்துக்குள் கட்டை, கத்தி ஆகியவை எடுத்து கொண்டு அத்துமீறி நுழைந்தனர். வாக்குவாதம் தொடர்பாக, அங்கிருந்தவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார் கேசவன், ரமணா, அருண்குமார், மோகன்ராஜ், தனுஷ்,வசந்த், சந்துரு, முரளி என 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர்.

    • மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர்.


    மதுரை

    மதுரை கீரைத்துறை சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் அனுப்பானடி பொண்ணுதோப்பு அருகில் சென்றபோது சந்தேகத்துக் கிடமான வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடம் அரிவாள் மற்றும் ஆயுதங்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த அண்ணன்-தம்பியான போஸ் மகன்கள் பிரவீன் குமார் என்ற அய்யர் (வயது25), செந்தில்குமார் (19) என்று தெரியவந்தது. அவர்கள் தாக்குதலுக்கு பதுங்கியிருந்ததால் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மற்றொரு சம்பவம்

    திருநகர் சப்-இன்ஸ்பெக்டர் குமாரி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் தனக்கன்குளம் போஸ்ட் ஆபீஸ் அருகில் சென்றபோது அவர்களை கண்டதும் 4 மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர்களிடம் சோதனை செய்தபோது கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்கள் இருந்தன. அதனை மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் திருநகர் மெயின்ரோடு ஜோசப் நகர் சின்னசாமி மகன் சுந்தரமூர்த்தி (23), விளாச்சேரி ஆதி சிவன் நகர் உதயன் மகன் அலெக்ஸ் (23), திருநகர் ஜோசப் நகர் 3-வது தெரு பிச்சை மகன் சுரேஷ் (23), நெல்லையப்பபுரம் அருண் (41) என்று தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய அருண் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் கொலை சம்பவத்தை அரங்கேற்ற நண்பருடன் பதுங்கி இருந்த திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.

    வில்லி யனூர் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வில்லியனூர் பகுதிகளில் ரோந்து சென்றனர். ஆரியப்பாளையம் அரசு சாராயக்கடை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தனர். சந்தேகம் அடைந்த சப்-இனஸ்ப்பெக்டர் குமார் 2 பேரின் உடைமைகளை பரிசோதனை செய்ததில் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அதில் ஒருவர் பத்துக்கண்ணு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பதும், மற்றொருவர் திருச்சி பகுதி யைச் சேர்ந்த மதன்ராஜ் என்பதும் தெரியவந்தது.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திருச்சியை சேர்ந்த மதன்ராஜ் மீது திருச்சி, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதும், வில்லியனூர் பகுதியில் அசம்பாவி தத்தை ஏற்படுத்த நண்பர் மதன்குமா ருடன் சேர்ந்து நேற்று இரவு பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் ஆயுதங்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆயுதங்களுடன் திரிந்த 6 வாலிபர்கள் கைதனார்கள்.
    • சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது.

    மதுரை

    மதுரை கே.புதூர் போலீசார் பாலாஜி நகரில் ரோந்து சென்றனர். அப்போது கோல்டன் சிட்டி பின்புற பகுதியில் எருக்கலை நத்தம் சூர்யா (வயது 25), பாலமேடு வெள்ளையம் பட்டி முத்துப்பட்டி தெரு முருகன் மகன் அஜித் என்ற கருவாயன் (22) ஆகிய 2 பேர் ஆயுதங்களுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் அண்ணா நகர் எஸ்.எம்.பி. காலனியில் ஆயுதங்களுடன் திரிந்த கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி என்ற ஒயிட் (32), எஸ்.எம்.பி. காலனி சக்திவேல் மகன் ஜோதிகுமார் என்ற எலும்பன் (23) ஆகிய 2 பேர் குற்ற செயல்களில் ஈடுபடும் நோக்கத்துடன் ஆயுதங்களு டன் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இேதபோல் பாண்டி கோவில் ரிங் ரோடு அம்மா திடல் அருகே ஆயுதங்களுடன் திரிந்த வண்டியூர் காளி யம்மன் கோவில் தெரு சேதுராமன் மகன் சூரிய பிரகாஷ் என்ற கல்கட்டை (24), முந்திரிதோப்பு, மவு லானா சாகிப் தெரு மணி கண்டன் என்ற உசிலைமணி (34) ஆகிய 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீ சார் கைது செய்தனர்.

    • ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது.

    மதுரை

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்லால் மற்றும் போலீசார் ராமையா தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்ேபாது 13-வது சந்திப்பு அருகே பதுங்கியிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓடினர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார் அந்த கும்பலை விரட்டி சென்று பிடித்தனர். இதில் 5 பேர் போலீசாரிடம் சிக்கினர். ஒருவர் தப்பி விட்டார்.

    ஆயுதங்கள் பறிமுதல்

    பிடிபட்ட 5 பேரிடம் விசாரணை நடத்தியோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனையிட்ட போது 3 கத்திகள், கயிறுகள், மிளகாய் பொடி பாக்கெட் ஆகியவை வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த போலீசார் 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோலைய ழகுபுரம் பகவதி அம்மன் கோவில் 3-வது தெரு சேகர் மகன் உமையாகுமார் என்ற பெரிய எலி (23), ஜெய்ஹிந்துபுரம் பாரதியார் ரோடு பாண்டியன் குறுக்கு தெரு பாண்டி மகன் அருண் பாண்டி (23), சோலை யழகுபுரம் முதல் தெரு ராமமூர்த்தி நகர் 4-வது தெரு மீனாட்சி சுந்தரம் மகன் சின்ன எலி (21), சோலைஅழகுபுரம் அன்வர் உசேன் மகன் அஜிஸ் (21), சோலையழகுபுரம் 3-வது தெரு ராஜேந்திரன் மகன் ஜீவானந்தம் என்ற சிவா (22) என்று தெரியவந்தது. இவர்கள் 5 பேரும் பூட்டியிருந்த வீடுகள், தனியாக செல்வோரை குறி வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட சதி திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

    • ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் ஆலாஊரணி அண்ணாகாலனியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவர் சிவகாசி திருக்குளம் கண்மாய் ரோட்டில் வாள் மற்றும் கத்தியுடன் நின்றுகொண்டு அப்பகுதியில் வருவோரை அச்சுறுத்தி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது திருத்தங்கலை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக நின்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மாரிச்செல்வத்தை கைது செய்த சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×