என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Weaver"
- பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.
- அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் பழனியப்பா வீதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் கைத்தறி நெசவுத்தொழில் செய்து வந்தார்.
பிரபுவுக்கு ராணி (30) என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மன உளைச்சல் அடைந்த பிரபு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் பிரபுவை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் இதுகுறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.
- தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., கைத்தறி உதவி இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டு நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சி புனல்வேலி கிராமத்தில் கைத்தறி துறை சார்பாக முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நெசவாளர்களுக் கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், கைத்தறி உதவி இயக்குனர் வெங்க டேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து. நெசவாளர்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி னர்.
பின்னர் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-
விருதுநகர் மாவட்டத்தில் அதிக நெசவாளர்களை கொண்ட தொகுதி ராஜ பாளையம் தொகுதி தான். தமிழ்நாட்டில் அதிகளவில் காடா நெசவு செய்து கொடுக்கும் தொகுதியாக ராஜபாளையம் தொகுதி திகழ்கிறது. நெசவாளர் களுக்கு நமது முதல் அமைச் சர், மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் களான வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரனும், நிதித்துறை அமைச்சர் தங்கம்தென்னர சும், ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினரான நானும் எப்போதும் உறு துணையாக இருப்போம் என உறுதி கூறினார்.
இந்நிகழ்வில் பேரூர் சேர்மன் ஜெயமுருகன், தலைமை மருத்துவர் கரு ணாகரபிரபு பேரூர் செயலா ளர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
- இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும்.
திருப்பூர்:
மதுரை அ.தி.மு.க. மாநாடு தொடர்பாக திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளரும், தேர்தல் பிரிவு செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றவுடன் அவர் அறிவித்த முதல் அறிவிப்பு அ.தி.மு.க. உறுப்பினர்களை 2 கோடியாக உயர்த்த வேண்டும் என்பதாகும். அடுத்த மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு உலக அளவில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இருக்க வேண்டும். மதுரை மாநாட்டிற்கு பிறகு எந்த அனுபவமும் இல்லாத, அணுகுமுறை தெரியாத தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கான இறுதி தேதியை அறிவிக்கின்ற மாநாடாக அமையும். தி.மு.க. ஆட்சியில் கைத்தறி நெசவாளர்கள் மிகுந்த கஷ்டத்திற்குள்ளாகியுள்ளனர்.
பொள்ளாச்சி, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைத்தறி நெசவாளர் குடும்ப பெண்கள் தற்போது கட்டிட வேலைக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். விசைத்தறி, பனியன் தொழில்கள் நலிவடைந்துள்ளது. தி.மு.க. ஆட்சி வந்தாலே திருப்பூர் மக்களுக்கு திண்டாட்டம்தான். தண்ணீர் வரி, வீட்டு வரி, மின்கட்டணம் உயர்வு காரணமாக அடித்தட்டு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதுதான் விடியா தி.மு.க. அரசின் சாதனைகளாகும். இவ்வாறு அவர் பேசினார்.
- சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
- கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு வீட்டில் இருந்து நைசாக வெளியேறினார்.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி திருச்சி மெயின்ரோடு அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் சுகுமார் (வயது 36). தறித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதி, கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வனிதாவின் தந்தை மத்திய அரசின் தகவல் ெதாழிற்நுட்ப துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பதால் அதில் கிடைக்கும் ஓய்வூதிய பணத்தை கொண்டு வனிதா தனது குடும்ப செலவை கவனித்து வந்தார். இதனிடைேய சுகுமாரின் பெற்றோர், வனிதாவை விட்டு பிரிந்து வருமாறும், வேறு பெண்ணை திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி தங்களது வீட்டுக்கு வருமாறு சுகுமாரை வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் மாறிய சுகுமார், கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி காதல் மனைவிைய தன்னந்தனியாக தவிக்க விட்டு ச வீட்டில் இருந்து நைசாக வெளியே றினார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா, பல்வேறு இடங்க ளில் அவரை தேடினார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து வனிதா, அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில், தனது காதல் கணவரை மீட்டு தருமாறு கூறி கதறினார். அவர் அளித்த புகாரின் பேரில், மாயம் என வழக்குப்பதிவு செய்து, போலீசார் விசா ரணை மேற்கொண்ட தில் மனைவியை ஏமாற்றிவிட்டு சுகுமார், சேலத்தில் தலை மறைவாக சுற்றி திரிவது தெரியவந்துள்ளது. இதனால் அவரை சுற்றி வளைத்து பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி சங்கத்தின் சார்பில் மகாசபை கூட்டம் நடந்தது.
- இதில் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சிவகாமிபுரம் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் மகாசபைக் கூட்டம் சாலியர் உறவின் முறை பொதுக்கட்டிடத்தில் நடந்தது.
இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட கைத்தறி மேலாண்மை இயக்குநர் ரகுநாத் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் நெசவாளர்களுக்கு வருடம் முழுவதும் ஜனதா சேலை வேலை வழங்க வேண்டு மென பிரதான கோரிக்கையாக முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. இந்த கோரிக்கை குறித்து வருகிற சட்ட மன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தியிடம் வலியுறுத்தியும் உள்ளதாக கூறினார்.
மேலும் நெசவாளர்களின் நலன் காக்க தமிழக முதல்-அமைச்சர் தொடர்ந்து செயலாற்றி வருகிறார். அவரது வழியில் நமது மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறை அமைச்ச ரும், தொழில்த்துறை அமைச்சரும், நானும் நெசவாளர்களுக்கு உறு துணையாக இருப்போம் என கூறினார்.
அதனைத்தொடர்ந்து சங்கத்திலுள்ள நெசவாளர் அனைவருக்கும் போனஸ் தொகையையும் நெசவு அச்சு பிரைம் செட்-ஐ வழங்குவதை தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் குருநமச்சிவயம், நகர செயலாளர் (தெற்கு) ராமமூர்த்தி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி, கவுன்சிலர்கள் ராஜேந்திர குமார், குருசாமி, குணா ராமலட்சுமி, நாகேஷ்வரன் மற்றும் திருவள்ளுவர், நடராஜன் நெசவாளர்கள் கழக நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
- சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
- தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பாப்பம்பாடி கிராமம்,சோலவண்டியான் வளவு பகுதியில் ஓடும் சரபங்கா நதியில் ஆண் பிணம் ஒன்று மிதப்பதாக, பாப்பாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரனுக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து வி.ஏ.ஓ ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாரமங்கலம் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் கயிறு கட்டி பிணத்தை மீட்டனர்.
போலீசார் விசாரணை யில், இறந்தவர் இடங்கணசாலை அருகிலுள்ள பாப்பாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் சங்கர் (வயது 45), நெசவு தொழிலாளி என்பது தெரியவந்தது. அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த சங்கருக்கு, சுலோச்சனா என்ற மனைவியும் , 2 மகன், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சங்கர், கடந்த 21-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். மீண்டும் வீடு திரும்பாத நிலையில் நேற்று சரப்பங்கா நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சங்கர் குடிபோதையில் தவறி விழுந்து இறந்தாரா? வேறு ஏதேனும் குடும்ப பிரச்சனையில் இறந்தாரா என்பது குறித்து தாரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மதுைரயில் உள்ள நெசவாளர் மையத்தில் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம்.
- இந்த தகவலை மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2021-22-ம் ஆண்டின் கைத்தறி மற்றும் துணி நூல் துறை மானியக் கோரிக்கையின் போது கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரால் கைத்தறி ஆணையரகத்தில் "நெசவாளர் குறை தீர்க்கும் மையம்" அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்காகவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயர்வு, கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்ப்பது போன்றவற்றை மேம்படுத்தவும், தங்களின் குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும் கைத்தறி துறை ஆணையரகத்தில் நெசவாளர் குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தில் நெசவாளர்கள் குறைகளை கீழ்காணும் வழிமுறைகளில் தெரிவித்து தீர்வு பெறலாம்.
1.துணை இயக்குநர் (அமலாக்கம்) முகமை அதிகாரி/குறை தீர்க்கும் அலுவலர், நெசவாளர் குறை தீர்க்கும் மையம், கைத்தறி ஆணையரகம், குறளகம், சென்னை-104 என முகவரியிட்டு கடிதம் மூலமாக நெசவாளர்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
2.நெசவாளர் குறைதீர்க்கும் மையத்தின் இணையதள முகவரி: https:/gdp.tn.gov.in/dhl.
3. நெசவாளர் குறை தீர்க்கும் மையத்தின் மின்னஞ்சல் முகவரி: wgrcchennai@gmail.com.
4. நெசவாளர் குறை தீர்க்கும் அலுவலரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரடியாக சந்தித்தும், 044-25340518 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும் குறைகளை தெரிவிக்கலாம்.
மேற்கண்ட வழிகள் மூலம் நெசவாளர்கள் கோரிக்கைகளை தெரிவித்து தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்